×
Thursday 5th of December 2024

பிரமன் படைத்த உருவம் (மெய்ஞ்ஞானம் பெரும் வரை) மறுபடியும் எடுக்கப்படுவதாகும்


எம்-40எ (M-40A) என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

இந்த முத்திரையைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,

சதுர வடிவிலான இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 20லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முத்திரையின் மேல் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள 8 எழுத்துக்களில் 4-ஆவது எழுத்து 5-ஆவது எழுத்துடனும், 6-ஆவது எழுத்து 7-ஆவது எழுத்துடனும் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.

புடைப்பு வகையைச் சேர்ந்த 8 எழுத்துக்கள் மிருதுவான துணி அல்லது மரப்பட்டையின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக. (அ)ரி + (இ)ட் + ட + (உ + ரு) + (ஏ + ன) + ஐ (ஐந்து). அரி இட்ட உரு ஏனை என நான்கு சொற்களாகப் படிக்கப்படுகின்றன.

‘அ’ என்ற 1-ஆவது உயிர் எழுத்துடன் இணையும் ‘ரி’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து, ‘ட’ என்பது 5-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘உ’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ஏ’ என்பது 8 -ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்ற 18-ஆவது உயிர்மெய் எழுத்து அது ‘ஐ’ என்ற 9-ஆவது உயிர் எழுத்தோடு இணையும் ‘னை’ எனும் 18-ஆவது உயிர்மெய் எழுத்து ஆகியவையாகும்.

அரி: திருமால், சிவபெருமான், பிரமன் ஒளி, அரி என்னும் குன்று, அன்பு
இட்ட: கொடுத்த, படைத்த
உரு: உருவம், மேனி
ஏனை: மற்று – மறுபடியும், பின், வினைமாற்றுக் குறிப்பு

பொருள்: பிரமன் படைத்த உருவம் (மெய்ஞ்ஞானம் பெரும் வரை) மறுபடியும் எடுக்கப்படுவதாகும்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே – திருமந்திரம் 724

பொருள்: உடம்பு அழிந்தால் உயிரும் அந்த உடலை விட்டு அகன்றுவிடும். பிறகு உயிருக்கு உற்ற துணையான, மெய்ஞ்ஞானமாகிய பரம்பொருள் சிந்தனையில், அவர்களால் ஈடுபடவும் இயலாது. எனவே உடம்பை அழியாது காத்திருக்கும் வழியைக் காண உடம்பையும், அதிலுள்ள உயிரையும் காப்பதற்காக காப்பாற்றி வளர்த்து வரலானேன்.

இந்த முத்திரை பிரமன் படைத்த உருவம் மெய்ஞ்ஞானம் பெரும் வரை மறுபடியும் தொடர்ந்து எடுக்கப்படுவதாகும் என்பதை சூட்சமமாக குறிப்பிடுவதாகக் கருதலாம். இக்கருத்துக்கு தக்கதொரு சான்றாக திருமூலர் அருளிய திருமந்திரம் – 724 பாடலும் கூறுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்