×
Wednesday 11th of December 2024

சிந்து சமவெளி முத்திரையில் ‘நேசன்’ என்னும் தமிழ்ச் சொல்


7500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்களில் ஒன்றான சதுர வடிவிலான முத்திரையின் மேல் பகுதியில் மூன்று பழந்தமிழ் எழுத்துக்களும், கீழ் பகுதியில் எருது வகையைச் சார்ந்த ஒத்தக் கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானத்தைக் குறிக்கும் ஒரு சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த முத்திரை ஒரு தனியார் வசம் உள்ளதென்பது தெரியவருகிறது.

இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் அறிவித்துள்ள செய்தியாவது,

இம்மூன்று எழுத்துக்கள் இடமிருந்து வலமாக, நே + ச + ன். “நேசன்” எனப் படிக்கப்படுகின்றன.

நேசன் என்ற சொல்லுக்கு நண்பன், “பக்தன்”, தாசன், அடியான் எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அடியான் என்பது தொண்டன் எனப் பொருளாகும். அது அடிமை என்பதைக் குறிப்பதல்ல.

பழந்தமிழ் மொழிச் சொற்களான  நேசன் என்பதை ‘நேச’ எனவும் ‘தாசன்’ என்பதை ‘தாச அல்லது தாஸ்’ எனவும்  குறிப்பிடுவது வடமொழிச் சொல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்டவற்றின் வாயிலாக உலகிலேயே மூத்த நாகரிகம் எனக் கூறப்படும் சிந்து சமவெளி நாகரிகம் பழந்தமிழர் நாகரிகம் என்பதும், அந்நாகரிக மக்களின் தாய்மொழி பழந்தமிழ் மொழி என்பதும் தெரியவருவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்