×
Monday 9th of December 2024

இகழ்பவன் நேர்மை இல்லாதவனே – H-645A


எச்-645எ என்ற அடையாள எண்ணுடைய ஒரு சிந்து சமவெளி முத்திரை அரப்பாவில் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ளதோர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் வரைப்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 2, பக்கம்-306லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம்-442லும் பதிவிடப்பட்டுள்ளன. இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ளச் செய்தியாவது:-

நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 7 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் (வலமிருந்து இடமாக) 3-ஆவது, 4-ஆவது ஆகிய இரண்டு எழுத்துக்கள் 5-ஆவது எழுத்தின் உள்ளேயும், 6-ஆவது எழுத்து 7-ஆவது எழுத்தின் உள்ளேயும் பொறிக்கப்பட்டுள்ளன.

புடைப்பு வகையைச் சார்ந்த இந்த முத்திரையை மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக: யா + ப + (ன + ன் + ப) +  (ன + மே), யாபனன் பனமே எனப் படிக்கப்படுகிறது.

யாபனன் : பொழுதுபோக்குபவன், இகழ்பவன், தாமதிப்பவன்;
பனமே : பருமையே, செவ்வையின்மையே (நேர்மை இல்லாதவனே)
பொருள்: இகழ்பவன் நேர்மை இல்லாதவனே.

இந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ள சொற்களின் பொருளுக்கொரு சான்றாகத் தெய்வப்புலவர் அருளிய குறள் ஒன்றைச் சுட்டிக் காட்டலாம்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – திருக்குறள் 534

பொருள்: உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைபிடித்துச் செய்தல் வேண்டும். இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாம். ஆதலான் இஃது அறத்தின் கண் இகழாமல் செய்வது கூறிற்று.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்