×
Sunday 1st of December 2024

சகல மங்களும் அருளும் ஸ்ரீ நடேசாஷ்டகம்


Shambu Natanam Lyrics in Tamil

ஸ்ரீ பதஞ்சலி முனிவர் அருளிய ஸ்ரீ சம்பு நடனம்

Sri Natesashtakam Lyrics in Tamil

ஸ்ரீ நடேசாஷ்டகம்

ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம்
ஜலஜலஞ் சலித மஞ்ஜுகடகம்
பதஞ்ஜலி த்ருகஞ் ஜநமநஞ்ஜந
மசஞ்சலபதம் ஜநந பஞ்ஜநகரம் |
கதம்பருசி மம்பரவஸம் பரமமம்புத
கதம்பக விடம்பக களம்
சிதம்புதி மணிம் புதஹ்ருதம் புஜரவிம்
பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (1)

விளக்கம்:– ஸதஞ்சிதம்- ஸாது ஜனங்களால் பூஜிக்கப்பட்டவரும், உதஞ்சித- மிகவும் பூஜிக்கப்பட்ட, குஞ்சித- வளைந்த, பதம்- இடது காலை உடையவரும், ஜலஜலஞ்சலித- சலசல என்று அசைகின்ற, மஞ்ஜு-,அழகான, கடகம்- வளைகளையுடையவரும், பதஞ்ஜலி- பதஞ்ஜலி மஹரிஷியின், த்ருகஞ்ஜனம்- கண்களுக்கு மைபோல ஸந்தோஷத்தைச் செய்பவரும், அனஞ்ஜனம்- தோஷமில்லாதவரும்,அசஞ்சல- அசையாத, பதம்- ஸ்தானமாயிருப்பவரும், ஜனன- பிறப்புக்கு, பஞ்ஜனகரம்- நாசத்தைச் செய்பவரும், கதம்பருசிம்- கதம்பபுஷ்பத்தின் காந்தி போன்ற காந்தியையுடையவரும், அம்பரவஸம்-சிதம்பரத்தில் வசிப்பவரும், பரமம்- உத்க்ருஷ்டமானவரும், அம்புத- மேகங்களின், கதம்பக- கூட்டத்திற்கு, விடம்பக- ஸத்ருசமான, களம்- கழுத்தையுடையவரும், சிதம்புதி- ஞான ஸமுத்திரத்தின், மணிம்- ரத்னம் போன்றவரும், புதஹ்ருதம்புஜ- யோகிகளின் ஹ்ருதயார விந்தத்திற்கு, ரவிம்- ஸூர்யன் போன்றவருமான, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சிதம்பர ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி- மனதில், பஜ- தியானம் செய்.

ஹரம்த்ரிபுர பஞ்ஜநமநந்த க்ருதகங்கண
மகண்டதய  மந்தரஹிதம்
விரிஞ்சிஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்திதபதம்
தருண சந்த்ர மகுடம் |
பரம்பத விகண்டித யமம்பஸித மண்டிததநும்
மதநவஞ்சநபரம்
சிரந்தநமமும் ப்ரணத ஸஞ்சித நிதிம்
பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (2)

விளக்கம்:– ஹரம்- ஸகல பாபங்களையும் அபஹரிப்பவரும், த்ரிபுர பஞ்ஜனம்- மூன்று புரங்களையும் நாசம் செய்தவரும், அநந்த க்ருத கங்கணம்- ஆதிசேஷன் என்ற ஸர்ப்பத்தால் செய்யப்பட்ட வளைகளையுடையவரும், அகண்டதயம்- நிறைந்த கருணையையுடையவரும், அந்த ரஹிதம்- நாசம் இல்லாதவரும், விரிஞ்சி- பிரம்ம தேவராலும், ஸுரஸம்ஹதி- தேவக் கூட்டத்தாலும், புரந்தர – தேவேந்திரனாலும், விசிந்தித- தியானம் செய்யப்பட்ட, பதம்- குஞ்சித சரணத்தையுடையவரும், தருண சந்த்ர மகுடம்- பாலச்சந்திரனை சிரஸில் உடையவரும், பரம்- எங்கும் நிறைந்தவரும், பத விகண்டித யமம்- காலால் அடிக்கப்பட்ட யமனையுடையவரும், பஸிதமண்டித தநும்- விபூதியால் அலங்கரிக்கப்பட்ட சரீரத்தையுடையவரும், மதன வஞ்சனபரம்- மன்மதனை வஞ்சிப்பதில் ஆசையுள்ளவரும், சிரந்தனம்- முந்தி உள்ளவரும், அமும்- ஹ்ருதயத்தில் இருப்பவரும், ப்ரணத ஸஞ்சித நிதிம்- நமஸ்கரித்த பக்தர்களால் ஸம்பாதிக்கப்பட்ட புதையலுமான, பர-ஸர்வோத்தமரான, சிதம்பர – சிதம்பர ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அவந்தமகிலம் ஜகதபங்ககுண துங்கமமதம்
த்ருதவிதும் ஸுரஸரித்
தரங்க நிகுரும்ப த்ருதிலம்பட ஜடம்
சமநடம்ப ஸுஹரம் பவஹரம் |
சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம்
கரலஸந் ம்ருகசிசும் பசுபதிம்
ஹரம் சசிதனஞ்சய பதங்கநயநம்
பரசிதம்பர நடம் ஹ்ருதிபஜ ||        (3)

விளக்கம்:– அகிலம்- ஸமஸ்தமான, ஜகத்- உலகத்தை, அவந்தம்- ரக்ஷிப்பவரும், அபங்ககுண துங்கம்- உயர்ந்த குணங்களால் மேலானவரும், அமதம்- மனதுக்கு எட்டாதவரும், த்ருதவிதும்- தரிக்கப்பட்ட சந்திரனையுடையவரும், ஸுர ஸரித்- கங்கையின், தரங்க- அலைகளுடைய, நிகுரும்ப- கூட்டத்தை, த்ருதி- தரிப்பதில், லம்பட- ஸாமர்த்தியமுள்ள, ஜடம்- சடைகளையுடையவரும், சமன- யமனுடைய, டம்ப- கர்வத்தை, ஸுஹரம்- அபஹரிப்பவரும், பவஹரம்- ஸம்ஸார ரோகத்தை நாசம் செய்பவரும், சிவம்- மங்கள ரூபியும், தச திகந்தர – பத்துத் திக்குப் பிரதேசங்களிலும், விஜ்ரும்பித- பரவிய, கரம்- கைகளையுடையவரும், கரலஸன் ம்ருக சிசும்- கையில் பிரகாசிக்கும் மான் குட்டியையுடையவரும், பசு- ஸகல பிராணிகளுக்கும், பதிம்- நாயகரும், ஹரம்- ஸகல பாபங்களையும் போக்கடிப்பவரும், சசி- சந்திரன், தனஞ்ஜய – அக்னி , பதங்க- ஸூரியன் இவர்களை, நயனம்- கண்களாக உடையவரும், பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சிதம்பர ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அநந்தநவ ரத்நவிலஸத் கடக கிங்கிணி
ஜ்ஜலம் ஜ்ஜல ஜ்ஜலம் ஜ்ஜலரவம்
முகுந்தவிதி ஹஸ்தகத மத்தல லயத்வநி
திமித்திமித நர்(த்)தந பதம் |
சகுந்தரத  வஹ்னிரத நந்திமுக தந்திமுக
ப்ரிங்கிரிடி ஸங்கநிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுகவந்திதபதம்
பரசிதம்பர நடம் ஹ்ருதிபஜ  ||        (4)

விளக்கம்:– அனந்த- அளவில்லாத, நவரத்ன- நவமணிகளால், விலஸத்- பிரகாசிக்கின்ற, கடக- தோள்வளைகளின், கிங்கிணி- சலங்கைகளுடைய, ஜ்ஜலம் ஜ்ஜல ஜ்ஜலம் ஜ்ஜல – சலசல சலசல என்கிற, ரவம்- ஸப்தத்தை உடையவரும், முகுந்த விதி- மோக்ஷத்தையளிக்கின்ற விஷ்ணுவின், ஹஸ்த கத- கையிலிருக்கின்ற, மத்தள- மத்தள வாத்யத்தின், லயத்வனி- உயர்ந்த சப்தத்தால், திமித்திமித- திமி திமி என்ற சப்தத்தோடு கூடிய , நர்த்தன- தாண்டவத்தோடு கூடிய, பதம்- சரணத்தையுடையவரும், சகுந்தரத- பிரம்மதேவர், வஹ்னிரத- ஸுப்ரமண்யர், நந்திமுக – நந்திதேவர், தந்திமுக – விநாயகர், ப்ருங்கிரிடி- பிருங்கி மஹரிஷி இவர்களின், ஸங்க- கூட்டத்தை, நிகட- ஸமீபத்தில் உடையவரும், ஸனந்த ஸனக ப்ரமுக வந்தித பதம்- ஸனந்தர் , ஸனகர் முதலிய மஹரிஷிகளால் ஸ்தோத்ரம் செய்யப்பட்ட சரணத்தையுடையவருமான, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அநந்த மஹஸம் த்ரிதச வந்த்யசரணம்
முநிஹ்ருதந்தர வஸந்தமமலம்
கபந்தவிய திந்த்வவநி கந்தவஹ
வஹ்னிமக பந்துரவி மஞ்சுவபுஷம் |
அநந்தவிபவம் த்ரிஜகதந்தர  மணிம்
த்ரிணயநம் த்ரிபுரகண்டநபரம்
ஸநந்தமுநி வந்திதபதம் ஸகருணம்
பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (5)

விளக்கம்:– அநந்தமஹஸம்- அளவில்லாத காந்தியை உடையவரும், த்ரிதசவந்த்ய சரணம்- தேவர்களால் நமஸ்கரிக்கத் தகுந்த பாதங்களையுடையவரும், முநிஹ்ருதந்தர வஸந்தம்- யோகிகளின் மனதில் வஸிப்பவரும், அமலம்- பரிசுத்தமானவரும், கபந்த- ஜலம், வியத்- ஆகாயம், இந்து- சந்திரன், அவனி-பூமி, கந்தவஹ- காற்று, வஹ்னி- அக்னி, மகபந்து- யாகம் செய்கிறவர், ரவி- ஸூர்யன் இவர்களால், மஞ்ஜு- அழகிய, வபு : – சரீரத்தையுடையவரும், அனந்தவிபவம்- அளவற்ற ஐச்வர்யத்தையுடையவரும், த்ரிஜகதந்தரமணிம்- மூவுலகங்களுக்கும் ரத்னம் போலிருப்பவரும், த்ரிணயனம்- மூன்று கண்களையுடையவரும், த்ரிபுரகண்டனபரம்- த்ரிபுர ஸம்ஹாரத்தில் முக்யமானவரும், ஸனந்தமுனி வந்திதபதம்- ஸனந்தர் முதலான மஹரிஷிகளால் நமஸ்கரிக்கப்பட்ட பாதங்களை உடையவரும், ஸகருணம்- இரக்கமுள்ளவருமான, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அசிந்த்ய மளிப்ருந்தருசி பந்துரகளம்
குரிதகுந்த நிகுரும்பதவளம்
முகுந்தஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருதவந்தந
லஸந்தமஹி குண்டலதரம் |
அகம்ப மநுகம்பித ரதிம் ஸுஜந
மங்கலநிதிம் கஜஹரம் பசுபதிம்
தநஞ்ஜயநுதம் ப்ரணத ரஞ்ஜனபரம்
பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||         (6)

விளக்கம்:– அசிந்த்யம்- மனதிற்கு எட்டாதவரும், அளிப்ருந்த- வண்டுக்கூட்டத்தினுடைய , ருசி- காந்தி போல், பந்துர- அழகான, களம்- கழுத்தையுடையவரும், குரித குந்தநிகுரும்ப தவளம்- மலர்ந்த முல்லை மலர் ஸமூஹம் போல் வெளுத்தவரும், முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருத- விஷ்ணு, தேவஸமூஹம், தேவேந்திரன் இவர்களால் செய்யப்பட்ட, வந்தனலஸந்தம்- நமஸ்காரத்தால் பிரகாசிக்கின்றவரும், அஹிகுண்டலதரம்- ஸர்ப்பமயமான கர்ணபூஷணத்தைத் தரிப்பவரும், அகம்பம்- அசைவற்றவரும், அனுகம்பிதரதிம்- தயவு செய்யப்பட்ட ரதி தேவியையுடையவரும், ஸுஜன மங்கள நிதிம்- ஸாதுக்களுடைய சுபகார்யங்களுக்கு இருப்பிடமும், கஜஹரம்- கஜாஸுரனை ஸம்ஹரித்தவரும், பசுபதிம்- ஸகல ப்ராணிகளுக்கும் நாயகரும், தனஞ்ஜயநுதம்- அர்ஜுனனால் ஸ்தோத்ரம் செய்யப்பட்டவரும், ப்ரணத ரஞ்ஜனபரம்- நமஸ்கரித்தவர்களைத் திருப்தி செய்வதில் ஆசையுள்ளவருமான, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

பரம்ஸுரவரம் புரஹரம் பசுபதிம்
ஜநிததந்திமுக ஷண்முகமமும்
ம்ருடமகனக பிங்களஜடம் ஸனக
பங்கஜாவிம் ஸுமநஸம் ஹிமருசிம் |
அஸங்கமநஸம் ஜலதிஜந்மகரலம்
கபலயந்தமதுலம் குணநிதிம்
ஸநந்த வரதம் சமிதமிந்துவதநம்
பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (7)

விளக்கம்:– பரம்- எங்குமுள்ளவரும், ஸுரவரம்- தேவர்களுள் சிறந்தவரும், புரஹரம்- த்ரிபுரர்களை நாசம் செய்தவரும், பசுபதிம்- விருஷபவாஹனரும், ஜனித தந்திமுக ஷண்முகம்- உண்டுபண்ணப் பட்ட விநாயகர், ஸுப்ரமண்யர் இவர்களையுடையவரும், அமும்- ஸமீபத்திலிருப்பவரும், ம்ருடம்- சுகத்தைக் கொடுப்பவரும், கனகபிங்கள ஜடம்- தங்கம் போல் மஞ்சளான சடைகளையுடையவரும், ஸனகபங்கஜரவிம்- ஸனக மஹரிஷியாகிய தாமரைப்பூவிற்குச் சூரியனும், ஸுமனஸம்- கருணையோடு கூடிய மனதையுடையவரும், ஹிமருசிம்- பனி போன்ற வெண்மை நிறமுடையவரும், அஸங்கமனஸம்- ஆசையற்ற மனஸையுடையவரும், ஜலதிஜன்மகரளம்- பாற்கடலில் உண்டான காலகூட விஷத்தை , கபளயந்தம்- சாப்பிட்டவரும், அதுலம்- ஸாத்ருச்யமில்லாதவரும், குணநிதிம்- ஸகல மங்கள குணங்களுக்கும் இருப்பிடமானவரும், ஸனந்த வரதம்- ஸனந்த மஹரிஷியின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்தவரும், சமிதம்- சாந்தகுணமுள்ளவரும், இந்து வதனம்- சந்திரன் போன்ற முகத்தையுடையவருமான , பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அஜம் க்ஷிதிரதம் புஜகபுங்க வகுணம்
கநகச்ருங்கிதநுஷம் கரலஸத்
குரங்க ப்ருதுடங்கபரசும் ருசிர
குங்குமருசிம் டமருகம்ச தததம் |
முகுந்தவிசிகம் நமதவந்த்ய பலதம்
நிகமப்ருந்த துரகம் நிருபமம்
ஸசண்டி கமமும் ஜடிதிஸம்ஹ்ருதபுரம்
பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ  ||        (8)

விளக்கம்:– அஜம்- உண்டாகாதவரும், க்ஷிதிரதம்- பூமியை ரதமாக உடையவரும், புஜங்கபுங்க வகுணம்- ஆதி சேஷன் என்ற ஸர்ப்ப ராஜனை நாண்கயிறாக உடையவரும், கனக ச்ருங்கிதனுஷம்- மஹாமேரு பர்வதத்தை வில்லாக உடையவரும், கரலஸத் குரங்க ப்ருதுடங்கபரசும் – கையில் பிரகாசிக்கின்ற மான், பெரிய உளி, கோடரி இவைகளை உடையவரும், ருசிரகுங்குமருசிம் – அழகான குங்குமத்தின் காந்தியை உடையவரும், டமருகஞ்ச- டமருக வாத்யத்தையும், தததம்- தரிப்பவரும், முகுந்தவிசிகம்- மஹா விஷ்ணுவை பாணமாக உடையவரும், நமதவந்த்யபலதம்- நமஸ்கரிப்பவர்களுக்கு உயர்ந்த பலத்தைக் கொடுப்பவரும், நிகமப்ருந்ததுரகம்- வேதக் கூட்டங்களாகிற குதிரைகளை உடையவரும், நிருபமம்- உவமையில்லாதவரும், ஸசண்டிகம்- உமையுடன் கூடினவரும், ஜடிதி- சீக்கிரமாக, ஸம்ஹ்ருதபுரம்- நாசம் பண்ணப்பட்ட த்ரிபுரத்தை உடையவருமான , அமும்- இந்த, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அனங்க பரிபந்திநமஜம் க்ஷிதிதுரந்தரம்
அலம் கருணயந்த மகிலம்
ஜ்வலந்தமனலம் தததமந்தகரிபும்
ஸததமிந்த்ரஸுர வந்திதபதம் |
உதஞ்சதரவிந்தகுல பந்துசதபிம்பருசி
ஸம்ஹதி ஸுகந்திவபுஷம்
பதஞ்சலிநுதம் ப்ரணவபஞ்ஜரசுகம்
பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (9)

விளக்கம்:– அனங்கபரிபந்தினம்- மன்மதனுக்குச் சத்துருவும், அஜம்- ஆதியற்றவரும், க்ஷிதிதுரந்தரம்- பூமியின் பாரத்தை வஹிப்பவரும், அகிலம்- எல்லா ஜந்துவைக் குறித்து, அலம்- மிகவும், கருணயந்தம்- தயைபுரிபவரும், ஜ்வலந்தம்- ஜ்வலிக்கின்ற , அனலம்- அக்னியை, தததம்- (இடது கையில்) தரிப்பவரும், அந்தகரிபும்- யமனுக்குச் சத்துருவும், ஸததம்- எப்பொழுதும், இந்த்ரஸுர வந்திதபதம்- தேவேந்திரனாலும், தேவர்களாலும் நமஸ்கரிக்கப் பட்ட சரணத்தையுடையவரும், உதஞ்சத்- உத்க்ருஷ்டமானவரும், அரவிந்தகுல- தாமரைப்புஷ்ப ஸமூஹத்திற்கு, பந்து- பந்துவான ஸூர்யனுடைய, சதபிம்ப- அனேக மண்டலத்தின், ருசிஸம்ஹதி- காந்திக் கூட்டத்தையுடையவரும், ஸுகந்தி- உயர்ந்த வாஸனையுள்ள, வபுஷம்- சரீரத்தை உடையவரும், பதஞ்சலி நுதம்- பதஞ்சலி மஹரிஷியால் ஸ்தோத்ரம் செய்யப்பட்டவரும், ப்ரணவ பஞ்ஜரசுகம்- ஓங்காரமாகிற கூண்டிற்குக் கிளி போன்றவருமான, பரசிதம்பர நடம்- பரமாத்ம ஸ்வரூபியான சிதம்பரத்தில் தாண்டவம் புரிகின்ற ஸ்ரீ நடராஜமூர்த்தியை, ஹ்ருதி- மனதில், பஜ- தியானம் செய்.

இதிஸ்தவமமும் புஜகபுங்கவக்ருதம்
ப்ரதிதினம் படதி ய : க்ருதமுக:
ஸத: ப்ரபுபதத்விதய தர்சநபதம்
ஸுலலிதம் சரணச்ருங்கரஹிதம் |
ஸர:ப்ரபவஸம்பவ ஹரித்பதிஹரி
ப்ரமுகதிவ்யநுத சங்கர பதம்
ஸகச்சதி பரம்நது ஜநுர்ஜலநிதிம்
பரம் து:க ஜநகம் துரிததம் ||        (10)

விளக்கம்:– இதி- இவ்விதம், புஜக புங்கவக்ருதம்- பதஞ்ஜலி மஹரிஷியால் செய்யப்பட்டதும், ஸத: ப்ரபு – ஸபா நாயகருடைய, பதத்விதய- இரண்டு சரணங்களுடைய , – பார்ப்பதற்கு மார்க்கமாயும், ஸுலலிதம்- அர்த்தத்திலும், பதத்திலும் மிகச்சுலபமாயும், சரண ச்ருங்கரஹிதம்- கால் கொம்பு இல்லாத எழுத்துக்களை உடையதுமான, அமும்- இந்த, ஸ்தவம்- ஸ்தோத்திரத்தை, க்ருதமுக: – முகஸ்தமாய்ச் செய்து கொண்ட, ய: – எவன், ப்ரதி தினம்- நாள்தோறும், படதி- ஸ்தோத்திரம் செய்கிறானோ , ஸ: – அந்த பக்தன், ஸர:ப்ரபவஸம்பவ: – நாபிக் கமலத்தில் உண்டான பிரம்மாவினாலும், ஹரித்பதி- திக்பாலகர்களாலும், ஹரிப்ரமுக- நாராயணன் முதலான தேவர்களாலும், திவ்யநுத- நன்றாய் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட, பரம்- மிகவும் உத்க்ருஷ்டமான, சங்கர பதம்- சிவ ஸ்தானத்தை, கச்சதி- அடைகிறான், பரம துக்க ஜனகம்- அதிக துக்கத்தை உண்டு பண்ணுகிறதும், துரிததம்- பாபத்தைக் கொடுப்பதுமான, ஜநுர்ஜலநிதிம் து- பிறவி ஸமுத்திரத்தையோ என்றால், ந கச்சதி – அடைவதில்லை. ( மோக்ஷம் அடைகிறான்)

ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியால் செய்யப்பட்ட ஸ்ரீ சம்பு நடனம் என்னும் ஸ்ரீ நடேசாஷ்டகம் தமிழ் உரையுடன் முற்றிற்று.

Natesha Ashtakam Special in Tamil

நடேஷாஸ்டகத்தின் சிறப்புகள்: மிக அருமையான இந்த அஷ்டகத்தை காஞ்சி பெரியவாள் பிரபலப்படுத்தினார். இந்த அபூர்வமான அஷ்டகம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பதஞ்சலி என்ற பெயருடைய மஹரிஷி உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவமும் அதற்குக் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்றவர். புலியின் கால்களைப் போன்ற கால்களைப் பெற்றவர் வியாக்ரபாதர் என்னும் ரிஷி. இவர்கள் இதர தேவர்களுடனும் ரிஷிகளுடனும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தைச் சிதம்பரத்தில் கண்டு களித்தவண்ணம் இருந்தனர்.

sage patanjali image

ஒரு சமயம் வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷியைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புகளும் இல்லை. நடராஜ பெருமானின் நடனத்தை உம்மால் எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்தார். இதற்கு பதஞ்சலி முனிவர் பதிலேதும் கூறவில்லை. நடராஜரைத் தியானித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறி அவரைத் துதித்தார். இந்த அபூர்வமான ஸ்லோகங்களில் ஒன்றில் கூட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை.

அதாவது கா, மா, சா போன்ற எழுத்துக்களுக்கு கால் போட்டு எழுத வேண்டும். கோ மோ, சோ போன்ற எழுத்துக்களுக்கு கொம்பு போட்டு எழுத வேண்டும். பதஞ்சலி ரிஷி அருளிய ஸ்லோகங்களில் இப்படிப்பட்ட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை. இப்படிப்பட்ட அருமையான ஸ்லோகங்களைக் கேட்ட நடராஜ பெருமான் அவருக்கு அருள்பாலிக்க அனைவரும் பதஞ்சலி ரிஷியின் பக்தியின் பெருமையை உணர்ந்தனர். இந்த அஷ்டகம் சம்பு நடன ஸ்தோத்திரம் என்றும் கூறப்படும். இதை ஓதுபவர்கள் சிவபிரானின் பாதத்தை அடைவர். துக்கத்தைத் தரும் பிறவிக் கடலிலிருந்து மீள்வர் என்று இதன் பலனைப் பற்றி கடைசி ஸ்லோகம் அருளுகிறது.

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை
  • அக்டோபர் 17, 2024
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் [தமிழில்]