×
Wednesday 4th of December 2024

பாலை என்னும் சிவசத்தி (சிவனிற் பிரியாத சக்தி)


உள்ளடக்கம்

Paalai Ennum Sivasakthi

🛕 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான அரப்பாவில் மேற்கொண்ட ஒரு தொல்பொருள் அகழாய்வின் போது முத்திரை எண்: எச்-512எ கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது பாகிஸ்தானில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

🛕 இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு-2 பக்கம் 286-ல் அச்சிடப்பட்டுள்ளது. மற்ற குறிப்புகள் பக்கம் 442-ல் கொடுக்கப்பட்டுள்ளன.

🛕 இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர், அறிவியல் ஆன்மிக விஞ்ஞானி தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவிக்கும் செய்தியாவது,

🛕 சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் இரண்டு புடைப்பு எழுத்துக்களும், ஐந்து எனும் புடைப்பு எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் எனும் ஒத்தக்கோடு நந்தியின் புடைப்பு உருவமும், பரமஞானம் (பரத்தை அறிந்தவன்) என்பதைக் குறிக்கும் புடைப்புக் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த முத்திரை துணி, மரப்பட்டை ஆகிய மிருதுவானவற்றில் அச்சிட்டு படித்தறியக் கூடிய இந்த முத்திரை பா+ ல்+  ஐந்து (ஐ). ‘பாலை’ எனப் படிக்கப்படுகிறது.

🛕 இவற்றில், ‘பா’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ல்’ என்பது 13-ஆவது மெய் எழுத்து, ஐந்து என்பது 9-ஆவது உயிர் எழுத்தான  ‘ஐ’ என்பதாகும். ‘ல் +  ஐ’ இணைந்தால் அது ‘லை’ என்னும் 13-ஆவது உயிர்மெய் எழுத்தாகும்.

பாலை: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை ஐவகை நிலங்கள். அவற்றில் பாலை என்பதற்கு குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம், பதினாறு வயதுக்குட்பட்ட பெண், சிவசத்தி (சிவசக்தி) எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

🛕 இதன் அடிப்படையில் இம்முத்திரை ‘பாலை என்னும் சிவசத்தி’ (சிவனிற் பிரியாத சக்தி)  என்பதைக் குறிக்கும் ஒரு தமிழ்ச் சொல்லாகவும், பாலைக்கு உரியவளான ‘கொற்றவை’ (பாலைக்கிழத்தி) என்னும் ஒரு பெண் தெய்வத்தையும் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்