×
Thursday 5th of December 2024

திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது


எச்-2200எ,பி,சி., எச்-2201எ,பி,சி., எச்-2204எ,பி,சி., எச்-2205எ,பி,சி., எச்-2206எ,பி,சி., எச்-2207எ,பி,சி.,  எச்-2208எ,பி,சி., எச்-2209எ,பி,சி. ஆகிய அடையாள எண்களுடைய ஒரே மாதிரியான 8 முத்திரைகள் அரப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைப்பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,

அவற்றின் நிழல்படங்கள் சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 3.1, பக்கம் 291லும், இவற்றைப் பற்றிய மற்றக் குறிப்புகள் பக்கம் 436-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவுக்கல்லிலான முப்பட்டை கட்டையின் ‘எ’ புறத்தில் சீ என்ற 3-ஆவது உயிர்மெய் எழுத்தைக் குறிக்கும் சீப்பின் குறியீடும், 7 எழுத்துக்களும், ‘பி’ புறத்தில் 2 எழுத்துக்களும், ‘சி’ புறத்தில் 1 எழுத்தும் கீறப்பட்டுள்ளன.

இந்த முத்திரைகளின் 3 புறங்களில் கீறப்பட்டுள்ள குறியீடும், எழுத்துக்களும் இடமிருந்து வலமாக,  சீ + பா + நா + ட் + டா + னி + ட் + ட + ப + ண் + சு. சீ பாநாட்டானிட்ட பண் சு எனப் படிக்கப்படுகின்றன.

இவற்றில்  ‘சீ’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘பா’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘நா’ என்பது 8-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து,  ‘டா’ என்பது 5-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘னி’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து,  ‘ட’ என்பது 5-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ண்’ என்பது 6-ஆவது மெய் எழுத்து, ‘சு’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து ஆகியவையாகும்.

சீ பாநாட்டானிட்ட பண் சு (சீ பாநாட்டான் இட்ட பண் சு)

சீ’ என்பதற்கு திரு, திருமகள் எனவும், ‘பா நாட்டான்’ என்பதற்கு பா நாட்டைச் சேர்ந்தவன் எனவும், ‘இட்ட’ என்பதற்கு வைத்த, கொடுத்த, படைத்த எனவும், ‘பண்’ என்பதற்கு இசை, பாட்டு, ஓசை, அலங்காரம், கூத்துவகை, தகுதி, அமைவு, தொண்டு எனவும், ‘சு’ என்பதற்கு  சுகம், சுபம், மங்களம் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

பொருள்: திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்
  • மே 7, 2022
மலை உருவக் கோயில் / கடல் வடிவ மருதநிலத்தூர்