×
Wednesday 11th of December 2024

அங்குசம் என்னும் தோட்டியின் சிறப்பு


உள்ளடக்கம்

Angusam Weapon in Tamil

🛕 அங்குசம் என்பது மரத்தினால் செய்யப்பட்ட கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ள உலோகத்தால் ஆன ஒரு கொக்கியைக் கொண்டது. அங்குசம் என்பதற்கு யானையை அடக்கும் (Elephant Control Stick name in Tamil) கருவியாகிய ‘தோட்டி’, வாழை எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அது தூரத்தில் உள்ளவற்றையும், எளிதில் தம் வயப்படாதவற்றையும் வளைத்து எளிதில் தம் வயப்படுத்தக் கூடியது என்பதால் அதனைத் தோட்டி எனக் குறிப்பிடப்படுகிறது.

🛕 அங்குசம் என்பது அனைத்து சீவராசிகளின் சித்தமலமாகிய அகங்காரம் என்னும் ஆணவமலத்தை நீக்கி, தன்வயப்படுத்தி, நல்வழிகாட்டி இறுதியில் முக்தி அடையச் செய்யக்கூடிய சர்வ வல்லமை படைத்ததாகக் கருதப்படுவதாகும்.

🛕 யானைப் பாகன் எவ்வாறு ஓர் அங்குசத்தால் யானையை அசையாமல் அடக்குவது போல, யோகமார்க்கத்தில் அவ்வாறே இந்திரியங்களை அறிவால் (அங்குசத்தால்) அடக்கப்படுவதாக நிர்வாணோபநிடதம் (சூ.37) கூறுகிறது.

🛕 அன்னை அருள்மிகு லலிதா பரமேசுவரி, அங்குசபாணி என்னும் காளி, ஈசன், சதாசிவ மூர்த்தி, பைரவர், அங்குசதாரி, அங்குசபாசதரன், அங்குசபாசமேந்தி என்னும் விநாயகப்பெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆகிய தெய்வத் திருமேனிகளின் கரங்களில் அங்குசத்தைக் காணலாம்.

🛕 அன்னை அருள்மிகு லலிதா பரமேசுவரியின் திருக்கரத்திலுள்ள அங்குசம் நிறமற்றத் தன்மையையும், ஈசனின் திருக்கரத்திலுள்ள அங்குசம் அவரது பத்துக் குணங்களில் ஒன்றான நிறமற்ற குணத்தையும் குறிப்பிடுவதாக் கூறப்படுவதுண்டு.

🛕 தாயே! மூவுலகத்தையும் அசையாமல் கட்டக்கூடிய திறமையுள்ளதும், மிகச் சிறந்த வீரியம் படைத்ததும், வெற்றியுடன் விளங்குவதுமான உமது அங்குசத்தை எவன் ஒருவன் தனது உள்ளத்தில் தியானிக்கிறானோ, அவனே தேவர்களையும், பூவுலகை ஆள்பவர்களையும், எதிரியின் சேனைகளையும் அசையாமல் கட்டுப்படுத்தக் கூடியவன் ஆவான் – என சக்திமஹிம்ன தோத்திரப்பாட்டு – 48 கூறுகிறது.

ankush rock art in chittiramezhi about periya nattar

🛕 மேற்கண்ட சிறப்புகள் உடைய ஓர் அங்குசத்தின் வடிவம்; ஒரு கல்தூணில் சித்திரமேழி பெரியநாட்டாரைக் குறிக்கும் குறியீடுகளுக்கு நடுவே பொறிக்கப்பட்டுள்ளதை, தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், ஸ்தபதி பழனிசாமி ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிரி தாலுகா, வெள்ளூரில் கண்டுபிடித்துள்ள செய்தியையும் தெரிவிக்கின்றனர்.

Also, read


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்