×
Wednesday 4th of December 2024

அரங்கம் சென்றேன் திருவரங்கம் சென்றேன்


உள்ளடக்கம்

Arangam Sendren Thiruvarangam Sendren

🛕 ஊரெல்லாம் கோலாகலம், தெருவெல்லாம் கோலங்கள்! அம்மா இன்றென்ன பண்டிகையென்றான் சிறுவன்?

🛕 அரங்கதான் தெருவலமடா கந்தா என்றாள் அம்மா!

🛕 அம்மா நாமல்லவோ திருவரங்கம் செல்லவேண்டும், ஆண்டவனை இழுப்பானேன் தெருவிலென்றான்?

🛕 மகனே அன்னை அரங்கநாயகியின் அகமுடையான் கொடுக்கிறான் திறந்த அகவாசம் திரும்பத்திரும்ப காலம் கடக்குமுன், கண்கள் உலருமுன், கால்கள் தளருமுன், மீளாத்தூக்கத்திலாலுமுன், கோவில் படி மிதியாவிடினும், திருவடி மறப்பினும், உன் வாசல் படிக்கு, திருவடி வருங்காலாயினும் பணிந்து விடு என.

அரங்கம் சென்றேன் திருவரங்கம் சென்றேன்!
அன்னை காவிரிமடிபடுத்த அரங்கனைக் கண்டேன்!
கடல்மேலுறங்கும் கண்ணனைக் கண்டேன்!
பாற்கடல்மேலுறங்கும் கருணைக் கடல் கண்டேன்!
அரலம் தாங்கும் அரவிந்தனைக் கண்டேன்!
அன்னையவள் துதிக்கும் அனந்தனைக் கண்டேன்!

ஆண்டாளும் நாச்சியாரும் காலமாய் காத்திருக்க
ஆழ்துயில் கொண்டோனை எழுப்புவோர் யாரோ?
கண்டதே இம்மையின் பாக்கியமல்லவா
தொண்டனுக் கேனினி மறுமையின் கவலை!

செல்லுவீர் நீரும் அரங்கத்தான் திருவடிக்கு
வெல்லுவீர் பிறவி பயங்களெல்லாம்!

 

Also read,



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil