×
Thursday 5th of December 2024

வெந்தய களி செய்வது எப்படி?


உள்ளடக்கம்

Vendhaya Kali Recipe in Tamil

வெந்தய களி – இதனை காலை உணவாக பூப்பெய்தும் பெண்களுக்கு கொடுப்பார்கள். வெயில் காலங்களில் உடம்பு குளிர்ச்சியடையவும் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

வெந்தயம் – 100 கிராம்
புழுங்கலரிசி – 400 கிராம்
வெள்ளை முழு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பனைவெல்லம் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 100 மிலி
ஏலக்காய்தூள் – 1/2 டீஸ்பூன்
சுக்குபொடி – 1/4 டீஸ்பூன்

செய்முறை

  • அரிசி + உளுந்து இவற்றை ஒன்றாகவும், வெந்தயத்தை தனியாகவும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

  • மறுநாள் வெந்தயத்தை தனியாக வெண்ணெய் மாதிரியும், அரிசி உளுந்தினை மைய அரைக்கவும்.

  • பனைவெல்லதில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் கொதிக்க வைத்து ஏலக்காய்தூள் + சுக்கு பொடி சேர்த்து இறக்கவும்.

  • அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலக்கி பின் தேவையான நீர்  ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைக்கவும்.

  • கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும், ஒட்டும் போது நெல்லெண்ணெய் ஊற்றி மீண்டும் கலக்கவும்.

  • இப்போழுது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதோ அல்லது ஈரக்கையால் தொட்டால் மாவு ஒட்டாமல் வந்தாலோ அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • மாவு கையில் ஒட்டினால் மீண்டும் கிளறவும்.

  • கிண்ணத்தில் களியை வைத்து அதன்மேல் பனைவெல்லத்தினை ஊற்றி பரிமாறவும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?