×
Wednesday 11th of December 2024

ஜடா முனி – சப்த முனி – முனீஸ்வரன் வழிபாடு


Jada Muni History in Tamil

ஜடா முனீஸ்வரர் வரலாறு

👺 முனீஸ்வரன் வழிபாடு என்பது காலம் காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் வணங்கக்கூடிய தெய்வ வழிபாடாகும். சுமார் 300 ஆண்டுக்கு முன்பிருந்தே நாம் முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். முற்காலத்தில், ஒரு கிராமத்தையே இரவில் கொள்ளையர்களிடம் இருந்து காப்பவராக முனீஸ்வரர் இருந்துள்ளார்.

ஜடா முனி

👺 ஜடா முனி – நாதமுனி, வேதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலைமுனி என்று பல்வேறு வகையாக முனீஸ்வரன் அழைக்கப்படுகிறார்.

👺 ஜடாமுனி சிவனுடைய அம்சம் நிறைந்தவர். அதாவது சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, பாம்பைக் கழுத்தில் ஆபரணமாக அணிந்து, கையில் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு அகோர ரூபத்தில் காட்சிதந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் இந்த ஜடாமுனி. சிவபெருமானின் முழு அம்சம் பொருந்திய ஜடாமுனி, தன் காலினால் எமனின் உயிரையே வீழ்த்தும் அளவுக்கு அற்புத சக்திகள் நிறைந்தவர்.

👺 எல்லாவிதமான தெய்வங்களும் இந்த ஜடாமுனிக்கு அடங்கும். எல்லா தெய்வங்களையும் ஜடா முனி கட்டுப்படுத்த முடியும். சடையுடன் கூடிய (தலைவிரி கோலமாக) இருக்கும் ஜடாமுனியை வணங்குவதால் நம்முடைய எல்லாவிதமான எதிரிகளும் ஒழிந்து விடுவர். தீமைகள் விலகும், வறுமை நீங்கும், பில்லி ஏவல் சூனியம் விலகும், எதிரிகள் செய்யும் கெடுதல்கள் விலகும், அனைத்து நன்மைகளையும் ஏற்படுத்தும் சக்தி படைத்தவர் இந்த ஜடாமுனி.

👺 ஜடாமுனியின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, தண்ணீரில் தவம் இருக்கக் கூடிய சக்தி படைத்தவர் மேலும் எப்போதும் தவக்கோலத்தில் இருப்பார். இப்படி இருக்கும் ஜடா முனியை வழிபடுவதால் நமக்கு வேண்டிய பலன்கள் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.

Muneeswaran Pooja Details

முனீஸ்வரன் வழிபாடு

👺 தோஷங்கள் விலகுவதற்கு ஜடாமுனிக்கு வடை, பால், பாயாசம், சுருட்டு, கொழுக்கட்டை, இறைச்சி, அவல், பொரி, கடலை இவற்றை வைத்து படையல் செய்து வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும்.

👺 இதனால்தான் அனைத்து கிராமப்புறங்களிலும் ஜடாமுனி, பல்வேறு விதமான முனீஸ்வரன் பெயர்களில் வைத்து பூஜிக்கப்படுகிறார். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தாலும், ஜடாமுனியின் அருளைக் கொண்டு அனைத்து தீய சக்திகளையும் வீழ்த்தி விடலாம். எந்த ஒரு தீய சக்தியையும் அழித்து நல்வழிப்படுத்தக் கூடிய அருள் கொண்டவர் இந்த ஜடாமுனீஸ்வரர்.

👺 ஜடாமுனி – மாய ஜடாமுனி, ஜல ஜடாமுனி, மலை ஜடாமுனி, குகை ஜடாமுனி, வன ஜடாமுனி என அனைத்து அவதாரங்களிலும் அருள்புரிகிறார்.

7 Muneeswaran Name

சப்த முனி

  1. Mutaiyar Muni / முத்தையர் முனி (முத்துமுனி)
  2. Chinna Mutaiyar Muni / சின்ன முத்தையர் முனி (சின்ன முத்துமுனி)
  3. Nondi Muni / நொண்டி முனி
  4. Jada Muni / ஜடாமுனி
  5. Poo Muni / பூ முனி
  6. Sem Muni / செம்முனி
  7. Vaal Muni / வாள் முனி
  • பால் முனீஸ்வரரை வழிபட்டால் குடும்பத்தில் பால் பொங்கும், எல்லா காரியத்திலும் வெற்றி கிட்டும்.
  • செம்முனியை வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும், செல்வச் செழிப்பு ஏற்படும்.
  • கருமுனியை வழிபட்டால் குடும்பத்திலுள்ள எல்லா தோஷங்களும் விலகி, கருவைக் காத்து தீமைகள் விலகும்.
  • அதேபோல் இந்த ஜடாமுனியை வழிபட்டால் அனைத்து எதிரிகள் தொல்லைகள் நீங்கும், சங்கடங்கள் விலகி சகல சௌபாக்கியம் ஏற்படும்.

Also, read: Sangili Karuppasamy History in Tamil


சிவாயம் என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை.

ஜடாமுனி என்று சிந்தித்திருப்போர்க்கு எதிரிகள் தொல்லை ஒருபோதும் இல்லை.


11 thoughts on "ஜடா முனி – சப்த முனி – முனீஸ்வரன் வழிபாடு"

    1. நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி வேண்டிக்கொள்ள வேண்டும்.

    1. முனீஸ்வரருக்கு பிடித்தமான படையல் – அவுல், சுண்டல், பொரி, சக்கரை, புளிசாதம், சுருட்டு, பூ, பழம் ஆகியவை. இதனால்தான் இவற்றை வைத்து படைக்கின்றோம்.

  1. சடா முனி வழிபாடு எந்த கால கட்டத்தில் தோன்றியது.சமட்டியார்களின் (எங்களின்) குலதெய்வம் சடா முனி. சமட்டியார்/சமூர்த்தியார் யார்? எங்கள் ஊரில் 300ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் முதல் மரியாதை/முதல் பாக்கு பெற்றுவரும் நாங்கள் சடாமுனியை குலதெய்வமாக வணங்கி வருகிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஆகஸ்ட் 8, 2024
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
  • ஜூலை 14, 2024
குரு ராகவேந்திர சுவாமி பிருந்தாவன தீர்த்த யாத்திரை
  • ஜனவரி 8, 2024
நடராஜர் பற்றிய தகவல்