×
Sunday 1st of December 2024

பருப்பு பொடி செய்வது எப்படி?


Paruppu Podi Recipe in Tamil

ஒருமுறை சமைப்பதற்கு சோம்பேறியாக இருந்த போது இந்த பொடியை சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டதில் உண்மையில் அந்த சுவையில் மயங்கி தான் போனேன். இதுவரை வாழ்க்கையில் பருப்பு பொடியை தவறிட்டோம் என கூட வருந்தினேன்.

ஆந்திரா உணவில் எப்போழுதும் பருப்பு பொடி + நெய் கண்டிப்பாக இருக்கும். திருப்பதிக்கு போனால், ஓட்டல்களில் சாப்பிடும் போது இந்த காம்பினேஷனை தான் விரும்பி சாப்பிடுவேன், ஏன்னா எனக்கு பிடிக்கும்!

கூகிளில் தேடும்போது இந்த ரெசிபி கிடைத்தது, உடனே செய்தேன். அதே சுவையில் இருந்தது. கூடுதலாக நான் கொஞ்சம் பெருங்காய கட்டி சேர்த்துக் கொண்டேன்.

இதில் விரும்பினால் கடுகு சிறிது மற்றும் கறிவேப்பிலை வறுத்து அரைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் நான் சேர்க்கவில்லை. நான் எண்ணெயில் பொருட்களை வறுத்தும், கலருக்காக 2 காஷ்மிர் மிளகாயும் சேர்த்துக் கொண்டேன்.

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – 1/2 கப்
பொட்டுக்கடலை – 1/2 கப்
மிளகு + சீரகம் – தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
காஷ்மிரி மிளகாய் – 2
பெருங்காய கட்டி – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கல் உப்பு – தேவைக்கு

How to make Paruppu Podi in Tamil?

செய்முறை

  • கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் பொரித்து எடுத்த பின், மிளகாய்களை வறுத்து எடுக்கவும்.
  • அதே எண்ணெயில் துவரம் பருப்பு சேர்த்து பொன் முறுவலாக வறுத்தெடுக்கவும்.
  • பின் மிளகு, சீரகம், பொட்டுக் கடலையை வறுத்து ஆறவைக்கவும்.

பருப்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்

  • அனைத்தும் நன்றாக ஆறியபின் மிளகாய் + உப்பு சேர்த்து முதலில் அரைக்கவும்.

  • பின் மற்ற பொருட்களை சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக பொடித்து எடுக்கவும்.

  • இந்த பொடியை சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசைக்கு கூட சாப்பிட நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு

  • விரும்பினால் இதனுடன் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?