×
Wednesday 4th of December 2024

நமசிவாய என உச்சரிப்பதன் நல்வினை பிறவிநீக்கமே


சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது முத்திரை எண்: எம்-1452எ,பி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முத்திரையின் நிழல் படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி. ஐ. எஸ், ஐ தொகுப்பு 2, பக்கம் 199 – லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 400 – லும் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், காரைக்குடி, முனைவர் காசி ஸ்ரீ காளைராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியாவது,

சதுர வடிவிலான இந்த முத்திரையின் ‘எ’ என்னும் முன்புறத்தில் 7 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது எழுத்து 3-ஆவது எழுத்துடனும், 4-ஆவது எழுத்து 5-ஆவது எழுத்துடனும், 6-ஆவது எழுத்து 7-ஆவது எழுத்துடனும் இணைந்துள்ளன. ‘பி’ என்னும் பின்புறத்தில் 3 எழுத்துக்களும், மலையாடு என்னும் வரையாட்டின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த முத்திரை வலமிருந்து இடமாக, ப + (ஞ் + சா) + ( ட் + ச ) + (ரு + ள்) + ப + ர + மே. பஞ்சாட்சருள் பரமே என்பது பஞ்சாட்ச(ர) (அ)ருள் பரமே எனப் படிக்கப்படுகிறது.

இருபுறங்களில் உள்ள எழுத்துக்களில், ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ஞ்’ என்பது 4-ஆவது மெய் எழுத்து, ‘சா’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து, ‘ச’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16-ஆவது மெய் எழுத்து,  ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ர’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘மே’ என்பது 10-ஆவது உயிர்மெய் எழுத்து ஆகியவை ஆகும்.

பஞ்சாட்ச(ர) (அ)ருள் பரமே

பஞ்சாட்ச(ர) என்னும் பஞ்சாட்சரம் என்பதற்கு  நமசிவாய என்னும் ஐந்தெழுத்துகளான சிவபிரானை  அதிதெய்வமாக கொண்ட மந்திரம்  எனவும், அருள் என்பதற்கு பொழிவு, கருணை, நல்வினை (முற்பிறப்பில் செய்த புண்ணியச் செயல்), ஏவல், சிவசக்தி எனவும், பரமே என்பதற்கு கடவுளே, மேலானதே, வீடுபேரே, பிறவிநீக்கமே எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

பொருள்: நமசிவாய என உச்சரிப்பதன் நல்வினை பிறவிநீக்கமே

இந்த முத்திரையின் வாயிலாக சிந்து சமவெளி நாகரிக மக்கள் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து அருள்மிகு சிவபிரானை வணங்கி வழிபட்டுள்ளனர் என்பதும், அவ்வாறு உச்சரிப்பதன் பலன் நல்வினையும் பிறவிநீக்கம், அதாவது பரலோகப் பதவி அடைவது என்பதையும் நன்கு அறிந்துணர்ந்து உள்ளனர் என்பதும் தெரியவருவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பு: முற்பதிவில் பஞ்சாட்சருள் என்பதை மட்டும் குறிக்கும் கே-62எ முத்திரையைக் கண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முத்திரையின் வாயிலாக வரையாடு இந்தியத் திருநாட்டின் மலைகள் நிறைந்த தென்பகுதியில் வாழ்ந்த பெருங்குடிமக்களை குறிக்கும் அடையாளச் சின்னம் என்பது முத்திரை எண்: மே.304எ-யின் வாயிலாக அறியமுடிகிறது.

Thanks:

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose
karaikudi kasi sri kaalai rasan
காரைக்குடி, முனைவர் காசி ஸ்ரீ காளைராசன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்