×
Wednesday 11th of December 2024

துர்கா சப்தசதி – ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி


உள்ளடக்கம்

Durga Saptashati in Tamil

ஸ்ரீ சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதும், மந்திரங்களாக கருதப்படுவதும் ஸப்தசதீ என்று அழைக்கப்படுவதுமான தேவீ மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. இது உலக நன்மையை வேண்டி பாராயணத்திற்கும் சண்டீ ஹோமத்திற்கும் கையாளப்படுகின்றது. அவரவர்களுக்கு ஏற்ற முறைப்படி ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணம் செய்தும் அதனால் ஹோமத்தை செய்வதும் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர்.

தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ (Durga Saptashloki in Tamil) எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீ தேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இணையாகக் கருதப்படுகின்றது. அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.

இந்த ஸப்தச்லோகீ பாராயணத்தாலேயே ஸப்த சதீ பாராயண பலத்தை உறுதியாகப் பெறக்கூடும். கலியில் “கீதை”, “விஷ்ணு சகஸ்ரநாமம்“, “தேவி மஹாத்மியம்”, “லலிதா ஸகஸ்ரநாமம்” இந்நான்கும் நல்ல பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவி மஹாத்மிய பலச்ருதியில் இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிகை நல்ல கணவனை அடைவாள் இந்த மஹாத்மியத்தை கேட்ட ஸ்திரீ சுமங்கலித் தன்மையைப் பெறுவாள். மனிதன் இஹத்தில் எல்லாவற்றையும் அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் மஹிமையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாயி அருள் புரியட்டும்.

Durga Saptashati Lyrics in Tamil

சிவ உவாச-

தேவீத்வம் பக்தசுலபே ஸர்வகார்யவிதாயினி|
கலௌ ஹி கார்யஸித்த்யர்தமுபாயம் ப்ரூஹி யத்னத: ||

தேவி உவாச-

ஸ்ருணு தேவ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாதனம்|
மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பாஸ்துதி: ப்ரகாஸ்யதே||

ஓம் அஸ்ய ஶ்ரீ துர்கா ஸப்தலோகீ ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாராயண ருஷி: அனுப்டுப் சந்த:
ஶ்ரீமஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தேவதா: ஶ்ரீதுர்கா ப்ரீத்யர்தம் ஸப்தஸ்லோகீ துர்கேபாடே விநியோக:|

ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா|
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி|| (1)

பொருள்: ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜூவன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹிக்கும்படி செய்கின்றாள்.

பலஸ்ருதி: இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி|
தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா|| (2)

பொருள்: ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

பலஸ்ருதி: இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.

ஸர்வ மங்கள-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே|
சரண்யே த்ர்யம்பகே கௌரீ(தேவி) நாராயணீ நமோ(அ)ஸ்து தே|| (3)

பொருள்: எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

சரணாகத-தீனார்த்த-பரித்ராண-பராயணே|
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே|| (4)

பொருள்: தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

பலஸ்ருதி: மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாக உண்டாகும்.

ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே
பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்துதே|| (5)

பொருள்: அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.

ரோகான-சேஷான-பஹம்ஹி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலான பீஷ்டான்|
த்வாமாஸ்ரிதானாம் ந விபன்ன
ராணாம் த்வாமாஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி|| (6)

பொருள்: உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

பலஸ்ருதி: இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.

ஸர்வா-பாதா-ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி|
ஏவ மேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்|| (7)

இதி ஶ்ரீ துர்காஸப்தஸ்லோகீ சம்பூர்ணம்||

பொருள்: எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.

பலஸ்ருதி: இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த “ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்” பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்!

Also, read



3 thoughts on "துர்கா சப்தசதி – ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி"

  1. நான் வேலை செய்யும் இடத்தில் internet சொந்த உபயோகம் செய்ய முடியாது. இந்த ஸ்லோகத்தை காகித copy எடுக்க அனுமதிதற்கு மிக்க நன்றி. God bless.

  2. அன்புடையீர்,

    இந்த ஸ்லோகத்துக்கு சொல் சொல்லாக பொருள் தேடிக்கொண்டிருக்கிறேன். இதுவரை கிடைக்கவில்லை. நீங்கள் தந்து உதவ இயலுமா ?

    உதாரணமாக :

    துர்கா சப்தஸ்லோகி என்ற தலைப்பில் தொடங்கி (ஸப்த என்றால் ஏழு என்று அறிவேன், அதே போல ஸ்லோகம் என்றால் பாடல். ஆனால் ஸ்லோகி என்றால் ? துதிக்கப்படுபவள் என்று பொருளா ? எனில் ”ஏழு பாடல்களால் துதிக்க / வணங்க / உபாசிக்கப்படும் துர்க்கை” என்பது இதன் பொருளா ?)

    அதேபோல

    அஸ்யஸ்ரீ –
    ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய –
    அனுஷ்டுப் சந்தஹ –
    ப்ரீத்யர்தம் –
    துர்கேபாடே –
    விநியோகஹ –

    இதுபோல சொல் சொல்லாக தமிழில் பொருள் கொடுத்தால் புரிந்து எளிதாக ஒட்டு மொத்த பொழிப்புரை உதவியோடு மனனம் செய்ய ஏதுவாக இருக்கும்.

    உங்கள் உதவியை எதிர்நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை