×
Tuesday 10th of December 2024

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்


Chitra Pournami + Tiruvannamalai Girivalam

✔️ தமிழ் மாதம் சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி எனப்படுகின்றது. பெளர்ணமி தினம் மாதந்தோறும் வரும். தமிழ் இன மக்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாக கருதுகின்றனர்.

✔️ இந்த நாளானது சித்திர குப்தனின் அவதாரத் திருநாளாகும். மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்தது இந்த சித்ரா பௌர்ணமி. சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

Chitra Pournami Girivalam Distance & Benefits

✔️ ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தொலைவுகொண்ட கிரிவலப்பாதையை வலம்வருவார்கள்.

✔️ அதில், சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

✔️ அதன்படி, சித்ரா பௌர்ணமி இரவு 7 மணிக்கு தொடங்கிய கிரிவலம், மறுநாள் மாலை 5-30 மணிவரை நடைபெறம்.

✔️ இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிடுவர்.

✔️ ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

✔️ பக்தர்களின் வசதிக்காக சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சித்ரா பௌர்ணமியையொட்டி 2900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Chitra Pournami Pooja at Home in Tamil

✔️ சித்திரா பௌர்ணமியன்று ஆன்மீகப்படி கீழ்குறிப்பிடப்பட்டுள்ள செயல்களை வீட்டில் பின்பற்றினாலே போதும், எல்லா விதமான நல்ல காரியங்களும் அரங்கேறும்.

✔️ தினத்தன்று காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் உண்ணா விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும்.

✔️ திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் செல்வதற்கு ஏற்ற தினமாக இந்த சித்ரா பௌர்ணமி தினம் இருக்கிறது.

✔️ சித்திரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தான, தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும். பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்வு மேம்படும். சித்தர்கள் மகான்கள், ஞானிகள் போன்றோரின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

✔️ சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

✔️ சித்ரா பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது புண்ணியத்தை பெற்றுத்தரும்.

 

Also read,



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 24, 2024
பொங்கல் வாழ்த்துகள்: Pongal Wishes in Tamil
  • அக்டோபர் 20, 2024
அதர்வ வேதத்தில் நோய் மற்றும் சிகிச்சை பரிந்துரைகள்
  • செப்டம்பர் 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்