×
Wednesday 11th of December 2024

ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)


Onam Sadya Recipes List in Tamil

ஓணம் சத்யா

இது மலையாளத்தில் ‘விருந்து‘ என்று பொருள்படும். இது ஒரு வாழை இலையில் 24-க்கும் மேற்பட்ட உணவுகளைக் கொண்ட ஒரு பரபரப்பான சைவ உணவு. ஓணம் சத்யா வழக்கமாக தரையில் உட்கார்ந்து வாழையிலையில் சாப்பிடுவார்கள்.

இந்த முறை ஒணம் சத்யா 24 குறிப்புகளை செய்துருக்கேன்.. காரணம் என் நீண்ட நாள் தோழி வீட்டிற்கு வந்ததில் அவர்களுடன் சத்யா சாப்பாடு செய்து சாப்பிட்டதில் மிக சந்தோஷம்.

முதலில் என்ன மெனு செய்ய போகிறோம் என முடிவெடுத்து அதற்கு தகுந்தாற் போல் முதல் நாள் இரவே காய்களை நறுக்கி ப்ரிட்ஜில் வைத்தேன்.

ஊறுகாய் மற்றும் இஞ்சி புளியும் முதல் நாளே செய்தாயிற்று. இஞ்சி கிச்சடி செய்வதற்கு மட்டும் இஞ்சி புளி செய்யும் போது இஞ்சி வறுத்ததில் கொஞ்சம் தனியாக எடுத்து வைத்தேன்.

சாம்பாருக்கு காய்களை கொஞ்சமாகவும், பெரிய துண்டுகளாகவும் நறுக்கவும். நான் முருங்கைகாய், கேரட், பீன்ஸ், பூசணி சேர்த்து செய்தேன்.

அவியலுக்கு வத்திகுச்சி போல மெலிதாக நீளவாக்கில் காய்களை நறுக்கவும்.

காளன் மற்றும் கூட்டுகறி செய்ய   கருணை கிழங்கு மற்றும் வாழைக்காயினை நறுக்கவும். எரிசேரிக்கு இந்த முறை மஞ்சள் பூசணிக்காயை பயன்படுத்தி செய்தேன்.

முதல்நாள் இரவே தட்டைபயிறு, கறுப்புகடலை ஊறவைக்கவும். இந்த முறை தேங்காய் பாலினை கடையில் வாங்கினேன்.

பாசிபருப்பினை பிரதமன் மற்றும் பருப்புக்கறி வறுத்து வைக்கவும். கோஸினை துருவி ப்ரிட்ஜில் வைக்கவும்.

மெழுக்குபுரத்தி செய்ய கேரட் மற்றும் பீன்ஸ் அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கவும்.

பாலடையும் கடையில் வாங்கிவிட்டேன். மறுநாள் ஈசியாக அனைத்தும் செய்துவிடலாம்.

தேங்காய் + சீரகம் + பச்சைமிளகாயினை நிறைய அரைத்துகொண்டால் அவியல், காலன், பச்சடி, கூட்டுகறிக்கு பயன்படுத்திக்கலாம்.

ஓணம் சத்யா மெனு

  1. வாழைப்பழம்
  2. உப்பு
  3. எலுமிச்சை ஊறுகாய்
  4. அப்பளம்
  5. இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்
  6. நேந்திரன் சிப்ஸ் – கடையில் வாங்கியது
  7. இஞ்சி புளி
  8. இஞ்சி கிச்சடி
  9. கோஸ் தோரன்
  10. கூட்டுக் கறி
  11. கேரட் பீன்ஸ் மெழுக்குபுரத்தி
  12. அவியல்
  13. ஒலன்
  14. எரிசேரி
  15. சாதம்
  16. பருப்பு கறி + நெய்
  17. சாம்பார்
  18. ரசம்
  19. மோர் காய்ச்சியது
  20. தக்காளி பச்சடி
  21. காளன்
  22. பருப்பு பிரதமன்
  23. பாலடை பாயாசம்
  24. சம்பரம்

சம்பரம் என்பது மோரினை நன்கு கலக்கி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

இஞ்சி கிச்சடி – வறுத்த இஞ்சியில் தயிர் + உப்பு சேர்த்து கலக்கி கடுகு + காய்ந்த மிளகாய் + கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?
  • ஏப்ரல் 7, 2022
உப்பு/அட மாங்கா செய்வது எப்படி?