- டிசம்பர் 7, 2024
உள்ளடக்கம்
-மற்றுமொரு வரலாற்று சாதனை நிகழ்வாக 108 அடி ஹனுமான்ஜி சிலை ஸ்ரீ ஹரீஷ் சந்தர் நந்தா கல்வி மற்றும் அறக்கட்டளையால் நிறுவப்பட உள்ளது.
-ஈடு இணையற்ற பக்தி: ஹெச்சி நந்தா அறக்கட்டளை இந்தியாவின் நான்கு திசைகளிலும் 4 ஹனுமான்ஜி சிலைகளை நிறுவ முடிவு.
ராமேஸ்வரம், பிப்ரவரி 23, 2022:ஹனுமான்ஜி (கடவுள் ஹனுமான்) சார் தாம் திட்டத்தை தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா 2008-ம் ஆண்டு மேற்கொண்டார். இதில் முதல் கட்ட நடவடிக்கையானது சிம்லாவில் ஜாகு மந்திரில் 2010-ம் ஆண்டு நிறைவுபெற்றது. அப்போதைய இமாசலப் பிரதேச முதல்வர் பேராசிரியர் பிரேம்குமார் தூமலால் திறந்து வைக்கப்பட்டது. இவர் மத்திய அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாகுரின் தந்தையாவார். இரண்டாவது சிலையானது குஜராத் மாநிலம் மோர்பியில் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணி மார்ச் 2022-ல் நிறைவுபெற உள்ளது. தற்போது பிப்ரவரி 23, 2022-ல் மிக உயரிய ஹனுமான் சிலை தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் நிறுவ அடிக்கல் நாட்ட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஹெச்சி நந்தா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நிகில் நந்தா மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸ்பளே முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீ ஆர்.என். சௌபே (ஐஏஎஸ், யுபிஎஸ்சி முன்னாள் செயலர்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
ஹனுமான்ஜி சிலையானது இந்த வரிசையில் மூன்றாவதாகும். சிம்லாவில்ஜாகு மலையிலும், குஜராத் மாநிலத்தில் மோர்பியிலும் இரண்டு சிலைகள் ஸ்ரீ ஹரீஷ் சந்தர் நந்தா கல்வி மற்றும் அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. ஜாகுமலை ஹனுமான் சிலையானது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ளது. இது 2010-ம் ஆண்டு சிம்லாவில் நிறுவப்பட்டது. உலகிலேயே மிகவும் உயரமானதாகும். இதன் மொத்த உயரம் 8,100 அடி. இங்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஜாகு ஹனுமான்ஜியை தரிசிக்கின்றனர். இது நவீன வழிபாட்டு தலமாகவும், ஹனுமானை தரிசிக்க மேற்கொள்ளும் புனிதப்பயண இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்தமிக முக்கியமான திட்டம் குறித்து தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா, அறங்காவலர், ஹெச்சிநந்தா அறக்கட்டளை கூறியதாவது: “ஸ்ரீ ஹனுமான்ஜி மீதான பக்தி, எனது ஈடுபாடு 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஹனுமான்ஜியின் ஆசிர்வாதத்தில் நான்கு இடங்களில் ஹனுமான் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அவரது அனுக்ரஹத்தில் இத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்று குறிப்பிட்டார்.
“நாட்டின்தெற்குப் பகுதியில் ராமேஸ்வரம் மிகவும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. காரணம் ஸ்ரீ ராமரின் பாதத் தடங்கள் இந்த மண்ணில் தான் பதிந்தன. அந்த இடத்தில் அவரது தீவிர பக்தரான ஹனுமான்ஜிக்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்திலிருந்து தான் ஹனுமான் இலங்கைக்கு தாவிச் சென்றார். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரில் அவருக்கு சிலை நிறுவுவது சிறந்ததாக இருக்கும். எப்படி முந்தைய ஹனுமான்ஜி சிலைகள் ஜாகு, சிம்லா, இமாசலப்பிரதேசம், மோர்பி, குஜராத் ஆகியன திகழ்கிறதோ அதைப் போல இப்பகுதியும் சிறந்த வழிபாட்டுத்தலமாக மாறும் என நம்புவதாக,’’ அவர் மேலும் கூறினார்.
இந்தச் சிலையை வடிவமைக்கும் பணிகள் மார்ச்2022-ல் தொடங்கும். இந்த சிலை உருவாக்கம் அடுத்த 2 ஆண்டுகளில் முழுமை பெறும் என்ற குறிப்பிட்ட நிகில் நந்தா, இந்த மாபெரும் சிலை அமைப்பதற்கான செலவு மதிப்பு குறித்து தகவல் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த மொத்த திட்டப் பணிகளின்மதிப்பு ரூ. 100 கோடிக்கு மேலாகும். நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட செலவுகள் இதில் அடங்கும்.
விழாவில் பங்கேற்ற ஸ்ரீ தத்தாத்ரேய ஹோஸ்பளே, அகில இந்திய ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்(ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கூறியதாவது: இந்தியர்கள் அனைவருக்குமே ராமேஸ்வரம் மிகவும் புனிதமான இடமாகும். இப்பகுதியில் ஹனுமானுக்கு சிலை அமைப்பது இப்பகுதியின் பெருமையே மேலும் அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் இப்பகுதி மேலும் சுபிக்ஷமடையும். அத்துடன் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வர வழி ஏற்படுத்தும். கடவுள் ராமர் இங்கு இருந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. இதே இடத்தில் அவரது பிரதான சீடரான ஹனுமாருக்கும் சிலை உருவாக்குவது மிகவும் பொறுத்தமாக இருக்கும். அது இந்த நகருக்கும் பெருமை சேர்க்கும் என்று குறிப்பிட்டார்.
நிகில் நந்தா பற்றிய விவரம்
நிகில் நந்தா- முதல் தலைமுறை தொழில் முனைவோர், தொழிலதிபர், நன்கொடையாளர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர். இவர் ஜேஹெச்எஸ் ஸ்வென்ட்கார்ட் லேபரட்டரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராவார். 2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீடு மூலம் பங்குச் சந்தையில் இந்நிறுவனம் நுழைந்தது. இந்நிறுவனப் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் முதன்மை ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் மற்றும் பாங்க் ஆப் இந்தியா தலைவர் திருமதி ஆர். ஐயரிடமிருந்து பெற்றுள்ளார். துருக்கிய முதல் தலைமுறை இளம் தொழில் முனைவோராக சிஎன்பிசி டிவியால் பாராட்டப்பட்டவர். பத்தாண்டுகளில் இளம் தொழில் முனைவோராக அடையாளம் காணப்பட்டு ஃபோர் ஸ்கூல் நிர்வாகவியல் பள்ளியின் பாராட்டைப் பெற்றவர்.
இந்திய மண்ணின் மரபுகளையும் அதன் பாரம்பரியத்தையும் கட்டிக்காக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளவர். கடவுள் பக்தி, தேச பக்தி ஆகிய இரண்டும் நிகில் நந்தாவுக்கு அதிகம். நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் துறையும், நன்னெறிக்கு கடவுள் பக்தியும் அவசியம் என்று அடுத்தடுத்து அதை செயல்படுத்தியவர். இதையே கொள்கையாகக் கொண்டவர்.
இந்த மண்ணில் பெற்ற அனைத்து வளங்களையும் மண்ணிற்கே திரும்ப அளிக்க வேண்டும் குறிப்பாக அதில் இந்த சமூகம் பலன் பெற வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் நிகில் நந்தா. நாட்டிற்கு தனது கடமையைச் செய்வதன் மூலம் திருப்தி அடைபவர். மிகச்சிறந்த குடிமகனாகத் திகழ செயல்படுத்த வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளவர். இதற்காக ஸ்ரீ ஹரிஷ் சந்தர் நந்தா கல்வி மற்றும் அறக்கட்டளையை தனது தந்தை பெயரில் உருவாக்கியவர். இவரது தந்தை ஹரிஷ் சந்தர் நந்தாவிடமிருந்த இத்தகைய கொள்கைகள் தான் இப்போது இவரிடமும் காணப்படுகிறது. தந்தை வழியில் பயணிப்பதை பெருமையாகக் கருதுபவர்.
2008-ம் ஆண்டு இந்த அறக்கட்டளை உலகின் மிக உயரமான ஹனுமான்ஜி சிலையை ஜாகு ஆலயம், சிம்லாவில் நிறுவியது. இந்த சிலையை வடிக்க 2 ஆண்டுகள் பிடித்தது. 2010-ம் ஆண்டில் இந்த சிலை திறப்புவிழாவில் அப்போதைய முதல்வர் பேராசிரியர் பிரேம்குமார் தூமல் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அபிஷேக் பச்சன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
புற்று நோயாளிகளுக்கென உடல் ஆரோக்கிய அறக்கட்டளையையும் உருவாக்கியுள்ளார். புற்று நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் இந்த அறக்கட்டளை வழங்குகிறது.
For more details contact: Karthik– 9894361558