×
Wednesday 11th of December 2024

சிவ சஹஸ்ர நாமாவளி


Shiva Sahasranamavali in Tamil

சிவனின் ஆயிரம் திருநாமங்கள்

சிவ சஹஸ்ர நாமாவளியை ப்ரம்ம புத்திரர்களில் ஒருவரான தண்டி என்பவர் உரைநடைப்படுத்தி தலைமுறை தலைமுறையாக வாய்வழியாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டுவந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உபமன்யு முனிவர் உபதேசித்தருளினார். இந்த மஹிமை வாய்ந்த  சிவ சஹஸ்ர நாமத்தின் மஹிமை அளவிடற்கரியது.

மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு அற்புத மகிமை வாய்ந்த சிவ சஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை உபதேசிக்கிறார். இதை ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு முனிவரிடமிருந்து முன்பு கற்றுக்கொண்டார்.

இது முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்தில் சொல்லப்பட்டது. பிரம்மாவின் குமாரனான தண்டி இதைச் சொர்க்கத்தினின்று பெற்றார். எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

தண்டி இதை சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார். இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமாகக் கருதப்படுகிறது. இது கொடும்பாவங்களையும், கழுவ வல்லதாகும்.

உபமன்யு முனிவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உபதேசிக்கிறார்..

ௐ! வலிய கரங்களைக் கொண்டவனே (கிருஷ்ணா), துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன். வேதங்களின் வேதமானவனை, புராதனப் பொருட்கள் அனைத்திலும் புராதனமானவனை, சக்திகள் அனைத்திற்கும் சக்தியாகத் திகழ்பவனை, தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை, அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை, கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் சிறந்த கட்டுப்பாட்டுடையவனை, நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை, தேவர்களின் தேவர்களாகவும், முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை, வேள்விகள் அனைத்திலும் சிறந்த வேள்வியாகவும், மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை, ருத்திரர்கள் அனைவரின் மேலான ருத்திரனை, பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை, யோகிகள் அனைவரின் யோகியை, காரணங்கள் அனைத்திலும் காரணனை, இல்லாமையால் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை, இருப்பில் உள்ள அனைத்து உயிர்களின் ஆன்மாவாக இருப்பவனை. அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகின்றது.

அந்தப் பெரும் சர்வேஸ்வரனின் உத்தமமான ஆயிரத்தெட்டுப் பெயர்களை (சஹஸ்ரநாமத்தை) நான் உரைக்கப்போகிறேன், கேட்பாயாக. ௐ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக (என்றார் உபமன்யு).

வாசுதேவன் (கிருஷ்ணர்) “ௐ யுதிஷ்டிரரே!, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்க முதல் சொல்லத் தொடங்கினார்.

உபமன்யு முனிவர், பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட சிலவற்றையும், முனிவர்களால் சொல்லப்பட்ட சிலவற்றையும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களில் தோன்றும் சிலவற்றைக் கொண்டவையும் உலகம் முழுதும் கொண்டாடப்படுபவையுமான பெயர்களைச் சொல்லி அனைத்து உயிரினங்களின் துதிக்குத் தகுந்தவனான அந்தப் பரமேஸ்வரனைத் துதிக்கப் போகிறேன்.

மேலும் அவை வாய்மையும், வெற்றியும்  நிறைந்தவையும் (அப்பெயர்களைச்), சொல்வோரின் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவையுமாக இருக்கின்றன.

வேத உரைகளால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும், தமது அர்ப்பணிப்பின் துணையால் அப்பெயர்களைக் கண்டறிந்தவருமான தண்டியால் அவை மஹாதேவனுக்குப் பயன்படுத்தப்பட்டன.

உண்மையில் நன்கறியப்பட்ட அறவோர் மற்றும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த தவசிகள் பலரால் சொல்லப்பட்ட அப்பெயர்களைக் கொண்டு முதன்மையானவனும், முதல்வன் ஆனவனும், சொர்க்கத்திற்கு வழிவகுப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மைகளைக் கொடுப்பவனுமான அந்த மங்கலனை நான் துதிக்கிப் போகிறேன்.

ௐ! யதுகுலத் தலைவா (கிருஷ்ணா), நான் இப்போது அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. நீ (கிருஷ்ணா) அந்தப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவாய்.

ௐ! கிருஷ்ணா, வரமளிப்பவனும், துதிக்கத்தக்க தேவனும், பலமிக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான  அந்த பரமேஸ்வரனின் இந்தப் பெயர்கள், தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதைப் போல, பழங்காலத்தில் பெரும்பாட்டன் பிரம்மனால்  சொல்லப்பட்ட பத்தாயிரம் பெயர்களின் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

தங்கமானது மலைப்பாறைகளின் சாரத்தைப் பிரதிபலிப்பது போலவும், தேனானது மலர்களின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், மந்தமானது (நெய்யானது) வெண்ணையைப் பிரதிபலிப்பதைப் போலவும் தொகுக்கப்பட்டிருக்கும் இப்பெயர்கள் பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.

இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும். நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு. இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும். இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றதை வழிவகுக்கும். இது ராட்சதர்களுக்கு அழிவை உண்டாக்கும். இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது.

பரமேஸ்வரனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும் மனோபாவம் கொண்ட நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனால் மட்டுமே இது சொல்லப்பட வேண்டும்.

இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகின்றது. இது தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் பார்க்கப்படுகின்றது. ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்கவேண்டும். இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.

ஒருவன் தன் இறுதி கணத்திலாவது இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான். இது புனிதமாகும். ஏனென்றால் அனைத்து நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகவும் அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.

அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் அனாதிகாலத்தில் தொகுக்கப்பட்டு, துதிக்கப்பட்டதால் இது துதிகளில் எல்லாம் சிறந்த துதி (ஸ்தோத்திரம்) என அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.

அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும், பெருமையையும் உரைக்கும் இந்தத் துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு, துதிகள் அனைத்தின் மன்னனாக (ஸ்தோத்திர ராஜாவெனக்)  கருதப்படுகிறது.

lord shiva sahasranamavali

Lord Shiva 1008 Names in Tamil & Meaning

சிவ சஹஸ்ர நாமாவளி

ஓம் ஸ்திராய நமஹ நீயே, நிலைத்திருப்பவன்
ஓம் ஸ்தாணவே நமஹ நீயே, அனைத்துலகையும் தாங்குகின்றவன்
ஓம் ப்ரபவே நமஹ நீயே, உலகைச் சிறப்புறச் செய்பவன்
ஓம் பீமாய நமஹ நீயே, தீயவர்களுக்கு பயத்தைத் தருபவன்
ஓம் ப்ரவராய நமஹ நீயே, சிறந்தவன்
ஓம் வரதாய நமஹ நீயே, வரம் அளிப்பவன்
ஓம் சர்வாத்மனே நமஹ நீயே, அனைத்துயிரிலும் ஆத்மாவாய் விளங்குபவன்
ஓம் வராய நமஹ நீயே அனைத்திலும் பரந்து விரிந்து இருப்பவன். ஆனால் அவற்றுள் மறைந்திருப்பவன்
ஓம் சர்வ விக்யாதாய நமஹ நீயே, அனைத்துயிர்களிலும் நன்கு விளங்குபவன்
ஓம் ஸர்வஸ்மை நமஹ நீயே, அனைத்துயிருமாயிருப்பவன் – (10)
ஓம் சர்வ்கராய நமஹ நீயே, அனைத்தையும் படைத்தவன்
ஓம் பவாய நமஹ நீயே, தோற்றத்திற்குக் காரணமாயிருப்பவன்
ஓம் ஜடினே நமஹ நீயே, தலையில் ஜடாமுடி தரித்தவன்
ஓம் சர்மிணே நமஹ நீயே, புலித்தோலையணிந்தவன்
ஓம் சிகண்டினே நமஹ நீயே, மயிலைப் போலத் தலையில் கொண்டை உடையவன்
ஓம் சர்வாங்காய நமஹ நீயே, உலகனைத்தையும் அங்கங்களாகக் கொண்டவன்
ஓம் சர்வபாவனாய நமஹ நீயே, அனைத்தையும் படைத்து, காத்து, வளர்ப்பவன்
ஓம் ஹராய நமஹ அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருக்கும் விளைவான ஹரன் நீயே
ஓம் ஹரிணாக்ஷாய நமஹ நீயே, மானுக்கு ஒப்பான கண்களை உடையவன்
ஓம் ஸர்வபூத ஹராய நமஹ நீயே, அனைத்து உயிர்களையும் அழிப்பவன் – (20)
ஓம் ப்ரபவே நமஹ நீயே, அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கும் உயர்ந்தவன்
ஓம் ப்ரவ்ருத்தயே நமஹ நீயே, உலகவிஷயங்களைப் பெருக்குபவன்
ஓம் நிவ்ருத்தயே நமஹ நீயே, உலகவிஷயங்களைக் குறைப்பவன்
ஓம் நியதாய நமஹ நீயே, நோன்புகளை நோற்பவன்
ஓம் சாச்வதாய நமஹ நீயே, நிலைப்பொருள், மாற்றமில்லாதவன்
ஓம் த்ருவாய நமஹ நீயே, நிலையானவன்
ஓம் ச்மசான வாசினே நமஹ நீயே, சுடுகாட்டில்   வசிப்பவன்
ஓம் பகவதே நமஹ நீயே தலைமை முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களுக்கு உறைவிடமாய் விளங்குபவன்
ஓம் கசராய நமஹ நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பவன்
ஓம் கோசராய நமஹ நீயே, புலன்களால் அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் – (30)
ஓம் அர்தனாய நமஹ நீயே, தவறு செய்பவர்களைத் தண்டிப்பவன்
ஓம் அபிவாத்யாய  நமஹ நீயே, அனைவரின் வணக்கத்துத்துக்குரியவன்
ஓம் மஹாகர்மணே நமஹ நீயே, தவங்களையே செல்வமாகக் கொண்டவன்
ஓம் தபஸ்வினே நமஹ நீயே, தவத்திற் சிறந்தவன்
ஓம் பூத பாவனாய நீயே, பூதங்கள் அனைத்தையும் விரும்பியபடி படைத்தவன்
ஓம் உன்மத்தவேஷ ப்ரச்சன்னாய நமஹ நீயே, பித்தன் வேடத்தில் தன்னை மறைத்துக் கொள்பவன்
ஓம் சர்வலோகப்ரஜாபதயே நமஹ நீயே, உலகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆசான்
ஓம் மஹரூபாய நமஹ நீயே, அளவிடமுடியாத பெரிய வடிவம் கொண்டவன்
ஓம் மஹாகாயாய நமஹ நீயே,பேருடல் படைத்தவன்
ஓம் வ்ருஷ ரூபாய நமஹ நீயே, அறத்தின் வடிவம் – (40)
ஓம் மஹாயசஸே நமஹ நீயே, பெரும்புகழ் படைத்தவன்
ஓம் மஹாத்மனே நமஹ நீயே, உயர்ந்த ஆத்மா
ஓம் ஸர்வபூதாத்மனே நமஹ நீயே, அனைத்துயிர்களிலும் ஆத்மாவாக உறைபவன்
ஓம் விச்வரூபாய நமஹ நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன்
ஓம் மாஹாஹனவே நமஹ நீயே, (அனைத்துப் பொருட்களையும், அழிக்கும் காலத்தில் அண்டத்தையே விழுங்குவதற்கான) பெரும் தாடைகளை உடையவன்
ஓம் லோகபாலாய நமஹ நீயே, உலகங்கள் அனைத்தையும் காப்பாற்றும் பாதுகாவலன்
ஓம் அந்தரஹிதாத்மனே நமஹ நீயே, அறியாமை எனும் இருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆன்மா
ஓம் ப்ரஸாதாய நமஹ நீயே, மகிழ்ச்சியின் உருவம்
ஓம் ஹயகர்த்தபயே நமஹ கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் செல்பவன்
ஓம் பவித்ராய நமஹ நீயே, மறுபிறவியெனும் இடியில் இருந்து ஜீவனைப் பாதுகாப்பவன் – (50)
ஓம் மஹதே நமஹ நீயே வழிபடத்தக்கவன்
ஓம் நியமாய நமஹ நீயே, தூய்மை, தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளால் அடையத்தக்கவன்
ஓம் நியமாச்ரிதாய நமஹ நீயே, தூய்மை மற்றும் தற்கட்டுப்பாடு  உள்ளிட்ட அனைத்து வகை நோன்புகள் மற்றும் நியமங்களின் புகலிடம்
ஓம் ஸர்வகர்மணே நமஹ நீயே, அனைத்துக் கலைகளையும் அறிந்த தெய்வீகக் கைவினைஞன்
ஓம் ஸ்வயம்பூதாய நமஹ நீயே, (எவராலும் படைக்கப்படாமல்) தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டவன்
ஓம் ஆதயே நமஹ நீயே, முழுமுதற்பொருளாக இருப்பவன்
ஓம் ஆதிகராய நமஹ நீயே,  அனைத்துப் பொருட்களையும் படைக்கும் படைப்புக்கடவுளைத் தோற்றுவித்தவன்
ஓம் நிதயே நமஹ நீயே, ஊழிக்காலத்தில் அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்பவன்
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நமஹ நீயே, எண்ணற்ற கண்களை உடையவன்
ஓம் விசாலாக்ஷாய நமஹ நீயே,  பெரும் சக்தியுடன் கூடிய அகன்ற கண்களை உடையவன் – (60)
ஓம் ஸோமாய நமஹ நீயே,உமையுடன் இருப்பவன்
ஓம் நக்ஷத்ர சாதகாய நமஹ நீயே, ஆகாயத்தில் ஒளிர்வதற்காக விண்மீன்களைப் படைத்தவன்
ஓம் சந்த்ராய நமஹ சந்திரனாக விளங்குபவன் நீயே
ஓம் சூர்யாய நமஹ சூர்யனாக விளங்குபவன் நீயே
ஓம் சனயே நமஹ சனீஸ்வரனாக விளங்குபவன் நீயே
ஓம் கேதவே நமஹ கேதுவாக விளங்குபவன் நீயே
ஓம் க்ரஹாய நமஹ கோள்களின் தலைவன் நீயே
ஓம் க்ரஹபதயே நமஹ கோளங்களின் தலைவன் நீயே
ஓம் வராய நமஹ அனைத்திலும்  சிறந்தவன் நீயே
ஓம் அத்ரயே நமஹ நீயே,  முக்குணங்களைக் கடந்தவன் – (70)
ஓம் அத்ர்யா நமஸ்கர்த்ரே நமஹ நீயே, அத்ரி முனிவரது மனைவியாகிய அநசூயாதேவிக்கு வணக்கம் செலுத்தியவன்
ஓம் ம்ருகபாண அர்ப்பணாய நமஹ நீயே, கோபம் கொண்ட வேள்வியானது மானின் வடிவில் தப்பி ஓடியபோது அந்த வேள்வியை நோக்கி கணையை ஏவியவன்
ஓம் அனகாய நமஹ நீயே, பாபமண்டாதவன்
ஓம் மஹாதபஸே நமஹ நீயே, அண்டத்தைப் படைக்கும் சக்திகொண்ட சிறந்த தவ வடிவினை  உடையவன்
ஓம் கோரதபஸே நமஹ நீயே, அண்டத்தை அழிக்கும்  சக்திகொண்ட கடுமையான தவ வடிவினை  உடையவன்
ஓம் அதீனாய நமஹ நீயே, (பக்தர்களிடம் கொண்ட பெருங்கருணையின் விளைவால்) உயர்ந்த மனம் கொண்டவன்
ஓம் தீன ஸாதகாய நமஹ நீயே,  உன்னிடம் வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருபவன்
ஓம் ஸம்வத்ஸர கராய நமஹ நீயே,  (சூரியனாகவும், கோள்களாகவும் வடிவத்தை ஏற்று காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பதால்) வருடத்தை உண்டாக்குபவன்
ஓம் மந்த்ராய நமஹ நீயே, (ப்ரணவ வடிவம், வேறு புனிதச் சொற்கள் மற்றும் அசைகளின் வடிவில் இருக்கும்) ப்ராகாசம் வாய்ந்த சொல் வடிவினன்
ஓம் ப்ரமாணாய நமஹ நீயே, (வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் வடிவில்) அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுத்து உண்மையை அறிவதற்கு ஆதாரமானவர் – (80)
ஓம் பரமாய தபஸே நமஹ நீயே, சிறப்புமிக்க உயர்ந்த தவத்தைச் செய்பவன்
ஓம் யோகினே நமஹ நீயே, யோகத்தில் அர்ப்பணிப்பு மிக்க யோக வடிவினன்
ஓம் யோஜ்யாய நமஹ நீயே, (தியான யோகத்தின் மூலம்) பிரம்மத்தில் கலக்கச் செய்பவன்
ஓம் மஹாபீஜாய நமஹ நீயே, (காரணங்களுக்குக் காரணனான) பெரும் முழுமுதற் வித்து வடிவினன்
ஓம் மஹாரேதஸே நமஹ நீயே, அண்டத்தில் வெளிப்பட்ட வடிவத்தில் வெளிப்படாததை  உயிர்களை இயற்கையில் நுழைப்பவர்
ஓம் மாபலாய நமஹ நீயே, அளவிலா வலிமை கொண்டவன்
ஓம் ஸூவர்ணரேதஸே நமஹ நீயே, பொன் போன்ற வீர்யம் உடையவன்
ஓம் ஸர்வக்ஞாய நமஹ நீயே, (அனைத்துப் பொருட்களாகவும் இருந்து பேரறிவைக் கொண்டவனாக இருப்பதால் அனைத்தையும் அறிந்தவன்
ஓம் ஸுபீஜாய நமஹ நீயே அனைத்துப்பொருட்களின் காரனான  சிறந்த வித்தானவன்
ஓம் பீஜவாஹனாய நமஹ நீயே, இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்லும் வழிமுறைக்கான (அறியாமை மற்றும் ஆசை எனும்) செயல்பாட்டு வித்தாக இருப்பவன் – (90)
ஓம் தஸபாஹவே நமஹ பத்துகைகளைக் கொண்டவன் நீயே
ஓம் அனிமிஷாய நமஹ நீயே, (எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பதால்) இமைக்காத கண்களைக் கொண்டவன்
ஓம் நீலகண்டாய நமஹ நீயே, நீலமிடறு (தொண்டை) கொண்ட கறுத்த கழுத்தை உடையவன்
ஓம் உமாபதயே நமஹ நீயே உமாதேவியின் தலைவன் (கணவன்)
ஓம் விச்வரூபாய நமஹ அண்டத்தில் தோன்றும் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் தோற்றுவாயும் நீயே
ஓம் ஸ்வயம் ஶ்ரேஷ்டாய நமஹ நீயே, இயல்பாகவே சுயமேன்மை கொண்ட சிறப்பு மிக்கவன்
ஓம் பலவீராய நமஹ நீயே, வலிமை பொருந்திய வீரன்
ஓம் அபலோகணாய நமஹ நீயே, தத்துவங்களைத் தொகுத்து ஆள்பவன்
ஓம் கணகர்த்ரே நமஹ (சாங்கியர்களால் சொல்லப்படும்) தத்துவங்கள் அனைத்தும் நீயே
ஓம் கணபதயே நமஹ கணங்கள் என்றழைக்கப்படும் உன் தொண்டர்களின் தலைவன் (கணபதி) நீயே – (100)
ஓம் திக்வாஸஸே நமஹ முடிவிலா வெளியை மறைப்பவன் (திசைகளை ஆடைகளாக அணிந்திருப்பவன்) நீயே
ஓம் காமாய நமஹ ஆசையின் தேவனான காமன் நீயே
ஓம் மந்த்ரவிதே நமஹ (ஞானத்தையே தவமாகக் கொண்ட) மந்திரங்கள் அறிந்தவன் நீயே
ஓம் பரமாய மந்த்ராய நமஹ (ஆத்மாவின் இயல்பையும், குணங்களையும் உறுதி செய்வதும், ஆத்மா அல்லாதவற்றிலிருந்து வேறுபடுவதுமான தத்துவமாக நீயே இருப்பதால்) உயர்ந்த மந்திர சிறந்த சொல்வடிவானவன் நீயே
ஓம் ஸர்வபாவகராய நமஹ (இருப்பில் உள்ள அனைத்தும் உன் ஆத்மாவில் இருந்து பிறந்ததால்) அண்டத்தின் காரணன் நீயே
ஓம் ஹராய நமஹ (இருப்பில் உள்ள அனைத்தும் மறையும்போது, வெளிப்படாத பிரம்மமான உன்னிலேயே கலப்பதால்) அண்டத்தை அழிப்பவன் நீயே
ஓம் கமண்ட்லு தராய நமஹ உன் கரங்கள் ஒன்றில் கமண்டலத்தைத் தரிப்பவன் நீயே
ஓம் தன்வினே நமஹ மற்றொரு கரத்தில் வில்லைத் தரிப்பவன் நீயே
ஓம் பாணஹஸ்தாய நமஹ மற்றொரு கரத்தில் அம்பு தரிப்பவன் நீயே
ஓம் கபாலவதே நமஹ மண்டையோட்டைக் கையில் பிக்ஷாபாத்திரமாய்க் கொண்டிருப்பவன் நீயே – (110)
ஓம் அசனேயே நமஹ வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன் நீயே
ஓம் சதக்னினே நமஹ சக்தி என்னும் ஆயுதத்தைக் (நூறு கொல்லியை) கையில் ஏந்தியவன் நீயே
ஓம் கட்கினே நமஹ ஞானம் என்கிற வாளைக் கையில் ஏந்தியவன் நீயே
ஓம் பட்டிசினே நமஹ பட்டிசி என்னும் ஒருவகைப் போர்க்கோடரியை கையில் ஏந்தியவன் நீயே
ஓம் ஆயுதினே நமஹ சிறப்பாகத் தமக்குரிய சூலாயுதம் என்னும் ஆயுதங்கள் அனைத்தையும் ஏந்தியவன் நீயே
ஓம் மஹதே நமஹ துதிக்கத்தக்கவன் என்ற சிறப்புப் பெற்றவன் நீயே
ஓம் ஸ்ருவஹஸ்தாய நமஹ உன் கரமொன்றில் ஸ்ருவமென்கிற ஹோமக் கரண்டியைக் கையில் வைத்திருப்பவன் நீயே
ஓம் ஸ்ரூபாய  நமஹ நீயே, அழகிய வடிவுடையவன்
ஓம் தேஜஸே நமஹ நீயே, அபரிமிதமான சக்தியைக் கொண்ட ஒளி பொருந்திய வடிவமுடையவன்
ஓம் தேஜஸ்கராய நிதயே நமஹ நீயே, உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோருக்கு  அனைத்தையும் அளவில்லாமல் கொடுப்பவன் – (120)
ஓம் உஷ்ணீ ஷிணே நமஹ நீயே, தலையில் தலைப்பாகையணிந்தவன்
ஓம் ஸுவக்த்ராய நமஹ நீயே, அழகான முகத்தையுடையவன்
ஓம் உதக்ராய நமஹ நீயே, காந்தியிலும் பலத்திலும் பெருகும் என்றும் மாறா வடிவினன்
ஓம் வினதாய நமஹ நீயே, எளிமையும், பணிவும் கொண்டவன்
ஓம் தீர்க்காய நமஹ மேலான  மிக நெடியவன் (தீர்க்கன்) நீயே
ஓம் ஹரிகேசாய நமஹ புலன்களையே கிரணங்களாயுடையவன் நீயே
ஓம் ஸுதீர்த்தாய நமஹ ஆசான்களில் சிறந்த பேராசன் நீயே
ஓம் க்ருஷ்ணாய நமஹ (இருப்பிலுள்ள தூய இன்ப நிலையான) பரப்பிரம்மம் (கிருஷ்ணன்) நீயே
ஓம் ஸ்ருகால்ரூபாய நமஹ (செல்வந்தனான ஒரு வைசியனால் அவமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்த பிராமணனுக்கு ஆறுதலளிக்க) நரியின் வடிவம் எடுத்த ஏற்றமுடையவன் நீயே
ஓம் ஸித்தார்த்தாய நமஹ (தவங்களில் இருந்து பெறும்) பலனுக்காகக் காத்திராமல் நோக்கங்கள் அனைத்தும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்ட வேண்டியவை வேண்டியாங்கு பெற்றவன் நீயே – (130)
ஓம் முண்டாய நமஹ (துறவியின் குறியீடாக) மழித்த தலையை உடையவன் நீயே
ஓம் ஸர்வசுபங்கராய நமஹ அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்து அனைத்து மங்களங்களையும் தருபவன் நீயே
ஓம் அஜயாய நமஹ பிறப்பற்றவன் நீயே
ஓம் பஹுரூபாய நமஹ எண்ணற்ற பல பல வடிவங்கள் கொண்டவன் நீயே
ஓம் கந்ததாரிணே நமஹ அனைத்து வகை நறுமணங்களையும் மேனியில் தரிப்பவன் நீயே
ஓம் கபர்தினே நமஹ (மன்னன் பகீரதனின் மெய்யுறுதியுடன் கூடிய வேண்டுதலால் கங்கை நீரைக் கொடுத்தாலும்) சொர்க்கத்தில் இருந்து கங்கை ஆறு பாய்ந்த போது, அதை தன் தலையில் உள்ள சடாமுடியில் தரித்து அதனை உறிஞ்சிக் கொண்டவன் நீயே
ஓம் ஊர்த்வ்ரேதஸே நமஹ அரசையும் தலைமைத்துவத்தையும் கொடுப்பவன் நீயே. காமமடக்கும் கடும் நோன்பிலிருந்து ஒருபோதும் வீழாத பிரம்மச்சாரி நீயே
ஓம் ஊர்த்வலிங்காய நமஹ பாலுறவுக் காமம் அடக்கலில் புகழ்பெற்றவன் (மேல்நோக்கிய லிங்க வடிவினன்) நீயே
ஓம் ஊர்த்வசாயினே நமஹ எப்போதும் அண்ணாந்து (மல்லாந்து / மேல் நோக்கிப்) படுப்பவன் நீயே
ஓம் நப: ஸ்தலாய நமஹ சக்தியை இருப்பிடமாகக் கொண்டவன் நீயே – (140)
ஓம் த்ரிஜடினே நமஹ தலையில் மூன்று சடைகளைக் கொண்டவன் நீயே
ஓம் சீரவாஸஸே நமஹ மரவுரி தரித்திருப்பவன் நீயே
ஓம் ருத்ராய நமஹ (கடுஞ்சீற்றத்தின் விளைவால்) ருத்திரன் நீயே
ஓம் ஸேனாபதயே நமஹ தேவர்களின் படைத்தலைவன் நீயே
ஓம் விபவே நமஹ நீயே, அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன்
அஹஸ்சராய நமஹ நீயே, பகலில் சஞ்சரிக்கின்ற தேவர்களின் வடிவம்கொண்டவன்
ஓம் நக்தஞ்சராய நமஹ நீயே, இரவில் சஞ்சரிக்கின்ற தேவர்களின் வடிவம் கொண்டவன்
ஓம் திக்மமன்யவே நமஹ நீயே, நன்மை பயக்கின்ற கோபத்தைக் கொண்டவன்
ஓம் ஸுவர்ச்சஸாய நமஹ நீயே, சிறந்த ஞான ஒளிவடிவினன்
ஓம் கஜக்னே நமஹ உன் புனித நகரான வாராணசியை அழிப்பதற்காக மதங்கொண்ட யானையின் வடிவில் வந்த பெரும் அசுரனைக் கொன்றவன் நீயே                       (150)
ஓம் தைத்யக்னே நமஹ நீயே அண்டத்தை ஒடுக்குபவர்களான தைத்தியர்களைக் (அசுரர்களை) கொல்பவன்
ஓம் காலாய நமஹ அண்டத்தை அழிக்கும் கால வடிவினன் நீயே
ஓம் லோகதாத்ரே நமஹ அண்டத்தின் தலைமை ஆணையாளன் நீயே
ஓம் குணாகராய நமஹ சிறந்த சாதனைகள் மற்றும் நற்குணங்களின் இருப்பிடம் நீயே
ஓம் ஸிம்ஹசார்தூல ரூபாய நமஹ சிங்கம் மற்றும் புலி முதலிய வடிவம் நீயே
ஓம் ஆர்த்ரசர்மாம்பரா வ்ருதாய நமஹ உதிரத்தால் நனைந்த யானைத்தோலைப் போர்த்தி இருப்பவன் நீயே
ஓம் காலயோகினே நமஹ காலத்தின் தடுக்கப்பட முடியாத ஆதிக்கத்தைக் கடந்த, காலத்தை வஞ்சிக்கும் யோகி (காலயோகி) நீயே
ஓம் மஹாநாதாய நமஹ நீயே சத்தத்து ஒலி வடிவினன்
ஓம் சர்வகாமாய நமஹ விருப்பங்கள் அனைத்தின் கனியும் நீயே
ஓம் சதுஷ்பதாய நமஹ நான்குவித சாதனைகளின் மூலம் வழிபடுப்படுபவன் நீயே – (160)
ஓம் நிசாசராய நமஹ இரவு போன்ற அறியாமையைக் கொண்டு உலக  நாடகத்தை நடத்துபவன் நீயே
ஓம் ப்ரேதசாரிணே நமஹ பிணத்துடன் சஞ்சரிப்பவன் நீயே
ஓம் பூதசாரிணே நமஹ பூதங்களுடன் சஞ்சரிப்பவன் நீயே
ஓம் மஹேஸ்வராய நமஹ நீயே இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும் மேலான உயர்ந்த தலைவன்
ஓம் பஹுபூதாய நமஹ நீயே இருப்பிலுள்ள மற்றும் இருப்பில் இல்லாத அனைத்துப் பொருட்களின் வடிவில் உன்னை முடிவிலாமல் பெருக்கிக்கொண்டு அனைத்துமாகி நின்றவன்
ஓம் பஹுதராய நமஹ நீயே மஹத் மற்றும் ஐம்பூதங்களின் எண்ணற்ற கலவைகளால்  பேருலகைத் தாங்குபவன்
ஓம் ஸ்வர்பானவே நமஹ நீயே ஆனந்தத்தால் ஒளி நிரம்பியவன்
ஓம் அமிதாய நமஹ நீயே அளவிடமுடியாதவன்
ஓம் கதயே நமஹ விடுதலை அடைந்தவர்களால் (முக்தர்களால்) சென்றடையப்பட வேண்டிய உயர்ந்த கதி  நீயே
ஓம் ந்ருத்ய ப்ரியாய நமஹ நீயே,   நடனக்கலையில் விருப்பமுடையவன் – (170)
ஓம் நித்ய நர்த்தாய நமஹ நீயே, எப்பொழுதும் நடனக்கலையில்  விருப்பம் கொண்டு நடனமாடிக் கொண்டிருப்பவன்
ஓம் நர்த்தகாய நமஹ நீயே, அகிலத்தையே ஆட்டுவித்து பிறரை நடனாமாடச்செய்பவன்
ஓம் ஸர்வ லாலஸாய நமஹ நீயே, அனைவரிடமும் அன்பு கொண்ட அண்டத்தின் நண்பன்
ஓம் கோராய நமஹ நீயே, கோர வடிவமுடையவன்
ஓம் மஹாதபஸே நமஹ நீயே, அண்டத்தை உண்டாக்கவும், அழிக்கவும் வேண்டிய மாபெருந் தவம் மேற்கொண்டிருப்பவன்
ஓம் பாசாய நமஹ நீயே, மாயையின் பந்தங்களால் உயிரினங்கள் அனைத்தையும் பாசத்தால் கட்டியிருப்பவன்
ஓம் நித்யாய நமஹ நீயே, அழிவைக் கடந்த அழிவற்றவன்
ஓம் கிரிருஹாய நமஹ நீயே, அந்த கைலாய மலையில் வசிக்கும் கயிலை நாதன்
ஓம் நபஸே நமஹ நீயே, பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், வெளிபோன்ற பொருட்கள் அனைத்திலும் பற்றற்றவன்
ஓம் சஹஸ்ர ஹஸ்தாய நமஹ நீயே, எண்ணற்ற கரங்களை உடையவன் – (180)
ஓம் விஜயாய நமஹ நீயே, வெற்றியின் அடையாளமாக விளங்கும் வெற்றி வேந்தன்
ஓம் வ்யவஸாயாய நமஹ நீயே, உறுதியோடு கூடிய விடாமுயற்சி உடைய குணம் கொண்டவன்
ஓம் அதந்த்ரிதாய நமஹ நீயே, சோம்பலற்றவனும், தேவைப்படும் காரியங்களில் தாமதம் செய்யாத குணம் கொண்டவன்
ஓம் அதர்ஷணாய நமஹ நீயே எந்த ஒரு காரியத்திலும் அச்சமற்றவன்
ஓம் தர்ஷ்ணாத்மனே நமஹ நீயே, தீய எண்ணமுள்ளோருக்குப் பயத்தைத் தருபவன்
ஓம் யக்ஞனே நமஹ நீயே பலியின் வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்து யாகத்தை அழித்தவன்
ஓம் காம நாசகாய நமஹ நீயே, (லோக க்ஷேமத்தின் நிமித்தமாக) மன்மதனை அழித்தவன்
ஓம் தக்ஷயாக அபஹாரிணே நமஹ நீயே தக்ஷன்  செய்த வேள்வியை அழித்தவன்
ஓம் ஸுஸஹாய நமஹ நீயே, மிக்க பொறுமையான குணம் கொண்ட இனிமையானவன்
ஓம் மத்யமாய நமஹ நீயே, சார்பற்று எந்த ஒரு விஷயத்திலும் நடுநிலை வகிப்பவன் – (190)
ஓம் தேஜோபஹாரிணே நமஹ நீயே, (ஊழிக்காலத்தில்) கடுஞ்சீற்றம் கொண்டவனும், உயிரினங்கள்அனைத்தின் சக்தியையும் அபகரித்து சக்திகளை உன்னுள் ஒடுக்கிக் கொள்பவன்
ஓம் பலக்னே நமஹ நீயே, பலத்தைத் தீயமுறையில் பயன்படுத்துவோரை அழிப்பவன்
ஓம் முதிதாய நமஹ எப்பொழுதும் ஆனந்தமாய் இருப்பவன் நீயே
ஓம் அர்த்தாய நமஹ நீயே, அனைவராலும் விரும்பப்படும் செல்வத்தின் வடிவம் கொண்டு அனைவரது விருப்பத்திற்கும் உரியவன்
ஓம் அஜிதாய நமஹ நீயே, ஒருவராலும் வெல்லப்படாதவன்
ஓம் அவராய நமஹ நீயே,  உன்னைத் தவிர துதிக்கத்தக்க எவரும் இல்லாத சிறப்பு கொண்ட தன்னிகரில்லாதவன்
ஓம் கம்பீர கோஷாய நீயே, கம்பீரமாக முழக்கமிடுபவன்
ஓம் கம்பீராய நமஹ நீயே, அறிவுக்கெட்டாத நிலை படைத்தவன்
ஓம் கம்பீரபலவாஹனாய நமஹ நீயே, எவராலும் அளக்க முடியாத பலமும், வலிமையும்  கொண்ட துணைவர்கள் மற்றும்  தர்மமாகிய காளையை வாஹனமாகக் கொண்டவன்
ஓம் ந்யக்ரோதரூபாய நமஹ நீயே, மேல்நோக்கிய வேர்களைக் கொண்டதும், கீழ்நோக்கித் தாங்கும்  உலக வாழ்க்கை என்னும் மரத்தின் வடிவம் கொண்டவன் – (200)
ஓம் ந்யக்ரோதாய நமஹ ஆலமரத்தின் கீழுள்ள ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ரூபன் நீயே
ஓம் வ்ருக்ஷ கர்ணஸ்திதயே நமஹ அண்டத்திற்கு அழிவு வரும் வேளையில், (பிரளய காலத்தில்) அளவற்ற சமுத்திரத்தில் ஆல இலையில் ஆலிலைக் கண்ணன் வடிவத்தில் உறங்கிக் கொண்டிருப்பவன் நீயே
ஓம் விபவே நமஹ ஹரி, ஹரன், கணேசன், அர்க்கன், அக்னி, வாயு முதலிய பற்பல வடிவங்களில் வழிபட்ட அடியார்க்கு  கருணைபுரிபவன் நீயே
ஓம் ஸுதீக்ஷ்ண தசனாய நமஹ நீயே, (எண்ணற்ற உலகங்களை மென்று விரைவாக அவற்றை விழுங்கவல்லவன் என்பதால்) கூர்மையான பற்களை உடையவன்
ஓம் மஹா காயாய நமஹ நீயே, வடிவத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பேருடல் கொண்டவன்
ஓம் மஹானனாய நமஹ நீயே, மிகப்பெரிய தலையை உடையவன்
ஓம் விஷ்வக்ஸேனாய நமஹ நீயே,  அரக்கர்படைகளை நாலா பக்கங்களிலும்  சிதறடிக்கச் செய்பவன்
ஓம் ஹரயே நமஹ நீயே, எல்லாவற்றையும் அழிப்பவன்
ஓம் யக்ஞாய நமஹ நீயே, வேள்வி வடிவினன்
ஓம் ஸம்யுகாபீட வாஹனாய நமஹ நீயே, போர் செய்யும்பொழுது கொடியாகவிருக்கும் காளையை வாஹனமாயுடையவன் – (210)
ஓம் தீக்ஷ்ண தாபாய நமஹ நீயே, அக்னியை ஆன்மாவாகக் கொண்ட மிக்க வெப்பம் கொண்ட நெருப்பு வடிவினன்
ஓம் ஹர்யஸ்வாய நமஹ நீயே, பச்சை நிறம் கொண்ட குதிரைகளையுடைய சூரிய வடிவம் கொண்டவன்
ஓம் ஸஹாயாய நமஹ நீயே, ஜீவனாகிய உயிகளுக்குத் துணைபுரிபவன்
ஓம் கர்மகாலவிதே நமஹ நீயே, அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய செயல்களுக்கான முறையான காலங்களை நன்கு அறிந்தவன்
ஓம் விஷ்ணுப்ரஸாதிதாய நமஹ விஷ்ணு சக்கரத்தை அடைவதற்காக திருமாலால் துதிக்கப்பட்டு மகிழ்ச்சி அடைந்தவன் நீயே
ஓம் யக்ஞாய நமஹ நீயே, திருமாலின் வடிவமாக விளங்குபவன்
ஓம் ஸமுத்ராய நமஹ பெருங்கடலாக விளங்குபவன் நீயே,
ஓம் படபாமுகாய நமஹ அந்த மஹா சமுத்திரத்தின் நீரையே வற்றச்செய்யும்  அக்னியின் வடிவம் கொண்டவன் நீயே
ஓம் ஹுதாசனஸஹாயாய நமஹ காற்றின்  வடிவம் கொண்டவன் நீயே
ஓம் ப்ரசாந்தாத்மனே நமஹ நீயே, மென்மையான தென்றலாலும் கலக்கப்படாதபோது ஓய்ந்திருக்கும் பெருங்கடலைப் போல அமைதியான ஆன்மா கொண்டவன் – (220)
ஓம் ஹுதாசனாய நமஹ நீயே, மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த  நெய்யெனும் ஆகுதியைப் பருகும் அக்னியின் வடிவினன்
ஓம் உக்ரதேஜஸே நமஹ நீயே, ஊழிக்காலத்தில் அனைத்தையும் தீவிர ஜுவாலையால் எரிப்பதால் ஏற்படும் முக ஒளி பொருந்தியவன்
ஓம் மஹாதேஜஸே நமஹ நீயே, பிரகாசமான ஒளி வடிவம் கொண்டவன்
ஓம் ஜந்யாய நமஹ நீயே, போரில் வல்லவன்
ஓம் விஜயகாலவிதே நமஹ நீயே, வெற்றிபெரும்பொருட்டு போரில் எப்போது ஈடுபடவேண்டுமென்ற சரியான காலத்தை நன்கு அறிந்தவன்
ஓம் ஜ்யோதிஷாமயனாய நமஹ நீயே, கோள்களின் நகர்வுகளைக் குறித்த அறிவியலை  நன்கு உணர்ந்தவன்
ஓம் ஸித்தயே நமஹ நீயே, பக்குவமடைந்த நிலையை உடையவன்
ஓம் ஸர்வவிக்ரஹாய நமஹ நீயே, அனைத்து வடிவங்களையும் தன் உடலாகக் கொண்டவன்
ஓம் சிகினே நமஹ நீயே, தலையில் நன்கு வளர்ந்த கூந்தலை உடைய இல்லறவாசி யானவன்
ஓம் முண்டினே நமஹ நீயே, தலையில் கூந்தல் மழிக்கப்பட்டு துறவியாக விளங்குபவன் – (230)
ஓம் ஜடினே நமஹ நீயே, (வானப்ரஸ்தனாக இருப்பதால்) தலையில் ஜடாமுடி தரித்தவன்
ஓம் ஜ்வாலினே நமஹ நீயே, (உன்னால் அடையாளங் காணப்படும் அறவோர் நடந்து செல்லும் பாதை பிரகாசமானதாக இருப்பதால்) தீப்பிழம்பு ஜுவாலை வடிவினனாக இருப்பவன்
ஓம் மூர்த்திஜாய நமஹ நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும்  பொதிந்திருந்து மனிதனாகவும் இதய ஆகாயத்தில் தோன்றும் வடிவினன்
ஓம் மூர்த்தகாய நமஹ நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் தலை உச்சியில் உறைபவன்
ஓம் பலினே நமஹ நீயே, மிகவும் வலிமை மிக்கவன்
ஓம் வைணவினே நமஹ நீயே, புல்லாங்குழலைக் கையில் ஏந்தியவன்
ஓம் பணவினே நமஹ நீயே, உடுக்கையைக் கரத்தில் ஏந்தியவன்
ஓம் தாளினே நமஹ நீயே, தாளி என்றழைக்கப்படும் சங்கைக் கையில் ஏந்தியவன்
ஓம் கலினே நமஹ நீயே, நெற்களஞ்சியத்தின் தலைவன்
ஓம் காலகடங்கடாய நமஹ நீயே, கால வடிவமான யமதேவனின் மறைப்பான மாயையையும் மறைக்கின்றவன் – (240)
ஓம் நக்ஷத்ரவிக்ரஹமதயே நமஹ நீயே, விண்மீன் போல் ஒளிவிடும் உடலையும், அறிவையும் உடையவன்
ஓம் குணபுத்தயே நமஹ நீயே, குணங்களையும், அறிவையும் அளக்கும்  ஆற்றல் படைத்தவன்
ஓம் லயாய நமஹ நீயே, அனைத்திற்கும் ஆதார சக்தியாகவும் அனைத்தும் ஒடுங்குமிடமாயும் இருப்பவன்
ஓம் அகமாய நமஹ நீயே, எவ்வகை மாற்றத்திற்கும் உட்படும் எந்தப் பொருளையும் தன்னில் கொள்ளாத நிலையைக் கொண்டு உள்ளத்தினுள்ளே அசையாத அறிவு வடிவினன்
ஓம் ப்ரஜாபதயே நமஹ நீயே, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருந்து உலகத்தின் நாயகனாய விளங்குபவன்
ஓம் விச்வபாஹவே நமஹ நீயே, பரந்த அண்டம் முழுவதும் பரவும் கரங்களைக் கொண்டவன்
ஓம் விபாகாய நமஹ நீயே, நுணுக்கமான எண்ணற்ற வடிவங்களில் வெளிப்பட்டாலும் வேறுபடுத்தவும் பிரிக்கவும் இயலாதவன்
ஓம் ஸர்வகாய நமஹ நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்து எங்கும் எதிலும் உள்ளவன்
ஓம் அமுகாய நமஹ நீயே, (படைக்கும் பொருட்களை அனுபவிக்காதவனாக) முகமில்லாதவன்/ அறிவாயிருப்பவன், உலக இன்பங்களில் நாட்டமற்றவனாக இருப்பவன்
ஓம் விமோசனாய நமஹ நீயே, உயிரினங்களை உலக பந்தங்களிலிருந்து விடுவித்து வீடுபேறு அளிப்பவன் – (250)
ஓம் ஸுசரணாய நமஹ நீயே, (உன்மேல் அன்பு பூண்டவர்கள்) எளிமையாக அடையத்தக்கவன்
ஓம் ஹிரண்ய கவசோத்பவாய நமஹ நீயே, மாயை என்னும் பொன்மயமான கவசத்தினால் மூடப்பட்டிருப்பவன்
ஓம் மேட்ரஜாய நமஹ நீயே, லிங்கோத்பவமூர்த்தியாக தோன்றுபவன் (அண்ணாமலையார்)
ஓம் பலசாரிணே நீயே, எப்போதும் பலத்த படையுடன் விலங்குகளைத் தேடி காட்டில் நடமாடும் வேட வடிவினன்
ஓம் மஹீசாரிணே நமஹ நீயே, மொத்த அண்டத்திலும் திரிந்து நடமாடுபவன்
ஓம் ஸ்ருதாய நமஹ நீயே, பிரபஞ்சம் அனைத்திலும் நீக்கமற நிறைந்து விளங்குபவன்
ஓம் ஸர்வதூர்யவிநோதினே நமஹ நீயே, மூவுலகங்களிலும் முழக்கப்படும் அனைத்து இசைக் கருவிகளின் ஒலிகளிலும் களிப்பு உடையவன்/ அடைபவன்
ஓம் ஸர்வதோத்ய பரிக்ரஹாய நமஹ இந்த அண்டத்திலுள்ள அனைத்து உயிர்களையும் தன் குடும்பமாகக் கருதுபவன்
ஓம் வ்யாலரூபாய நமஹ அரவத்தின் வடிவமான ஆதிசேஷனானவன் நீயே
ஓம் குஹாவாசினே நமஹ உள்ளத்தின் அறிவுப் பெருவெளியாகிய  ஹ்ருதய குகையில் வசிப்பவன் நீயே – (260)
ஓம் குஹாய நமஹ நீயே, சுப்ரமண்யனைப் போன்ற தோற்றம் படைத்தவன்
ஓம் மாலினே நமஹ நீயே, மாலைகளை அணிந்தவன்
ஓம் தரங்கவிதே நமஹ நீயே,  (மீண்டும் மீண்டும் ஏற்படும் சுழற்சியாக)  படைத்தல், காத்தல், அழித்தலாகிய அலைகளை உடையவன்
ஓம் த்ரிதசாய நமஹ நீயே, உயிர்களின் பிறப்பு,  இருப்பு, இறப்பு என்ற மூன்று நிலைகளின் தோற்றத்தின் இருப்பிடமானவன்
ஓம் த்ரிகாலத்ருதே நமஹ நீயே, கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று கால நிலைகள் அனைத்தையும் ஆடையாக உடுத்தி இருப்பவன்
ஓம் கர்ம சர்வபந்தவிமோசனாய நமஹ நீயே, தன்னை நாடும் அன்பர்களுக்கு (முற்பிறவியில் செய்த செயல்கள் மற்றும் தற்காலத்தில் செய்த செயல்கள் அனைத்தின் விளைவுகளிலிருந்தும்) அறியாமை மற்றும் ஆசைகளில் உள்ள பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பவன்
ஓம் அஸுரேந்த்ராணாம்பந்தனாய நமஹ நீயே, அரக்க வேந்தர்களுக்குத் தளையாயிருப்பவன்
ஓம் யுதிசத்ருவினாசனாய நமஹ போரில் எதிரிகளை அழிப்பவன் நீயே
ஓம் ஸாங்க்யப்ரஸாதாய நமஹ நீயே , உண்மை எது? பொய்ம்மை எது என்று ஆராய்ச்சி செய்பவர்களால் இன்பமடைபவன்
ஓம் துர்வாஸஸே நமஹ நீயே துர்வாசமுனிவராக வடிவம் தாங்கியவன் – (270)
ஸர்வஸாது நிஷேவிதாய நீயே, அறவோர் அனைவராலும் பணிவிடை செய்யப்பட்டு, துதிக்கப்படுபவன்
ப்ரஸ்கந்தனாய நீயே, ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களையும் நழுவச் செய்து மரணத்தைத் தழுவச் செய்பவன்
விபாகக்ஞாய நீயே அனைத்து உயிரினங்களுக்கும்  அவரவர்     வினைகளுக்குத் தகுந்தபடி  இன்ப துன்பங்களை நியாயமாகப் பகிர்ந்து கொடுத்தருள்பவன்
அதுல்யாய நீயே ஒப்பற்றவன்
யக்ஞபாகவிதே நமஹ நீயே வேள்விகளில் கொடுக்கப்படும், பெறப்படும் பங்குகளை அனைவருக்கும் அளித்தபின் எஞ்சியுள்ளதைத் தாம் ஏற்று இன்பமடைபவன்
ஓம் ஸர்வவாஸாய நமஹ நீயே அனைத்திலும் உள்ளவன்
ஓம் ஸர்வசாரிணே நமஹ நீயே எங்கும் திரிபவன்
ஓம் துர் வாஸஸே நமஹ நீயே எங்கும் நிறைந்தவனாதலால் ஆடை அணிவிக்க இயலாதவன்
ஓம் வாஸவாய நமஹ நீயே இந்திர வடிவினன்
ஓம் அமராய நமஹ நீயே  மரணமிலாப் பெருவாழ்வு உடையவன் – (280)
ஓம் ஹைமாய நமஹ நீயே பனிமலை வடிவம் கொண்டவன்
ஓம் ஹேமகராய நமஹ நீயே  பொன்னைத் தோற்றுவிப்பவன்
ஓம் நிஷ்கர்மாய நமஹ நீயே செயலற்றவன்
ஓம் ஸர்வதாரிணே நமஹ நீயே செயல்கள் அனைத்தின் கனிகளையும் உன்னில் தாங்குபவன்
ஓம் தரோத்தமாய நமஹ நீயே அனைத்தையும் தாங்கும் ஆதிசேஷன் முதலானவர்களுக்கும் மேலானவன்
ஓம் லோஹிதாக்ஷாய நமஹ நீயே  குருதி தோய்ந்த செம்மை நிறமான கண்களைக் கொண்டவன்
ஓம் மஹாக்ஷாய நமஹ நீயே முடிவிலா அண்டம் முழுவதும் பரவும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவன்
ஓம் விஜயாக்ஷாய நமஹ நீயே எப்போதும் வெற்றிவாகை சூடும் சக்கரங்களுடன் கூடிய தேரைக் கொண்டவன்
ஓம் விசாரதாய நமஹ நீயே  பெரும் கல்வியுடைய அறிஞன்
ஓம் ஸங்க்ரஹாய நமஹ நீயே உன் அடியார்களின் பாதுகாவலன் – (290)
ஓம் நிக்ரஹாய நமஹ நீயே புலன்களை அடக்கி ஒடுக்குபவன்
ஓம் கர்த்ரே நமஹ நீயே செயல்படுபவன்
ஓம் ஸர்ப்பசீரநிவாஸனாய நமஹ நீயே பாம்புகளாலான இழைகளையும் துணிகளையும் கொண்ட ஆடைகளை உடுத்துபவன்
ஓம் முக்யாய நமஹ முதன்மையானவன் பரமன் நீயே
ஓம் அமுக்யாய நமஹ நீயே தமக்கு நிகராக எவருமில்லாதவன்
ஓம் தேஹாய நமஹ நீயே நன்கு வளர்ந்த உடலை உடையவன்
ஓம் காஹலேயே நமஹ நீயே காஹலி என்னும் மத்தளக் கருவியை உடையவன்
ஓம் ஸர்வகாமதாய நமஹ நீயே அடியார்களது அனைத்து விருப்பங்களையும்  நிறைவேற்றுபவன்
ஓம் ஸர்வகாலப்ரஸாதாய நமஹ நீயே கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று கால நிலைகள் அனைத்திலும் அருளின் உடல்கொண்ட வடிவம்
ஓம் ஸுபலாய நமஹ நீயே உலகிற்கு நன்மை செய்யத்தக்க வலிமை உடையவன் – (300)
ஓம் பலரூபத்ருதே நமஹ நீயே வலிமையும் வடிவழகும் கொண்டவன்
ஓம் ஸர்வகாமவராய நமஹ நீயே விரும்பப்படுபவர்களுள் சிறந்தவன்
ஓம் ஸர்வதாய நமஹ நீயே வேண்ட முழுதும் தருபவன்
ஓம் ஸர்வதோமுகாய நமஹ நீயே எத்திக்கிலும் முகமுடையவன்
ஓம் ஆகாசநிர்விரூபாய நமஹ நீயே ஆகாயம் போன்று வடிவற்றவன்
ஓம் நிபாதினே நமஹ நீயே. உடல் என்றழைக்கப்படும் குழிக்குள் தோன்றி விழுபவன்
ஓம் அவசாய நமஹ நீயே எதற்கும் யாருக்கும் வசப்படாதவன்
ஓம் ககாய நமஹ நீயே விருக்ஷத்தை இருப்பிடமாகக் கொண்ட பறவையைப் போல மனிதர்களின் உள்ளப் பெருவெளியில் வசிப்பவன்
ஓம் ரௌத்ரரூபாய நமஹ நீயே பயம் தரக்கூடிய  பைரவ வடிவமுடையவன்
ஓம் அம்சவே நமஹ நீயே ஒளியின் கதிரைப்போல உருவம் கொண்டவன் – (310)
ஓம் ஆதித்யாய நமஹ நீயே சூரியனின் உருவம் கொண்டவன்
ஓம் பஹுரஸ்மயே நமஹ நீயே ஒளியின் கதிரைப்போல   பலகிரணங்களை உடையவன்
ஓம் ஸுவர்ச்சஸிநே நமஹ நீயே ஒளியின் கதிரைப்போல அழகு நிறைந்தவன்
ஓம் வஸுவேகாய நமஹ நீயே காற்றைப்போன்ற வேகமுடையவன்
ஓம் மஹாவேகாய நமஹ நீயே மிகுந்த வேகம் கொண்டவன்
ஓம் மனோவேகாய நமஹ நீயே மனோவேகம் கொண்டவன்
ஓம் நிசாசராய நமஹ நீயே எல்லா உயிர்களுக்கும் எது இரவு போன்று உளதோ அந்நிலையில் மனமடங்கிய முனிவனைப் போன்று விழிப்புடன் நடமாடுபவன்
ஓம் ஸர்வவாஸினே நமஹ நீயே அனைத்திலும் உறைபவன்
ஓம் ச்ரியாவாஸினே நமஹ நீயே செழிப்பைத் தோழனாகக் கொண்டு உறைபவன்
ஓம் உபதேசகராய நமஹ நீயே கல்வியையும், ஞானத்தையும்  போதிப்பவன் – (320)
ஓம் அகராய  நமஹ அமைதி குறித்த கல்வியைக் கற்பிப்பவன் நீயே
ஓம் முனயே நமஹ நீயே அமைதியைப் போதிப்பவனாக இருப்பதால் உள்ளடங்கிப் பேசாதவன்
ஓம் ஆத்மா நிராலோகாய நமஹ நீயே உயிர்களை நன்றாக கவனித்துக் கொள்பவன்
ஓம் ஸம்பக்னாய நமஹ நீயே  அனைவரும் உன்னை சார்ந்திருக்க காரணமாயிருப்பவன்
ஓம் ஸஹஸ்ரதாய நமஹ நீயே (கருவூலங்கள் அனைத்தின் தலைவன்) குபேரன்
ஓம் பக்ஷிணே நமஹ நீயே பறவைகளின் அரசனாகிய கருடன் வடிவினன்
ஓம் பக்ஷரூபாய நமஹ நீயே தோழன் வடிவமாய் உதவி புரிபவன்
ஓம் அதிதீப்தாய நமஹ நீயே அதி பிரகாசமான நம்பிக்கையின் ஒளியாக இருப்பவன்
ஓம் விசாம்பதயே நமஹ நீயே படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் உயிர்களின் தலைவன்
ஓம் உன்மாதாய நமஹ நீயே பக்தி என்னும் மயக்கத்தை உண்டு பண்ணுபவன் – (330)
ஓம் மதநாய நமஹ நீயே அளவற்ற மகிழ்ச்சியை உண்டுபண்ணுபவன் (உயிர்களுக்கு)
ஓம் காமாய நமஹ நீயே அனைவராலும் விரும்பப்படுபவன்
ஓம் அஸ்வத்தாய நமஹ நீயே அரசமர வடிவமாக விளங்குபவன்
ஓம் அர்த்தகராய நமஹ நீயே வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தருபவன்
ஓம் யசஸே நமஹ நீயே உன்னை வழிபடுபவர்களுக்குப் புகழைத் தருபவன்
ஓம் வாமதேவாய நமஹ நீயே உயிரினங்கள் அனைத்தின்  செயல்களுக்காக (இன்ப துன்பங்கள் என்ற வடிவில் அவற்றின் கனிகளைப் பகிர்ந்தளிக்கும் தேவன்) பலனைத் தருபவன்
ஓம் வாமாய நமஹ நீயே அழகான தோற்றப் பொலிவுள்ளவன்
ஓம் ப்ராசே நமஹ நீயே மிகப் பழமையானவன் (அனைவர்க்கும் முற்பட்டவன்)
ஓம் தக்ஷிணாய நமஹ நீயே மூவுலகங்களையும் ஆளும் திறன்/திறமை படைத்த வல்லவன்
ஓம் வாமனாய நமஹ அசுரத் தலைவன் பலியை வஞ்சித்து (அவனது அரசுரிமையை அபகரித்து இந்திரனுக்கு மீட்டளித்தவனும் (வாமனவடிவம் எடுத்தவன்) நீயே – (340)
ஓம் சித்தயோகினே நமஹ சனத்குமாரர் மற்றும் பிறரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட யோகி (ஸித்தயோகியானவன்) நீயே
ஓம் மஹர்ஷயே நமஹ வசிஷ்டர் மற்றும் பிற பண்பட்ட முனிவர்களில் மிகச் சிறந்தவன் நீயே
ஓம் ஸித்தார்த்தாய நமஹ நீயே அனைத்தையும் பெறத் தகுதி பெற்றவர்களில் சிறந்தவன்
ஓம் ஸித்தஸாதகாய நமஹ நீயே பக்குவப்பட்ட முனி சிரேஷ்டர்களது விருப்பங்களை நிறைவேற்றுபவன்
ஓம் பிக்ஷவே நமஹ நீயே  யாசகம் பெற்று உண்ணுவதை கடமையாகக் கொண்ட தவசிகளின் உருவில் திகழ்பவன்
ஓம் பிக்ஷுரூபாய நமஹ நீயே  (தவசிகளைப் போன்று) இரந்துண்பவன்
ஓம் விபணாய நமஹ நீயே உலகப்பொருள்களை ஒரு பொருட்டாக மதிக்காதவன்
ஓம் ம்ருதவே நமஹ நீயே  (தயை, கருணை போன்ற உயர்வான எண்ணம் கொண்ட) மென்மையான உள்ளம் கொண்டவன்
ஓம் அவ்யயாய நமஹ நீயே என்றும் மாறுபடாத இயல்பு கொண்டவன்
ஓம் மஹாஸேநாய நமஹ பெரும் படைகளைக் கொண்டவன் நீயே – (350)
ஓம் விசாகாய நமஹ நீயே தேவர்களின் தலைவனுக்குத் துணை நின்று சுப்ரமண்ய வடிவம் கொண்டவன்
ஓம் ஷஷ்டி பாகாய நமஹ நீயே அறுபது தத்துவங்கள் அல்லது அண்டத்தின் தலைமைப் பொருட்களை அனுபவிப்பவன்
ஓம் கவாம்பதயே நமஹ நீயே புலன்கள் அதனதன் செயல்பாடுகளுக்கு உன்னாலேயே வழி நடத்தப்படுவதால் (புலன்களை இயக்கும் தலைவன்)
ஓம் வஜ்ரஹஸ்தாய நமஹ நீயே  (மலைகளைப் பிளக்கும்) வஜ்ராயுதத்தைக் கையில் உடையவன்
ஓம் விஷ்கம்பிணே நமஹ நீயே பரவியிருக்கும் முடிவற்றவன்
ஓம் சமூஸ்தம்பனாய நமஹ நீயே போர்க்களத்தில் தைத்தியர் படையைக் கலங்கடித்து  ஸ்தம்பிக்கச் செய்பவன்
ஓம் வ்ருத்தாவ்ருத்தகராய நமஹ நீயே தன் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும், எதிரிகளின் களத்தில் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும் தேரில் வட்டமிட்டும், படையைப் பிளந்துகொண்டும் தேரில் வலம் வந்து, அவர்களை அழித்து, நலமாகவும், பாதுகாப்பாகவும் திரும்பி வருபவன்
ஓம் தாலாய நமஹ நீயே உலகப் பிறவிப் பெருங் கடலின் அடியாளத்தை/ அடிப்படையை அறிந்தவன்
ஓம் மதவே நமஹ நீயே வஸந்தகால வடிவம் கொண்டவன்
ஓம் மதுகலோசனாய நமஹ நீயே தேனுக்கு ஒப்பான சிவந்த கண்களைக் கொண்டவன் – (360)
ஓம் வாசஸ்பத்யாய நமஹ நீயே தேவர்களின் குலகுருவான பிரஹஸ்பதியின் வடிவாக விளங்குபவன்
ஓம் வாஜஸநாய நமஹ நீயே சூரியன் உருவில் வேதத்தின் ஒரு கிளையான வாஜஸநேயம் எனும்  வடிவாக விளங்குபவன்
ஓம் நித்யமாச்ரிதபூஜிதாய நமஹ நீயே உனது அன்பர்களால் தினந்தோறும் வழிபடப்படுபவன்
ஓம் ப்ரஹ்மசாரிணே நமஹ நீயே பிரம்மத்தில் அர்ப்பணிப்பு மிக்கவன்
ஓம் லோகசாரிணே நமஹ நீயே உலகனைத்திலும் எப்பொழுதும் சஞ்சாரம் செய்து கொண்டிருப்பவன்
ஓம் ஸர்வசாரிணே நமஹ நீயே எங்கும் நடமாடிக்கொண்டிருப்பவன்
ஓம் விசாரவிதே நமஹ நீயே  வாய்மை நன்கறிந்தவன்
ஓம் ஈசானாய நமஹ நீயே ஒவ்வொரு இதயத்தையும் அறிந்து அனைத்து உயிர்களையும் கட்டுப்பாட்டுடன் இயக்குபவன்
ஓம் ஈஸ்வராய நமஹ நீயே அனைத்து அண்டத்திலும் பரவி வியாபித்து நிற்பவன்
ஓம் காலாய நமஹ நீயே உயிர்களின் (செய்யும் நன்மை தீமைகளை) நடவடிக்கைகளைக் குறித்து வைக்கின்ற சித்திரகுப்த வடிவினன் – (370)
ஓம் நிசாசாரிணே நமஹ நீயே உயிர்கள் ஒடுங்குகின்ற காலத்தில் நடமாடுபவன்
ஓம் பிநாகப்ருதே நமஹ நீயே பிநாகம் என்னும் வில்லைக் கையில் ஏந்தியவன்
ஓம் நிமித்தஸ்தாய நமஹ நீயே அனைத்து காரணங்களில் இருப்பவன்
ஓம் நிமித்தாய நமஹ நீயே அனைத்துக்கும் காரணமாயிருப்பவன்
ஓம் நந்தயே நமஹ நீயே அறிவுப் பெட்டகமாய் விளங்குபவன் (அறிவின் உறைவிடம்)
ஓம் நந்திகராய நமஹ நீயே நல் வளத்தை அருள்பவன்
ஓம் ஹரயே நமஹ நீயே ஸ்ரீராமருக்கு வானரவடிவில் துணை நின்றவன்
ஓம் நந்தீஸ்வராய நமஹ நீயே உன் தோழர்களாக இருக்கும் கணங்களின் தலைவனாக விளங்குபவன்
ஓம் நந்தினே நமஹ நீயே நந்தியாகவும் விளங்குபவன்
ஓம் நந்தனாய நமஹ நீயே அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் – (380)
ஓம் நந்திவர்த்தனாய நமஹ அனைத்து அன்பர்களின் இன்பத்தைக் கூட்டுபவன் நீயே
ஓம் பகஹாரிணே நமஹ தன்னை நாடாதவர்களின் செல்வத்தையும், புகழையும் அழிப்பவன் நீயே
ஓம் நிஹந்த்ரே நமஹ நீயே  மரணம் என்ற வடிவில் அண்டத்தை அழிப்பவனாக இருக்கும் யம தர்மராஜன் வடிவினன்
ஓம் காலாய நமஹ நீயே கலைகளின் இருப்பிடமாக இருப்பவன்
ஓம் ப்ரஹ்மணே நமஹ நீயே அனைவர்க்கும் பெரியவன்
ஓம் பிதாமஹாய நமஹ நீயே தந்தைக்கும் தந்தையாக விளங்குபவன் (பெரும்பாட்டன்)
ஓம் சதுர்முகாய நமஹ நீயே நான்கு முகங்கள் கொண்ட படைப்புக் கடவுள் பிரம்மாவின் வடிவினன்
ஓம் மஹாலிங்காய நமஹ நீயே தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்படும் மிகச்சிறந்த பெரும் லிங்க வடிவம் கொண்டவன்
ஓம் சாருலிங்காய நமஹ நீயே ஏற்புடைய சிறந்த அழகிய அடையாளங்களுள்ள குணங்களைக் கொண்டவன்
ஓம் லிங்காத்யக்ஷாய நமஹ நீயே இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன் (வேதாந்த சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய பிரமாணங்களின் தலைவன்) – (390)
ஓம் ஸுராத்யக்ஷாய நமஹ நீயே பார்வை மற்றும் பிற புலன்களின் மூலம் பெறப்படும் கருத்துக்ள அனைத்தின் தலைவன் (புலன்களாகிய தேவர்களின் தலைவன்)
ஓம் யோகாத்யக்ஷாய நமஹ நீயே) புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் ஈர்த்து அவ்விடத்தில் அவை அனைத்தையும் கலப்பதற்கு உன் துணை தேவை என்பதால்) யோகத்தின் தலைவன்
ஓம் யுகாவஹாய நமஹ நீயே (யுகங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து  கிருதம் மற்றும் பிற யுகங்களைத் தாங்குபவன்) யுகங்களை உண்டு பண்ணுபவன்
ஓம் பீஜாத்யக்ஷாய நமஹ நீயே நற்செயல் மற்றும் தீச்செயல்கள் அனைத்தின் கனிகளையும் கொடுப்பவனாக இருக்கும் விளைவால் வித்துகளின் தலைவன் (இயற்கைக்கும் வித்தானவன்)
ஓம் பீஜகர்த்ரே நமஹ நீயே இயற்கையை இயக்குபவன்
ஓம் அத்யாத்மானுகதாய நமஹ நீயே  ஆன்மா தொடர்பாகச் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள வழிகளில் செயல்படுபவன்
ஓம் பலாய நமஹ நீயே  வலிமைக்கும் பிற குணங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன்
ஓம் இதிஹாஸாய நமஹ நீயே மஹாபாரதம், இராமாயணம்  மற்றும் பிறவகை இதிகாஸங்கள் அனைத்தின் வடிவம் கொண்டவன்
ஓம் ஸகல்பாய நமஹ நீயே  மீமாம்ஸை என்றழைக்கப்படும் கல்பசாஸ்த்ர வடிவினன்
ஓம் கௌதமாய நமஹ நீயே நியாய சாஸ்திரம் எழுதிய கௌதம முனிவரின் வடிவமானவன் – (400)
ஓம் நிசாகராய நமஹ நீயே சந்திரனின் பெயரில் உள்ள இலக்கணப் பெரும் சாத்திரத்தின் ஆசான் (சந்த்ர வ்யாகரணம் செய்த முனிவரின் வடிவினன்)
ஓம் தம்பாய நமஹ நீயே எதிரிகளை (தண்டித்து) அடக்குபவன்
ஓம் அதம்பாய நமஹ நீயே தன்னை அடக்குவாரில்லாதவன்
ஓம் வைதம்பாய நமஹ நீயே ஆடம்பரமற்றவர்களுக்கு (அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்திலும் உண்மையாக இருப்பவன்) அன்பன்
ஓம் வஸ்யாய நமஹ நீயே அர்ப்பணிப்பு கொண்டோருக்குக் கீழ்ப்படிபவன்)
ஓம் வசகராய நமஹ நீயே (அர்ப்பணிப்பு கொண்டோரை) பக்திவலையில் பட வைப்பவன்
ஓம் கலயே நமஹ நீயே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் போர் வடிவாயிருப்பவன்
ஓம் லோககர்த்ரே நமஹ (பூலோகம் முதலான) பதினான்கு உலகங்களைப் படைத்தவன் நீயே
ஓம் பசுபதயே நமஹ நீயே பிரம்மன் முதல் (புல் மற்றும் துரும்பைப் போன்ற) இழிந்த தாவர வடிவங்கள் ஈராக அனைத்து உயிரினங்களையும் பேணிக் காப்பவன் (உயிர்களின் அதிபதி)
ஓம் மஹாகர்த்ரே நமஹ நீயே மகாபூதங்களைப் படைத்தவன் (ஐம்பூதங்கள்) – (410)
ஓம் அநௌஷதாய நமஹ நீயே பற்றற்றவனாக எதையும் ஒருபோதும் அனுபவிக்காதவன் (உணவு ஏற்காதவன்)
ஓம் அக்ஷராய நமஹ நீயே அழிவில்லாதவன் (அழிவற்றவன்)
ஓம் பரமாயப்ரஹ்மணே நமஹ நீயே இன்பநிலையின் உயர்ந்த வடிவம் ( நிகரில்லாத இறை வடிவினன்)
ஓம் பலவதே நமஹ நீயே வலிமையில் செருக்குடைய தேவன் (வலிமையை விரும்புபவன்)
ஓம் சக்ராய நமஹ நீயே சக்தியை உருவாக்கியவன் (சக்தியின் உருவம் கொண்டவன்)
ஓம் நீத்யை நமஹ நீயே அறநெறி சாத்திரங்களில் காணப்படுவதும், குற்றவாளிகளைப் பீடிப்பதுமான  நீதி வடிவமானவன்
ஓம் அநீத்யை நமஹ நீயே  மற்றவர்களால் கட்டுப்படுத்த (அல்லது) ஆளப்பட முடியாதவன்
ஓம் சுத்தாத்மனே நமஹ நீயே தூய்மையான உள்ளம் கொண்டவன் (தூய ஆன்மாவானவன்)
ஓம் சுத்தாய நமஹ நீயே அனைத்து வகைக் களங்கங்களில் இருந்தும் மேம்பட்டவனானவன் (களங்கமற்றவன்)
ஓம் மாந்யாய நமஹ நீயே துதிக்கப்படத் தகுந்த தகுதி பெற்றவன் (வழிபாட்டிற்குரியவன்) – (420)
ஓம் கதாகதாய நமஹ நீயே இடையறாமல் தோன்றி மறையும் உலக வடிவமாய் இருப்பவன்
ஓம் பஹுப்ரஸாதாய நமஹ நீயே பெருமளவு அருளைக் கொண்டு சிறப்பாக அருள்புரிபவன்
ஓம் ஸுஸ்வப்நாய நமஹ நீயே அறிதுயில்பவன் (அறிவோடு கூடிய இனிமையான விழிப்பு நிலை)
ஓம் தர்ப்பணாய நமஹ நீயே உலகைத் தன்னிடம் பிரதிபலிக்கின்ற கண்ணாடி போன்றவன்)
ஓம் அமித்ரஜிதே நமஹ நீயே அகம், புறம் ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள எதிரிகளை வென்றவன்
ஓம் வேதகாராய  நமஹ நீயே வேதங்களைத் தோற்றுவித்தவன்
ஓம் மந்த்ரகாராய நமஹ நீயே மந்திரங்களைத் தோற்றுவித்தவன்
ஓம் விதுஷே நமஹ நீயே பெருங்கல்வி கொண்டவன் (அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்குபவன்)
ஓம் ஸமரமர்த்தனாய நமஹ நீயே போரில் எதிரிகளைக் கலங்கடிப்பவன்
ஓம் மஹாமேகநிவாஸினே நமஹ நீயே அண்ட அழிவுக் காலத்தில் தோன்றும் பயங்கர மேகங்களை வசிப்பிடமாகக் கொண்டவன் – (430)
ஓம் மஹாகோராய நமஹ நீயே (அண்ட அழிவைக் கொண்டு வரும் விளைவால்) மிகப் பயங்கரன்
ஓம் வசினே நமஹ நீயே மனிதர்கள் அனைவர் உட்பட அனைத்துப் பொருட்களையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெல்பவன் (அனைத்தையும் தன்வசம் கொண்டவன்)
ஓம் கராய நமஹ நீயே (பேரழிவை உண்டாக்குவதால்) அழிக்கும் கடவுள்
ஓம் அக்னிஜ்வாலாய நமஹ நீயே நெருப்பையே சக்தியாகக் கொண்ட நெருப்புப் பிழம்பு வடிவினன்
ஓம் மஹாஜ்வாலாய நமஹ நீயே நெருப்பையே சக்தியாகக் கொண்டவன் ஒளிமிக்கவன்
ஓம் அதிதூம்ராய நமஹ நீயே அழிவு சக்தியை செய்யும்பொழுது அதிக  புகையை உண்டு பண்ணுபவன்
ஓம் ஹுதாய நமஹ நீயே வேள்வி ஆகுதிகளின் மூலம் நிறைவடைய வல்லவன்  (ஹோம வழிபாட்டில் இன்பம் அடைபவன்)
ஓம் ஹவிஷே நமஹ நீயே (மந்திரங்களின் உதவியுடன் வேள்விகளில் ஊற்றப்படும் நீரும், பிற நீர்மங்களும்) ஹோம வழிபாட்டுப் பொருளாயிருப்பவன்
ஓம் வ்ருஷணாய நமஹ நீயே (நல்ல மற்றும் தீய செயல்களுடன் தொடர்புடைய கனிகளைச் சிதறடிக்கும் அற தேவனின் வடிவத்தில் இருப்பவன்) அறக்கடவுள் அல்லது தர்ம மூர்த்தி
ஓம் சங்கராய நமஹ நீயே பேரின்பத்தைக் கொடுப்பவன் – (440)
ஓம் நித்யம்வர்ச்சஸ்விநே நமஹ நீயே எப்போதும் பிரகாசத்துடன் கூடிய ஒளியுடையவன்
ஓம் தூமகேதனாய நமஹ நீயே  புகை கொண்ட நெருப்பு வடிவினன்
ஓம் நீலாய நமஹ நீயே நீல நிறம் கொண்டவன்
ஓம் அங்கலுப்தாய நமஹ நீயே தனது வடிவமாகிய லிங்கத்தில் மஹிமை பொருந்தியிருப்பவன்
ஓம் சோபனாய நமஹ நீயே அருள் நிலையின் ஊற்றுக்கண்
ஓம் நிரவக்ரஹாய நமஹ நீயே தடையில்லாமல் மனதில் விரும்பியதைத் தருபவன்
ஓம் ஸ்வஸ்திதாய நமஹ மங்களத்தை வழங்குபவன் நீயே
ஓம் ஸ்வஸ்திபாவாய நமஹ நீயே அருளின் வடிவம்
ஓம் பாகினே நமஹ வேள்வி யாகங்களின் பலனில் உரிமை பெற்றவன் நீயே
ஓம் பாககராய நமஹ நீயே வேள்வி யாகங்களின் பலன்களை மற்ற தேவர்களுக்கு யாக பாகத்தைப் பிரித்தளிப்பவன் – (450)
ஓம் லகவே நமஹ நீயே சுலபமாய் அருள் புரிபவன் (அல்லது) அடியார்களுக்கு எளியவன்
ஓம் உத்ஸங்காய நமஹ நீயே அனைத்து விஷயங்களிலும் தொடர்பறுந்தவன் (பற்றற்றவன்)
ஓம் மஹாங்காய நமஹ நீயே மாபெரும் லிங்க வடிவம் கொண்டவன்
ஓம் மஹாகர்ப்பபராயணாய நமஹ ஒடுங்கும் காலத்தில் உலகம் உன் வயிற்றிலுள்ளதால் பெரிய கர்ப்பம் உடையவன் நீயே
ஓம் க்ருஷ்ணவர்ணாய நமஹ விஷ்ணுவின் வடிவத்தில் இருக்கும்  கரிய நிறத்தவன் நீயே
ஓம் ஸுவர்ணாய நமஹ பொன் நிறம்  கொண்டவன் நீயே
ஓம் ஸர்வதேஹினாமிந்திரியாய நமஹ உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் புலன்களாயுள்ளவன் நீயே
ஓம் மஹாபாதாய நமஹ பெரும் பாதங்களைக் கொண்டவன் நீயே
ஓம் மஹாஹஸ்தாய நமஹ பெருங்கரங்களைக் கொண்டவன் நீயே
ஓம் மஹாகாயாய நமஹ பேருடல் கொண்டவன் நீயே – (460)
ஓம் மஹாயசஸே நமஹ பெரும் புகழ் பெற்றவன் நீயே
ஓம் மஹாமூர்த்நே நமஹ பெருந்தலை கொண்டவன் நீயே
ஓம் மஹாமாத்ராய நமஹ பேரளவுடையவன் கொண்டவன் நீயே
ஓம் மஹாநேத்ராய நமஹ பெரும் கண்களைக் கொண்டவன் நீயே
ஓம் நிசாலயாய நமஹ அறியாமை என்னும் இருள் ஒடுங்குமிடமாயிருப்பவன் நீயே
ஓம் மஹாந்தகாய நமஹ நீயே அழிப்பவனை அழிப்பவன். (யமனுக்கு யமனாக இருப்பவன்)
ஓம் மஹாகர்ணாய நமஹ நீயே பெரிய காதுகளை உடையவன்
ஓம் மஹோஷ்ட்டாய  நமஹ நீயே பெரிய உதடுகளை உடையவன்
ஓம் மஹாஹனவே நமஹ நீயே உலகை உண்ணும் பெரும் தாடைகளயுடையவன்
ஓம் மஹாநாஸாய நமஹ பெரிய மூக்குகளைக் கொண்டவன் நீயே – (470)
ஓம் மஹாகம்பவே நமஹ சங்கு போன்ற கழுத்தையுடையவன் நீயே
ஓம் மஹாக்ரீவாய நமஹ பெரும் கழுத் த்தைக் கொண்டவன் நீயே
ஓம் ச்மசானபாஜே நமஹ உடலால் ஏற்படுகின்ற பற்றை நீக்குபவன் நீயே
ஓம் மஹாவக்ஷஸே நமஹ வலிமை பொருந்திய பரந்த மார்பை உடையவன் நீயே
ஓம் மஹோரஸ்காய நமஹ அகன்ற மார்பை உடையவன் நீயே
ஓம் அந்த்ராத்மனே நமஹ நீயே அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மா
ஓம் ம்ருகாலயாய நமஹ துள்ளுமறியா மனதை மான் வடிவில் தன்னில் ஒடுக்குபவன் நீயே
ஓம் லம்பனாய நமஹ நீயே மரத்தில் கனிகள் தொங்குவதைப் போல எண்ணற்ற உலகங்கள் எதில் தொங்குமோ அவன்
ஓம் லம்பிதோஷ்டாய நமஹ நீயே ஒடுங்கும் காலத்தில் உலகை உண்பதற்குத் தொங்குகின்ற உதட்டை உடையவன்
ஓம் மஹாமாயாய நமஹ நீயே மாபெரும் மாயையின் வடிவினன் – (480)
ஓம் பயோநிதயே நமஹ நீயே பாற்கடல் வடிவினன் (இந்த நாமங்கள் ப்ரளய கால ருத்ரனுடைய அங்கங்களைத் தியானிக்கின்றன)
ஓம் மஹாதந்தாய நமஹ பெரிய பற்களை உடையவன் நீயே
ஓம் மஹாதம்ஷ்ட்ராய நமஹ பெரிய கோரைப்பற்களை உடையவன் நீயே
ஓம் மஹாஜிஹ்வாய நமஹ பெரும் நாவுடையவன் நீயே
ஓம் மஹாமுகாய நமஹ பெரிய வாயை உடையவன் நீயே
ஓம் மஹாநகாய நமஹ பெரிய நகங்களை உடையவன் நீயே
ஓம் மஹாரோமாய நமஹ பெரிய ரோமங்களை உடையவன் நீயே
ஓம் மஹாகேசாய நமஹ நீண்ட தலைமுடியுடையவன் நீயே
ஓம் மஹாஜடாய நமஹ பெரும் நீளம் கொண்ட சடாமுடி தரித்தவன் நீயே
ஓம் ப்ரஸந்நாய நமஹ அன்பர்களுக்கிரங்கி அருள்பவன் நீயே – (490)
ஓம் ப்ரஸாதாய நமஹ அன்பும், அருளும் கொண்டவன் நீயே
ஓம் ப்ரத்யயாய நமஹ அறிவின் வடிவாயிருப்பவன் நீயே
ஓம் கிரிஸாதனாய  நமஹ மேருவை வில்லாகக் கொண்டு போரிடுபவன் நீயே
ஓம் ஸ்நேஹனாய நமஹ பிள்ளையிடம் தாயைப் போல அனைத்து உயிரினங்களிடமும் அன்பு நிறைந்தவன் நீயே (அன்பர்களின் நண்பன்)
ஓம் அஸ்நேஹனாய நமஹ பற்றறுத்து இருப்பவன் நீயே (பற்றில்லாதவன்)
ஓம் அஜிதாய நமஹ யாராலும்  வெல்ல முடியாதவன் நீயே
ஓம் மஹாமுனயே நமஹ தியான யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவன் (பேச்சற்று யதார்த்த வடிவில் இருப்பவன்) நீயே
ஓம் வ்ருக்ஷாகாராய நமஹ பிறவிப் பெருமரம் வடிவாயிருப்பவன் நீயே
ஓம் வ்ருக்ஷகேதவே நமஹ நீயே உலக மரத்தால் குறிப்பிடப்படுபவன்
ஓம் அநலாய நமஹ (பூதங்கள் அனைத்திலும், ஒருபோதும் தணிவடையாத நெருப்பைப் போல) உண்பதில் ஒருபோதும் தணிவடையாதவன் நீயே – (500)
ஓம் வாயுவாஹநாய நமஹ இடத்திற்கு இடம் செல்லும் காற்றையே வாகனமாகக் கொண்டவன் நீயே
ஓம் கண்டலிநே நமஹ மலைப்பாங்கான மேடான இடங்களில் இருப்பவன் நீயே
ஓம் மேருதாம்நே நமஹ மேருமலையை இருப்பிடமாகக் கொண்டவன் நீயே
ஓம் தேவாதிபதயே நமஹ தேவர்களுக்கு அதிபதியானவன் நீயே
ஓம் அதர்வசீர்ஷாய நமஹ அதர்வண வேதத்தை தலையாகக் கொண்டவன் நீயே
ஓம் ஸாமாஸ்யாய நமஹ ஸாமவேதத்தை முகமாய் உடையவன் நீயே
ஓம் ருக்ரஸஹஸ்ராமிதேக்ஷ ணாய நமஹ எண்ணற்ற ஆயிரக்கணக்கான ருக்வேத மந்திரங்களைக் கண்களாகக்கொண்டவன் நீயே
ஓம் யஜு:பாதபுஜாய நமஹ யஜுர்வேதத்தைக் கால்களாகவும், தலைகளாகவும் உடையவன் நீயே
ஓம் குஹ்யாய நமஹ மறைபொருளாயிருக்கிற உபநிஷத் வடிவினன் நீயே
ஓம் ப்ரகாசாய நமஹ கர்ம காண்டத்தின் (வேதத்தின் ஒரு அங்கமாக தொகுக்கப்பட்டுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களின்) ஒளியாய் விளங்குபவன் நீயே – (510)
ஓம் ஜங்கமாய நமஹ எங்கும் பயணம் செய்து நடமாடுபவன் நீயே
ஓம் அமோகார்த்தாய நமஹ வேண்டுதலை நிறைவேற்றுபவன் நீயே
ஓம் ப்ரஸாதாய நமஹ எப்போதும் அருள் வழங்கும் கருணை உடையவன் நீயே
ஓம் அபிகம்யாய நமஹ எளிதில் அடையத் தகுந்தவன் நீயே
ஓம் ஸுதர்ஸனாய நமஹ சிறந்த பார்வையுடையவன் நீயே
ஓம் உபகாராய நமஹ (பக்தர்கள் உன்னை நெருங்கும் அளவிற்கு) பக்தர்களை நெருங்கி உதவிபுரிபவன் நீயே
ஓம் ப்ரியாய நமஹ அனைவரிடமும் அன்புடையவன் நீயே
ஓம் ஸர்வாய நமஹ (நாம் அவரை வணங்கும்போது) நம்மை எதிர்நோக்கி வருபவன்
ஓம் கநகாய நமஹ அனைவருக்கும் பிடித்த தங்கம் மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங்கள் வடிவினன் நீயே (பொன் வடிவினன்)
ஓம் காஞ்சனச்சவயே நமஹ புடம்போட்ட தங்கத்தைப் போன்ற பிரகாசம் கொண்டவன் (பொன்னார் மேனியன்) – (520)
ஓம் நாபயே நமஹ (அண்டத்தின் தொப்புளாக இருப்பவன்) உலகிற்கு ஆதாரமாய் உள்ளவன் நீயே
ஓம் நந்திகராய நமஹ உலகிற்கு இன்பம் நல்குபவன் நீயே
ஓம் பாவாய நமஹ வேள்விகளைப் பொறுத்தவரையில் அறவோர் கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வடிவுடையவன் நீயே
ஓம் புஷ்கரஸ்தபதயே நமஹ தாமரை வடிவில் அண்டத்தை வடிவமைத்தவன் நீயே
ஓம் ஸ்திராய நமஹ (மலை முதலிய அசையாத பொருள்களின் வடிவம் கொண்டு) உறுதியுடன் இருப்பவன் நீயே
ஓம் த்வாதசாய நமஹ பன்னிரண்டாவது நிலையான முக்திவடிவினன் நீயே (அழிவற்றவனாக இருப்பவன்)
ஓம் த்ராஸநாய நமஹ அச்சத்தை உண்டுபண்ணுபவன் நீயே
ஓம் ஆத்யாய நமஹ இந்த பிரபஞ்சத்திற்கு முற்பட்டவன் நீயே (அனைத்துப் பொருட்களின் தொடக்கம்)
ஓம் யக்ஞாய நமஹ உயிரையும் இறையையும் சேர்த்து வைக்கும் யோக மூர்த்தியானவன் நீயே (யோகத்தின் மூலமாகப் பரப்பிரம்மத்தில் ஜீவனைக் கலக்கச் செய்வன்)
ஓம் யக்ஞஸமாஹிதாய நமஹ யோகத்தினால் மட்டுமே அடையப்படக்கூடியவன் நீயே – (530)
ஓம் நக்தம் நமஹ இரவாயிருப்பவன் நீயே
ஓம் கலயே நமஹ (மயக்கத்திற்குக் காரணமான காமம், கோபம், பேராசை, தீய ஆசைகளை உண்டாக்குவதால்) நான்காம் யுகத்தின் தலைமைத் தேவன் நீயே
ஓம் காலாய நமஹ (அண்டத்தில் அடுத்தடுத்து பிறப்பிறப்புகளை உண்டாக்கும்) நித்தியமான கால உருவினன் நீயே
ஓம் மகராய நமஹ முதலை வடிவில் உள்ள விண் மண்டலமான காலவடிவினன் நீயே
ஓம் கால பூஜிதாய நமஹ தர்மராஜனாகிய யமனால் வழிபடப்பட்டவன் நீயே
ஓம் ஸகணாய நமஹ தோழர்களின் {கணங்களின்} மத்தியில் வாழ்பவன் நீயே
ஓம் கணகாராய நமஹ கணங்களின் பட்டியலில் உன் பக்தர்களைச் சேர்த்துக் கொள்பவன் நீயே
ஓம் பூதவாஹநஸாரதயே நமஹ உயிர்களைப் படைக்கும் பிரம்மதேவரைத் தேரோட்டியாகக் கொண்டவன் நீயே
ஓம் பஸ்மசயாய நமஹ சுடலைப்பொடியின்மீது உறைபவன் நீயே
ஓம் பஸ்மகோப்த்ரே நமஹ விபூதியால் (சாம்பலால்) அண்டத்தைக் காப்பவன் நீயே – (540)
ஓம் பஸ்மபூதாய நமஹ விபூதி (சாம்பலாலான உடலைக் கொண்டவன்) வடிவினன் நீயே
ஓம் தரவே நமஹ நீயே அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளும் கற்பகவிருக்ஷம் முதலிய மரங்களாக இருப்பவன் நீயே
ஓம் கணாய நமஹ பிருங்கி, ரிடி, நந்தி முதலிய கணங்களின் வடிவாயிருப்பவன் நீயே
ஓம் லோகபாலாய நமஹ பதினான்கு உலகங்களையும் பாதுகாப்பவன் நீயே
ஓம் அலோகாய நமஹ அனைத்து உலகங்களையும் கடந்திருப்பவன் (உலகிற்கு அப்பாற்பட்டவன்) நீயே
ஓம் மஹாத்மனே நமஹ நீயே முழுமையான (எந்தக் குறையுமில்லாத) எங்கும் நிறைந்த பரம்பொருள்
ஓம் ஸர்வபூஜிதாய நமஹ அனைத்து உயிரினங்களாலும் துதிக்கப்படுபவன் நீயே
ஓம் சுக்லாய நமஹ நீயே (தூய்மையானவனும், களங்கமற்றவனுமாக இருப்பதால்) – வெண்மையானவன்
ஓம் த்ரிசுக்லாய நமஹ உள்ளம், சொல், செயல் மூன்றிலும் தூய்மையானவன் நீயே
ஓம் ஸம்பந்நாய நமஹ எங்கும் எல்லாவற்றிலும் நிறைந்தவன் நீயே – (550)
ஓம் சுசயே நமஹ (எவ்வகைத் தூய்மையின்மையாலும் களங்கப்பட இயலாதவன்) தூய்மை நிறைந்தவன் நீயே
ஓம் பூதநிஷேவிதாய நமஹ பழங்காலத்தின் பேராசான்களால் அடையப்பட்டவன் நீயே (பெரியோர்களால் வழிபடப் பெற்றவன்)
ஓம் ஆச்ரமஸ்தாய நமஹ அறம் அல்லது நான்கு வாழ்வு முறைகளின் (ஆசிரமங்களின்) அந்தந்த ஒழுக்க வடிவாய் விளங்குபவன் நீயே
ஓம் க்ரியாவஸ்தாய நமஹ சடங்குகள் மற்றும் வேள்விகளின் வடிவில் உள்ள அறம் வடிவானவன் நீயே
ஓம் விச்வகர்மமதயே நமஹ உலகில் உள்ள அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் நீயே
ஓம் வராய நமஹ அனைவராலும் விரும்பத்தகுந்தவன் நீயே
ஓம் விசாலசாகாய நமஹ பரந்த பெரும் கரங்களைக் கொண்டவன் நீயே
ஓம் தாம்ரோஷ்ட்டாய நமஹ நீயே  சிவந்த உதடுகளை உடையவன்
ஓம் அம்புஜாலாய நமஹ பெருங்கடலில் உள்ள பேரளவு நீரின் வடிவம் கொண்டவன் நீயே
ஓம் ஸுநிஸ்சலாய நமஹ மலைகள் மற்றும் குன்றுகளின் வடிவில் உறுதியாக நிலைத்திருப்பவன் நீயே – (560)
ஓம் கபிலாய நமஹ செம்பட்டை நிறமானவன் நீயே
ஓம் கபிசாய நமஹ பொன்னிறமானவன் நீயே
ஓம் சுக்லாய நமஹ திருநீறணிந்த வெண்ணீற்றான் நீயே
ஓம் ஆயுஷே நமஹ ஆயுளை அருள்பவன் நீயே
ஓம் பராய நமஹ (முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளானவன்) தொன்மையானவன் நீயே
ஓம் அபராய நமஹ அனைவருக்கும்/அனைத்திற்கும் அண்மையானவன் நீயே
ஓம் கந்தர்வாய நமஹ கந்தர்வ வடிவினன் நீயே (அழகு மிக்கவன்)
ஓம் அதிதயே நமஹ (அனைத்துப் பொருட்களின் தாயான பூமியின் வடிவில் இருப்பவன்) தாயானவன் நீயே
ஓம் தார்க்ஷ்யாய நமஹ பறவைகளில் சிறந்த கருட வடிவம் கொண்டவன் நீயே
ஓம் ஸுவிக்ஞேயாய நமஹ எளிதில் அறிந்துகொள்ளப்பட்டு எளிதில் அடையப்படக்கூடியவன் நீயே – (570)
ஓம் ஸுசாரதாய நமஹ ஏற்புடைய சிறந்த வாக்கையும் இனிமையான சொற்களையும் உடையவன் நீயே
ஓம் பரச்வதாயுதாய நமஹ மழு ஏந்தியவன் நீயே
ஓம் தேவாய நமஹ வெற்றியில் விருப்பமுள்ளவன் நீயே
ஓம் அநுகாரிணே நமஹ நீயே அன்பர்களின் விருப்பத்திற்கு இசைபவன்
ஓம் ஸுபாந்தவாய நமஹ நீயே ஒரு சிறந்த உறவினன்
ஓம் தும்பவீணாய நமஹ நீயே துளையுள்ள இரு சுரைக்காய்களால் அமைந்த வீணையை ருத்ர ஏந்தியவன்
ஓம் மஹாக்ரோதாய நமஹ நீயே ஊழிக்காலத்தில் அண்ட அழிவின்போது பெரும் கோபம்கொள்பவன்
ஓம் ஊர்த்வரேதஸே நமஹ நீயே மனிதர்கள் மற்றும் தேவர்களைவிட உயர்ந்தவர்களை (பிரம்மன் மற்றும் விஷ்ணுவைப்)  பிள்ளைகளாகக் கொண்டவன்
ஓம் ஜலேசயாய நமஹ நீயே ஒடுங்கும் காலத்தில் அண்ட அழிவிக்குப் பிறகு திருமால் வடிவில் நீரில் மிதக்கும் விஷ்ணுவின் வடிவம் கொண்டவன்
ஓம் உக்ராய நமஹ ஊழிக்காலத்தில் அனைத்தையும் விழுங்குபவன் நீயே – (580)
ஓம் வசங்கராய நமஹ நீயே அனைவரையும் கவர்ந்து (வசீகரம் செய்து) உன்னுடையதாக்கிக் கொள்பவன்
ஓம் வம்சாய நமஹ புல்லாங்குழலாக  இருப்பவன் நீயே
ஓம் வம்சநாதாய நமஹ புல்லாங்குழலிலிருந்து வரும் இனிய இசையாக  உள்ளவன் நீயே
ஓம் அநிந்திதாய நமஹ குறைவில்லாதவன் (களங்கமற்றவன்) நீயே
ஓம் ஸர்வாங்கரூபாய நமஹ எவனுடைய உடலில் ஒவ்வொரு உறுப்பும் அழகாய் இருக்குமோ அந்த அனைத்து அங்கங்களிலும் அழகு நிறைந்தவன் நீயே
ஓம் மாயாவினே நமஹ மாயையால் உலகைப் படைப்பவன் நீயே
ஓம் ஸுஹ்ருதாய நமஹ எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் (பிரதிபலன் பாராமல்) பிறருக்கு நன்மை செய்யும் நல்ல உள்ளம் கொண்டவன் நீயே
ஓம் அநிலாய நமஹ வாயு என்றழைக்கப்படும் காற்றானவன் நீயே
ஓம் அநலாய நமஹ அக்னி என்றழைக்கப்படும் நெருப்பு உருவானவன் நீயே
ஓம் பந்தனாய நமஹ ஜீவனைக் கட்டும் உலகபந்தங்களாயிருப்பவன் (பிறவித்தளையாயிருப்பவன்) நீயே – (590)
ஓம் பந்தகர்த்ரே நமஹ அனுதின வாழ்க்கையில் எமக்கு பற்றை ஏற்படுத்துபவன் நீயே
ஓம் ஸுபந்தனவிமோசனாய நமஹ வாழ்க்கையில் எமக்கு பிறவித்தளையை நீக்குபவன் நீயே
ஓம் ஸயக்ஞாரயே நமஹ (வேள்விகள் அனைத்திற்கும் பகைவர்களான) தைத்தியர்களிலும் வசிப்பவன் நீயே
ஓம் ஸகாமாரயே நமஹ ஆசையை வென்ற யோகிகளின் உருவிலிருப்பவன் நீயே
ஓம் மஹாதம்ஷ்ட்ராய நமஹ நீண்டகோரப்பற்களை உடையவன் நீயே
ஓம் மஹாயுதாய நமஹ வலிமைமிக்க நல்ல ஆயுதங்கள் கொண்டவன் நீயே
ஓம் பஹுதாநிந்திதாய நமஹ (தைத்தியர்களால்) பெரிதும் நிந்திக்கப்படுபவன் நீயே
ஓம் சர்வாய நமஹ தன்னை நிந்திப்பவர்களை மயக்கித் துன்புறுத்துபவன் நீயே
ஓம் சங்கராய நமஹ உன்னை இகழ்பவர்களுமான (தாருகா வன) முனிவர்களுக்கும் நன்மை செய்பவன் (இன்பமளிப்பவன்) நீயே
ஓம் சங்கராய நமஹ அம்முனிவர்களின் அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, அவர்களுக்கு முக்தியளிப்பவன் (தெளிவற்றவைகளைத் தெளிவுபடுத்துபவன்) நீயே – (600)
ஓம் அதனாய நமஹ (உடுக்கத் தேவையான ஆடையை அடைய இயலாத விளைவால்) செல்வமற்றவன் நீயே
ஓம் அமரேசாய நமஹ தேவர்களுக்கும் கடவுளாயிருப்பவன் நீயே
ஓம் மஹாதேவாய நமஹ தேவர்களில் பெரியவன் நீயே
ஓம் விச்வதேவாய நமஹ விஷ்ணுவாலும் துதிக்கத்தக்கவன் (திருமாலுக்கும் இறைவனாயிருப்பவன்) நீயே
ஓம் ஸுராரிக்னே நமஹ தேவர்களின் எதிரிகளை அழிப்பவன் நீயே
ஓம் அஹிர்புத்ன்யாய நமஹ (அதளபாதாளத்தில்) ஆதி சேஷன் என்ற பாம்பின் வடிவில் வசிப்பவன் நீயே
ஓம் அநிலாபாய நமஹ புலப்படாதிருக்கும் காற்றானது அனைவராலும் உணரப்படுவதைப் போலவே புலப்படாதவனாக இருப்பினும் புரிந்து கொள்ளப்படக்கூடியவன்  நீயே
ஓம் சேகிதானாய நமஹ அனைத்தின் வேர் வரை பரந்த ஞானம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் உள் இயல்பை அறிந்தவனும் எல்லாவற்றையும் நன்றாக அறிபவன் நீயே
ஓம் ஹவிஷே நமஹ (உன்னில் இன்பம் கொள்பவனில் இன்பம் கொள்பவனாக) உணவாக இருப்பவன் நீயே
ஓம் அஜைகபதே நமஹ பதினோரு ருத்திரர்களில் ஒருவன் நீயே. (ஒரே கால்கொண்டு அசையாமலும், பிறக்காமலும் இருக்கும் தத்வமான கடவுள்) – (610)
ஓம் காபாலினே நமஹ மொத்த அண்டத்தின் ஆட்சியாளன் நீயே (ப்ரம்மாண்டங்களாகிய காபாலத்தின் தலைவன்)
ஓம் த்ரிசங்கவே உலக நடைமுறைக்கு ஆதாரமாகிய முக்குணங்களை இயக்குபவன் (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற நன்கறியப்பட்ட முக்குணங்களால் மறைக்கப்படுவதன் விளைவால் அண்ட ஜீவன்கள் அனைத்தின் வடிவமாய் இருப்பவன் நீயே
ஓம் அஜிதாய நமஹ முக்குணங்களாலும் வெற்றிகொள்ள முடியாதவன் நீயே
ஓம் சிவாய நமஹ (குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், மொழி வழங்கும் எந்த உரிச்சொல்லின் துணையாலும் விளக்கப்பட இயலாதவனுமான தூய இருப்புநிறை நிலையடைந்த) தூய்மையான வடிவினன் நீயே
ஓம் தன்வந்தரயே நமஹ அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருத்துவனான தன்வந்திரியானவன் நீயே
ஓம் தூமகேதவே நமஹ வால் நக்ஷத்திரமாக உள்ளவன் நீயே
ஓம் ஸ்கந்தாய நமஹ ஸ்கந்தன் என்றழைக்கப்படும் தேவர்ப்படைத் தலைவன் குமரக்கடவுளாக இருப்பவன் நீயே
ஓம் வைச்ரவணாய நமஹ (உலக நிதிக் கருவூலங்கள் அனைத்தின் தலைவனும், குபேரன் என்று அழைக்கப்படுபவனுமான) யக்ஷர்களின் மன்னன் குபேரனாய் விளங்குபவன் நீயே
ஓம் தாத்ரே நமஹ பிரம்மாவாக விளங்குபவன் நீயே
ஓம் சக்ராய நமஹ தேவர்களின் தலைவனான் இந்திர வடிவினன் நீயே – (620)
ஓம் விஷ்ணவே நமஹ விஷ்ணு வடிவினன் நீயே
ஓம் மித்ராய நமஹ எல்லாவறையும் அளிக்கும் சூரியக் கடவுள் வடிவினன் நீயே
ஓம் த்வஷ்ட்ரே நமஹ உலகை உருவாக்குகின்ற தெய்வீகத் தச்சனான விச்வகர்மா வடிவினன் நீயே
ஓம் த்ருவாய நமஹ துருவ நக்ஷத்ர வடிவினன் நீயே
ஓம் தராய நமஹ அஷ்டவசுக்களில் ஒருவரான தரன் வடிவினன் நீயே
ஓம் ப்ரபாவாய நமஹ ப்ரபாவன் என்கின்ற வசு வடிவினன் நீயே (மகிமை பொருந்தியவன்)
ஓம் ஸர்வகாயவாயவே நமஹ (அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இணைக்கும் ஆன்ம இழையாக) எங்கும் நிறைந்துள்ள காற்றாக இருப்பவன் நீயே
ஓம் அர்யம்ணே நமஹ அர்யமா என்கின்ற பித்ரு தேவதை வடிவினன் நீயே
ஓம் ஸவித்ரே நமஹ அனைத்தையும் படைப்பவன் நீயே
ஓம் ரவயே நமஹ சூரிய வடிவினன் நீயே – (630)
ஓம் உஷங்கவே நமஹ (உஷங்கு என்ற பெயரில் அறியப்பட்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான புராதன மன்னன்) எரிக்கும் கிரணங்களையுடையவன் நீயே
ஓம் விதாத்ரே நமஹ அனைவர்க்கும்/அனைத்திற்கும் ஆணையிடுவன் நீயே
ஓம் மாந்தாத்ரே நமஹ (அனைத்து உயிரினங்களுக்கும் நிறைவளிக்கவல்ல) உயிர்களைக் காப்பவன் நீயே
ஓம் பூதபாவனாய நமஹ தோன்றியவைகளைக் காப்பவன் நீயே
ஓம் விபவே நமஹ மூவுலகிற்கும் தலைவன் நீயே
ஓம் வர்ணவிபாவிநே நமஹ நான்கு பிரிவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தியவன் அல்லது அண்டத்தில் இருக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டாக்குபவன் நீயே
ஓம் ஸர்வகாம குணவஹாய நமஹ எல்லாரும் விரும்பத் தகுந்த குணங்களைத் தோற்றுவிப்பவன் நீயே
ஓம் பத்மநாபாய நமஹ தொப்புளில் தாமரை உடைய (மணிபூரகச் சக்கரம்) பத்மநாபன் நீயே
ஓம் மஹாகர்ப்பாய நமஹ அண்டங்களின் பேரழிவுக் காலத்தில் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் தன் வயிற்றில் அடக்கிஇருப்பதால் மஹாகர்ப்பன் நீயே
ஓம் சந்த்ரவக்த்ராய  நமஹ சந்திரன் போன்ற அழகு நிறைந்த முகத்தைக் கொண்டவன் நீயே – (640)
ஓம் அநிலாய நமஹ எப்பொழுதும் தூங்காமல் விழிப்புள்ள அறிவு வடிவம் கொண்டவன் நீயே
ஓம் அநலாய நமஹ முடிவற்ற வல்லமை படைத்தவன் நீயே
ஓம் பலவதே நமஹ பெரும் வலிமை படைத்தவன் நீயே
ஓம் உபசாந்தாய நமஹ தனது வல்லமையை வெளிக்காட்டாதவன் நீயே
ஓம் புராணாய நமஹ பழமையானவன் நீயே
ஓம் புண்யசஞ்சவே நமஹ அறத்தின் துணையால் அறியப்படுபவன் நீயே
ஓம் யே நமஹ ஸ்ரீ என்றழைக்கப்படும் மஹாலக்ஷ்மி வடிவினன் நீயே
ஓம் குருகர்த்ரே நமஹ குருக்ஷேத்ரமாகிய கர்ம பூமியைத் தோற்றுவித்தவன் நீயே
ஓம் குருவாஸினே நமஹ குருக்ஷேத்ரத்தில்  வசிப்பவன் நீயே
ஓம் குருபூதாய நமஹ குருக்ஷேத்திரத்தினுள் கரம ஸ்தானமாகவும் உபாசன ஸ்தானமாகவும் உறைபவன் நீயே – (650)
ஓம் குணௌஷதாய நமஹ நற்குணங்களை ஊக்குவிப்பவனாகவும்  வளர்ப்பவனாகவும் உள்ளவன் நீயே
ஓம் சர்வாசயாய நமஹ கனவற்ற உறக்க நிலையை வெளிக்காட்டும் நினைவற்ற இயல்பைக் கொண்ட நீயாகவே அனைத்துப் பொருட்களும் ஆகின்றன என்று ஸ்ருதிகள் அறிவிப்பதால் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் இடமானவன் நீயே (ப்ராஜ்ஞன்)
ஓம் தர்ப்பசாரிணே நமஹ தர்ப்பையின்மேல் வைக்கப்பட்ட ஹவிஸை (ஹோம உணவை) ஏற்றுக்கொள்பவன் நீயே
ஓம் ஸர்வேஷாம் ப்ராணினாம் பதயே நமஹ உயிர் மூச்சுடன் கூடிய அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே
ஓம் தேவதேவாய நமஹ தேவர்களின் தேவனாய் விளங்குபவன் நீயே
ஓம் ஸுகாஸக்தாய  நமஹ இன்பத்தில் பற்றில்லாதவன் நீயே
ஓம் ஸதே நமஹ இருப்பவை அனைத்திற்கும் காரண வடிவான தலைவன் நீயே
ஓம் அஸதே நமஹ பெயர், வடிவம், இவைகளில் மறைந்துள்ள காரிய வடிவமானவன் நீயே
ஓம் ஸர்வரத்னவிதே நமஹ சிறந்த அரிய விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களைத் தன்னகத்தே கொண்டவன் நீயே
ஓம் கைலாஸகிரிவாஸிநே நமஹ கயிலைமலையில் வசிப்பவன் நீயே – (660)
ஓம் ஹிமவத்கிரி ஸம்ஸ்ரயாய நமஹ இமாலய பர்வதத்தில் வாசம் செய்பவன் நீயே
ஓம் கூலஹாரிணே நமஹ வெள்ளப் பெருக்காய்க் கரையை உடைத்து கரைகளில் நிற்கும் மரங்களை அடித்துச் செல்லும் பேரோடையைப் போல அனைத்தையும் அடித்துச் செல்பவன் நீயே
ஓம் கூலகர்த்ரே நமஹ புஷ்கரம் போன்ற பல சிறப்பான பெருந்தடாகங்கள் மற்றும் இயற்கையான நீர்நிலைகள் அனைத்தையும் நிறுவியவன் நீயே
ஓம் பஹுவித்யாய நமஹ முடிவிலா ஞான வகைகளைக் கற்றவன் நீயே
ஓம் பஹுப்ரதாய நமஹ அளவற்ற  அருளை அள்ளித்தருபவன் நீயே
ஓம் வணிஜாய நமஹ வணிகனின் உருவம் கொண்டவன் நீயே
ஓம் வர்த்தகினே நமஹ மரத்தச்சன் வடிவில் உள்ளவன் நீயே
ஓம் வ்ருக்ஷாய நமஹ உன் கோடரிக்குக் காம்பை வழங்கும் உலகமெனும் மர வடிவில் உள்ளவன் நீயே
ஓம் வகுலாய நமஹ மகிழமர வடிவில் உள்ளவன் நீயே
ஓம் சந்தனாய நமஹ சந்தனமர வடிவில் உள்ளவன் நீயே – (670)
ஓம் ச்சதாய நமஹ ஏழிலைகொண்ட பாலைமர வடிவில் உள்ளவன் நீயே
ஓம் சாரக்ரீவாய நமஹ (விஷமருந்தியதால்) உறுதியான கழுத்துடையவன் நீயே
ஓம் மஹாஜத்ரவே நமஹ பெரிய கழுத்தெலும்புகளைக் கொண்டவன் நீயே
ஓம் அலோலாய நமஹ செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியானவனாக இருந்தாலும் விருப்பமற்று ஆசையற்றவன் நீயே
ஓம் மஹௌஷதாய நமஹ முக்கியப் பயிர்களும், செடிகளும் (அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய வகைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் ) உணவாக மாறும் சிறந்த மருந்து  வடிவாக உள்ளவன் நீயே
ஓம் சித்தார்த்தகாரிணே நமஹ பக்குவப்பட்டவர் தங்கள் இதயங்களில் பெற விரும்பும் பொருட்களை அடைய வெற்றியை அருள்பவன் நீயே)
ஓம் சித்தார்த்தாய சந்தோவ்யாகரணோத்தராய நமஹ வேதங்கள் மற்றும் வேத விளக்கத்தின் இலக்கணத்தில் முடிவாக ஏற்படும் சரியான தீர்மானங்களின் பொருள் வடிவினன் நீயே
ஓம் ஸிம்ஹநாதாய நமஹ சிம்ம கர்ஜனை புரிபவன் நீயே
ஓம் சிம்ஹத்ம்ஷ்ட்ராய நமஹ சிங்கம் போன்று கோரைப்பற்களுள்ளவன் நீயே
ஓம் ஸிம்ஹகாய நமஹ சிங்கம்போல் நடப்பவன் நீயே – (680)
ஓம் சிம்ஹவாஹனாய நமஹ சிங்கத்தை ஊர்தியாகக் கொண்டவன் நீயே
ஓம் ப்ரபாவாத்மனே நமஹ உண்மைக்கும் உண்மையானவன் நீயே
ஓம் ஜகத்காலஸ்தாலாய நமஹ உலகை விழுங்கும் காலதேவனை உணவு உண்ணும் வட்டிலாகக் கொண்டவன் நீயே
ஓம் லோகஹிதாய நமஹ உலகிற்கு எப்பொழுதும் நன்மை செய்பவன் நீயே
ஓம் தரவே நமஹ (விடுதலையின் {முக்தியின்} இன்பநிலைக்கு வழிவகுக்கும் வகையில் உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்பவன் நீயே (பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வைப்பவன்)
ஓம் ஸாரங்காய நமஹ சாரங்கம் என்றழைக்கப்படும் சாதகப் பறவை வடிவினன் நீயே
ஓம் நவசக்ராங்காய நமஹ ஒன்பது மறைப்புகளுள்ள ஸ்ரீ சக்கரத்தை அங்கமாய் உடையவன் நீயே
ஓம் கேதுமாலினே நமஹ (சேவலைப் போலவோ, மயிலைப் போலவோ) நீ தலையில் கொண்டுள்ள மகுடத்தின் விளைவாக அழகுடன் சிறந்து விளங்குபவன் நீயே
ஓம் ஸபாவனாய நமஹ நீதியை நிலைநாட்ட ஞானிகள் அமரும் சபைகளைப் பாதுகாப்பவன் நீயே
ஓம் பூதாலயாய நமஹ ஐம்பூதங்களைத் தன்னிடத்தில் ஒடுக்குபவன் நீயே (அனைத்து உயிரினங்களின் வசிப்பிடம்) – (690)
ஓம் பூதபதயே நமஹ அனைத்து உயிரினங்களையும் பேணிப் பாதுகாப்பவன் நீயே (உயிர்களின் நாயகன்)
ஓம் அஹோராத்ராய நமஹ பகல், இரவாயிருப்பவன் நீயே
ஓம் அநிந்திதாய நமஹ குற்றமற்றிருப்பதால் ஒருபோதும் இகழப்படாதவன் நீயே (மாசிலாமணி)
ஓம் ஸர்வபூதானாம் வாஹித்ரே நமஹ அனைத்து உயிரினங்களையும் உயிர்க்கச் செய்து செயல்பட வைப்பவன் நீயே (உயிர்களை ஆட்டுவிப்பவன்)
ஓம் நிலயாய நமஹ அனைவரின் / அனைத்து உயிரினங்களின்  இருப்பிடமானவன் நீயே
ஓம் விபவே நமஹ பிறப்பற்றவன் நீயே
ஓம் பவாய நமஹ உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமானவன் நீயே
ஓம் அமோகாய நமஹ தன்னை அண்டியவர்களுடைய வாழ்க்கையை வீணடிக்காதவன் நீயே
ஓம் ஸம்யதாய நமஹ தன்னைச் சார்ந்த அன்பர்களுக்குக் கட்டுப்பட்டவன் நீயே
ஓம் அச்வாய நமஹ உச்சைஸ்ரவஸ் முதலிய குதிரைகள்  வடிவினன் நீயே – (700)
ஓம் போஜனாய நமஹ தன்னை அண்டிய அனைவருக்கும் உணவளிப்பவன் நீயே
ஓம் ப்ராணதாரணாய நமஹ உயிர்களைக் காப்பாற்றுபவன் நீயே
ஓம் த்ருதிமதே நமஹ பொறுமையுடன் கூடிய உறுதிபடைத்தவன் நீயே
ஓம் மதிமதே நமஹ நுண்ணறிவு கொண்ட சிறந்த அறிஞன் நீயே
ஓம் தக்ஷாய நமஹ முயற்சியும், புத்திசாலித்தனமும் கொண்ட வல்லவன் நீயே
ஓம் ஸத்க்ருதாய நமஹ அனைவராலும் வழிபடப்படுபவன் நீயே
ஓம் யுகாதிபாய நமஹ அறம் மற்றும் மறத்திற்கான {புண்ணிய பாவங்களுக்கான} கனிகளைக் கொடுப்பவன் நீயே (நன்மை, தீமை போன்ற இரட்டைகளின் தலைவன்)
ஓம் கோபாலயே நமஹ புலன்களுக்குத் தலைமை தாங்கி அவை தங்கள் தங்களுக்குரிய செயல்களைச் செய்ய வைப்பதால்) புலன்களைப் பேணிக் காப்பவன் நீயே
ஓம் கோபதயே நமஹ பூமியின் அரசன் நீயே
ஓம் க்ரமாய நமஹ உயிர்க்கூட்டமாயிருப்பவன் நீயே – (710)
ஓம் கோசர்மவஸனாய நமஹ மாட்டின்தோலை ஆடையாக அணிந்திருப்பவன் நீயே
ஓம் ஹரயே நமஹ பக்தர்களின் துன்பத்தை அகற்றுபவன் நீயே
ஓம் ஹிரண்யபாஹவே நமஹ தங்கக் கரங்களை உடையவன் நீயே
ஓம் ப்ரவேசினாம் குஹாபாலாய நமஹ சமாதிநிலையில் உள்ள யோகிகளின் உடலைப் பாதுகாப்பவன் நீயே
ஓம் ப்ரக்ருஷ்டாரயே நமஹ எதிரிகள் அனைவரையும் ஒன்றுமற்ற நிலைக்குத் தள்ளுபவன் நீயே (ஆசை, கோபம் போன்ற எதிரிகளை ஒடுக்குபவன்)
ஓம் மஹாஹர்ஷாய நமஹ நீயே பெரும் மகிழ்ச்சியுடையவன்
ஓம் ஜிதகாமாய நமஹ நீயே தடுக்கப்பட முடியாத காம தேவனை வென்றவன்
ஓம் ஜிதேந்த்ரியாய நமஹ புலன்களை வென்றவன் நீயே
ஓம் காந்தாராய நமஹ இசையின் எட்டாம் சுரமான  காந்தாரம் என்னும் சங்கீத ஸ்வரமாயிருப்பவன் நீயே
ஓம் ஸுவாஸாய நமஹ (இனிமை நிறைந்த கைலாய மலைகளில் அமைந்திருப்பதன் விளைவால் சிறப்பான மற்றும் அழகிய இல்லம் கொண்டவன் நீயே – (720)
ஓம் தபஸ்ஸக்தாய நமஹ எப்போதும் தவத்தில்  நிலைபெற்றவன் நீயே
ஓம் ரதயே நமஹ உற்சாகம் மற்றும் நிறைவின் இன்ப வடிவினன் நீயே
ஓம் நராய நமஹ அனைத்தையும் செயல்பட வைப்பவன் நீயே
ஓம் மஹாகீதாய நமஹ தொகுக்கப்பட்டவற்றுள் முதன்மையான  சிறந்த இசையை உடையவன் நீயே
ஓம் மஹாந்ருத்யாய நமஹ (நீண்ட அடிகள் மற்றும் பெரும் தாவல்களுடன் ஆடும்) அறிவானந்தக் கூத்தன் நீயே
ஓம் அப்ஸரோகணஸேவிதாய நமஹ அப்ஸரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் மதிப்புடன் துதிக்கப்படுபவன் நீயே
ஓம் மஹாகேதவே நமஹ (காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட பெரும் கொடிமரத்தைக் கொண்டவன் விடைக்கொடியோன் நீயே
ஓம் மஹாதாதவே நமஹ மேருமலையை உடையவன் நீயே
ஓம் நைகஸாநுசராய நமஹ மலைச்சிகரங்கள் அனைத்தின் மத்தியிலும் திரிபவன் நீயே
ஓம் சலாய நமஹ பற்றிக்கொள்ள மிகக் கடினமான பெரும் வேகத்தைக் கொண்டவன் நீயே (பிடிபடாதவன்) – (730)
ஓம் ஆவேதனீயாய நமஹ சொற்களால் விளக்கப்பட முடியாதவனாக இருப்பினும் ஆசான்களால் சீடர்களுக்கு விவரிக்கப்பட வல்லவன் நீயே (குருவின் சொல்லால் அறியத் தகுந்தவன்)
ஓம் ஆதேசாய நமஹ ஆசான்களால் சீடர்களுக்குப் போதிக்கப்படும் கல்வியின் வடிவமானவன் நீயே
ஓம் ஸர்வகந்தஸுகாவஹாய நமஹ இனிய நறுமணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உணரக் கூடிய வாசனை சுகங்களைத் தோற்றுவிப்பவன் நீயே
ஓம் தோரணாய நமஹ வீடுபேற்றிற்கு வாயிலாக இருப்பவன் நீயே (முக்திக்கு வித்து)
ஓம் தாரணாய நமஹ பிறவிக் கடலைத் தாண்ட வைப்பவன் நீயே
ஓம் வாதாய நமஹ காற்று வடிவினன் நீயே
ஓம் பரிதினே நமஹ கோட்டையின் அரண்போல் நின்று காப்பாற்றுபவன் நீயே
ஓம் பதிகேசராய நமஹ (கருடனின் வடிவில் நீயே இருப்பதால்) சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்தின் இளவரசன்
ஓம் ஸம்யோகாயவர்த்தனாய நமஹ உயிர்களைத் தோற்றுவிக்க உடல் சேர்க்கையை வளர்ப்பவன் அல்லது மேலான தொடர்பை வளர்ப்பவன் நீயே
ஓம் வ்ருத்தாய நமஹ நீயே அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவன் – (740)
ஓம் அதிவ்ருத்தாய நமஹ நீயே அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவனுக்கும் மேன்மையானவன்
ஓம் குணாதிகாய நமஹ நீயே அறிவு  மற்றும் குணங்கள் அனைத்தையும் கடந்து நற்குணங்களால் மேலானவன்
ஓம் நித்யமாத்மஸஹாயாய நமஹ மரண ஆத்மாக்களுக்கு என்றும் உற்ற துணையாயிருப்பவன் நீயே
ஓம் தேவாஸுரபதயே நமஹ தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானும், பாதுகாவலனும் நீயே
ஓம் பத்யே நமஹ அனைத்து உயிரினங்களின் ஆசானும், பாதுபாவலனும் நீயே
ஓம் யுக்தாய நமஹ போர் செய்யத் தயாராக இருப்பவன் நீயே
ஓம் யுக்தபாஹவே நமஹ பகைவர்கள் அனைவரையும் கலங்கடிக்கவல்ல கரங்களைக் கொண்டவன் நீயே
ஓம் திவிஸுபர்வணோதேவாய நமஹ தேவ உலகில் உள்ள இந்திரனுக்கும் கடவுளாயிருப்பவன் நீயே
ஓம் ஆஷாடாய நமஹ அன்பர்களுக்கு சகிப்புத் தன்மையை வழங்குபவன் நீயே
ஓம் ஸுஷாடாய நமஹ அனைத்தையும் எளிதில் பொறுத்து மன்னிப்பருள்பவன் நீயே – (750)
ஓம் த்ருவாய நமஹ நிலையுறுதி கொண்டவன் நீயே
ஓம் ஹரிணாய நமஹ தூய்மையான வெளுத்த நிறமுடையவன் நீயே
ஓம் ஹராய நமஹ உன்னை அண்டியவர்களின் துயரத்தைப் போக்குபவன் நீயே
ஓம் ஆவர்த்தமானேப்யோ நமஹ அண்டத்தில் தொடர்ந்து பிறப்பிறப்பில் சுழன்று கொண்டிருப்போருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன் நீயே
ஓம் வஸுஸ்ரேஷ்டாய நமஹ உலகப் பொருள்கள் அனைத்தையும் விடச் சிறந்தவர் நீயே
ஓம் மஹாபதாய நமஹ அறவழி அல்லது ஒழுக்கத்திற்கு சிறந்த வழிகாட்டுபவன் நீயே
ஓம் சிரோஹாரிணேவிமர்சாய நமஹ ஆழமான முறையான ஆய்வுக்குப் பின் பிரம்மனின் தலையை அறுத்தவன் நீயே (விரோதத்தாலோ கோபத்தாலோ அல்ல)
ஓம் ஸர்வ லக்ஷண லக்ஷிதாய நமஹ அனைத்து நற்குணங்களுக்கும் (இலக்கணமாக) உதாரண புருஷனாகத் திகழ்பவன் நீயே
ஓம் அக்ஷாயரதயோகினே நமஹ தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போன்று இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அச்சாணியாக விளங்குபவன் நீயே
ஓம் ஸர்வயோகினே நமஹ (அனைத்துப் பொருட்களிலும் அவற்றின் ஆன்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களிலும் தொடர்புடையவன் நீயே – (760)
ஓம் மஹாபலாய நமஹ வீரர்களுக்கு வீரனான பெரும் வலிமை கொண்டவன் நீயே
ஓம் ஸமாம்நாயாய நமஹ மறை நூல் வடிவினன் நீயே
ஓம் அஸமாம்நாயாய நமஹ ஸ்மிருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள், பிற சாத்திரங்கள் மற்றும் மறை நூல்களுக்கெட்டாதவன் நீயே
ஓம் தீர்த்ததேவாய நமஹ தூய்மையான கடவுளானவன் நீயே
ஓம் மஹாரதாய நமஹ பூமியை தேராகக் கொண்டவன் நீயே
ஓம் நிர்ஜீவாய நமஹ உயிரற்ற ஜடப் பொருள்களிலும் உறைபவன் நீயே
ஓம் ஜீவனாய நமஹ இந்த பிரபஞ்சத்திற்கு உயிராயிருப்பவன் நீயே
ஓம் மந்த்ராய நமஹ பிரணவம் முதலிய புனித மந்திரங்கங்களாயிருப்பவன் நீயே
ஓம் சுபாக்ஷாய நமஹ உயிர்களுக்கு முக்தியை அருளக்கூடிய சிறந்த பார்வையை உடையவன் நீயே
ஓம் பஹுகர்க்கசாய நமஹ (அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருப்பதால்) மிகக் கடுமையானவன் நீயே – (770)
ஓம் ரத்னப்ரபூதாய நமஹ ஒவ்வொரு வகையிலும் உத்தமமான பொருளை உடையவன் நீயே
ஓம் ரத்னாங்காய நமஹ இரத்னம் போல் ஜொலிக்கின்ற சிறந்த உடலமைப்புடையவன் நீயே
ஓம் மஹார்ணவநிபானவிதே நமஹ ஊழிக்காலத்தில் பெருங்கடலைப் பருகுபவன் நீயே
ஓம் மூலாய நமஹ உலகமெனும் விருக்ஷத்தின் வேராக விளங்குபவன் நீயே
ஓம் விசாலாய நமஹ விசாலமாய் எங்கும் பரந்து விரிந்திருப்பவன் நீயே
ஓம் அம்ருதாய நமஹ (மரணமிலாப் பெருவாழ்வைத்  தருகின்ற) அமிர்தமாய் திகழ்பவன் நீயே
ஓம் வ்யக்தாவ்யக்தாய நமஹ அன்புள்ளவர்களுக்குத் தென்பட்டும், அன்பில்லாதவர்களுக்குத் தென்படாமலும் இருப்பவன் நீயே
ஓம் தபோநிதயே நமஹ (பெரும் யோகியாக இருப்பதால்) தவச் செல்வன் நீயே
ஓம் ஆரோகணாய நமஹ அன்பர்களை மேல்நிலைக்குச் செலுத்துபவன் நீயே
ஓம் அதிரோஹாய நமஹ உயர்ந்த நிலையை ஏற்கனவே அடைந்தவன் நீயே – (780)
ஓம் சீலதாரிணே நமஹ தூய ஒழுக்கம், தூய செயல்கள் மற்றும் நல்லொழுக்கத்தைக் காப்பாற்றுகின்றவன் நீயே
ஓம் மஹாயசஸே நமஹ பெரும்புகழ் கொண்டவன் நீயே
ஓம் ஸேநாகல்பாய நமஹ நினைத்த மாத்திரத்தில் பெரும் படைகளைத் திரட்டக் கூடிய சக்தி படைத்தவன் நீயே
ஓம் மஹாகல்பாய நமஹ சிறந்த அணிகலன்களை உடைய தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் நீயே
ஓம் யோகாய நமஹ யோக மூர்த்தி நீயே
ஓம் யுககராய நமஹ யுகங்களை உண்டுபண்ணுகின்றவன் நீயே
ஓம் ஹரயே நமஹ திருமால் வடிவில் இருப்பவன் நீயே
ஓம் யுகரூபாய நமஹ யுகமெனப்படுகிற கால வடிவம் கொண்டவன் நீயே
ஓம் மஹாரூபாய நமஹ அளவற்றவரும், உருவமற்றவரும் ஆனவன் நீயே
ஓம் மஹாநாகஹணாய நமஹ மதங்கொண்ட பெரும் யானையின் வடிவில் வாராணசி என்ற புனித நகரத்தை எதிர்த்து வந்த வலிமைமிக்க அசுரன் கஜாசுரனைக்  கொன்றவன் நீயே – (790)
ஓம் வதாய நமஹ காலனின் வடிவம் கொண்டவன் நீயே
ஓம் ந்யாயநிர்வபாணாய நமஹ உயிரினங்கள்அனைத்தின் தகுதிகளுக்கு ஏற்ப அவற்றின் விருப்பங்களைக் கனியச் செய்பவன் நீயே
ஓம் பாதாய நமஹ அவரவர் செய்த நற்செயல்கள், நல்ல கர்மாக்கள், நல்ல புண்ணியங்களின் விளைவால் அனைவரும் வந்து சேர்கின்ற புகலிடமாக உள்ளவன் நீயே
ஓம் பண்டிதாய நமஹ அனைத்தையும் நன்கு கற்றறிந்த பண்டிதன் நீயே
ஓம் அசலோபமாய நமஹ உருவம், வலிமை, குணங்கள் இவைகளில் மலையைப்போல் எப்பொழுதும் மாறாதிருப்பவன் நீயே
ஓம் பஹுமாலாய நமஹ அளவிலா விளையாட்டுடையவன் நீயே
ஓம் மஹாமாலாய நமஹ பெரிய மாலைகளை அணிந்திருப்பவன் நீயே
ஓம் சசிநேஹர ஸுலோசநாய நமஹ சந்திரனை விட ஒளிர்கின்ற அழகிய கண்களையுடையவன் நீயே
ஓம் விஸ்தாராய லவணாய கூபாய நமஹ பரந்து விரிந்த உப்புக்கடல் கிணறு போன்றவன் நீயே
ஓம் த்ரியுகாய நமஹ (கிருதம், திரேதம், துவாபரம் என்ற)  மூன்று யுகமாக இருப்பவன் நீயே – (800)
ஓம் ஸபலோதயாய நமஹ (பிறருக்கான நற்பலன்கள் நிறைந்த தோற்றம் கொண்டவன்) தான் தோன்றுவது பயன் தருவதாக அமைபவன் நீயே
ஓம் த்ரிலோசனாய நமஹ முக்கண்ணன் நீயே (மறை நூலும், அதன்படி நடப்பதும், பொருள் உணர்ந்து சொல்வதும் மூன்று கண்கள்)
ஓம் விஷண்ணாங்காய நமஹ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டு வடிவங்களை உடலமைப்பாகக் கொண்டவன் நீயே
ஓம் மணிவித்தாய நமஹ ரத்ன குண்டலங்கள்  அணிந்த காதுகளைக் கொண்டவன் நீயே
ஓம் ஜடாதராய நமஹ ஜடாமுடி தரித்தவன் நீயே
ஓம் பிந்தவே நமஹ பிந்து வடிவினன் நீயே (மிகவும் நுண்ணியமானவன்)
ஓம் விஸர்க்காய நமஹ உலக நாயகியாம் உமையவளுக்கு தன் இடப்பாகத்தை ஈன்றவன் நீயே (உமையொரு பாகன்)
ஓம் ஸுமுகாய நமஹ சிறந்த முகத்தைக் கொண்டவன் உடையவன் நீயே
ஓம் சராய நமஹ பகைவனின் அழிவுக்காகப் போர்வீரனால் ஏவப்படும் கணையாக இருப்பவன் நீயே
ஓம் ஸர்வாயுதாய நமஹ போர்வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் நீயே – (810)
ஓம் ஸஹாய நமஹ அனைத்தையும் தாங்கவல்ல பொறுமை உடையவன் நீயே
ஓம் நிவேதனாய நமஹ அனைத்தையும் அறிவிப்பவன் நீயே
ஓம் ஸுகாஜாதாய நமஹ மனதடங்கிய நிலையில் பேரானந்த வடிவில் இருப்பவன் நீயே
ஓம் ஸுகந்தாராய நமஹ காந்தார நாட்டில் தோன்றிய குதிரை வடிவினன் நீயே
ஓம் மஹாதனுஷே நமஹ சிறந்ததாகிய மறை நூலை வில்லாகக்கொண்டவன் நீயே
ஓம் கந்தபாலினே பகவதே நமஹ ஊழிக் காலத்தில் உயிர்களின் முற்பிறவியின் கர்ம வாசனைகளைக் காப்பாற்றும் கடவுள் நீயே
ஓம் ஸர்வகர்மணா

முத்தாநாய நமஹ

படைக்கும் காலத்தில் கர்மங்களை மீண்டும் உண்டாக்குபவன்  நீயே
ஓம் மந்தானாயபஹுலாய வாயவே நமஹ ஊழிக்காலத்தில் மொத்த அண்டத்தையும் (பாற்குடத்தில் பாலைக் கடையும் பெண்ணின் கரத்தில் இருக்கும் மத்தைப் போல) கடைய வல்லவனுமான பெருங்காற்று வடிவம் கொண்டவன்  நீயே
ஓம் ஸகலாய நமஹ எல்லா இடத்திலும் முழுமையாக இருப்பவன் நீயே
ஓம் ஸர்வலோசனாய நமஹ அனைத்தையும் காணக்கூடிய வல்லமை படைத்தவன் – (820)
ஓம் தலஸ்தாலாய நமஹ உள்ளங்கைகளைத் தட்டுவதால் எழும் ஒலியாக இருப்பவன் நீயே
ஓம் கரஸ்தாலிநே நமஹ கையையே உணவு உண்ணும் வட்டிலாக உடையவன் நீயே
ஓம் ஊர்த்வஸம்ஹநநாய நமஹ கடினமான உடலமைப்புக் கொண்டவன் நீயே
ஓம் மஹதே நமஹ மஹத் எனும் பிரம்ம தத்துவமாயிருயிருக்கும் சிறந்தவன் நீயே
ஓம் ச்சத்ராய நமஹ (கடுமையான வெய்யிலில் குடை நிழல் தருவது போல்) எங்கள் சிரமத்தைக் போக்குபவன் நீயே
ஓம் ஸுசத்ராய நமஹ அழகான குடையை உடையவன் நீயே (குடை வைராக்கியத்தின் உருவமாகக் கூறப்பட்டுள்ளது. வைராக்கியத்தின் நிழலில் இருப்பவர்களுக்குத் தாபம் இல்லை)
ஓம் விக்யாதாய லோகாய நமஹ (அனைத்து உயிரினங்களிலும்  அடையாளம் காணப்படுபவனாக நன்கறியப்பட்டவன்) அனைத்திலும் நன்கு காணும்படி தோன்றுபவன் நீயே
ஓம் ஸர்வாச்ரயாயக்ரமாய நமஹ அனைத்திலும் ஒழுங்கு, கட்டுப்பாடு வடிவமாக உள்ளவன் நீயே
ஓம் முண்டாய நமஹ மழிக்கப்பட்ட தலையை உடையவன் நீயே
ஓம் விரூபாய நமஹ (ஒழுங்கு, கட்டுப்பாடற்று திரிபவர்களுக்கு) அருவருக்கத் தக்க தோற்றமாக இருப்பவன் நீயே – (830)
ஓம் விக்ருதாய நமஹ (முடிவற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு), அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமாக விதவிதமான  வடிவம் கொண்டவன் நீயே
ஓம் தண்டிநே நமஹ (சந்நியாசத்தின் குறியீடாக நன்கறியப்பட்ட) தண்டத்தைக் கையில் கொண்ட பிரம்மச்சாரியானவன் நீயே
ஓம் குண்டிநே நமஹ கமண்டலத்தைக் கையில் (ஜல பாத்திரத்தை) உடைய பிரம்மச்சாரியானவன் நீயே
ஓம் விகுர்வாணாய நமஹ செயல் வழிமுறைகளின் மூலம் மட்டுமே அடையப்பட முடியாதவன் நீயே
ஓம் ஹர்யக்ஷாய நமஹ பச்சை நிறக் கண்களைக் கொண்ட விலங்குகளின் மன்னனோடு) சிங்கத்தோடு அடையாளம் காணப்படுபவன் நீயே
ஓம் ககுபாய நமஹ திசைகள் அனைத்தின் வடிவமாக இருப்பவன் நீயே
ஓம் வஜ்ரிணே நமஹ வஜ்ராயுதமேந்திய தேவேந்திர வடிவினன் நீயே
ஓம் சதஜிஹ்வாய நமஹ நூற்றுக்கணக்கான நாக்குகளை உடையவன் நீயே (அனைவரின் நாக்கு மூலமாகப் பேசுபவர் சிவபெருமானே)
ஓம் ஸஹஸ்ரபதே நமஹ ஆயிரம் கால்களை உடையவன் நீயே
ஓம் ஸஹஸ்ர மூர்த்னே நமஹ ஆயிரம் தலைகளையும் கொண்டவன் நீயே – (840)
ஓம் தேவந்த்ராய ஸர்வ தேவமயாய நமஹ தேவேந்திரனாகவும் அனைத்து தேவர்களாகவும் உள்ளவன் நீயே
ஓம் குரவே நமஹ அறியாமையைப் போக்கி அறிவை அருளும் பேராசான் நீயே
ஓம் ஸஹஸ்ரபாஹவே நமஹ ஆயிரங் கரங்களைக் கொண்டவன் நீயே
ஓம் ஸர்வாங்காய நமஹ அனைத்தையும் அடையப்பெற்றவன் நீயே
ஓம் சரண்யாய நமஹ (அனைவராலும் நாடப்படும் பாதுகாப்பு) அடைக்கலம் புகுதற்கு தகுதி பெற்றவன் நீயே
ஓம் ஸர்வலோகக்ருதே நமஹ அனைத்து உலகங்களையும் படைத்தவன் / படைப்பவன் நீயே
ஓம் பவித்ராய நமஹ புனிதத் தலங்கள் மற்றும் புண்ணிய நீர்நிலைகள் போன்ற இடங்களில்  பாவங்கள் அனைத்தையும் கழுவும் பெரும் தூய்மையாளன் நீயே
ஓம் த்ரிககுதேமந்த்ராய நமஹ பீஜம், சக்தி, கீலகம் என்னும் மூன்று முக்கிய சொல்லொலியாக இருப்பவன் நீயே
ஓம் கநிஷ்ட்டாய நமஹ அதிதி மற்றும் கசியபரின் மகனும், உபேந்திரன் (கஸ்யப் பிரஜாபதியும், அதிதியும் விஷ்ணு தங்களுக்குப் புத்திரராகப் பிறத்தல் வேண்டுமென்று தவங்கிடந்தமையால் விஷ்ணு அவர்களுக்கு வாமனன் என்ற பெயரோடு புத்திரராகப் பிறந்தார். அவர் இந்திரனுக்குப் பின் பிறந்தமையால் உபேந்திரன் எனவும் பெயர் பெற்றார்).

என்று அறியப்பட்ட குள்ள வடிவம் கொண்டவனும், அசுரன் பலியை வஞ்சித்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பெற்று தேவர்களின் தலைவனிடம் மீண்டும் கொடுத்த இளையவன் நீயே

ஓம் க்ருஷ்ணபிங்கலாய நமஹ (ஹரிஹரன் என்றழைக்கப்படும் வடிவத்துடன் இருப்பதால்) கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரண்டாகவும் இருப்பவன் நீயே (கருஞ் செம்மை நிறமுடைய சங்கரநாராயணர்) – (850)
ஓம் பிரம்மதண்டவிநிர்மாத்ரே நமஹ படைப்புக் கடவுளைத் தண்டிப்பவன் நீயே
ஓம் சதக்னீபாசசக்திமதே நமஹ நூற்றுக்கணக்கான பேர்களைக் கொல்லும் சதக்னீ, பாசம், சக்தி (ஈட்டி) முதலிய ஆயுதங்கள் தாங்கியவன் நீயே
ஓம் பத்மகர்ப்பாய நமஹ ஆதியில் தாமரைப் பூவில் தோன்றிய பிரம்மாவானவன் நீயே
ஓம் மஹாகர்ப்பாய நமஹ தோன்றிய அனைத்தையும் தனக்குள் அடக்கி பெரும் கருவறையைக் கொண்டவன் நீயே
ஓம் ப்ரஹ்மகர்ப்பாய நமஹ மறை நூல்களைத் தனக்குள் கொண்டவன் நீயே
ஓம் ஜலோத்பவாய நமஹ அண்ட அழிவைத் தொடர்ந்து முடிவிலாதிருக்கும் நீரில் இருந்து எழுபவன் நீயே
ஓம் கபஸ்தயே நமஹ பிரகாச ஒளியின் கதிர்களுடன் கூடியவன் நீயே
ஓம் ப்ரஹ்மக்ருதே நமஹ மறைநூல்களைப் படைத்தவன்/தொகுத்தவன் நீயே
ஓம் ப்ரஹ்மிணே நமஹ மறைநூல்களை ஓதுபவன் நீயே
ஓம் ப்ரஹ்மவிதே நமஹ வேதங்களின் பொருளை அறிந்தவன் / உணர்ந்தவன் நீயே – (860)
ஓம் ப்ராஹ்மணாய நமஹ அந்தண வடிவில் உலகத்தவர்களுக்கு மறைநூல்களைக் கற்பிப்பவன் நீயே
ஓம் கதயே நமஹ பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் அனைவரின் புகலிடமாக இருப்பவன் நீயே
ஓம் அனந்தரூபாய நமஹ எண்ணற்ற உருவமும் வடிவமுடையவன் நீயே
ஓம் நைகாத்மனே நமஹ உடல் இல்லாதவன் நீயே
ஓம் ஸ்வயம்புவஸ்திக்மதேஜஸே நமஹ படைப்புக் கடவுளால் தாங்க(ஏற்க) இயலாத வல்லமை, ஒளி பொருந்தியவன் நீயே
ஓம் ஊர்த்வகாத்மனே நமஹ உலகளாவிய முக்குணங்களைக் கடந்த இயல்பாக அல்லது ஆன்மாவாக இருப்பவன் நீயே
ஓம் பசுபதயே நமஹ ஜீவன்கள் அனைத்து உயிர்களின் தலைவன் நீயே
ஓம் வாதரம்ஹாய நமஹ காற்றைப் போன்ற வேகமுடையவன் நீயே
ஓம் மனோஜவாய நமஹ மனோவேகம் வேகமுடையவன் நீயே
ஓம் சந்தனினே நமஹ சந்தனத்தால் அபிஷேகம் செய்துகொள்பவன் நீயே – (870)
ஓம் பத்மநாலாக்ராய நமஹ தாமரையில்  தோன்றிய பிரம்ம தேவருக்கு முற்பட்டவன் நீயே
ஓம் ஸுரப்யுத்தரணாய நமஹ நீயே தெய்வீகப் பசுவான சுரபியைச் சபித்து மேன்மையான இடத்தில் இருந்து தாழ்ந்த இடத்திற்கு அனுப்பியவன்
ஓம் நராய நமஹ ஒன்றையும் விரும்பாதவன் நீயே
ஓம் கர்ணிகாரஹாஸ்ரக்விணே நமஹ கர்ணிகார மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன் நீயே
ஓம் நீலமௌலயே நமஹ நீல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் அணிந்திருப்பவன் நீயே
ஓம் பிநாகத்ருதே நமஹ பிநாகம் என்னும் வில்லை உடையவன் நீயே
ஓம் உமாபதயே நமஹ இமவானின் மகளான உமையின் கணவன் நீயே
ஓம் உமாகாந்தாய நமஹ ப்ரஹ்மவித்யை வடிவம் கொண்ட உமாதேவியால் விரும்பி அடையப்பட்டவன் நீயே
ஓம் ஜாஹ்னவீத்ருதே நமஹ கங்கையைத் தலையில் மகுடமாகத் தாங்கியவன் நீயே
ஓம் உமாதவாய நமஹ உமாதேவியின் கணவன் நீயே – (880)
ஓம் வராயவராஹாய நமஹ (மூழ்கிப்போன பூமியை உயர்த்த பெரும்பன்றியின் வடிவை ஏற்றதன் விளைவால்) வலிமைமிக்கவன் நீயே
ஓம் வரதாய நமஹ பல்வேறு அவதாரங்களை ஏற்று அண்டத்தைப் பாதுகாப்பவன் நீயே (நல்ல வடிவங்களில் உலகிற்குக் கருணை புரிபவன்)
ஓம் வரேண்யாய நமஹ வரம் முதலியவைகளை வேண்டத் தகுந்தவன் நீயே
ஓம் ஸுமஹாஸ்வநாய நமஹ நல்ல இனிமையான குரல் வளமுடையவன் நீயே
ஓம் மஹாப்ரஸாதாய நமஹ நன்றாக அருள்பவன், பேரருளாளன் நீயே
ஓம் தமனாய  நமஹ தீயவர்களை பெரிதாக அடக்கி ஒடுக்குபவன் நீயே
ஓம் சத்ருக்னே நமஹ ஆசை முதலிய அக எதிரிகளையும் புற எதிரிகளையும் ஒழிப்பவன் நீயே
ஓம் ஸ்வேதபிங்கலாய நமஹ ஆண்பாதி, பெண்பாதியாக இருப்பதால் (அர்த்தநாரீஸ்வரர்)  வெண் செம்மை நிறமுடையவன் நீயே
ஓம் பீதாத்மனே நமஹ தங்கம் போன்ற நிறத்தையுடைய உடலைக் கொண்டவன் நீயே
ஓம் பரமாத்மனே நமஹ அனைத்திற்கும் மேலான ஆத்மா வாக உள்ளவன் நீயே (அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் உள்ளிட்ட ஜீவனின் ஐந்து உறைகளைக் கடந்திருக்கும் தூய இன்பத்தின் வடிவம்) – (890)
ஓம் ப்ரயதாத்மனே நமஹ தூய்மையான மனமுடையவன் நீயே
ஓம் ப்ரதானத்ருதே நமஹ இயற்கையை ஆடையாக அணிந்திருப்பவன் நீயே
ஓம் ஸர்வபாசர்வமுகாய நமஹ அனைத்துப் பக்கங்களிலும் முகம் உள்ளவன் நீயே (ஐம்முகத்தான்)
ஓம் த்ரயக்ஷாய நமஹ (சூரியன், சந்திரன், அக்னி என்ற  முக்கண்களைக் கொண்ட) முக்கண்ணன் நீயே
ஓம் தர்மஸாதாரணோவராய நமஹ நற்செயலுக்குத் தகுந்த பலனாக உள்ளவன் நீயே
ஓம் சராசராத்மனே நமஹ அசையும் உயிகளாயும் அசையாத பொருள்களாயும் உள்ளவன் நீயே
ஓம் ஸுக்ஷ்மாத்மனே நமஹ (புலப்பட முடியாத)  நுட்பமான ஆத்மாவின் வடிவம் நீயே
ஓம் அம்ருதாய கோவ்ருஷேச்வராய நமஹ பூவுலகின் அதிபதியான என்றுமுள்ள தர்ம அறச்செயலுக்கு இறைவன் நீயே
ஓம் ஸாத்யர்ஷயே நமஹ தேவர்களுக்கு மேலான ஸாத்யர்கள் எனும் ஒருவகை தேவ வகுப்பினருக்கு அறிவை போதிப்பவன் நீயே
ஓம் வஸுராதித்யாய நமஹ அதிதியின் புத்திரராகிய வஸு என்பவராக விளங்குபவன் நீயே – (900)
ஓம் விவஸ்வதேஸவிதாம்ருதாய நமஹ அமிர்தம் போன்ற தன் குளிர்ந்த ஒளிக் கற்றையால் இந்த  உலகத்தை அமிழ்த்து ஒளிரச் செய்யும் சந்திரவடிவானவன் நீயே
ஓம் வ்யாஸாய நமஹ வேத வ்யாசர் வடிவம் எடுத்தவன் நீயே
ஓம் ஸர்காய ஸுஸம்க்ஷேபாய விஸ்தராய நமஹ சூத்திரங்களில்  விரித்துரைக்கப்பட்ட அறிவையும், புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட  அறிவு சார்ந்த விஷயங்களையும் வடிவமைத்தவன் நீயே
ஓம் பர்யயோநராய நமஹ நான்குபுறமும் நிறைந்துள்ள அனைத்து உயிர்களின் தொகுப்பான விராட் புருஷன் எனும் பரந்த வடிவினன் நீயே
ஓம் ருதவே நமஹ ஆறு ருதுக்களாக {வசந்த ருது}, (இளவேனிற் காலம்), {கிரீஷ்ம ருது} (முதுவேனிற் காலம்), {வர்ஷ ருது} (கார்காலம்), {சரத் ருது} (குளிர்காலம்), {ஹேமந்த ருது} (முன்பனிகாலம்) {சிசிர ருது} (பின்பனிகாலம்)  இருப்பவன் நீயே
ஓம் ஸம்வத்ஸராய நமஹ வருடமாக இருப்பவன் நீயே
ஓம் மாஸாய நமஹ மாதமாக உள்ளவன் நீயே
ஓம் பக்ஷாய நமஹ பக்ஷமாக (கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்)  (15 நாட்கள் கொண்டது ஒரு பக்ஷம்) உள்ளவன் நீயே
ஓம் ஸங்க்யாஸமாபனாய நமஹ ருதுக்கள், மாதம், பக்ஷம், வருடம் இவைகளின் முடிவு வடிவான (அமாவாசை, பௌர்ணமி) இக்காலங்களை நிறைவு செய்யும் புனித நாட்கள் அல்லது  வடிவினன் நீயே
ஓம் கலாப்யோ நமஹ கலை என்கின்ற ஒரு நாளின் காலத்தின் ஒரு பகுதி வடிவினன் நீயே – (910)
ஓம் காஷ்டாப்யோ நமஹ காஷ்டை என்பது ஒரு நாளின் கால நேரத்தின் கணக்களவில் அளவின் ஒரு சிறு பகுதி வடிவினன் நீயே
ஓம் லவேப்யோ நமஹ லவ: காலத்தின் ஒரு பகுதி வடிவினன் நீயே
ஓம் மாத்ராப்யோ நமஹ (நொடிப்பொழுது) மாத்திரை என்பதும் காலத்தின் சிறு பகுதி வடிவினன் நீயே
ஓம் முஹுர்த்தாஹ: க்ஷபாப்யோ நமஹ முஹுர்த்தம், பகல், இரவு என்கிற கால வடிவமுடையவன் நீயே
ஓம் க்ஷணேப்யோ நமஹ (நொடிகள்) க்ஷணங்கள் என்கிற காலப்பகுதியாக உள்ளவன் நீயே
ஓம் விஸ்வக்ஷேத்ராய நமஹ உலகம் வளரும் இடமாயிருப்பவன் நீயே
ஓம் ப்ரஜாபீஜாய மஹ (அனைத்து உயிரினங்களின் வித்து) உயிர்களின் வித்தானவன் நீயே
ஓம் லிங்காய நமஹ மஹத் என்னும் தத்துவமானவன் நீயே
ஓம் ஆத்யாய நிர்கமாய நமஹ பிரபஞ்சம் முதலில் தோன்றுவதற்குக் காரணமான முளையானவன் நீயே
ஓம் ஸதே நமஹ உண்மை, சத்யம் என்பதற்கு சாட்சியாக  என்றும் உள்ளவன் நீயே – (920)
ஓம் அஸதே நமஹ பிரபஞ்ச தோற்றத்தின் பின்னால்  மறைபொருளாக உள்ள உண்மையின் உருவானவன் நீயே (மறைந்துள்ள பரம்பொருள்)
ஓம் வ்யக்தாய நமஹ தன்னை நாடுபவர்களுக்கும் தன்னோடு தொடர்புள்ளவர்களுக்கு மட்டும் புலப்படுபவன்  நீயே
ஓம் அவ்யக்தாய நமஹ இன்னாரென்று அறிய முடியாதவன்  நீயே (புலன்களுக்குப் பிடிபடாத வகையில் தன்னை நாடாதவர்களுக்கு புலப்படாமல் இருப்பவன்)
ஓம் பித்ரே நமஹ இந்த பிரபஞ்சத்தின் தந்தையானவன் நீயே
ஓம் மாத்ரே நமஹ இந்த பிரபஞ்சத்தின் தாயுமானவன் நீயே
ஓம் பிதாமஹாய நமஹ இந்த பிரபஞ்சத்தின் பாட்டன் நீயே (தந்தையின் தந்தையானவன்)
ஓம் ஸ்வர்க்கத்வாராய நமஹ ஸ்வர்க்க உலகின் நுழை வாயிலாக உள்ளவன் நீயே (உன் அருளைப் பெற்றவர்களுக்கு)
ஓம் ப்ரஜாத்வாராய நமஹ மக்களைப் பெறக் காரணமான (அறநெறிக்குட்பட்ட) காமமாக இருப்பவன் நீயே
ஓம் மோக்ஷத்வாராய நமஹ (விடுதலை அடைய நுழைவாயிலான) பற்றற்ற தன்மையாக இருப்பவன் நீயே
ஓம் த்ரிவிஷ்டபாய நமஹ சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவக்கும் அறச்செயல்கள் வடிவாக உள்ளவன் நீயே – (930)
ஓம் நிர்வாணாய நமஹ (இன்ப துன்பம், மகிழ்ச்சி துக்கம் என்கிற நித்திய  பந்தத்திலிருந்து முக்தி என்ற வடிவான) விடுதலையாக இருப்பவன் நீயே
ஓம் ஹ்லாதனாய  நமஹ (ஒவ்வொரு உயிரினத்திற்கும் அனைத்து வகை இன்பங்களையும் கொடுத்து) மகிழ்ச்சிப்படுத்துபவன் நீயே
ஓம் ப்ரஹ்மலோகாய நமஹ பிரம்மதேவனின் உலகமான ஸத்ய லோகமாக உள்ளவன் நீயே
ஓம் பராயைகத்யை நமஹ முக்திக்கு தீர்வாக உள்ளவன் நீயே
ஓம் தேவாஸுரவிநிர்மாத்ரே நமஹ தேவர்கள் மற்றும் அசுரர்களைப் படைத்தவன் நீயே
ஓம் தேவாஸுரபராயணாய நமஹ தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவன்  நீயே
ஓம் தேவாஸுரகுரவே நமஹ தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசானாக இருப்பவன் நீயே
ஓம் தேவாய நமஹ பிரபஞ்சத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கான உந்து சக்தியாக இருப்பவன் நீயே
ஓம் தேவாஸுரநமஸ்க்ருதாய நமஹ தேவ, அசுரர்களால் வணங்கப்படுபவன்  நீயே
ஓம் தேவாஸுர மஹாமாத்ராய நமஹ தேவ, அசுரர்களை விட மிகச் சிறந்தவன் – (940)
ஓம் தேவாஸுரகணாச்ரயாய நமஹ தேவ, அசுர ஜனங்களால் அடையப்படுபவன் நீயே (தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அனைவருக்கும் உரிய புகலிடம்)
ஓம் தேவாஸுரகணாத்யக்ஷாய  நமஹ (இந்திரன் மற்றும் விரோசனன் ஆகிய இருவரின் வடிவிலும் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைவனாக இருப்பவன் நீயே
ஓம் தேவாஸுரகணாக்ரண்யை நமஹ தேவ மற்றும் தைத்திய படைத்தலைவர்களான கார்த்திகேயன் மற்றும் கேசியின் வடிவில் நீயே இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் போர்த்தலைவன் நீயே
ஓம் தேவாதி தேவாய நமஹ புலன்களைக் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பவன் நீயே
ஓம் தேவர்ஷயே நமஹ நாரதர் மற்றும் பிற தெய்வீக முனிவர்களின் வடிவம் கொண்டவன் நீயே
ஓம் தேவாஸுர வரப்ரதாய நமஹ தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பவன் நீயே
ஓம் தேவாஸுரேஸ்வராய நமஹ தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களை ஆள்பவன் நீயே
ஓம் விச்வாய நமஹ உலகத்தையே தன்னுடையதாகக் கொண்டவன் நீயே
ஓம் தேவாஸுர மஹேச்வராய நமஹ தேவர்கள், அசுரர்கள் இவர்களின் தலைவர்களுக்குத் தலைவன் நீயே
ஓம் ஸர்வதேவமயாய நமஹ தேவர்களுக்கு அனைத்து தெய்வமயமாக இருப்பவன் நீயே – (950)
ஓம் அசிந்த்யாய நமஹ சிந்திக்கத் தனக்கு மேம்பட்ட எதுவும் இல்லாத தன்மையன் நீயே
ஓம் தேவதாத்மனே நமஹ தேவர்களின் உள் ஆன்மாவாக இருப்பவன் நீயே
ஓம் ஆத்ம ஸம்பவாய நமஹ தானே தோன்றிய தன்மையன் நீயே
ஓம் உத்பிதே நமஹ அறியாமையை ப் பிளந்து வெளிப்படுபவன் நீயே
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ தனது மூவடியால் உலகை அளந்து  மூவுலகிலும் நிறைந்திருப்பவன் நீயே (வாமனன்)
ஓம் வைத்யாய நமஹ தன்னிகரில்லா அறிவுமயமானவனும், சிறந்த மருத்துவனுமாயிருப்பவனும் நீயே (பிறப்பு, இறப்பு என்ற தளையிலிருந்து விடுவிப்பவன்)
ஓம் விரஜாய நமஹ களங்கமில்லாதவன் நீயே
ஓம் நீரஜாய நமஹ படாடோபம் அற்றவன் நீயே (ரஜோ குணமில்லாதவன்)
ஓம் அமராய நமஹ அழிவைக் கடந்திருப்பவன் நீயே (அழிவற்றவன்)
ஓம் ஈட்யாய நமஹ புகழ் துதிகளால் துதிக்கப்பட வேண்டியவன் நீயே (பாராட்டத் தகுந்தவன்) – (960)
ஓம் ஹஸ்தீஸ்வராய நமஹ வாயு வடிவமாக காளஹஸ்தியில் வாசம் செய்பவன் நீயே (வாயுலிங்கமான காளத்திநாதன்)
ஓம் வ்யாக்ராய நமஹ வ்யாக்ரேஸ்வரன் என்று புலியின் பெயர் கொண்ட லிங்க வடிவினன் நீயே
ஓம் தேவஸிம்ஹாய நமஹ (ஆற்றலில் ஏற்றம் கொண்டவனாக இருப்பதன் விளைவால்  தேவர்களுக்கு மத்தியில் சிங்கம் என்றழைக்கப்படுபவன் நீயே
ஓம் நரர்ஷபாய நமஹ மனிதர்களில் முதன்மையானவன் நீயே
ஓம் விபுதாய நமஹ கூர்மையான அறிவுடன் பெரும் ஞானம் கொண்டவன் நீயே
ஓம் அக்ரவராய நமஹ வேள்விக் காணிக்கைகளில் முதல் பங்கை எடுத்துக் கொள்ள தகுதி படைத்தவன் நீயே
ஓம் ஸுக்ஷ்மாய நமஹ மிகவும் நுட்பமான அறிவுத் திறன் படைத்தவன் நீயே
ஓம் ஸர்வதேவாய நமஹ அனைத்து தேவர்களின் வலிமைகளும் ஒன்று கூடியவன் நீயே
ஓம் தபோமயாய நமஹ தவங்களால் மேம்பட்டிருப்பவன் நீயே
ஓம் ஸுயுக்தாய நமஹ எப்போதும் சிறந்த யோகத்தில் கவனமாக இருப்பவன் நீயே – (970)
ஓம் சோபனாய நமஹ மங்களமானவன் நீயே
ஓம் வஜ்ரிணே நமஹ வைரத்தைப் போன்று உறுதியானவன் நீயே
ஓம் ப்ராஸானாம் ப்ரபவாய நமஹ ப்ராஸங்கம் எனப்படும் ஒருவகை ஆயுதங்களைத் தோற்றுவிப்பவன் நீயே
ஓம் அவ்யயாய நமஹ ஒருமித்த சிந்தையுடையவர்களால் அடையப்படுபவன் நீயே
ஓம் குஹாய நமஹ தேவர்ப்படைத்தலைவனான குஹன் நீயே (பக்தர்களின் இதயமான குகையில் வசிப்பவன்)
ஓம் காந்தாய நமஹ இன்பநிலையின் உயர்ந்த எல்லையாயிருப்பவன் நீயே
ஓம் நிஜாய ஸர்காய நமஹ தன்னைப் படைக்க மற்றொருவர் இல்லாதவன் நீயே
ஓம் பவித்ராய நமஹ நீயே புனிதமானவன். இடிபோன்ற துன்பங்களிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுபவன் நீயே
ஓம் ஸர்வ பாவனாய நமஹ பக்தர்களின்  பிரம்மஹத்தி உட்பட அனைத்துப் பாவங்களையும் கழுவுபவன். எல்லோரையும்  தூய்மையாக்குபவன் நீயே
ஓம் ச்ருங்கிணே நமஹ அனைத்தினும் மிக உயர்ந்தவன் நீயே – (980)
ஓம் ச்ருங்கப்ரியாய நமஹ மலைச்சிகரங்களை விரும்புபவன் நீயே
ஓம் பப்ருவே நமஹ இந்த உலகைத் தாங்குபவன் நீயே
ஓம் ராஜராஜாய நமஹ அரசர்களுக்கெல்லாம் அரசனாக விளங்குபவன் நீயே
ஓம் நிராமயாய நமஹ களங்கமற்ற நிலை கொண்ட குற்றம் குறை இல்லாதவன் நீயே
ஓம் அபிராமாய நமஹ மனதிற்கு உகந்த மகிழ்ச்சியை ஊக்கப்படுத்துபவன் நீயே
ஓம் ஸுரகணாய நமஹ தேவக்கூட்டங்களாக இருப்பவன் நீயே
ஓம் விராமாய நமஹ அனைத்து பற்றிலிருந்தும் நீங்கியிருப்பவன் நீயே
ஓம் ஸர்வஸாதனாய நமஹ அனைத்தின் பயனும் தருபவன் நீயே
ஓம் லலாடாக்ஷாய நமஹ நெற்றியில் கண் உள்ளவன் நீயே
ஓம் விச்வதேவாய நமஹ பளிங்குப் பந்தைப் போல அண்டத்தை வைத்து விளையாடுபவன் நீயே – (990)
ஓம் ஹரிணாய நமஹ மானின் வடிவைக் கொண்டவன் நீயே
ஓம் ப்ரஹ்மவர்ச்சஸாய நமஹ இறைவனை உணர்ந்த ஒளியை முகத்தில் காண்பிப்பவன் நீயே
ஓம் ஸதாவராணம்பதயே நமஹ (இமயம் மற்றும் மேரு முதலியவற்றின் வடிவிலான) அசையாத பொருட்கள் அனைத்தின் தலைவன் நீயே
ஓம் நியமேந்த்ரியவர்த்தனாய நமஹ (பல்வேறு நோன்பு மற்றும் நியமங்களின் மூலம் புலன்களை அடக்கியவன்) ஒழுக்கத்தால் புலங்களை அடக்கியாள்பவன் நீயே
ஓம் ஸித்தார்த்தாய நமஹ முக்தியைக் கையில் உள்ள சாதாரண வஸ்துவைப்போல் வைத்துள்ளவன் நீயே
ஓம் ஸித்தபூதார்த்தாய நமஹ தவங்களின் மூலமாக பக்குவப்பட்டவர்களின் பலனாக விளங்குபவன் நீயே
ஓம் அசிந்த்யாய நமஹ தியான வழிபாட்டினைச் செய்வதனால் மட்டும் அடையப்பட முடியாதவன் நீயே
ஓம் ஸத்யவ்ரதாய நமஹ வாய்மையையே தவமாகக் கொண்டவன் நீயே
ஓம் சுசயே நமஹ தன் இயல்பைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய இதயம் கொண்டவன் நீயே
ஓம் வ்ரதாதிபாய நமஹ (நோன்புகளுக்கான கனிகளைக் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்  நோன்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன்) விரதங்களுக்குரிய பயனளிப்பவன் நீயே – (1000)
ஓம் பரஸ்மை நமஹ விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டவன் நீயே
ஓம் ப்ரஹ்மணே நமஹ இடம், நேரம், நடைமுறைகளாலும் காணமுடியாத வடிவினன் நீயே
ஓம் பக்தானாம் பரமாயை கதயே நமஹ பக்தர்கள் இறுதியில் சென்றடைகின்ற சிந்திக்க இயலாத மாபெரும் உயர்ந்த புகலிடம் நீயே
ஓம் விமுக்தாய நமஹ பந்தங்கள் அனைத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டவன் நீயே
ஓம் முக்த தேஜஸே நமஹ லிங்க உடலில் இருந்து விடுபட்டு அடையாளமாக எதுவும் இல்லாதவன் நீயே
ஓம் ஸ்ரீ மாதே நமஹ இறைவனோடு தொடர்பும் அளவிலா ஆனந்தமும் உடையன் நீயே
ஓம் ஸ்ரீ வர்தனாய நமஹ தன்னை நாடிய பக்தர்களின் செழிப்பை அதிகரித்து அருளை வளர்த்துக் கொடுப்பவன் நீயே
ஓம் ஜகதே நமஹ உலகங்கள் அனைத்தும் தானேயாகியவன் நீயே – (1008)

சிவபெருமானின் ஆயிர நாமவழிபாட்டை  இத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.

ஓம் பவாய தேவாய நமஹ
ஓம் ஸர்வாய தேவாய நமஹ
ஓம் ஈசானாய தேவாய நமஹ
ஓம் பசுபதயே தேவாய நமஹ
ஓம் ருத்ராய தேவாய நமஹ
ஓம் உக்ராய தேவாய நமஹ
ஓம் பீமாய தேவாய நமஹ
ஓம் மஹதே தேவாய நமஹ
ஓம்  சர்வம் சிவார்ப்பணமஸ்து

References:

https://mahabharatham.arasan.info/2019/02/Mahabharatha-Anusasana-Parva-Section-17.html
http://www.hindupedia.com/en/Shiva_Sahasranamam#Thousand_names

Also read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை