×
Thursday 5th of December 2024

சர்க்கரை நொக்கல் செய்வது எப்படி?


உள்ளடக்கம்

Sugar Nokkal Recipe in Tamil

நொக்கல் என்பது சேவ் செய்து அதனை சக்கரை பாகில் போட்டு எடுப்பது. திருமணங்களில்  பந்தியில் இதனை முக்கியமாக  வைப்பாங்க.

இது என்னுடைய 1100 வது பதிவு !!

தேவையான பொருட்கள்

கடலைமாவு – 1 கப்
அரிசிமாவு – 1/8 கப்
சோடா உப்பு – 1 சிட்டிகை
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிக்க
சர்க்கரை – 1 1/2 கப்
நீர் – 1/4 கப்
பால் – 1/8 கப்

Sakkarai Nokkal

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, வெண்ணெய், சோடா உப்பு சேர்த்து பிசைந்த பின் நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

  • சேவ் அச்சு அல்லது தேன்குழல் அச்சியில் போட்டு காயும் எண்ணெயில் வெண்ணிறமாக பொரித்தெடுக்கவும்.

  • ஒரு பாத்திரத்தில் சக்கரை + நீர் சேர்த்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்தவுடன் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு வடிகட்டவும்.

  • பின் மீண்டும் அடுப்பில் கொதிக்க விடவும். பாகினை தொட்டால் இரு விரல்களுக்கு இடையே 2 நூலிழை போல வரும்.. அல்லது ஒரு சிறு கிண்ணத்தில் நீர் வைத்து பாகினை ஊற்றினால் கரையாது, அதனை பந்து போல திரட்ட முடியும்; ஆனால் கையால் எடுக்க முடியாது. இதுவே 2 கம்பி பதம்.

  • 2 கம்பி பதம் வந்ததும் அடுப்பினை அணைத்து பொரித்த சேவ் சேர்த்து கலக்கவும்.

  • நன்றாக கலக்கி கொண்டே இருந்தால் பாகு சேவில் ஒட்டி பூத்தாற்போல இருக்கும்.
  • நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

பின் குறிப்பு

  • 2 கம்பிபதம் எடுத்தால் சக்கரை பூத்தாற் போல வரும்.
  • பேக்கிங் சோடா அதிகம் சேர்த்தால் எண்ணெயில் பிழியும் போது கரைந்துவிடும்.
  • சேவ்வினை பொன்னிறமாக பொரித்தாலும் பாகில் ஒட்டாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?