- டிசம்பர் 7, 2024
உள்ளடக்கம்
Read Happy Birthday Wishes in Tamil
பிறந்தநாள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக அற்புதமான நாள் அதை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாட வேண்டும். நமக்கு பிடித்தவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.
நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில் தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? கவலை வேண்டாம், மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில் கொடுத்துள்ளோம்.
புது நாள்
புது வருடம்
புது அனுபவம்
இவையெல்லாம் இன்னும்
சிறப்பாக அமையட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் பிறந்தநாளைப் பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமைப்படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் கனவுகள், எண்ணங்கள்
அனைத்தும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உண்மையான அன்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும்
எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன்னிடம் நட்புறவாட –
மொட்டும் மௌனமிழக்கும்,
மலரும் தன்னிதழ் சிதறும்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற
உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நட்புக்கு இலக்கணமே நீதான்
என்று சொன்னால் அது மிகையாகாது.
நண்பருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை,
முகவரியும் தேவை இல்லை,
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்குமாம்.
உன் பிறந்தநாளும் அப்படிதான்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் கனவுகள் நிகழ்வுகளாய் மலர,
உன் உள்ளம் அன்பால் நிறைய,
உன் உடல் இளமையாக ஜொலிக்க,
இந்த பிறந்தநாள் அமையட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நான் வாடிய தருணங்களில் எல்லாம்
எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும்
அன்பு உள்ளத்துக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் பிறந்தநாளுக்கு
அன்பளிப்பு தேடித்தேடி
தொலைந்தே போனேன்.
கடைசிவரை கிடைக்கவில்லை எனக்கு,
உன்னைவிட விலைமதிப்பான பரிசு..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நம் வாழ்க்கை அழகாய் மாறுகிறது
நாம் அன்பு காட்டும் போதும்,
அன்பைப் பெறும்போதும்.
அப்படி என் வாழ்க்கையை
அழகூட்டுகிற உனக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் துணையாய் பயணிக்கும்
அன்பு உள்ளத்திற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் விழியில் கலந்த உறவே
என் உயிரில் கலந்த உணர்வே
வாழும் காலமெல்லாம் உன்னோடு
நான் வாழும் வரம் தந்திடுவாயே
என் துணையே, இணையே, உயிரே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நான் சோர்வுறும்போதெல்லாம்
ஆறுதலாய் தோள்குடுக்கும்
உனக்கு இன்று பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன்னுடன் சேர்ந்து இந்த இனிய நாளை
கொண்டாடுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பு சகோதரனுக்கு / சகோதரிக்கு –
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எவ்வளவு தான் சண்டை போட்டாலும்
எனக்கு ஒன்னுனா முதல்ல துடிச்சுப் போற
என் அன்பு சகோதரனுக்கு / சகோதரிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வயதால் எவ்வளவு தான் வளந்தாலும்
எனக்கு எப்போதும் நீ குழந்தை தான்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் இல்லாமல் என் குழந்தை பருவத்தில்
இதை நான் ஒருபோதும் செய்திருக்க முடியாது..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் கனவுகள், ஆசைகள் எல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும் அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வெள்ளை உள்ளமே..
கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை,
உரித்தாகட்டும் உனக்கே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த உலகிலேயே சிறந்த நபருக்கு
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் வாழ்வின் அன்பான காதலிக்கு / காதலனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் எப்போதுமே எனக்காகவே இருந்திருக்கிறீர்கள்,
நான் எப்போதும் உங்களுக்காகவே இருப்பேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எதற்கும் மறுகாத என்நெஞ்சும் உருகுதடி,
உன் மையல் கொண்ட புன்சிரிப்பினிலே அன்பே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் பேச்சின் இனிமைகளை
என் செவிகள் சுவைக்கப் பெற்றேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் துணை நின்று
என்னை உயர்த்தினாய்.. அதற்கு என் நன்றி.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் பெருமை நீ!
என் அன்பு நீ!
என் எல்லாம் நீ!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் மகனே / மகளே.
நம் குடும்பத்தில் விலைமதிப்பற்ற செல்வம் (செல்லம்) நீ.
வாழ்க்கையில் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய்
இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன்னை பிள்ளையாகப் பெற்றதற்கு
நான் மிகவும் பாக்கியமாகவும்,
அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நீ எவ்வளவுதான் வளர்ந்துவிட்டாலும்
உன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும்
எப்போதும் செல்லப் பிள்ளைதான்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் மகனே / மகளே.
மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்
உனக்கு சிறப்பாகவும்,
சிரிப்பாகவும் அமையட்டும்!
என் அன்பு மகனே / மகளே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உலகிலேயே மிகச் சிறந்த நபரான
என் அப்பாவிற்கு என்னுடைய
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் மீது நான் வைத்திருக்கும்
அன்பையும் பாராட்டையும்
வார்த்தைகளால் விவரிக்க இயலாது..
இந்த பிறந்தநாளில் உங்களை வணங்குகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா.
என்னுடன் துணை நின்று
என் எல்லா கனவுகளும்
நிறைவேற உதவி புரிவதற்கு நன்றி..
உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற
இறைவனை வேண்டுகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா.
எளிமையின் சிகரமான அன்பு அப்பாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இறைவன் எப்போதும் உங்களை
அன்பு, மகிழ்ச்சி, அமைதி & ஆரோக்கியத்துடன்
வைத்திருப்பார் என்று இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா..
அம்மா என்று பெயரெடுக்க
ஐஇரு திங்கள் சுகச்சுமை சுமந்த
உங்களின் பிறந்தநாளன்று வணங்கி மகிழ்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
பாசாங்கில்லாத பாசத்தைப்
பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் எங்கள் அம்மாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அம்மா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும்,
நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும்
எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
உள்ளொன்று வைத்து புறமோன்று
பேசாப் பேதையான என் அம்மாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உலகிலேயே அதிக பாசமுள்ள என் அம்மாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்களை தாயாக நான் அடைந்ததற்கு
அடையும் மகிழ்ச்சியை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Read Happy Birthday Wishes in Tamil
உண்மையான அன்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும்
எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Thank You for the information on your site.