×
Thursday 5th of December 2024

கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி?


உள்ளடக்கம்

Kothamalli Thokku Recipe in Tamil

கொத்தமல்லி தொக்கு ஒருமுறை சுவைத்த போது ரொம்ப பிடித்தது. செய்தும் பார்த்தாச்சு!

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி தழை – 2 கட்டு
காய்ந்த மிளகாய் – 8
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 3/4 டீஸ்பூன்
இஞ்சி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கடுகு – 1/2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காயளவு
நல்லெண்ணெய் –  1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • மல்லித்தழையில் உள்ள தடினமான தண்டுபகுதியை நீக்கவும்.
  • கொத்தமல்லிதழையை மண்ணில்லாமல் அலசி, துணியில் ஈரம் போக உலர்த்தவும்.
  • கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் வறுக்கவும்.

  • மீதமுள்ள எண்ணெயில் இஞ்சியை வறுத்தபின் கொத்தமல்லி தழையை சேர்த்து வதக்கவும். புளியையும் சேர்த்து லேசாக வதக்கியபின் அடுப்பை அணைக்கவும்.

  • முதலில் மிக்ஸியில் மிளகாய் + வெந்தயம் + உப்பு + பெருங்காயப் பொடி சேர்த்து முதலில் பொடிக்கவும்.

  • அதன்பின் கொத்தமல்லிதழை, இஞ்சி, புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • கொரகொரப்பாக அரைக்கவும். அதில் தான் சுவையே இருக்கின்றது.

  • பின் மீதமுள்ள எண்ணெயில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுதினை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  • நன்கு ஆறியதும் காற்றுபுகாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

பின் குறிப்பு

  • இதனை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
  • தயிர் சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?