×
Monday 9th of December 2024

அன்பு சக்தியும் சிவமுமாகும்


(சிந்து சமவெளி முத்திரை கூறுகிறது)

🛕 சிந்து சமவெளி முத்திரை எண்: எச்-440எ என்பது ஹரப்பாவில் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இம்முத்திரையின் நிழல் படம் சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண்: 2 பக்கம் எண்: 274-லும், இதனைப் பற்றிய மற்ற குறிப்புகள் பக்கம் எண்: 441-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

🛕 சதுர வடிவிலான இம்முத்திரையின், மேல் பகுதியில் ‘அன்’ என்பதைக் குறிக்கும் மனித கோட்டுருவம் ஒன்றும், மூன்று புடைப்பு எழுத்துக்களும், கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக் கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் ஒரு புடைப்பு உருவமும், பரம்மஞானம்; (பரத்தை அறிந்தவன்) என்பதை குறிக்கும் புடைப்புக் குறியீடு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன.

🛕 மிருதுவான துணி, மரப்பட்டை போன்றவற்றில் அச்சிட்டு படித்தறியக் கூடிய இந்த முத்திரை அன் + பு + சோ +  உ, அன்பு சோ உ என படிக்கப்படுகிறது.

🛕 இவற்றிலுள்ள ‘பு’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘சோ’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘உ’ என்பது 4-ஆவது உயிர் எழுத்து.

அன்பு : தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று,  நேயம், அருள், பக்தி
சோ : அரண், உமா என்னும் உமை – சக்தி
 : உமாபதி என்னும் சிவபெருமான் – சிவம்

🛕 பொருள்: அன்பு என்னும் தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று சக்தியும் சிவமுமாகும்.

🛕 குறிப்பு: இந்த முத்திரையில் சிவசக்தி என்பதற்கு பதிலாக சக்திசிவம் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

🛕 சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண்: 2: Corpus of Indus Seals and Inscriptions, Vol. 2, Collections in Pakistan. Helsinki 1991, Suomalaines Tiedeakatemia. ISBN: 951-41-0556-7

Thanks:

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்