×
Wednesday 11th of December 2024

தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?


Coconut Burfi Recipe in Tamil (Thengai Burfi)

தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

தேங்காய் பர்ஃபி மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று. திபாவளி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளின் போது செய்யப்படும். இது துருவின தேங்காய்யை சக்கரை பாகில் களந்து செய்யும் இனிப்பு வகை.

தேவையான உணவு பொருட்கள்
1. துருவின தேங்காய் – 1 கப்
2. சக்கரை – 1 1/2 கப்
3. தண்ணீர் – 1/2 கப்
4. ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
5. நெய் – 2 மேசைக் கரண்டி + 1 தேக்கரண்டி

How to make Coconut Burfi Recipe in Tamil?

  • பர்ஃபி கலவை கொட்டும் தட்டை ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி தடவிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சக்கரை மற்றும் தண்ணிர் சேர்த்து மிதமான சூட்டில் கரைய விடவும்.
  • சக்கரை நன்கு கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும் துருவின தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.
  • தேங்காய் மற்றும் சக்கரை சேர்ந்து நுரைத்து வந்ததும், ஏலக்காய் தூள் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  • 5 முதல் 7 நிமிடம் கை விடாமல் கிளரவும்.
  • இப்போது பர்ஃபி கலவை திரண்டு (சுருண்டு) கொண்டு கடாயில் ஒட்டாமல் வரும்.
  • இந்த பதம் வந்ததும் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
  • சிறிது ஆறினதும் துண்டுகள் போடவும்.
  • நன்கு ஆறியதும் பர்ஃபி துண்டுகளை எடுத்து பரிமாறவும்.
  • இப்போது சூப்பரான தேங்காய் பர்ஃபி ரெடி..!

Also read,


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?