×
Monday 9th of December 2024

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்


Shiva Panchakshara Stotram

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஆதி குரு சங்கராச்சாரியார் சிவபெருமானின் ஆசிகளைப் பெறுவதற்கு இயற்றப்பட்ட‌ மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும் இந்த சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்! யாரொருவர் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை சிவனுக்கு அருகில் உச்சரிக்கிறாரோ, அவர் சிவபாதம் சேர்ந்து பேரின்பத்தில் திளைப்பார்.

Shiva Panchakshara Stotram Lyrics in Tamil

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய
பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய |
நித்யாய ஷுத்தாய திகம்பராய
தஸ்மை ந-காராய நம: சிவாய || 1 ||

நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே, திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே, என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே, ‘‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய |
மந்தார புஷ்ப-பஹு-புஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ம-காராய நம: சிவாய || 2 ||

மந்தாகினி நதிநீர் கொண்டு வணங்கப்பட்டு, அரைத்த சந்தனம் பூசப்படுபவனே, நந்தியால் வணங்கப்படும் தேவனே, பூதகணங்களாலும் வணங்கப்படும் தலைவனே மகேஸ்வரனே, மந்தாரை மலரையும் இன்னும் பல மலர்களையும் கொண்டு வணங்கப்படுபவனே ‘‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
ஸூர்யாய தக்ஷா-த்வர நாஷகாய |
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷ-த்வஜாய
தஸ்மை சி-காராய நம: சிவாய || 3 ||

தாமரை முகத்தாள் கௌரியின் முகம் மலர காரணமான அதிகாலை சூரியனைப் போன்றவனே, மங்களகரமானவனே, தட்சணின் யாக அர்ப்பணத்தை அழித்தவனே, நீல நிறத்தில் கழுத்தும், காளை வாகனமும் கொண்டவனே, ‘சி‘ கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

வஸிஷ்ட கும்போத் பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்சித ஸேகராய |
சந்த்ரார்க்க வைஸ்வா நர லோசநாய
தஸ்மை வா-காராய நம: சிவாய || 4 ||

வஷிஷ்ட்டன், அகத்தியன், கௌதமன் போன்ற சிறந்த, பெரும் முனிவர்களாலும், வானுறை தேவர்களாலும் வணங்கப்படுபவனே, பிரபஞ்சத்திற்கே மகுடமாக இருப்பவனே, சந்திரன், சூரியன். அக்னியைத் தனது மூன்று கண்களாகக் கொணடவனே, ‘வா‘கார அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பிநாக ஹஸ்தாய ஸநாதநாய |
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ய-காராய நம: சிவாய || 5 ||

தியாகத்தின் திருவுருவானவனே, சடை முடி தரித்தவனே ஆதியும் அந்தமும் இலாதவனே, திரிசூலம் ஏந்தியவனே, தெய்வீகமானவனே, ஒளி பொருந்திய மேனியனே, நாற்திசைகளையும் ஆடையாக அணிந்தவனே, ‘‘கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் ய: படேத் சிவ ஸன்னிதௌ |
சிவ லோகம் அவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||

சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தின் பலஸ்துதி பகுதியில், பஞ்சாக்ஷரமிதம் புண்யம் முதல் சிவேன சாஹ மோததே வரையிலான கடைசி வரிகள் சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தின் பலன்களை தெளிவாக விளக்குகிறது, இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தை சிவன் சந்நிதியில் யார் அர்த்தத்துடன் கூறுகிறாரோ அவர் சிவனின் இருப்பிடத்தை அடைந்து அவருடன் வாழ்வார்.

|| இதி ஸ்ரீ மச் சங்கராசார்ய விரசிதம் சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை