×
Thursday 5th of December 2024

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் [தமிழில்]


உள்ளடக்கம்

Vishnu Sahasranamam Meaning in Tamil

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே நிறைந்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாது நினைவு கொள்வோம்!

தம்மை தியானிப்பவருக்கு அனைத்து இடையூறுகளைப் போக்கி மகிழ்ச்சி அளிக்கும் யானை முகத்தோனை அடி பணிவோம்!

வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.

விஷ்ணு உருவான வியாசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான அவருக்கு வணக்கம். வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு மறுபடி வணக்கம்.

வேறுபாடே இல்லாதவரும், தூய்மையானவரும், எல்லாவற்றிலும் வெற்றி கண்டிடும், பரமாத்மாவான விஷ்ணுவுக்கு வணக்கம். எவரை எண்ணியதுமே, சம்சார கடலிலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம்.

அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகலிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபட முடியும் எனவும், ஸ்ரீ தர்மர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே!

வையகத்தை காப்பவரும், தேவ தேவரும், முடிவே அற்ற புருஷோத்தமனை, ஆயிரம் நாமங்களாலே தொடர்ந்து துதித்தும், அர்ச்சித்தும், புகழ்ந்தும் வழிபடுபவனும், ஆதியும் அந்தமும் அற்றவனும், சகல உலகங்களுக்கும் தலைவனை, எக்காலமும் புகழ்ந்து வணங்குபவனே, சகல துயரங்களையும் கடந்தவன் ஆவானே!

வேதத்திலும், தவத்திலும், உறவு உடையவனும், பிரபஞ்சங்களின் பெருமையை வளர்ப்பவனை, புகழ்ந்து வணங்குபவனே, சகல துன்பங்களையும், கடந்தவன் ஆவானே! புண்டரீகாட்சனான பகவானை, துதிகளால் அர்ச்சித்து வழிபடுவதே உயர்ந்த தர்மமாகுமே! எது மேன்மையானதும், தவமே உருவானதோ, முழுமுதற் பொருளோ, அதுவே ஒன்றாகிய தஞ்சமாகுமே!

தூய்மையில் எவன் தூய்மையோ, மங்களத்தில் எது மங்களமோ, தேவதைகளுக்குள் எது தேவதையோ, உயிர்களுக்கே உயிரினை அளித்திடும், அழிவேயில்லாத தந்தை எவனோ, அவனே அகிலத்தின் ஒன்றான தெய்வமாகுமே!

எவனிடமிருந்து ஆதியுகத்தில் உயிர்கள் தோன்றினவோ, யுகம் முடிவில் மறைகின்றனவோ, எவன் பூமியை சுமந்து, எங்குமே பிரகாசிக்கும் ஜகன்நாதனோ, அந்த விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுமே பாவத்தை நீக்கிடும் என்பதை என்னிடம் நீயே கேட்டிடுவாய்!

பகவானுக்கு எந்தெந்த திருநாமங்கள், குணங்களை பற்றிய புகழ் கொண்டனவோ, முனிவர்களால் துதிக்கப்படுகிறதோ, அந்த நான்கு வகை பேறுகளை அடைந்து, உயர்வு காணவே, உனக்கு கூறுவேன்யாம்!

எங்குமே இருப்பவனாகி, யாவற்றிலும் நிலைத்தவனாகி, மஹேஸ்வரனாகி, பல உருவம் கொண்டுமே, அசுரர்களை அழித்த, புருஷோத்தமனான, ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்!

ஸ்ரீ விஷ்ணுவின் சகஸ்ரநாம மொழியான, இந்த மகா மந்திரத்திற்கு வேத வியாசரே ரிஷி, அநுஷ்டுப்சந்தம். ஸ்ரீமகாவிஷ்ணுவும், பரமாத்மாவுமான ஸ்ரீமன் நாராயணனே தெய்வம்.

“அம்ருதாம் ஸூத்பவோ பாநுவு” என்பது பீஜம்(நாபியில்).
“தேவகீ நந்தந: ஸ்ரேஷ்டாக:” என்பது சக்தி (வலது புஜத்தில்).
“த்ரிஸாமா” என்பது இருதயம்.
“உத்பவ:ஷோபனோ தேவ” என்பது மேலான மந்திரம்(மார்பில்).
“சங்கப்ருந் நந்த்கீ சக்ரீ “என்பது கீலகம்(இடது புஜத்தில்).
“சார்ந்கதந்வா கதாதர “என்பது அஸ்திரம்(தலையை சுற்றி நான்கு திக்குகளிலும்)
“ரதாங்க பாணி ரசோப்யக:” என்பது நேத்திரம்(இரண்டு கண்களிலும்).
“த்ரிஸாமா ஸாமகஹ: ஸாம” என்பது கவசம்(கைகளால் கவசம் போல் மார்பில்).
“ஆனந்தம் பரபிரம்மம்” என்பது யோனி(கருக்குழியில்).
“ருது: சுதர்ஸந: காலக:” என்பது ரிப்பந்தம் (எத்திக்குகளிலிருந்தும் தீமை வராமல் இந்த மந்திரத்தால் காப்பு).

“ஸ்ரீ விஷ்வ ரூபஹ:” “(எங்கும் நிறைந்தவன்)” என்று, இடையறாது நினைந்து, புனித ரத்தினங்களை கொண்ட பாற்கடலில், முத்து மாலைகளுடன் கூடிய ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும், வெண்மையான மேகங்களால் துளிர்ந்திடும், அமுத திவலைகளால் மகிழ்வானவரும், சக்ரம், பத்மம், கதை, சங்கம் தனை கைகொண்ட முகுந்தன் நம்மை தூய்மை ஆக்கட்டும்.

எவருக்கு புவனம் காய்களாகவும், வானமே நாபியாகவும், வாயுவே உயிராகவும், திங்களும் கதிரவனும் நயனங்களாகவும், திசைகள் செவிகளாகவும், வானுலகம் சிரசாகவும், அக்னியே வாயாகவும், கடல் அடிவயிறாகவும் உள்ளனவோ, எவருடைய வயிற்றில் வானவர், மாந்தர், பறவைகள், மிருகங்களுடன், நாகர், கந்தர்வர், அசுரர் என பரந்த அகிலம் ஆடிக்களிக்கின்றதோ, அந்த மூவுலக உருவானவரான ஸ்ரீ விஷ்ணுவை வணங்குகின்றேன்! ஷேச சயனராகி, நாபியில் தாமரை மலர்ந்திடவும் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகியும், வானுக்கே ஈடானவராகி, மேக வண்ணனாகி, பிறவிப் பிணிதனை நீக்கியுமே, சகல பூமிக்கும் தலைவரேயான ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்! கருமுகிலெனவும், மஞ்சள் பட்டாடை அணிந்து “ஸ்ரீவத்சம்” எனும் மருவை கொண்டவரும், கௌஸ்துப மணியால், ஒளியான அங்கங்களுடனே திகழும் சகல உலகங்களின் தலைவரான, ஸ்ரீ விஷ்ணுவை மனதார வணங்குகின்றேன்! சங்கு, சக்ரம், கீரடம், குண்டலமுடன் பொன்னாடை தரித்துமே, திருமார்பினில் கௌஸ்துபம் ஒளி வீசிடும் ஸ்ரீவிஷ்ணுவை சிரசால் வணங்குகின்றேன்!

பாரிஜாத மரநிழலில், நிலவு போன்ற திருமுகத்துடனும், நான்கு புயங்களுடன் ஸ்ரீவத்சம் ஒளிரும் மார்புடன், ருக்மிணி சத்யபாமையுடன் இணைந்து பிரகாசிக்கும் ஸ்ரீகிருஷ்ணனை சரணாகதியடைகின்றேன்!

(இறைவன் திருநாமத்தின் ஒவ்வொரு நாமத்திலும் ஆரம்பத்தில் “ஓம்” என்றும், இறுதியில் “போற்றி” என்றும் சேர்த்துக்கொள்ளவும்.)

1. ஓம் விஶ்வஸ்மை நம꞉ | 1. ஓம் அகிலம் யாவுமே தானாக உள்ளவவரே போற்றி!
2. ஓம் விஷ்ணவே நம꞉ | 2. எங்கும் நிறைந்தவரே!
3. ஓம் வஷட்காராய நம꞉ | 3. யாக வடிவானவரே!
4. ஓம் பூ⁴தப⁴வ்யப⁴வத்ப்ரப⁴வே நம꞉ | 4. மூன்று காலங்களுக்கும் தலைவரே!
5. ஓம் பூ⁴தக்ருதே நம꞉ | 5. இருப்பது யாவையும் சிருஷ்டிப்பவரே!
6. ஓம் பூ⁴தப்⁴ருதே நம꞉ | 6. சிருஷ்டித்ததை எல்லாம் தாங்குபவரே!
7. ஓம் பா⁴வாய நம꞉ | 7. எல்லாவற்றிற்கும் (அசையும் மற்றும் அசையா பொருட்களுக்கும்) இருப்பாய் இருப்பவரே!
8. ஓம் பூ⁴தாத்மனே நம꞉ | 8.  உயிர்களுக்கே உயிரேயாகி இருப்பவரே!
9. ஓம் பூ⁴தபா⁴வனாய நம꞉ | 9. படைப்பது யாவையும் காப்பவரே!
10. ஓம் பூதாத்மனே நம꞉ | 10. பரிசுத்த ஸ்வபாவம் உள்ளவரே!
11. ஓம் பரமாத்மனே நம꞉ | 11. யாவற்றிற்க்கும் உள்ளிருந்து, யாவையும் கடந்து, தொலைவில் இருப்பவரே!
12. ஓம் முக்தானாம்பரமக³தயே நம꞉ | 12. முக்தர்களுக்கு நிகரில்லா புகலிடமானவரே!
13. ஓம் அவ்யயாய நம꞉ | 13. மாறுபாடுயில்லாதவரே! Om Avyayaya Namah।
14. ஓம் புருஷாய நம꞉ | 14. உறவென்ற உடலில் உள்ளவரே!
15. ஓம் ஸாக்ஷிணே நம꞉ | 15. யாவையும் நேரில் காண்பவரே!
16. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம꞉ | 16. க்ஷேத்ரம் என்ற உடலை உணர்ந்தவரே!
17. ஓம் அக்ஷராய நம꞉ | 17. அழிவே இல்லாதவரே!
18. ஓம் யோகா³ய நம꞉ | 18. யோகத்தால் அடையத்தக்கவரே!
19. ஓம் யோக³விதா³ம்நேத்ரே நம꞉ | 19. யோகத்தை உணர்ந்தோரில் முதன்மையானவரே!
20. ஓம் ப்ரதா⁴னபுருஷேஶ்வராய நம꞉ | 20 || 20. பிரதான புருஷனின் ஈஸ்வரனே!
21. ஓம் நாரஸிம்ஹவபுஷே நம꞉ | 21.  நரஸிம்ம வடிவானவரே!
22. ஓம் ஶ்ரீமதே நம꞉ | 22. திருமார்பினில் லட்சுமி பிரியாதிருப்பதால் உள்ளத்தைக் கவரும் வடிவினரே!
23. ஓம் கேஶவாய நம꞉ | 23. வனப்புமிக்க கூந்தலை உடையவரே!
24. ஓம் புருஷோத்தமாய நம꞉ | 24. ஜீவான்மாக்களில் மேலானவரே!
25. ஓம் ஸர்வஸ்மை நம꞉ | 25. எல்லாமாகவே இருப்பவரே!
26. ஓம் ஶர்வாய நம꞉ | 26.  (சம்ஹார காலத்தில்) அனைத்தையும் அழிப்பவரே!
27. ஓம் ஶிவாய நம꞉ | 27. தூய்மையின் உருவானவரே!
28. ஓம் ஸ்தா²ணவே நம꞉ | 28. நிலையானவரே!
29. ஓம் பூ⁴தாத³யே நம꞉ | 29. தோன்றியது அனைத்திற்கும் மூலமானவரே!
30. ஓம் நித⁴யே(அ)வ்யயாய நம꞉ | 30. எல்லாப் பொருட்களும் அழியும் போதும் அழியாதவரே!
31. ஓம் ஸம்ப⁴வாய நம꞉ | 31. அறவோரை காத்து, தீயோரை அழித்திட, அவதாரம் புரிபவரே!
32. ஓம் பா⁴வனாய நம꞉ | 32. எல்லாப் பலன்களையும் அளிப்பவரே!
33. ஓம் ப⁴ர்த்ரே நம꞉ | 33. பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய் இருந்து தாங்குகிறவரே!
34. ஓம் ப்ரப⁴வாய நம꞉ | 34. உயர்ந்த ஜென்மம் உடையவரே!
35. ஓம் ப்ரப⁴வே நம꞉ | 35. அதீதமான திறமையுடையவரே!
36. ஓம் ஈஶ்வராய நம꞉ | 36. அனைத்தையும்அடக்கி ஆள்பவரே!
37. ஓம் ஸ்வயம்பு⁴வே நம꞉ | 37.  சுயம்புவாக தோன்றியவரே!
38. ஓம் ஶம்ப⁴வே நம꞉ | 38. சுகத்தை அளிப்பவரே!
39. ஓம் ஆதி³த்யாய நம꞉ | 39. சூரிய மண்டலத்தில் இருந்திடும் பரம புருஷரே!
40. ஓம் புஷ்கராக்ஷாய நம꞉ | 40. தாமரைக்கொப்பான கண்களை உடையவரே!
41. ஓம் மஹாஸ்வனாய நம꞉ | 41. கம்பீரமான நாதத்தை உடையவரே!
42. ஓம் அனாதி³னித⁴னாய நம꞉ | 42. முதலும் முடிவும் இல்லாதவரே!
43. ஓம் தா⁴த்ரே நம꞉ | 43. (ஆதி சேஷ வடிவில்) உலகைத் தாங்குபவரே!
44. ஓம் விதா⁴த்ரே நம꞉ | 44. எல்லா செயல்களையும் அவற்றின் பலன்களையும் விசேஷமாய் உண்டாக்குபவரே!
45. ஓம் தா⁴துருத்தமாய நம꞉ | 45. நான்முகனினும் மேலானவரே!
46. ஓம் அப்ரமேயாய நம꞉ | 46. (பிரமாணங்களுக்கு) ஆதாரங்களுக்கு எட்டாதவரே!
47. ஓம் ஹ்ருஷீகேஶாய நம꞉ | 47. இந்திரியங்களை அடக்கி ஆள்பவரே!
48. ஓம் பத்³மனாபா⁴ய நம꞉ | 48. பூமிக்கே காரணமான தாமரையை நாபியில் உடையவரே!
49. ஓம் அமரப்ரப⁴வே நம꞉ | 49. (தேவர்களின்) வானவரின் தலைவரே!
50. ஓம் விஶ்வகர்மணே நம꞉ | 50. பிரபஞ்சத்தை தோற்றுவித்தவரே!
51. ஓம் மனவே நம꞉ | 51. மந்திர வடிவினரே!
52. ஓம் த்வஷ்ட்ரே நம꞉ | 52. பிரளய சமயம் யாவையும் அழிப்பவரே!
53. ஓம் ஸ்த²விஷ்டா²ய நம꞉ | 53. மிகப்பருத்தவரே!
54. ஓம் ஸ்த²விராய த்⁴ருவாய நம꞉ | 54. மிகப் பழமையானவரே, நிலையானவரே!
55. ஓம் அக்³ரஹ்யாய நம꞉ | 55. இந்திரியங்களால் அறிய முடியாதவரே!
56. ஓம் ஶாஶ்வதாய நம꞉ | 56. எல்லாக் காலங்களிலும் இருப்பவரே!
57. ஓம் க்ருஷ்ணாய நம꞉ | 57. கரிய நிறம் படைத்தவரே!
58. ஓம் லோஹிதாக்ஷாய நம꞉ | 58. (தாமரை போல்) சிவந்த கண்கள் உடையவரே!
59. ஓம் ப்ரதர்த³னாய நம꞉ | 59. பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவரே!
60. ஓம் ப்ரபூ⁴தாய நம꞉ | 60. ஞானம், செல்வமென்ற குணங்கள் நிரம்பியவரே!
61. ஓம் த்ரிககுப்³தா⁴ம்னே நம꞉ | 61. மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவரே!
62. ஓம் பவித்ராய நம꞉ | 62. புனிதமாக்கும் முனிவராகவும், மந்திரமாகவும், தெய்வமாகவும் இருப்பவரே!
63. ஓம் மங்க³ளாய பரஸ்மை நம꞉ | 63. சிறந்த மங்கள வடிவினரே!
64. ஓம் ஈஶானாய நம꞉ | 64. எல்லாவற்றையும் அடக்கி ஆள்பவரே!
65. ஓம் ப்ராணதா³ய நம꞉ | 65. உயிர்களை நடத்துபவரே!
66. ஓம் ப்ராணாய நம꞉ | 66. உயிர்க்கு உயிரானவரே!
67. ஓம் ஜ்யேஷ்டா²ய நம꞉ | 67. எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவரே!
68. ஓம் ஶ்ரேஷ்டா²ய நம꞉ | 68. அனைத்தையும் கடந்து, உயர்வு கொண்டவரே!
69. ஓம் ப்ரஜாபதயே நம꞉ | 69. உயிர்த் தொகுதிக்கு தலைவரே!
70. ஓம் ஹிரண்யக³ர்பா⁴ய நம꞉ | 70. பொன்மயமான பிரம்மாண்டத்தில் உள்ள பிரம்ம வடிவமாக இருப்பவரே!
71. ஓம் பூ⁴க³ர்பா⁴ய நம꞉ | 71. பூமியை வயிற்றினுள் வைத்து காப்பவரே!
72. ஓம் மாத⁴வாய நம꞉ | 72. திருமகள் துணைவரே!
73. ஓம் மது⁴ஸூத³னாய நம꞉ | 73. மது என்ற அரக்கனை அழித்தவரே!
74. ஓம் ஈஶ்வராய நம꞉ | 74. சகல வலிமை உடையவரே!
75. ஓம் விக்ரமிணே நம꞉ | 75. எதிரிகளை அழித்திடும் ஆற்றல் கொண்டவரே!
76. ஓம் த⁴ன்வினே நம꞉ | 76. சிறந்த வில்லாளியாய் இருப்பவரே!
77. ஓம் மேதா⁴வினே நம꞉ | 77. அனைத்தையும் அறிந்திடும் நுண்ணறிவு உடையவரே!
78. ஓம் விக்ரமாய நம꞉ | 78. உலகினை அளந்தவரே!
79. ஓம் க்ரமாய நம꞉ | 79. அனைத்தையும் வியாபித்து இருப்பவரே!
80. ஓம் அனுத்தமாய நம꞉ | 80. தனக்கு நிகரில்லாதவரே!
81. ஓம் து³ராத⁴ர்ஷாய நம꞉ | 81. எதிரிகளால் பயமுறுத்த முடியாதவரே!
82. ஓம் க்ருதஜ்ஞாய நம꞉ | 82. சிறிய உபச்சாரத்தையும் உபகாரமாகக் கொண்டு அதனை என்றும் மறவாதவரே!
83. ஓம் க்ருதயே நம꞉ | 83. முயற்சியாய் இருப்பவரே!
84. ஓம் ஆத்மவதே நம꞉ | 84. தனது மகிமையையே தனக்கு ஆதாரமாகக் கொண்டவரே!
85. ஓம் ஸுரேஶாய நம꞉ | 85. தேவர்களுக்கு ஈஸ்வரரே!
86. ஓம் ஶரணாய நம꞉ | 86. துயருற்றவர்களின் துயரைப் போக்குபவரே!
87. ஓம் ஶர்மணே நம꞉ | 87. பரமானந்த வடிவினரே!
88. ஓம் விஶ்வரேதஸே நம꞉ | 88. உலகத்திற்கு வித்தாகியவரே!
89. ஓம் ப்ரஜாப⁴வாய நம꞉ | 89. பிரஜைகளின் உற்பத்திக்கு காரணமாகியவரே!
90. ஓம் அன்ஹே நம꞉ | 90. பகல் போன்ற ஒளியானவரே!
91. ஓம் ஸம்வத்ஸராய நம꞉ | 91. “காலம்” என்னும் கணக்கைத் தொடங்கியவரே!
92. ஓம் வ்யாளாய நம꞉ | 92. மகா சர்ப்பம் போன்று, எவராலும் பிடிக்க முடியாதவரே!
93. ஓம் ப்ரத்யயாய நம꞉ | 93. ஞான உருவமாகியவரே!
94. ஓம் ஸர்வத³ர்ஶனாய நம꞉ | 94. எல்லாமே கண்களாகக் கொண்டவரே (எல்லாவற்றையும் அறிகிறவரே!)
95. ஓம் அஜாய நம꞉ | 95. பிறப்பற்றவரே!
96. ஓம் ஸர்வேஶ்வராய நம꞉ | 96. எல்லோருக்கும் ஈஸ்வரரே!
97. ஓம் ஸித்³தா⁴ய நம꞉ | 97. எந்நாளும் எங்குமே நிறைந்திருப்பவரே!
98. ஓம் ஸித்³த⁴யே நம꞉ | 98. எல்லாவற்றிலும் சிறந்த பயனாய் இருப்பவரே!
99. ஓம் ஸர்வாத³யே நம꞉ | 99. எல்லாவற்றிற்குமே ஆதி காரணமானவரே!
100. ஓம் அச்யுதாய நம꞉ | 100. என்றும் வழுவாதவரே!
101. ஓம் வ்ருஷாகபயே நம꞉ | 101. தர்மரூபியாகவும் வராக வடிவமாகவும் உள்ளவரே!
102. ஓம் அமேயாத்மனே நம꞉ | 102. எல்லையை காணமுடியாதவரே!
103. ஓம் ஸர்வயோக³வினி꞉ஸ்ருதாய நம꞉ | 103. எல்லாத் தொடர்பும் நீங்கியவரே!
104. ஓம் வஸவே நம꞉ | 104. எல்லா உயிர்களிலும் வசிப்பவரே!
105. ஓம் வஸுமனஸே நம꞉ | 105. சிறந்த மனம் படைத்தவரே!
106. ஓம் ஸத்யாய நம꞉ | 106. உண்மையே வடிவானவரே!
107. ஓம் ஸமாத்மனே நம꞉ | 107. எல்லா உயிர்களிடத்தும் சமமான ஆத்மாவாய் இருப்பவரே!
108. ஓம் ஸம்மிதாய நம꞉ | 108. அளவே கூறமுடியாதவரே!
109. ஓம் ஸமாய நம꞉ | 109. எக்காலத்தும் சமமாய் இருப்பவரே! Om Samaya Namah।
110. ஓம் அமோகா⁴ய நம꞉ | 110. துதிப்பவர்க்கும், பூஜை செய்பவருக்கும் தானம் புரிபவருக்கும் பலன்களை வாரி வழங்குபவரே!
111. ஓம் புண்ட³ரீகாக்ஷாய நம꞉ | 111. புண்டரீகமென்ற பரமபதம்தனில் நிரந்தரமாய் உள்ளவர்க்கு கண்ணானவரே! (தாமரை போன்ற கண்களை உடையவரே!)
112. ஓம் வ்ருஷகர்மணே நம꞉ | 112. தர்ம நிமித்தமான செய்கையை உடையவரே!
113. ஓம் வ்ருஷாக்ருதயே நம꞉ | 113. தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவே அவதாரத்தில் வடிவேற்பவரே!
114. ஓம் ருத்³ராய நம꞉ | 114. துக்கத்தையும், துக்கத்தின் காரணத்தையும் ஓட்டுபவரே!
115. ஓம் ப³ஹுஶிரஸே நம꞉ | 115. பலசிரசுகளை கொண்ட வீராட புருஷரே!
116. ஓம் ப³ப்⁴ரவே நம꞉ | 116. உலகங்களைத் தாங்குபவரே!
117. ஓம் விஶ்வயோனயே நம꞉ | 117. அனைத்திற்கும் பிறப்பிடமானவரே!
118. ஓம் ஶுசிஶ்ரவஸே நம꞉ | 118. பாவங்களை நீக்கிடும் புனித நாமங்களை கொண்டவரே!
119. ஓம் அம்ருதாய நம꞉ | 119. அழிவில்லாதவரே!
120. ஓம் ஶாஶ்வதஸ்தா²ணவே நம꞉ | 120. என்றும் நிலையாய் இருப்பவரே!
121. ஓம் வராரோஹாய நம꞉ | 121. (தன்னை அடைந்தவர் திரும்பி வருதல் இல்லாத) சிறந்த ஏற்றமுடையவரே!
122. ஓம் மஹாதபஸே நம꞉ | 122. (சிருஷ்டியைப் பற்றிய) ஞானம் உள்ளவரே!
123. ஓம் ஸர்வகா³ய நம꞉ | 123. (அனைத்திற்கும் காரணமாதலால் காரியங்களில்) எங்கும் செல்கிறவரே!
124. ஓம் ஸர்வவித்³பா⁴னவே நம꞉ | 124. அனைத்தையும் அறிந்து பிரகாசிப்பவரே!
125. ஓம் விஷ்வக்ஸேனாய நம꞉ | 125. அசுரர் சேனைகளை பல திசைகளில் சிதறடிப்பவரே!
126. ஓம் ஜனார்த³னாய நம꞉ | 126. மேன்மக்களுக்கு ஐஸ்வர்யத்தையும், மோக்ஷத்தையும் அளிப்பவரே!
127. ஓம் வேதா³ய நம꞉ | 127. வேத வடிவாகியவரே!
128. ஓம் வேத³விதே³ நம꞉ | 128. வேதத்தின் உட்பொருளை உணர்பவரே!
129. ஓம் அவ்யங்கா³ய நம꞉ | 129. புலன்களுக்கு எட்டாதவரே!
130. ஓம் வேதா³ங்கா³ய நம꞉ | 130 || 130. வேதங்களை அங்கங்களாக கொண்டவரே!
131. ஓம் வேத³விதே³ நம꞉ | 131. வேதங்களை ஊடுருவிப் பார்ப்பவரே!
132. ஓம் கவயே நம꞉ | 132. அனைத்தையும் காண்பவரே!
133. ஓம் லோகாத்⁴யக்ஷாய நம꞉ | 133. அகிலங்களை மேற்பார்வை செய்பவரே!
134. ஓம் ஸுராத்⁴யக்ஷாய நம꞉ | 134. தேவர்களின் செய்கைகளையும் மேற்பார்வை செய்பவரே!
135. ஓம் த⁴ர்மாத்⁴யக்ஷாய நம꞉ | 135. தர்மதர்மங்களை தானே பார்ப்பவரே!
136. ஓம் க்ருதாக்ருதாய நம꞉ | 136. காரணமாகவும் காரியமாகவும் இருப்பவரே!
137. ஓம் சதுராத்மனே நம꞉ | 137.  நான்கு மூர்த்திகளை உடையவரே!
138. ஓம் சதுர்வ்யூஹாய நம꞉ | 138. நான்கு வியூகங்களை உடையவரே!
139. ஓம் சதுர்த்³ரம்ஷ்ட்ராய நம꞉ | 139. நான்கு தெற்றுப்பற்களை உடையவரே!
140. ஓம் சதுர்பு⁴ஜாய நம꞉ | 140 || 140. நான்கு தோள்களை உடையவரே!
141. ஓம் ப்⁴ராஜிஷ்ணவே நம꞉ | 141. ஒளி உருவானவரே!
142. ஓம் போ⁴ஜனாய நம꞉ | 142. பக்தர்களால் உணவு போல் சுகமாக ப்ரகிருதியை அனுபவிக்கப்படுபவரே!
143. ஓம் போ⁴க்த்ரே நம꞉ | 143. ப்ரகிருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவரே!
144. ஓம் ஸஹிஷ்ணவே நம꞉ | 144. தன்னிடமும் தனது அடியார்களிடமும் செய்திடும் குற்றங்களை பொறுத்தருளுபவரே!
145. ஓம் ஜக³தா³தி³ஜாய நம꞉ | 145. வையகம் தோன்றும் முன்பே ஜனித்தவரே!
146. ஓம் அனகா⁴ய நம꞉ | 146. பாவம் சிறிதுமே இல்லாதவரே!
147. ஓம் விஜயாய நம꞉ | 147. உலகம் யாவையும் வெற்றி கொள்பவரே!
148. ஓம் ஜேத்ரே நம꞉ | 148. உலகில் அனைத்திலும் மேம்பட்டு இருப்பதால் எதிலும் வெற்றி கொள்பவரே!
149. ஓம் விஶ்வயோனயே நம꞉ | 149. உலகனைத்தையும் உதிக்கும் இடமாய் கொண்டவரே!
150. ஓம் புனர்வஸவே நம꞉ | 150. சரீரம் முழுவதும் ஷேத்ரட்ஞராகி உறைபவரே!
151. ஓம் உபேந்த்³ராய நம꞉ | 151. இந்திரனுக்கும், உயர்வான தேவர் கோன் ஆனவரே!
152. ஓம் வாமனாய நம꞉ | 152. வாமனராய் வந்தவரே!
153. ஓம் ப்ராம்ஶவே நம꞉ | 153. மூவுலகையும் அளந்த சமயம் உயர்ந்தவரே!
154. ஓம் அமோகா⁴ய நம꞉ | 154. தம்மை அண்டியவரை வீணாகாமல் செய்பவரே!
155. ஓம் ஶுசயே நம꞉ | 155. (தம்மைத் தியானிப்பவரையும், துதிப்பவரையும், ஆராதிப்பவரையும்) சுத்தப்படுத்துபவரே!
156. ஓம் உர்ஜிதாய நம꞉ | 156. மிக்க வலிமை உடையவரே!
157. ஓம் அதீந்த்³ராய நம꞉ | 157. இந்திரனுக்கு மேம்பட்டவரே!
158. ஓம் ஸங்க்³ரஹாய நம꞉ | 158. (பிரளய காலத்தில் அனைத்தையும்) சம்ஹரிப்பவரே!
159. ஓம் ஸர்கா³ய நம꞉ | 159. சிருஷ்டிக்கு காரணமானவரே!
160. ஓம் த்⁴ருதாத்மனே நம꞉ | 160. தன்னையே தந்து ஆன்மாக்களை உய்விப்பவரே!
161. ஓம் நியமாய நம꞉ | 161. பிரம்மாதி தேவர்களையும், அவர்தம் பதவிகளில் நியமனம் செய்பவரே!
162. ஓம் யமாய நம꞉ | 162. (அந்தர்யாமியாய் இருந்து அனைத்தையும்) அடக்கி ஆள்பவரே!
163. ஓம் வேத்³யாய நம꞉ | 163. முக்தியை விரும்புவோரால் உணரத்தக்கவரே!
164. ஓம் வைத்³யாய நம꞉ | 164. சகல வித்தைகளையும் தெரிந்தவரே!
165. ஓம் ஸதா³யோகி³னே நம꞉ | 165. எப்போதும் பிரகாசிக்கும் ஸ்வரூபம் உள்ளவரே!
166. ஓம் வீரக்⁴னே நம꞉ | 166. அசுர வீரர்களை ஒழிப்பவரே!
167. ஓம் மாத⁴வாய நம꞉ | 167. வித்தைக்கு தலைவரே! (மாதவரே!)
168. ஓம் மத⁴வே நம꞉ | 168. தேனானவரே!
169. ஓம் அதீந்த்³ரியாய நம꞉ | 169. புலன்களுக்கு எட்டாதவரே!
170. ஓம் மஹாமாயாய நம꞉ | 170. மாயை வழி வந்தவரே!
171. ஓம் மஹோத்ஸாஹாய நம꞉ | 171. மிக்க ஊக்கமுடையவரே!
172. ஓம் மஹாப³லாய நம꞉ | 172. மிக்க வலிமைவுடையவரே!
173. ஓம் மஹாபு³த்³த⁴யே நம꞉ | 173. மிக்க ஞானமுள்ளவரே!
174. ஓம் மஹாவீர்யாய நம꞉ | 174. மிக்க வீர்யமுடையவரே!
175. ஓம் மஹாஶக்தயே நம꞉ | 175. மிக்க சாமர்த்தியம் உள்ளவரே!
176. ஓம் மஹாத்³யுதயே நம꞉ | 176. மிக்க ஒளி பொருந்தியவரே!
177. ஓம் அனிர்தே³ஶ்யவபுஷே நம꞉ | 177. இது இவ்விதம் என்று சுட்டி காட்டமுடியாத ஸ்வரூபம் உடையவரே!
178. ஓம் ஶ்ரீமதே நம꞉ | 178. ஈஸ்வரத் தன்மையாகிய திருவுடன் கூடியவரே!
179. ஓம் அமேயாத்மனே நம꞉ 179. அளவிட முடியாத ஞானமுடையவரே!
180. ஓம் மஹாத்³ரித்⁴ருக்ஷே நம꞉ | 180. மந்த்ர மலை, கோவர்த்தனகிரி போன்ற பெரிய மலைகளை தாங்கியவரே!
181. ஓம் மஹேஷ்வாஸாய நம꞉ | 181. பெரிய வில்லாளி வீரரே!
182. ஓம் மஹீப⁴ர்த்ரே நம꞉ | 182. வராகமாய் வந்து, புவனமதை தூக்கியவரே,
183. ஓம் ஶ்ரீனிவாஸாய நம꞉ | 183. ஸ்ரீதேவி நித்ய வாசம் செய்யும் திருமார்பை உடையவரே!
184. ஓம் ஸதாங்க³தயே நம꞉ | 184. சாத்வீக குணமுள்ளவருக்கு புகலிடமானவரே!
185. ஓம் அனிருத்³தா⁴ய நம꞉ | 185. எவராலும் தடுத்திட இயலாதவரே!
186. ஓம் ஸுரானந்தா³ய நம꞉ | 186. தேவர்களுக்கு ஆனந்தம் தருபவரே!
187. ஓம் கோ³விந்தா³ய நம꞉ | 187. “கோ” என்னும் பூமியை தூக்கியவரே! (பசுக்களுக்குத் தலைவரே!)
188. ஓம் கோ³விதா³ம்பதயே நம꞉ | 188. வேத வாக்கை அறிந்தவர்களுக்குத் தலைவரே!
189. ஓம் மரீசயே நம꞉ | 189. ஒளி வடிவாகியவரே!
190. ஓம் த³மனாய நம꞉ 190. (யமன் முதலிய வடிவில் நின்று) தண்டிக்கும் தன்மை உள்ளவரே!
191. ஓம் ஹம்ஸாய நம꞉ | 191. “அகம் சக:” என தன்மையை தன் வயமாக எண்ணுவோரின் சம்சார பீதியை அகற்றுபவரே! (எல்லா தேகங்களிலும் ஆத்மாவாக இருப்பவரே!)
192. ஓம் ஸுபர்ணாய நம꞉ | 192. பேரறிவு, மோட்ச இன்பமென்ற பொலிவான சிறகுகளை உடையவரே!
193. ஓம் பு⁴ஜகோ³த்தமாய நம꞉ | 193. அரவணையின் மேல் பள்ளி கொண்டிருப்பவரே!
194. ஓம் ஹிரண்யனாபா⁴ய நம꞉ | 194. தங்கம் போன்ற அழகான நாபியை உடையவரே!
195. ஓம் ஸுதபஸே நம꞉ |. 195. நரநாராயணனாகி, உயர்வான தவம் புரிந்தவரே!
196. ஓம் பத்³மனாபா⁴ய நம꞉ | 196. பத்மம் போன்ற நாபி உடையவரே!
197. ஓம் ப்ரஜாபதயே நம꞉ | 197. நாபித் தாமரையில் தோன்றிய பிரம்மா போன்றோருக்கு தலைவரே!
198. ஓம் அம்ருத்யவே நம꞉ | 198. அழிவில்லாதவரே!
199. ஓம் ஸர்வத்³ருஶே நம꞉ | 199. அனைத்தையும் பார்ப்பவரே!
200. ஓம் ஸிம்ஹாய நம꞉ | 200. பாவிகளை இம்சிப்பவரே!
201. ஓம் ஸந்தா⁴த்ரே நம꞉ | 201. பக்தர்களைத் தம்மிடம் கூட்டிக் கொள்பவரே!
202. ஓம் ஸந்தி⁴மதே நம꞉ | 202. பாவபுண்ணியங்களை அனுபவிப்பவரும், தானாகவே ஆனவரே!
203. ஓம் ஸ்தி²ராய நம꞉ | 203. எப்போதும் ஸ்திரமாய் இருப்பவரே! Om Sthiraya Namah।
204. ஓம் அஜாய நம꞉ | 204. எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து இருப்பவரே!
205. ஓம் து³ர்மர்ஷணாய நம꞉ | 205. எதிரிகளால் அடக்கிடவும், தாக்கிடவும் முடியாதவரே!
206. ஓம் ஶாஸ்த்ரே நம꞉ | 206. கட்டளையிட்டு நடத்துகிறவரே!
207. ஓம் விஶ்ருதாத்மனே நம꞉ | 207. வாய்மை, அறிவு என்ற குணங்களால் வேதத்தில் விகுதியாக சொல்லப்பட்டவரே!
208. ஓம் ஸுராரிக்⁴னே நம꞉ | 208. தீவினையாளர்களை வதைப்பவரே!
209. ஓம் கு³ருவே நம꞉ | 209. சகல வித்தைகளையும் உபதேஷம் செய்பவரே!
210. ஓம் கு³ருதமாய நம꞉ | 210. முக்திநிறை உபதேசிக்கும் குருவாய் விளங்குபவரே!
211. ஓம் தா⁴ம்னே நம꞉ | 211. ஓளியாய் இருப்பவரே!
212. ஓம் ஸத்யாய நம꞉ | 212. சத்தியமே வடிவாகியவரே!
213. ஓம் ஸத்யபராக்ரமாய நம꞉ | 213. சத்திய பராக்கிரமம் உடையவரே!
214. ஓம் நிமிஷாய நம꞉ | 214. யோக நித்திரையால், கண்களை மூடியுள்ளவரே!
215. ஓம் அனிமிஷாய நம꞉ | 215. எக்காலமும் விழிப்புடன் இருப்பவரே!
216. ஓம் ஸ்ரக்³வீணே நம꞉ | 216. பஞ்சதன் மாத்திரையான வைஜெயந்தி மாலை அணிந்தவரே!
217. ஓம் வாசஸ்பதயே உதா³ரதி⁴யே நம꞉ | 217. வித்தைக்கு அதிபதியான சர்வக்ஞரே!
218. ஓம் அக்³ரண்யே நம꞉ | 218. (முமூக்ஷூக்களை) உயர் பதவிக்கு அழைத்துச் செல்பவரே!
219. ஓம் க்³ராமண்யே நம꞉ | 219. ஐம்பெரும் பூதங்களை நியமிப்பவரே!
220. ஓம் ஶ்ரீமதே நம꞉ | 220. பேரொளியாய் பிரகாசிப்பவரே!
221. ஓம் ந்யாயாய நம꞉ | 221. விருப்பு வெறுப்பில்லாத, நியாயமான, தெள்ளிய உள்ளம் படைத்தவரே!
222. ஓம் நேத்ரே நம꞉ | 222. உலகம் என்னும் எந்திரத்தை நடத்துகிறவரே!
223. ஓம் ஸமீரணாய நம꞉ | 223. வாயுரூபியாக எல்லாவற்றையும் அசையும்படி செய்பவரே!
224. ம் ஸஹஸ்ரமூர்த்⁴னே நம꞉ | 224. கணக்கற்ற தலைகளை உடையவரே!
225. ஓம் விஶ்வாத்மனே நம꞉ | 225. எல்லாவற்றிற்கும் ஆத்மாவாய் இருப்பவரே!
226. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம꞉ | 226. ஆயிரம் கண்களை உடையவரே!
227. ஓம் ஸஹஸ்ரபதே³ நம꞉ | 227. ஆயிரம் கால்களை உடையவரே!
228. ஓம் ஆவர்தனாய நம꞉ | 228. வாழ்கை சக்கரத்தை சுழல செய்பவரே!
229. ஓம் நிவ்ருத்தாத்மனே நம꞉ | 229. குடும்பற்றில்லாத குணவானே!
230. ஓம் ஸம்வ்ருதாய நம꞉ | 230. அறியாமையால் மறைக்கப்பட்டவரே!
231. ஓம் ஸம்ப்ரமர்த³னாய நம꞉ | 231. தம்மையே துதிப்பவரின் மன இருளை அகற்றுபவரே!
232. ஓம் அஹ꞉ஸம்வர்தகாய நம꞉ | 232. பகலை தோற்றுவிக்கும், கதிரவன் வடிவினரே!
233. ஓம் வஹ்னயே நம꞉ | 233. அக்னி வடிவினரே!
234. ஓம் அனிலாய நம꞉ | 234. காற்றாகவும் ஆனவரே!
235. ஓம் த⁴ரணீத⁴ராய நம꞉ | 235. (ஆதிசேஷனாகவும் வராஹ மூர்த்தியாகவும்) பூமியைத் தாங்குபவரே!
236. ஓம் ஸுப்ரஸாதா³ய நம꞉ | 236. அருள் நிரம்பியவரே!
237. ஓம் ப்ரஸன்னாத்மனே நம꞉ | 237. நல்லோரை காத்திடும் களங்கமற்றவரே!
238. ஓம் விஶ்வத்⁴ருஷே நம꞉ | 238. (குணத்தையும், குற்றத்தையும் பாராமல் உயிர்கள் உய்வதையே கருதி) உலகைப் படைப்பவரே!
239. ஓம் விஶ்வபு⁴ஜே நம꞉ | 239. உலகை சம்ஹார காலத்தில் புசிப்பவரே!
240. ஓம் விப⁴வே நம꞉ | 240. பலவாறான வடிவு கொண்டவரே!
241. ஓம் ஸத்கர்த்ரே நம꞉ | 241. நல்லோரைப் போற்றி பூஜிப்பவரே!
242. ஓம் ஸத்க்ருதாய நம꞉ | 242. நல்லோரால் பூஜை செய்யப்படுபவரே!
243. ஓம் ஸாத⁴வே நம꞉ | 243. நியாயமான வழியில் நடப்பவரே!
244. ஓம் ஜஹ்னவே நம꞉ | 244. சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவரே!
245. ஓம் நாராயணாய நம꞉ | 245. தோன்றும் அனைத்திற்கும் உறைவிடம் ஆகியவரே!
246. ஓம் நராய நம꞉ | 246. வழி காட்டுகிறவரே!
247. ஓம் அஸங்க்²யேயாய நம꞉ | 247. கணக்குக்கு கட்டுப்படாதவரே!
248. ஓம் அப்ரமேயாத்மனே நம꞉ | 248. ஞானத்திற்குமே எட்டாதவரே!
249. ஓம் விஶிஷ்டாய நம꞉ | 249. அனைத்திற்கும் மேலானவரே!
250. ஓம் ஶிஷ்டக்ருதே நம꞉ | 250. கட்டளை இடுபவரே!
251. ஓம் ஶுசயே நம꞉ | 251. மாசற்றவரே!
252. ஓம் ஸித்³தா⁴ர்தா²ய நம꞉ | 252. வேண்டியதனைத்தும் தமக்குள் பெற்றிருப்பவரே!
253. ஓம் ஸித்³த⁴ஸங்கல்பாய நம꞉ | 253. எண்ணியதனைத்தும் எண்ணிவாறு எய்துபவரே!
254. ஓம் ஸித்³தி⁴தா³ய நம꞉ | 254.  காரிய சித்தியை அளிப்பவரே!
255. ஓம் ஸித்³தி⁴ஸாத⁴னாய நம꞉ | 255. சித்திக்கே ஆதாரமானவரே!
256. ஓம் வ்ருஷாஹிணே நம꞉ | 256. பகல் போன்ற ஒளி தரும் கொடை வடிவானவரே!
257.  ஓம் வ்ருஷபா⁴ய நம꞉ | 257. அடியவர் விரும்புவதை வர்ஷிப்பவரே!
258. ஓம் விஷ்ணவே நம꞉ | 258. (வாமன அவதாரத்தில்) உலகங்களை அளந்தவரே!
259. ஓம் வ்ருஷபர்வணே நம꞉ | 259.  தர்ம வடிவமான படிகளால் அடைய கூடியவரே!
260. ஓம் வ்ருஷோத³ராய நம꞉ | 260. தர்மத்தையே வயிறாக உடையவரே!
261. ஓம் வர்த⁴னாய நம꞉ | 261. போஷித்து வளர்ப்பவரே!
262. ஓம் வர்த⁴மானாய நம꞉ |. 262. பிரபஞ்ச ரூபமாக தாமே வளர்பவரே!
263. ஓம் விவிக்தாய நம꞉ | 263. (பிரபஞ்ச ரூபமாக இருந்தும்) ஒன்றிலும் சேராமல் இருப்பவரே!
264. ஓம் ஶ்ருதிஸாக³ராய நம꞉ | 264. சுருதிகளாகிய நதிகள் நாடியடையும் கடல் போன்றவரே!
265. ஓம் ஸுபு⁴ஜாய நம꞉ | 265. சிறந்த புஜங்களை உடையவரே!
266. ஓம் து³ர்த⁴ராய நம꞉ | 266. எல்லாவற்றையும் தாங்குபவராய்த், தான் ஒருவரால் தாங்கப்படாமல் இருப்பவரே!
267. ஓம் வாக்³மினே நம꞉ | 267. வேத ரூபமான சிறந்த வாக்கை உடையவரே!
268. ஓம் மஹேந்த்³ராய நம꞉ | 268. ஈஸ்வரருக்கும் ஈஸ்வரரே!
269. ஓம் வஸுதா³ய நம꞉ | 269. செல்வத்தை கொடுப்பவரே!
270. ஓம் வஸவே நம꞉ | 270. செல்வமாய் இருப்பவரே!
271. ஓம் நைகரூபாய நம꞉ 271. வடிவம் ஒன்றுமில்லாதவரே!
272. ஓம் ப்³ருஹத்³ரூபாய நம꞉ | 272. (பூமியை தாங்கும்படி பெரிதான வராஹம் போன்ற) பெரிய வடிவம் கொண்டவரே!
273. ஓம் ஶிபிவிஷ்டாய நம꞉ | 273. ஒளி கிரணங்களில் ஊடுருவி இருப்பவரே!
274. ஓம் ப்ரகாஶனாய நம꞉ | 274. எல்லாவற்றையும் பிரகாசிக்க செய்பவரே!
275. ஓம் ஓஜஸ்தேஜோத்³யுதித⁴ராய நம꞉ | 275. பலத்தையும், பராக்கிரமத்தையும், ஒளியையும் உடையவரே!
276. ஓம் ப்ரகாஶாத்மனே நம꞉ | 276. எங்கும் பிரகாசிக்கும் இயல்புடையவரே!
277. ஓம் ப்ரதாபனாய நம꞉ | 277. (சூரியன் போன்றவற்றால்) உஷ்ணம் தருபவரே!
278. ஓம் ருத்³தா⁴ய நம꞉ | 278. (தர்மம், ஞானம், வைராக்கியம் போன்ற குணங்கள்) செழிப்பாக நிரம்பிருப்பவரே!
279. ஓம் ஸ்பஷ்டாக்ஷராய நம꞉ | 279. உதாதஸ் வரமுள்ள “ஓம்” என்ற எழுத்தால் குறிப்பிடப்படுபவரே! (ஓம், தத், சத் என்று பிரம்மத்திற்கு மூன்று வகையான குறிப்பு பெயர்கள் கூறப்பட்டுள்ளது)
280. ஓம் மந்த்ராய நம꞉ | 280. மந்திரங்களினால் உணரத்தக்கவரே!
281. ஓம் சந்த்³ராம்ஶவே நம꞉ | 281. சந்திர கிரணம் போன்று ஆனந்தம் தருபவரே!
282. ஓம் பா⁴ஸ்கரத்³யுதயே நம꞉ | 282. சூரியனைப் போல பிரகாசமானவரே!
283. ஓம் அம்ருதாம்ஶூத்³ப⁴வாய நம꞉ | 283. (பாற்கடலிலிருந்து) சந்திரனை தோன்றச் செய்தவரே!
284. ஓம் பா⁴னவே நம꞉ | 284. தாமே பிரகாசிப்பவரே!
285. ஓம் ஶஶிபி³ந்த³வே நம꞉ | 285. (உயிர்களை போஷிப்பதில்) சந்திரன் போன்றவரே!
286. ஓம் ஸுரேஶ்வராய நம꞉ | 286. நன்மையளிக்கும் அனைவர்க்கும் தலைவரே!
287. ஓம் ஔஷதா⁴ய நம꞉ | 287. பிறவிப் பிணிக்கு மருந்தாக்கியவரே!
288. ஓம் ஜக³தஸ்ஸேதவே நம꞉ | 288. உலகைக் கரையேற்றுபவரே!  \
289. ஓம் ஸத்யத⁴ர்மபராக்ரமாய நம꞉ 289. உண்மை, ஞானம் முதலிய குணங்களும் வீரச் செயல்களும் உடையவரே!
290. ஓம் பூ⁴தப⁴வ்யப⁴வன்னாதா²ய நம꞉ | 290. முக்காலங்களுக்கும் இறைவன் ஆனவரே!
291. ஓம் பவனாய நம꞉ | 291. காற்றாகி சுத்தமாக்குபவரே!
292. ஓம் பாவனாய நம꞉ | 292. காற்றினை வீசும்படி செய்பவரே!
293. ஓம் அனலாய நம꞉ | 293. அனலாய் இருப்பவரே!
294. ஓம் காமக்⁴னே நம꞉ | 294. பக்தர்களுக்கு சம்சார பற்றுகளை (காமம்) போக்குபவரே!
295. ஓம் காமக்ருதே நம꞉ | 295. காமன் எனப்படும் பிரத்யுனனை உண்டாக்கிய தந்தையானவரே!
296. ஓம் காந்தாய நம꞉ | 296. பொலிவுடன் கவர்ச்சி மிக்கவரே!
297. ஓம் காமாய நம꞉ | 297. எல்லோராலும் விரும்பப்படுகிறவரே!
298. ஓம் காமப்ரதா³ய நம꞉ | 298. வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அளிப்பவரே!
299. ஓம் ப்ரப⁴வே நம꞉ | 299. உயர்ந்து விளங்குபவரே!
300. ஓம் யுகா³தி³க்ருதே நம꞉ | 300. யுகம் போன்ற கால மாறுபாடுகளை ஏற்படுத்தியவரே!
301. ஓம் யுகா³வர்தாய நம꞉ | 301. யுகங்களை மறுபடி மறுபடி உண்டாக்குபவரே!
302. ஓம் நைகமாயாய நம꞉ | 302. பலவித பொய் தோற்றங்களை அணிபவரே!
303. ஓம் மஹாஶனாய நம꞉ 303. (சம்ஹார காலத்தில் அனைத்தையும் விழுங்குவதால்) பெருந்தீனி உடையவரே!
304. ஓம் அத்³ருஶ்யாய நம꞉ | 304. எவர் கண்ணுக்கும் புலப்படாதவரே!
305. ஓம் வ்யக்தரூபாய நம꞉ | 305. யோகிகளுக்குத் தோன்றுபவரே!
306. ஓம் ஸஹஸ்ரஜிதே நம꞉ | 306. ஆயிரக்கணக்கான அசுரர்களை வெல்பவரே!
307. ஓம் அனந்தஜிதே நம꞉ | 307. எல்லா இடத்திலும், எல்லா உயிர்களையும் வெல்பவரே!
308. ஓம் இஷ்டாய நம꞉ | 308. (ஆனந்த ரூபியாய் இருப்பதால்) எல்லோருக்கும் இஷ்டமானவரே!
309. ஓம் விஶிஷ்டாய நம꞉ | 309. (அந்தர்யாமியாய் இருப்பதாலும் தம் உயர்வினாலும்) மிக்கார் இல்லாதவரே!
310. ஓம் ஶிஷ்டேஷ்டாய நம꞉ | 310. ஞானிகளால் பூஜிக்கப்படுபவரே!
311. ஓம் ஶிக²ண்டி³னே நம꞉ | 311. மயில் தோகையை அணிந்தவரே!
312. ஓம் நஹுஷாய நம꞉ | 312. மாயையால் உலகைக்கட்டுகிறவரே!
313. ஓம் வ்ருஷாய நம꞉ | 313. தர்ம வடிவினரே!
314. ஓம் க்ரோத⁴க்³னே நம꞉ | 314. சாதுக்களின் கோபத்தை ஒழிப்பவரே!
315. ஓம் க்ரோத⁴க்ருத்கர்த்ரே நம꞉ | 315. கோபம் கொள்ளும் தைத்தியரை வெட்டி எரிபவரே!
316. ஓம் விஶ்வபா³ஹவே நம꞉ | 316. எங்கும் கைகளை உடையவரே!
317. ஓம் மஹீத⁴ராய நம꞉ | 317. பூமியைத் தாங்குபவரே!
318. ஓம் அச்யுதாய நம꞉ | 318. மாறுதல் அற்றவரே! (மறைந்திருத்தல், வெளி வருதல், ஓங்கி வளர்தல், வளர்தலின் முடிவடைதல், தேய ஆரம்பித்தல், முற்றுத்தேய்ந்துவிடல் என்பன ஆறு விதமான மாறுதல்கள்)
319. ஓம் ப்ரதி²தாய நம꞉ | 319. பிரசித்தி பெற்றவரே!
320. ஓம் ப்ராணாய நம꞉ | 320. அனைத்து உயிர்களிலும் காற்றாக இருப்பவரே!
321. ஓம் ப்ராணதா³ய நம꞉ | 321. அனைத்து உயிர்களுக்கும் காற்றை கொடுப்பவரே!
322. ம் வாஸவானுஜாய நம꞉ | 322. இந்திரனுக்கு தம்பியாகப் பிறந்தவரே!
323. ஓம் அபாம்நித⁴யே நம꞉ | 323. கடலாய் இருப்பவரே!
324. ஓம் அதி⁴ஷ்டா²னாய நம꞉ | 324. உலகிற்கு இருப்பிடமாய் இருப்பவரே!
325. ஓம் அப்ரமத்தாய நம꞉ | 325. (கர்ம பலனை அளிப்பதில்/ நீதி அளிப்பதில்) கவன குறைவு இல்லாதவரே!
326. ஓம் ப்ரதிஷ்டி²தாய நம꞉ | 326. (தமக்கு வேறு ஆதாரம் வேண்டாதபடி, தம் மஹிமையிலேயே) நிலை பெற்றிருப்பவரே!
327. ஓம் ஸ்கந்தா³ய நம꞉ | 327. அமுதாகப் பெருகுகிறவரே!
328. ஓம் ஸ்கந்த³த⁴ராய நம꞉ | 328. தர்ம மார்க்கத்தை தாங்குகிறவரே!
329. ஓம் து⁴ர்யாய நம꞉ | 329. உலகின் பாரத்தை தாங்குகிறவரே!
330. ஓம் வரதா³ய நம꞉ | 330. வரங்களை அளிப்பவரே!
331. ஓம் வாயுவாஹனாய நம꞉ | 331. காற்றையும் இயக்குபவரே!
332. ஓம் வாஸுதே³வாய நம꞉ | 332. அனைத்திலும் உறைந்து விளையாடுபவரே!
333. ஓம் ப்³ருஹத்³பா⁴னவே நம꞉ | 333. விஸ்தாரமாக எங்கும் பரவி நிற்கும் கிரணங்களை உடையவரே!
334. ஓம் ஆதி³தே³வாய நம꞉ | 334. உலகிற்கு முதற் காரணமாய் பிரகாசிப்பவரே!
335. ஓம் புரந்த³ராய நம꞉ | 335. அசுரர்களின் புரங்களை பிளந்தவரே!
336. ஓம் அஶோகாய நம꞉ | 336. சோகமற்றவரே!
337. ஓம் தாரணாய நம꞉ | 337. பிறவிக் கடலை தாண்டுவதற்கு உதவுபவரே!
338. ஓம் தாராய நம꞉ | 338. சம்சாரக் கடலிலுள்ள கொடிய பயங்களினின்று கரையேற்றுகிறவரே!
339. ஓம் ஶூராய நம꞉ | 339. பராக்கிரமம் உடையவரே!
340. ஓம் ஶௌரயே நம꞉ | 340. சூரர் என்ற பெயர் கொண்ட வசுதேவருடைய புத்திரரே!
341. ஓம் ஜனேஶ்வராய நம꞉ | 341. ஜெனித்தவர்க்கு எல்லாம் ஈஸ்வரரே!
342. ஓம் அனுகூலாய நம꞉ | 342. அனைவருக்கும் (ஆத்மாவாய் இருப்பதால்) அனுகூலமாய் இருப்பவரே!
343. ஓம் ஶதாவர்தாய நம꞉ | 343. (தர்மத்தை ரட்ஷிப்பதற்காக) அநேக அவதாரங்களை செய்பவரே!
344. ஓம் பத்³மினே நம꞉ | 344. தாமரையை கையில் தரித்திருப்பவரே!
345. ஓம் பத்³மனிபே⁴க்ஷணாய நம꞉ | 345. தாமரை போன்ற இரு கண்களை உடையவரே!
346. ஓம் பத்³மனாபா⁴ய நம꞉ | 346. பதினான்கு உலகங்களான, பத்மத்தை நாபியில் கொண்டவரே,
347. ஓம் அரவிந்தா³க்ஷாய நம꞉ | 347. தாமரை மலர் போல அழகிய கண்களை உடையவரே!
348. ஓம் பத்³மக³ர்பா⁴ய நம꞉ | 348. உள்ளத் தாமரையில் உபாசிக்கப்படுபவரே!
349. ஓம் ஶரீரப்⁴ருதே நம꞉ | 349. தமது   மாயையினால் அநேக சரீரங்களை எடுப்பவரே!
350. ஓம் மஹர்த⁴யே நம꞉ | 350. பெருஞ் செல்வமுடையவரே!
351. ஓம் ருத்³தா⁴ய நம꞉ | 351. பிரபஞ்ச ரூபமாக விருத்தியடைகிறவரே!
352. ஓம் வ்ருத்³தா⁴த்மனே நம꞉ | 352. அனாதியாய் இருப்பதால் முதியவரே!
353. ஓம் மஹாக்ஷாய நம꞉ | 353. பெரிய கண்களை உடையவரே!
354. ஓம் க³ருட³த்⁴வஜாய நம꞉ | 354. கருடக் கொடியை உடையவரே!
355. ஓம் அதுலாய நம꞉ | 355. ஒப்பற்றவரே!
356. ஓம் ஶரபா⁴ய நம꞉ | 356. சரீரங்களில் ஆத்மாவாய் உறைபவரே!
357. ஓம் பீ⁴மாய நம꞉ | 357. எல்லோரும் தம்மிடம் பயந்து நடக்கும்படி இருப்பவரே!
358. ஓம் ஸமயஜ்ஞாய நம꞉ | 358. சமயம் எனப்படும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளை அறிந்து ஏற்றுக் கொள்பவரே!
359. ஓம் ஹவிர்ஹரயே நம꞉ | 359. யாகத்தில் ஹவிர்பாகங்களை எடுத்துக் கொள்பவரே!
360. ஓம் ஸர்வலக்ஷணலக்ஷண்யாய நம꞉ | 360. எல்லாப் பிரமாணங்களாலும் அறியப்படுபவரே!
361. ஓம் லக்ஷ்மீவதே நம꞉ 361. லக்ஷ்மி எப்போதும் தம்மை விட்டு விலகாது இருப்பவரே!
362. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம꞉ | 362. எப்போதும் யுத்தங்களில் ஜெயிப்பவரே!
363. ஓம் விக்ஷராய நம꞉ | 363. அழிவில்லாதவரே!
364. ஓம் ரோஹிதாய நம꞉ | 364. ரோஹிதமென்ற சிவப்பு மீனாகத் தோன்றியவரே!
365. ஓம் மார்கா³ய நம꞉ | 365. முக்தி நிலை அடைய விருப்பம் உள்ளவர்களால் தேடப்படுபவரே!
366. ஓம் ஹேதவே நம꞉ | 366. உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருப்பவரே!
367. ஓம் தா³மோத³ராய நம꞉ | 367. கயிற்றால் யசோதையால் வயிற்றிலே கட்டப்பட்டவரே! (தாமோதரரே!)
368. ஓம் ஸஹாய நம꞉ | 368. எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்பவரே!
369. ஓம் மஹீத⁴ராய நம꞉ | 369. பூமியைத் தாங்குபவரே!
370. ஓம் மஹாபா⁴கா³ய நம꞉ | 370. எல்லா யக்ஞயங்களிலும் பெரும்பங்கை ஏற்றுக் கொள்பவரே!
371. ஓம் வேக³வதே நம꞉ |. 371. மிகுந்த விவேகமுள்ளவரே!
372. ஓம் அமிதாஶனாய நம꞉ | 372. அளவில்லாத உணவை உண்டவரே!
373. ஓம் உத்³ப⁴வாய நம꞉ | 373. உலகின் உற்பத்திக்கு காரணமானவரே!
374. ஓம் க்ஷோப⁴ணாய நம꞉ | 374. சிருஷ்டி காலத்தில் பிரகிருதியையும், புருஷனையும் உட்புகுந்து கலக்குபவரே!
375. ஓம் தே³வாய நம꞉ | 375. சிருஷ்டி முதலியவற்றால் மகிழ்ந்து விளையாடுபவரே!
376. ஓம் ஶ்ரீக³ர்பா⁴ய நம꞉ | 376. திருமகளைக் கர்ப்பத்தைப் போல் காப்பவரே!
377. ஓம் பரமேஶ்வராய நம꞉ | 377. மேன்மை பொருந்திய பரமேஸ்வரனே!
378. ஓம் கரணாய நம꞉ | 378. உலகின் உற்பத்திக்கு கருவியாய் இருப்பவரே!
379. ஓம் காரணாய நம꞉ | 379. உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருப்பவரே!
380. ஓம் கர்த்ரே நம꞉ | 380. சுதந்திரமாய் இருப்பவரே!
381. ஓம் விகர்த்ரே நம꞉ | 381. அதிசயமான புவனங்களை தோற்றுவித்தவரே!
382. ஓம் க³ஹனாய நம꞉ | 382. தனது சுயவடிவமும், சக்தியும், செயல்களும், எவரும் உணரமுடியாமல் இருப்பவரே!
383. ஓம் கு³ஹாய நம꞉ | 383. மாயையினால் எல்லாவற்றையும் மறைப்பவரே!
384. ஓம் வ்யவஸாயாய நம꞉ | 384. ஞான வடிவாய் இருப்பவரே!
385. ஓம் வ்யவஸ்தா²னாய நம꞉ | 385. எல்லா விளைவுகளுக்கும் அடிப்படையாக காணப்படுபவரே!
386. ஓம் ஸம்ஸ்தா²னாய நம꞉ | 386. எல்லாம் தம்மிடம் பிரளயமாகும்படி செய்பவரே!
387. ஓம் ஸ்தா²னதா³ய நம꞉ | 387. (துருவனுக்கு அழியாததான துருவ பதத்தை அளித்தாற்போல்) அவரவர் தகுதிக்கேற்ற பதவிகளை அளிப்பவரே!
388. ஓம் த்⁴ருவாய நம꞉ | 388. நிலையானவரே!
389. ஓம் பரர்த⁴யே நம꞉ | 389. (தமது மஹிமையை) எல்லோரும் வெளிப்படையாய் கண்ணால் காணும்படி அவதரிப்பவரே!
390. ஓம் பரமஸ்பஷ்டாய நம꞉ | 390. அழகின் எல்லை நிலமாகவும், ஸ்வயம்பிரகாசமாயும் இருப்பவரே!
391. ஓம் துஷ்டாய நம꞉ | 391. (அடியவர் அர்ப்பணிக்கும்) சிறிய பொருளிலும் பேரானந்தம் கொள்பவரே!
392. ஓம் புஷ்டாய நம꞉ | 392. எப்போதும் பூர்ணமானவரே!
393. ஓம் ஶுபே⁴க்ஷணாய நம꞉ | 393. மங்கள கடாட்க்ஷம் உடையவரே!
394. ஓம் ராமாய நம꞉ | 394. எல்லாருமே தன்னிடம் ஆனந்தமுடன் இருப்பவரே!
395. ஓம் விராமாய நம꞉ | 395. எல்லா உயிர்களுக்கும் முடியும் இடமாய் இருப்பவரே!
396. ஓம் விரஜாய நம꞉ | 396. உலக இன்பங்களில் ஆசை இல்லாதவரே!
397. ஓம் மார்கா³ய நம꞉ | 397. அனைவருக்கும் களங்கமில்லாத (முக்திக்கு) வழியை காட்டுபவரே!
398. ஓம் நேயாய நம꞉ | 398. தத்துவ அறிவினால் உயிரினை பரமாத்மாவாகும்படி அழைத்துக் கொள்பவரே!
399. ஓம் நயாய நம꞉ | 399. எல்லாவற்றையும் நடத்துகிறவரே!
400. ஓம் அனயாய நம꞉ | 400. தாம் யாராலும் நடத்தப்படாதவரே!
401. ஓம் வீராய நம꞉ | 401. பராக்கிரமம் உள்ளவரே!
402. ஓம் ஶக்திமதாம் ஶ்ரேஷ்டா²ய நம꞉ | 402. வலிமைமிக்க பிரம்மன் போன்ற தேவர்களுக்கும், மிகவும் வலிமை படைத்தவரே!
403. ஓம் த⁴ர்மாய நம꞉ | 403. எல்லா தர்மங்களாலும் ஆராதிக்கப்படுபவரே!
404. ஓம் த⁴ர்மவிது³த்தமாய நம꞉ | 404. தர்மம் தெரிந்தவர்களில் சிறந்தவரே!
405. ஓம் வைகுண்டா²ய நம꞉ | 405. சிருஷ்டி சமயம் பஞ்சபூதங்களை ஒன்றாக்கி வைத்திருப்பவரே!
406. ஓம் புருஷாய நம꞉ | 406. உயிர்களின் உடல்தோறும்   ஆத்மாவாக உறைந்திருப்பவரே!
407. ஓம் ப்ராணாய நம꞉ | 407. பிராண வாயுவாகி, பிரபஞ்சத்தை இயக்க செய்பவரே!
408. ஓம் ப்ராணதா³ய நம꞉ | 408. பிரளய காலத்தில் உயிர்களை அழிப்பவரே!
409. ஓம் ப்ரணவாய நம꞉ | 409. “ஓம்” என்று ஒலிப்பவரே!
410. ஓம் ப்ருத²வே நம꞉ | 410. பிரபஞ்ச ரூபமாய் விரிந்துள்ளவரே!
411. ஓம் ஹிரண்யக³ர்பா⁴ய நம꞉ | 411. பிரம்மாவின் உற்பத்திக்கு காரணமாகிய பொன் அண்டத்தை தம்முள் வைத்திருப்பவரே!
412. ஓம் ஶத்ருக்⁴னாய நம꞉ | 412. தேவ சத்ருக்களான அசுரர்களைக் கொல்கிறவரே!
413. ஓம் வ்யாப்தாய நம꞉ | 413. காரண வடிவாய் காரண காரியங்களில் ஊடுருவி நிற்பவரே!
414. ஓம் வாயவே நம꞉ | 414. மணங்கமழச் செய்பவரே!
415. ஓம் அதோ⁴க்ஷஜாய நம꞉ | 415. தன்னை யார் எவ்வளவு அனுபவித்து உபயோகித்துக் கொண்டாலும் வற்றிக் குறைவுபடாதவரே!
416. ஓம் ருதவே நம꞉ | 416. “ருது” என்ற காலம் ஆனவரே!
417. ஓம் ஸுத³ர்ஶனாய நம꞉ | 417. மங்களமான மோக்ஷம் என்னும் ஞான வடிவினரே!
418. ஓம் காலாய நம꞉ | 418. எல்லாவற்றையும் எண்ணுகிறவரே!
419. ஓம் பரமேஷ்டி²னே நம꞉ | 419. மிகச் சிறந்த தமது மகிமையால் இருதய ஆகாசத்தில் நிலைத்திருப்பவரே!
420. ஓம் பரிக்³ரஹாய நம꞉ | 420. சரணாகதர்களால்   எல்லா வகைகளாலும் கொள்ளப்படுகிறவரே!
421. ஓம் உக்³ராய நம꞉ | 421. கண்டிப்பாகக் கட்டளை இடுபவரே!
422. ஓம் ஸம்வத்ஸராய நம꞉ | 422. எல்லாப்    பொருட்களும் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவரே!
423. ஓம் த³க்ஷாய நம꞉ | 423. சகல செயல்களையும் சீக்கிரமே முடிப்பவரே!
424. ஓம் விஶ்ராமாய நம꞉ | 424. சம்சார சாகரத்தில் களைத்து போனவர்களுக்கு இளைப்பாறும் இடமாகியவரே!
425. ஓம் விஶ்வத³க்ஷிணாய நம꞉ | 425. எல்லாச் செயல்களிலும் திறமை உடையவரே!
426. ஓம் விஸ்தாராய நம꞉ | 426. தம்மிடம் உலகனைத்தும் விஸ்தரிக்கும்படி செய்பவரே!
427. ஓம் ஸ்தா²வரஸ்தா²ணவே நம꞉ | 427. தாம் நிலை பெற்றவராகவும் பூமி முதலியவை தம்மிடம் நிலையுள்ளவையாகவும் இருப்பவரே!
428. ஓம் ப்ரமாணாய நம꞉ | 428. ஞான ரூபியாய் இருப்பவரே!
429. ஓம் பீ³ஜாய அவ்யயாய நம꞉ | 429. என்றும் அழிவில்லாத காரணமாய் இருப்பவரே!
430. ஓம் அர்தா²ய நம꞉ | 430 || 430. எல்லோராலும் வணங்கத் தக்கவரே!
431. ஓம் அனர்தா²ய நம꞉ 431. தாம் விரும்பத்தக்க பயன் ஒன்றுமில்லாதவரே!
432. ஓம் மஹாகோஶாய நம꞉ | 432. ஐந்து பெரிய கோசங்களுக்குள் (பொக்கிஷ சாலைக்குள்) உறைபவரே!
433. ஓம் மஹாபோ⁴கா³ய நம꞉ | 433. சிறந்த இன்ப வடிவினரே!
434. ஓம் மஹாத⁴னாய நம꞉ | 434. போக சாதனமாகிய மிகுந்த தனத்தை உடையவரே!
435. ஓம் அனிர்விண்ணாய நம꞉ | 435. வெறுப்பில்லாதவரே!
436. ஓம் ஸ்த²விஷ்டா²ய நம꞉ | 436. விராட் ரூபியாக மிக விரிவாய் இருப்பவரே!
437. ஓம் பு⁴வே நம꞉ | 437. பிறப்பில்லாதவரே!
438. ஓம் த⁴ர்மயூபாய நம꞉ | 438. தர்மங்கள்   கட்டப்படும் யூபஸ்தம்பம் போன்றவரே!
439. ஓம் மஹாமகா²ய நம꞉ | 439. எவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டால் யாகங்கள் பெருமை அடைகின்றனவோ அவரே!
440. ஓம் நக்ஷத்ரனேமயே நம꞉ | 440. நக்ஷத்திர மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவரே!
441. ஓம் நக்ஷித்ரிணே நம꞉ | 441. நட்சத்திரங்களின் நாயகரான சந்திர வடிவினரே!
442. ஓம் க்ஷமாய நம꞉ | 442. பொறுமை உள்ளவரே!
443. ஓம் க்ஷாமாய நம꞉ | 443. பிரளய காலத்தில் கார்யங்கள் அனைத்தும் அழிந்த போது காரண ரூபியாகிய தாம் மட்டும் தனித்திருப்பவரே!
444. ஓம் ஸமீஹனாய நம꞉ | 444. சிருஷ்டி முதலிய காரியங்களை விரும்புகிறவரே!
445. ஓம் யஜ்ஞாய நம꞉ | 445. யக்ஞ வடிவானவரே!
446. ஓம் இஜ்யாய நம꞉ | 446. யாகங்களால் ஆராதிக்கப்படுபவரே!
447. ஓம் மஹேஜ்யாய நம꞉ | 447. யாகங்களினால் ஆராதிக்கப்படுபவர்களில் சிறந்தவரே!
448. ஓம் க்ரதவே நம꞉ | 448. யூபஸ்தம்பம் நாட்டிச் செய்திடும் யாக உருவானவரே!
449. ஓம் ஸத்ராய நம꞉ | 449. சாதுக்களை காப்பவரே!
450. ஓம் ஸதாங்க³தயே நம꞉ | 450. மோக்ஷத்தை நாடுவோர்க்கு அடைக்கலம் ஆகியவரே!
451. ஓம் ஸர்வத³ர்ஶினே நம꞉ | 451. அனைத்தையும் இயற்கையாக அறிபவரே!
452. ஓம் விமுக்தாத்மனே நம꞉ | 452. இயற்கையாக எல்லாப் பற்றுகளையும் விட்ட ஆத்மாவாய் இருப்பவரே!
453. ஓம் ஸர்வஜ்ஞாய நம꞉ | 453. எல்லாமாகவும், அறிபவராகவும் இருப்பவரே!
454. ஓம் ஜ்ஞானமுத்தமாய நம꞉ | 454. உத்தம ஞான வடிவினரே!
455. ஓம் ஸுவ்ரதாய நம꞉ | 455. நாடியவரைக் காத்திடும் சிறந்த விரதத்தை உடையவரே!
456. ஓம் ஸுமுகா²ய நம꞉ | 456. அழகிய முகம் உள்ளவரே!
457. ஓம் ஸூக்ஷ்மாய நம꞉ | 457. ஞானத்தில் மட்டுமே தோன்றிடும் திருமுகத்துடன், நுண்ணிய வடிவமானவரே!
458. ஓம் ஸுகோ⁴ஷாய நம꞉ | 458. வேதம் என்ற மங்கள கோசம் புரிந்தவரே!
459. ஓம் ஸுக²தா³ய நம꞉ | 459. துறவிகளுக்கு இன்பம் ஆனவரே!
460. ஓம் ஸுஹ்ருதே³ நம꞉ | 460. பிரதிபலன் பாராது உதவி அளிப்பவரே!
461. ஓம் மனோஹராய நம꞉ | 461. ஆனந்த வடிவினனாகி மனத்தைக் கவர்பவரே!
462. ஓம் ஜிதக்ரோதா⁴ய நம꞉ | 462. கோபத்தை அடக்கினவரே!
463. ஓம் வீரபா³ஹவே நம꞉ | 463. பராக்கிரமம் மிக்க தோள்களை உடையவரே!
464. ஓம் விதா³ரணாய நம꞉ | 464. பாவம் புரிபவரை சின்னாபின்னம் ஆக்குபவரே!
465. ஓம் ஸ்வாபனாய நம꞉ | 465. மாயையினால் ஆத்ம ஞானமின்றி உறங்கச் செய்பவரே!
466. ஓம் ஸ்வவஶாய நம꞉ | 466. பிறருக்கு வசப்படாதவரே!
467. ஓம் வ்யாபினே நம꞉ | 467. வானம் போன்று, எங்குமே நிறைந்துள்ளவரே,
468. ஓம் நைகாத்மனே நம꞉ | 468. திவ்ய திருமேனி, ஒன்று அல்லாதவரே!
469. ஓம் நைககர்மக்ருதே நம꞉ | 469. (படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய) பல சம்ஹாரங்களைச் செய்பவரே!
470. ஓம் வத்ஸராய நம꞉ | 470 | 470. அனைத்திற்கும் தாமே இருப்பிடமானவரே!
471. ஓம் வத்ஸலாய நம꞉ | 471. அடியவர்களிடம் கரை காணாத அன்பு கொண்டவரே!
472. ஓம் வத்ஸினே நம꞉ | 472. மக்கள் யாவரையும் தமது குழந்தைகளாகக் கருதுபவரே!
473. ஓம் ரத்னக³ர்பா⁴ய நம꞉ | 473. ரத்தினங்களை உள்ளே வைத்துக் கொண்டுள்ள கடலானவரே!
474. ஓம் த⁴னேஶ்வராய நம꞉ | 474. செல்வத்தின் தலைவரே!
475. ஓம் த⁴ர்மகு³ப்தே நம꞉ | 475. அறத்தை காப்பவரே!
476. ஓம் த⁴ர்மக்ருதே நம꞉ | 476. தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக தாமே தர்மத்தை அனுஷ்டிப்பவரே!
477. ஓம் த⁴ர்மிணே நம꞉ | 477. தர்மங்களைத் தாங்குபவரே!
478. ஓம் ஸதே நம꞉ | 478. பரப்பிரம்மமான, பரம்பொருளே!
479. ஓம் அஸதே நம꞉ | 479. அபரப்பிரம்மத்தில் (பெயர், வடிவம் முதலியவற்றில்) மறைந்துள்ள பிரம்மமே!
480. ஓம் க்ஷராய நம꞉ | 480. க்ஷரவடிவானவரே, (அபரா பிரகிருதியின் அம்சமான மனம், புத்தி, இந்திரியங்கள், சரீரம் இவற்றை, தான் என்று அபிமானிக்கும் ஜீவ வடிவினர்)
481. ஓம் அக்ஷராய நம꞉ | 481. அட்சர வடிவானவரே!
482. ஓம் அவிஜ்ஞாத்ரே நம꞉ | 482. அறிபவரல்லாதவரே!
483. ஓம் ஸஹஸ்ராம்ஶவே நம꞉ | 483. ஆயிரக்கணக்கான கிரணங்களை கொண்டவரே!
484. ஓம் விதா⁴த்ரே நம꞉ | 484. விசேஷமாய் அனைத்தையும் (உலகம், குணம், மக்கள் செய்யும் நன்மை, தீமை அனைத்தையும்) தாங்குபவரே!
485. ஓம் க்ருதலக்ஷணாய நம꞉ | 485. லக்ஷணங்கள் எனப்படும் சாஸ்திரங்களை செய்தவரே!
486. ஓம் க³ப⁴ஸ்தினேமயே நம꞉ | 486. கிரணங்களால் பிரகாசிக்கும் ஆயிரம் முனைகளோடு கூடிய சக்கரத்தை உடையவரே!
487. ஓம் ஸத்த்வஸ்தா²ய நம꞉ | 487. சத்துவ குணத்தில் நிலை பெறுகிறவரே!
488. ஓம் ஸிம்ஹாய நம꞉ | 488. சிங்கம் போல் கம்பீரமானவரே!
489. ஓம் பூ⁴தமஹேஶ்வராய நம꞉ | 489. பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரரே!
490. ஓம் ஆதி³தே³வாய நம꞉ | 490. தேவர் அனைவருக்கும் முந்தியவரே!
491. ஓம் மஹாதே³வாய நம꞉ | 491. தனது ஆத்ம ஞானத்தால் யோகேஸ்வரன் என புகழப்படுவரே!
492. ஓம் தே³வேஶாய நம꞉ | 492. தேவர்கள் அனைவருக்கும் தலைவரே!
493. ஓம் தே³வப்⁴ருத்³கு³ரவே நம꞉ | 493. தேவர்கள் ரட்ஷிக்கும் இந்திரனுக்கு குருவானவரே!
494. ஓம் உத்தராய நம꞉ | 494. சம்சாரக் கடலிலிருந்து கரை ஏற்றுபவரே!
495. ஓம் கோ³பதயே நம꞉ | 495. பூமி தேவியின் நாயகரே!
496. ஓம் கோ³ப்த்ரே நம꞉ | 496. உலகங்களின் ரக்ஷகரே!
497. ஓம் ஜ்ஞானக³ம்யாய நம꞉ | 497. ஞானத்தாலேயே   அடையத்தக்கவரே!
498. ஓம் புராதனாய நம꞉ | 498. காலவரையில்லாமல் முந்தியும் இருப்பவரே!
499. ஓம் ஶரீரபூ⁴தப்⁴ருதே நம꞉ | 499. சரீரத்திற்கு காரணமான பஞ்ச பூதங்களை பிராண ரூபியாகத் தாங்குகிறவரே!
500. ஓம் போ⁴க்த்ரே நம꞉ | 500. தமது ஸ்வரூபானந்தத்தை அனுபவிப்பவரே!
501. ஓம் கபீந்த்³ராய நம꞉ | 501. வானரர்களுக்கு தலைவனான ஸ்ரீராமரே!
502. ஓம் பூ⁴ரித³க்ஷிணாய நம꞉ | 502. (தமது அனுஷ்டானத்தினால் தர்மத்தை நிலை நிறுத்த) ஏராளமான தக்ஷிணைகளை கொடுத்தவரே!
503. ஓம் ஸோமபாய நம꞉ | 503. (யாகங்களில் தேவர்களின் வடிவில் நின்று) சோம பானம் செய்பவரே!
504. ஓம் அம்ருதபாய நம꞉ | 504. ஆத்மானந்தமாகிய அமிர்தத்தை பானம் செய்பவரே!
505. ஓம் ஸோமாய நம꞉ | 505. உமாதேவியுடன் கூடிய சிவனாகவும் உள்ளவரே!
506. ஓம் புருஜிதே நம꞉ | 506. அநேகரை வென்றவரே!
507. ஓம் புருஸத்தமாய நம꞉ | 507. பல வடிவில் சிறந்துவிளங்குபவரே!
508. ஓம் வினயாய நம꞉ | 508. துஷ்டர்களை தண்டிப்பவரே!
509. ஓம் ஜயாய நம꞉ | 509. எல்லா ஜீவ ராசிகளையும் வெற்றி கொள்பவரே!
510. ஓம் ஸத்யஸந்தா⁴ய நம꞉ | 510. சங்கல்பம் தவறாதவரே!
511. ஓம் தா³ஶார்ஹாய நம꞉ 511. “தாஸார்ஹா” என்னும் யாதவ குலத்தில் உதித்தவரே!
512. ஓம் ஸாத்வதாம் பதயே நம꞉ | 512. “ஸாத்வதம்” என்னும் சாஸ்திரத்தைச் செய்தவர்களுக்கு யோக க்ஷேமத்தை நடத்துகிறவரே!
513. ஓம் ஜீவாய நம꞉ | 513.  ஜீவாத்ம வடிவில் நின்று உயிரைத் தாங்குபவரே!
514. ஓம் வினயிதாஸாக்ஷிணே நம꞉ | 514. பிரஜைகள் தமக்கு அடங்கி இருப்பதைக் காண்பவரே!
515. ஓம் முகுந்தா³ய நம꞉ | 515. முக்தியை கொடுப்பவரே!
516. ஓம் அமிதவிக்ரமாய நம꞉ | 516. அளவற்ற பராக்கிரமம் உடையவரே!
517. ஓம் அம்போ⁴னித⁴யே நம꞉ | 517. நான்கு அம்பசூக்களுக்கு (தேவர், மனிதர், பித்ருக்கள், அசுரர்) புகலிடமாகியவரே!
518. ஓம் அனந்தாத்மனே நம꞉ | 518. அளவுக்கு உட்படாத ஆத்ம ஸ்வரூபனே!
519. ஓம் மஹோத³தி⁴ஶயாய நம꞉ | 519. (பிரளய காலத்தில்) பெருங்கடலில் படுத்திருப்பவரே!
520. ஓம் அந்தகாய நம꞉ | 520. (பிரளய காலத்தில்) எல்லாவற்றிற்கும் முடிவைச் செய்பவரே!
521. ஓம் அஜாய நம꞉ | 521. பிறப்பென்று ஒன்றில்லாதவரே!
522. ஓம் மஹார்ஹாய நம꞉ | 522. பூஜைக்கு உரியவரே!
523. ஓம் ஸ்வாபா⁴வ்யாய நம꞉ | 523. என்றும் தன்னிலையிலேயே ஒளிர்பவரே!
524. ஓம் ஜிதாமித்ராய நம꞉ | 524. எல்லா பகைகளையும் வெற்றி கொண்டவரே!
525. ஓம் ப்ரமோத³னாய நம꞉ | 525. எப்போதும் மகிழ்ந்து இருப்பவரே!
526. ஓம் ஆனந்தா³ய நம꞉ | 526. ஆனந்த வடிவினரே!
527. ஓம் நந்த³னாய நம꞉ | 527. பக்தர்களை மகிழும்படி செய்கிறவரே!
528. ஓம் நந்தா³ய நம꞉ | 528. விஷய சுகங்களை கடந்தவரே!
529. ஓம் ஸத்யத⁴ர்மணே நம꞉ | 529. உண்மையான தர்ம ஞானம் உடையவரே!
530. ஓம் த்ரிவிக்ரமாய நம꞉ | 530. மூன்றடியால் மூவுலகங்களையும் வ்யாபித்தவரே!
531. ஓம் மஹர்ஷயே கபிலாசார்யாய நம꞉ | 531. மாமுனிவராகிய, கபிலாசாரிய வடிவானவரே,
532. ஓம் க்ருதஜ்ஞாய நம꞉ | 532. காரிய பிரபஞ்சமாகவும், அதை அறியும் ஆத்மாவாகவும் இருப்பவரே!
533. ஓம் மேதி³னீபதயே நம꞉ | 533. பூமிக்கே தலைவன் ஆனவரே,
534. ஓம் த்ரிபதா³ய நம꞉ | 534. மூன்று அடிகளை (பிரணவம் – அகாரம், உகாரம், மகாரம்; தத்துவம் – அசித்து, சித்து, ஈஸ்வரன்: வராஹம் – மூன்று கொண்டைகள்) உடையவரே!
535. ஓம் த்ரித³ஶாத்⁴யக்ஷாய நம꞉ | 535. ஜாக்ரத், ஸ்வப்னம், ஸூஷூப்தி யென்ற மூன்று வினைகளுக்கும் மேல் நின்று கவனிப்பவரே!
536. ஓம் மஹாஶ்ருங்கா³ய நம꞉ | 536. மென்மையான கொம்பு உள்ளவரே!
537. ஓம் க்ருதாந்தக்ருதே நம꞉ | 537. தம்மால் செய்யப்பட்ட உலகிற்குத் தாமே சம்ஹாரத்தை செய்பவரே!
538. ஓம் மஹாவராஹாய நம꞉ | 538. பெரிய வராஹ அவதாரமெடுத்தவரே!
539. ஓம் கோ³விந்தா³ய நம꞉ | 539. வேதங்களால் அறியப்படுபவரே!
540. ஓம் ஸுஷேணாய நம꞉ | 540. பெருமைமிகு சேனையை கொண்டவரே!
541. ஓம் கனகாங்க³தி³னே நம꞉ | 541. பொன்மயமான தோள்வளைகளைக் கொண்டவரே!
542. ஓம் கு³ஹ்யாய நம꞉ | 542. மறை பொருளான வேதத்தின் ஞான காண்டத்தினால் மட்டும் உணரக் தகுந்தவரே!
543. ஓம் க³பீ⁴ராய நம꞉ | 543. ஞானம், ஐஸ்வர்யம், பலம், வீர்யம் முதலியவற்றால் கம்பீரமாக விளங்குபவரே!
544. ஓம் க³ஹனாய நம꞉ | 544. ஆழங்காண   முடியாதவரே!
545. ஓம் கு³ப்தாய நம꞉ | 545. வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவரே!
546. ஓம் சக்ரக³தா³த⁴ராய நம꞉ | 546. சக்கரத்தையும் (மனசு தத்துவம்) கதையையும் (புத்தி தத்துவம்) உலகங்களை ரக்ஷிப்பதற்காகத் தரித்துக் கொண்டிருப்பவரே!
547. ஓம் வேத⁴ஸே நம꞉ | 547. உலகை ஸ்ருஷ்டிப்பவரே!
548. ஓம் ஸ்வாங்கா³ய நம꞉ | 548. தனக்கு தானே கருவியாகவும், காரணமாகவும் காரியங்களுக்கு அங்கமாகவும் இருப்பவரே!
549. ஓம் அஜிதாய நம꞉ | 549. எவராலும் வெற்றிகாண முடியாதவரே!
550. ஓம் க்ருஷ்ணாய நம꞉ | 550. கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட வியாசரே!
551. ஓம் த்³ருடா⁴ய நம꞉ | 551. ஸ்வரூபம், சாமர்த்தியம் இவற்றால் இயற்கை மாறாதவரே!
552. ஓம் ஸங்கர்ஷணாய அச்யுதாய நம꞉ | 552. சம்ஹார காலத்தில் பிரஜைகளை தம்முள் இழுத்து ஒடுக்குபவரே!
553. ஓம் வருணாய நம꞉ | 553. சாயரட்சையில் வருண திசையில் மறையும் சூரிய வடிவானவரே!
554. ஓம் வாருணாய நம꞉ | 554. வருண குமாரரான வசிஷ்டராக உள்ளவரே!
555. ஓம் வ்ருக்ஷாய நம꞉ | 555. மரம் போன்று அசையாது இருப்பவரே!
556. ஓம் புஷ்கராக்ஷாய நம꞉ | 556. தாமரை போன்ற கண்களை உடையவரே!
557. ஓம் மஹாமனஸே நம꞉ | 557. (ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார காரியங்களை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும்) பெரிய மனம் படைத்தவரே!
558. ஓம் ப⁴க³வதே நம꞉ | 558. தனம், கொடை, புகழ், பொருள், திடமானம், முக்திநிறை போன்றவைகளின் இருப்பிடமானவரே!
559. ஓம் ப⁴க³க்⁴னே நம꞉ | 559. சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் போன்றவற்றை அழிப்பவரே!
560. ஓம் ஆனந்தி³னே நம꞉ | 560. சுக ஸ்வரூபியாய் இருப்பவரே!
561. ஓம் வனமாலினே நம꞉ | 561. (பூத தன்மாத்திரைகளின் வடிவான) வைஜெயந்தி மாலையை தரித்துள்ளவரே!
562. ஓம் ஹலாயுதா⁴ய நம꞉ | 562. கலப்பை வடிவான ஆயுதம் ஏந்தியவரே!
563. ஓம் ஆதி³த்யாய நம꞉ | 563. அதீதி தேவியிடம் வாமனராக அவதாரம் செய்தவரே!
564. ஓம் ஜ்யோதிராதி³த்யாய நம꞉ | 564. சூர்ய மண்டலத்தில் பிரகாசிப்பவரே!
565. ஓம் ஸஹிஷ்ணுவே நம꞉ | 565. அனைத்தையும் சகிப்பவரே!
566. ஓம் க³திஸத்தமாய நம꞉ | 566. எல்லோரும் சென்றடையும் இடமாகவும் உயர்ந்தவராகவும் இருப்பவரே!
567. ஓம் ஸுத⁴ன்வனே நம꞉ | 567. இந்திரீய வடிவான சார்ங்கம் என்னும் சிறந்த வில்லை உடையவரே!
568. ஓம் க²ண்ட³பரஶவே நம꞉ | 568. விரோதிகளை துண்டித்திடும், கோடரியை ஆயுதமாகக் கொண்டவரே!
569. ஓம் தா³ருணாய நம꞉ | 569. நல்ல வழியை தடுப்பவர்க்கு கொடியவரே!
570. ஓம் த்³ரவிணப்ரதா³ய நம꞉ | 570. பக்தர்கள் விரும்பிய செல்வத்தை அளிப்பவரே!
571. ஓம் தி³வஸ்ப்ருஶே நம꞉ | 571. ஆகாசத்தை தொடுகிறவரே!
572. ஓம் ஸர்வத்³ருக்³வ்யாஸாய நம꞉ | 572. சகல ஞானங்களையும் போதித்த வியாசர் ஆனவரே!
573. ஓம் வாசஸ்பதயே அயோனிஜாய நம꞉ | 573. வித்தைக்கு அதிபதியாகவும், கர்ப்பத்தில் பிறவாதவராகவும் இருப்பவரே!
574. ஓம் த்ரிஸாம்னே நம꞉ | 574. மூன்று சாமங்களாலும் துதிக்கப்படுபவரே!
575. ஓம் ஸாமகா³ய நம꞉ | 575. சாம கானம் புரிபவரே!
576. ஓம் ஸாம்னே நம꞉ | 576. சாம வேதம் ஆனவரே!
577. ஓம் நிர்வாணாய நம꞉ | 577. எல்லாத் துன்பங்களுக்கும் அப்பாலாகிய பரமானந்த நிலை வடிவினரே!
578. ஓம் பே⁴ஷஜாய நம꞉ | 578. பிறவிப் பிணிக்கு மருந்தாய் இருப்பவரே!
579. ஓம் பி⁴ஷஜே நம꞉ | 579. வைத்தியராய் இருப்பவரே!
580. ஓம் ஸன்ன்யாஸக்ருதே நம꞉ | 580. மோக்ஷத்திற்காக சன்னியாச ஆஸ்ரமத்தை ஏற்படுத்தியவரே!
581. ஓம் ஶமாய நம꞉ | 581. அடக்கத்தை உபதேசிப்பவரே!
582. ஓம் ஶாந்தாய நம꞉ | 582. அமைதிக்கு இருப்பிடமானவரே!
583. ஓம் நிஷ்டா²யை நம꞉ | 583. பிரளயத்தில் எல்லா பொருள்களும் முடிவுபெறும் இடமானவரே!
584. ஓம் ஶாந்த்யை நம꞉ | 584. எல்லா அவித்தைகளும் நீங்கும் நிலையாய் இருப்பவரே!
585. ஓம் பராயணாய நம꞉ | 585. மறுபடி சம்சாரத்தில் திரும்பாமல் இருக்கும் உயர்ந்த ஸ்தானமாய் இருப்பவரே!
586. ஓம் ஶுபா⁴ங்கா³ய நம꞉ | 586. அழகிய அங்கம் படைத்தவரே!
587. ஓம் ஶாந்திதா³ய நம꞉ | 587. சாந்தியை அளிப்பவரே!
588. ம் ஸ்ரஷ்டாய நம꞉ | 588. எல்லாவற்றையும் படைத்தவரே!
589. ஓம் குமுதா³ய நம꞉ | 589. பூமியில் மகிழ்பவரே!
590. ஓம் குவலேஶயாய நம꞉ | 590. பூமியை சுற்றி இருக்கும் கடலில் சயனித்திருப்பவரே!
591. ஓம் கோ³ஹிதாய நம꞉ | 591. பூமிக்கு அனுகூலம் செய்தவரே!
592. ஓம் கோ³பதயே நம꞉ | 592. போக பூமியான சொர்க்கத்திற்கு நாயகரே!
593. ஓம் கோ³ப்த்ரே நம꞉ | 593. உலக ரக்ஷகரே!
594. ஓம் வ்ருஷபா⁴க்ஷாய நம꞉ | 594. தர்மத்தையே கண்ணாக உடையவரே!
595. ஓம் வ்ருஷப்ரியாய நம꞉ | 595. தர்மத்தில் பிரியம் வைத்தவரே!
596. ஓம் அனிவர்தினே நம꞉ | 596. யுத்தங்களில் ஜெயம் இன்றி திரும்பாதவரே!
597. ஓம் நிவ்ருத்தாத்மனே நம꞉ | 597. விஷயங்களினின்று திரும்பிய மனம் உடையவரே!
598. ஓம் ஸங்க்ஷேப்த்ரே நம꞉ | 598. விஸ்தாரமான உலகத்தைப் பிரளய காலத்தில் சுருக்குகிறவரே!
599. ஓம் க்ஷேமக்ருதே நம꞉ | 599. தம்மால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு க்ஷேமத்தை உண்டு பண்ணுகிறவரே!
600. ஓம் ஶிவாய நம꞉ | 600. தம்முடைய நாமத்தை நினைத்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகிறவரே!
601. ஓம் ஶ்ரீவத்ஸவக்ஷஸே நம꞉ | 601. “ஸ்ரீவத்சம்” என்ற மருவை மார்பினில் கொண்டவரே!
602. ஓம் ஶ்ரீவாஸாய நம꞉ | 602. ஸ்ரீதேவிக்கு இருப்பிடம் ஆகியவரே!
603. ஓம் ஶ்ரீபதயே நம꞉ | 603. ஸ்ரீதேவியால் பதியாக வரிக்கப்பட்டவரே!
604. ஓம் ஶ்ரீமதாம் வராய நம꞉ | 604. ஸ்ரீமான்களாகிய பிரம்மாதி தேவர்களினும் சிறந்தவரே!
605. ஓம் ஶ்ரீதா³ய நம꞉ | 605. அடியார்களுக்கு ஐஸ்வர்யத்தை அளிப்பவரே!
606. ஓம் ஶ்ரீஶாய நம꞉ | 606. ஸ்ரீதேவியின் நாயகரே!
607. ஓம் ஶ்ரீனிவாஸாய நம꞉ | 607. ஸ்ரீமான்களிடம் வாசம் செய்பவரே!
608. ம் ஶ்ரீனித⁴யே நம꞉ | 608. எல்லா சக்திகளுக்கும் பொக்கிஷமாய் இருப்பவரே!
609. ஓம் ஶ்ரீவிபா⁴வனாய நம꞉ | 609. எல்லோருக்கும் அவரவர் வினைகளுக்கு தக்கவாறு செல்வங்களை வகுத்துக் கொடுப்பவரே!
610. ஓம் ஶ்ரீத⁴ராய நம꞉ | 610. எல்லோருக்கும் தாயான ஸ்ரீதேவியை மார்பில் தாங்குபவரே!
611. ஓம் ஶ்ரீகராய நம꞉ | 611. தம்மை எண்ணுவோர், துதிப்போர், பூஜிப்பவர்க்கு செல்வம் தருபவரே!
612. ஓம் ஶ்ரேயஸே நம꞉ | 612. நித்ய சுகமான பிரம்மானந்த ரூபமாய் இருப்பவரே!
613. ஓம் ஶ்ரீமதே நம꞉ | 613. செல்வ நாயகரே!
614. ஓம் லோகத்ரயாஶ்ரயாய நம꞉ | 614. மூவுலகங்களுக்கும் ஆதாரமாய் இருப்பவரே!
615. ஓம் ஸ்வக்ஷாய நம꞉ | 615. தாமரை மலருக்கு ஒப்பான அழகிய கண்களை உடையவரே!
616. ஓம் ஸ்வங்கா³ய நம꞉ | 616. அழகிய அங்கங்களை உடையவரே!
617. ஓம் ஶதானந்தா³ய நம꞉ | 617. (ஒரே பரமானந்தம் எண்ணிலடங்கா வகையாய் இருப்பதால்) எண்ணிலடங்கா பரமானந்தங்களை கொண்டவரே!
618. ஓம் நந்தி³னே நம꞉ | 618. பரமானந்த வடிவாய் இருப்பவரே!
619. ஓம் ஜ்யோதிர்க³ணேஶ்வராய நம꞉ | 619. ஒளிக்கூட்டங்களுக்கு ஈஸ்வரரே!
620. ஓம் விஜிதாத்மனே நம꞉ | 620. மனதை கட்டுப்படுத்தியவரே!
621. ஓம் விதே⁴யாத்மனே நம꞉ | 621. எவருக்குமே அடிபணியாதவரே!
622. ஓம் ஸத்கீர்தயே நம꞉ | 622. பொய்யாத கீர்த்தி உடையவரே!
623. ஓம் சி²ன்னஸம்ஶயாய நம꞉ | 623. ஐயமே இல்லாதவரே!
624. ஓம் உதீ³ர்ணாய நம꞉ | 624. எல்லா உயிரினங்களுக்கும் மேலானவரே!
625. ஓம் ஸர்வதஶ்சக்ஷுஷே நம꞉ | 625. எங்கும், எல்லாவற்றையும் தமது ஞான ஒளியால் காண்பவரே!
626. ஓம் அனீஶாய நம꞉ | 626. தமக்கு மேம்பட்டு ஈஸ்வரன் இல்லாதவரே!
627. ஓம் ஶாஶ்வதஸ்தி²ராய நம꞉ | 627. எக்காலமும் மாறாது இருப்பவரே!
628. ஓம் பூ⁴ஶயாய நம꞉ | 628. அச்சா விக்ரகங்களாகி, பூமியிலுள்ள ஆலயங்களில் நிறைவுடன் நிலைப்பவரே!
629. ஓம் பூ⁴ஷணாய நம꞉ | 629. பல அவதாரங்களினால் பூமியை அலங்கரிப்பவரே!
630. ஓம் பூ⁴தயே நம꞉ | 630. எல்லா ஐஸ்வர்யங்களுக்கும் காரணமானவரே!
631. ஓம் விஶோகாய நம꞉ | 631. சோகம் இல்லாதவரே!
632. ஓம் ஶோகனாஶனாய நம꞉ | 632. நினைத்தவுடன் பக்தர்களின் சோகத்தை போக்குகிறவரே!
633. ஓம் அர்சிஷ்மதே நம꞉ | 633. சூரியன் முதலானவர்க்கும் ஒளியை கொடுக்கும் சிறந்த ஒளி மிகுந்தவரே!
634. ஓம் அர்சிதாய நம꞉ | 634. எல்லா உலகங்களாலும் பூஜிக்க பெற்றவரே!
635. ஓம் கும்பா⁴ய நம꞉ | 635. சக்ரத்துக்குக் குடம் ஆதாரமாய் இருப்பது போல், யாவற்றுக்குமே ஆதாரமானவரே!
636. ஓம் விஶுத்³தா⁴த்மனே நம꞉ | 636. முக்குணங்களையும் கடந்து தூய்மை சுபாவம் பெற்றவரே!
637. ஓம் விஶோத⁴னாய நம꞉ | 637. தம்மை நினைத்தவுடன் பாவங்களை போக்குகிறவரே!
638. ஓம் அனிருத்³தா⁴ய நம꞉ | 638. நாலு வியூகங்களில் நான்காவதான அனிருச்ரரே!
639. ஓம் அப்ரதிரதா²ய நம꞉ | 639. எதிரிகளே இல்லாதவரே!
640. ஓம் ப்ரத்³யும்னாய நம꞉ | 640. நாலு வியூகங்களில் இரண்டாவதான பிரத்யும்னரே!
641. ஓம் அமிதவிக்ரமாய நம꞉ | 641. அளவற்ற மகிமை உள்ளவரே!
642. ஓம் காலனேமினிக்⁴னே நம꞉ | 642. காலநேமி என்னும் அசுரனைக் கொன்றவரே!
643. ஓம் வீராய நம꞉ | 643. பகைவரை வென்று பராக்கிரமத்துடன் விளங்குபவரே!
644. ஓம் ஶௌரயே நம꞉ | 644. “சௌர” குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணரே!
645. ஓம் ஶூரஜனேஶ்வராய நம꞉ | 645. சூரர்களான இந்திரன் முதலானவர்க்கும் ஈஸ்வரரே!
646. ஓம் த்ரிலோகாத்மனே நம꞉ | 646. மூன்று உலகங்ககளிலும் தம்மைவிட வேறல்லாதவரே!
647. ஓம் த்ரிலோகேஶாய நம꞉ | 647. மூன்று உலகங்களுக்கும் ஈஸ்வரரே!
648. ஓம் கேஶவாய நம꞉ | 648. பிரம்மா, விஷ்ணு, சிவ சக்திகள் மூன்றுக்கும் இருப்பிடமானவரே!
649. ஓம் கேஶிக்⁴னே நம꞉ | 649. கேசி என்ற அசுரனை கொன்றவரே!
650. ஓம் ஹரயே நம꞉ | 650. பச்சை நிறம் கொண்டவரே!
651. ஓம் காமதே³வாய நம꞉ | 651. தர்மார்த்த காம மோக்ஷங்களை விரும்பும் எல்லோராலும் விரும்பப்பட்ட ஈஸ்வரரே!
652. ஓம் காமபாலாய நம꞉ | 652. ஆசைகளை பூர்த்தி செய்பவரே!
653. ஓம் காமினே நம꞉ | 653. ஆசைகள் எல்லாம் நிறைவேறினவரே!
654. ஓம் காந்தாய நம꞉ | 654. கவர்ச்சி படைத்தவரே!
655. ஓம் க்ருதாக³மாய நம꞉ | 655. ஆகமங்களை வெளியிட்டவரே!
656. ஓம் அனிர்தே³ஶ்யவபுஷே நம꞉ | 656. இப்படித்தான் எனவும், ருசிப்பிக்க முடியாதவரே!
657. ஓம் விஷ்ணவே நம꞉ | 657. எங்கும் வியாபித்து இருப்பவரே!
658. ஓம் வீராய நம꞉ | 658. மிகுந்த பராக்கிரமம் உடையவரே!
659. ஓம் அனந்தாய நம꞉ | 659. அளவிடப்பட முடியாதவரே!
660. ஓம் த⁴னஞ்ஜயாய நம꞉ | 660. ஸ்ரீவிஷ்ணுவே, அர்ச்சுனனாக இருப்பவரே!
661. ஓம் ப்³ரஹ்மண்யாய நம꞉ | 661. தவத்துக்கும், வேதத்துக்கும், செந்தன்மை உடையவர்க்கும், அறிவுக்கும் சாதகமானவரே!
662. ஓம் ப்³ரஹ்மக்ருதே நம꞉ | 662. தவத்தினை உண்டாக்கியவரே!
663. ஓம் ப்³ரஹ்மணே நம꞉ | 663. சிருஷ்டி செய்வதில் பிரம்மாவாக இருப்பவரே!
664. ஓம் ப்³ராஹ்மணே நம꞉ | 664. பிரம்மமான பரம்பொருளே!
665. ஓம் ப்³ரஹ்மவிவர்த⁴னாய நம꞉ | 665. தவத்தை வளர்ப்பவரே!
666. ஓம் ப்³ரஹ்மவிதே³ நம꞉ | 666. வேதத்தை உள்ளபடி உணர்பவரே!
667. ஓம் ப்³ராஹ்மணாய நம꞉ | 667. பிராம்மண வடிவில் உலகோர்க்கு வேதங்களை ஓதுவிப்பவரே!
668. ஓம் ப்³ரஹ்மிணே நம꞉ | 668. “பிரஹ்ம” என்னும் சொல்லால் குறிக்கப்பட்டவை எல்லாம் தமக்கு அடங்கியவையாய் கொண்டவரே!
669. ஓம் ப்³ரஹ்மஜ்ஞாய நம꞉ | 669. வேதங்களை தம் உருவாக அறிந்தவரே!
670. ஓம் ப்³ராஹ்மணப்ரியாய நம꞉ | 670. பிராம்மணர்களுக்குப் பிரியமானவரே!
671. ஓம் மஹாக்ரமாய நம꞉ | 671. பெரிய திருவடிகளை உடையவரே!
672. ஓம் மஹாகர்மணே நம꞉ | 672. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரமாகிய பெருந்தொழில் உடையவரே!
673. ஓம் மஹாதேஜஸே நம꞉ | 673. அஞ்ஞான இருளை ஒழிக்கும் பேரொளி உடையவரே!
674. ஓம் மஹோரகா³ய நம꞉ | 674. மஹா சர்ப்ப வடிவில் இருப்பவரே!
675. ஓம் மஹாக்ரதவே நம꞉ | 675. மஹாக்ருதுவாகிய அசுவமேத வடிவினரே!
676. ஓம் மஹாயஜ்வினே நம꞉ | 676. உலகிற்கு வழிகாட்டுபவராய் சிறந்த யாகங்களை செய்பவரே!
677. ஓம் மஹாயஜ்ஞாய நம꞉ | 677. தலை சிறந்த ஜெபயக்ஞமாய்   இருப்பவரே!
678. ஓம் மஹாஹவிஷே நம꞉ | 678. மஹா ஹவிஸ்ஸாய் இருப்பவரே!
679. ஓம் ஸ்தவ்யாய நம꞉ | 680 || 679. எல்லோராலும்   துதிக்கப் பெருகிறவரே!
680. ஓம் ஸ்தவப்ரியாய நம꞉ | 680. பக்தர்கள் செய்யும் துதியை பிரியமாய் ஏற்றுக் கொள்பவரே!
681. ஓம் ஸ்தோத்ராய நம꞉ | 681. துதியும் தாமாக இருப்பவரே!
682. ஓம் ஸ்துதயே நம꞉ | 682. துதிக்கும் செயலும் தாமாக இருப்பவரே!
683. ஓம் ஸ்தோத்ரே நம꞉ | 683. துதிப்பவரும் அவரேயாகியவரே!
684. ஓம் ரணப்ரியாய நம꞉ | 684. யுத்தத்தில் விருப்பமுள்ளவரே!
685. ஓம் பூர்ணாய நம꞉ | 685. எல்லாம் நிறைந்தவரே!
686. ஓம் பூரயித்ரே நம꞉ | 686. பக்தர்களின் விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்விப்பவரே!
687. ஓம் புண்யாய நம꞉ | 687. நினைத்த மாத்திரத்தில் எல்லோருடைய பாவங்களையும் போக்குபவரே!
688. ஓம் புண்யகீர்தயே நம꞉ | 688. பாவத்தை போக்கும் புகழ் உள்ளவரே!
689. ஓம் அனாமயாய நம꞉ | 689. நோய்களால் பீடிக்கப்படாதவரே!
690. ஓம் மனோஜவாய நம꞉ | 690. மனதின் வேகத்திற்கு ஒப்பான வேகம் உள்ளவரே!
691. ஓம் தீர்த²கராய நம꞉ | 691. உலகை உய்விக்கும் வித்தைகளை உண்டாக்கி உபதேசித்தவரே!
692. ஓம் வஸுரேதஸே நம꞉ | 692. பொன்மயமான வீரியத்தை உடையவரே!
693. ஓம் வஸுப்ரதா³ய நம꞉ | 693. செல்வத்தை அளிப்பவரே!
694. ஓம் வாஸுதே³வாய நம꞉ | 694. பக்தர்களுக்கு மோக்ஷச் செல்வத்தை அளிப்பவரே!
695. ஓம் வஸவே நம꞉ | 695. வசுதேவருக்கு புத்திரராக அவதரித்தவரே!
696. ஓம் வஸுமனஸே நம꞉ | 696. எல்லாம் தம்மிடம் வசிக்க பெற்றவரே!
697. ஓம் ஹவிஷே நம꞉ | 697. எல்லோரிடத்திலும் வசிக்கும் மனம் உள்ளவரே!
698. ஓம் ஹவிஷே நம꞉ | 698. ஹவிஸ்ஸாக இருப்பவரே!
699. ஓம் ஸத்³க³தயே நம꞉ | 699. சாதுக்களால் அடையப்படுகிறவரே!
700. ஓம் ஸத்க்ருதயே நம꞉ | 700. சிறந்த செய்கைகளை உடையவரே!
701. ஓம் ஸத்தாயை நம꞉ | 701. பேதமில்லாத ஞான ஸ்வரூபமாய் இருப்பவரே!
702. ஓம் ஸத்³பூ⁴தயே நம꞉ | 702. சத்தாகவும், சித்தாகவும், பேரொளியாய் திகழ்பவரே!
703. ஓம் ஸத்பராயணாய நம꞉ | 703. தத்துவம் புரிந்தோர் சேரும் இடமானவரே!
704. ஓம் ஶூரஸேனாய நம꞉ | 704. (வீரனான ஹனுமான் முதலான) சூரர்களை படையில் கொண்டவரே!
705. ஓம் யது³ஶ்ரேஷ்டா²ய நம꞉ | 705. யதுக்களின் தலைவரே!
706. ஓம் ஸன்னிவாஸாய நம꞉ | 706. அறிவாளிகளுக்கு புகலிடமாகியவரே!
707. ஓம் ஸுயாமுனாய நம꞉ | 707. நல்ல யமுனைவாசிகளால் சூழப்பட்டவரே!
708. ஓம் பூ⁴தாவாஸாய நம꞉ | 708. பிராணிகள் தம் அருட் பார்வையில் தங்கும்படி இருப்பவரே!
709. ஓம் வாஸுதே³வாய நம꞉ | 709. மாயையால் உலகை மறைப்பவரே!
710. ஓம் ஸர்வாஸுனிலயாய நம꞉ | 710. பிராணன்களுக்கு உறைவிடமான ஜீவாத்ம வடிவினரே!
711. ஓம் அனலாய நம꞉ | 711. முடிவிலா சக்தி படைத்தவரே!
712. ஓம் த³ர்பக்⁴னே நம꞉ | 712. தர்ம விரோதிகளுடைய செருக்கைப் போக்குகிறவரே!
713. ஓம் த³ர்பதா³ய நம꞉ | 713. தர்ம வழியில் இருப்பவர்களுக்கு பெருமிதம் அளிப்பவரே!
714. ஓம் த்³ருப்தாய நம꞉ | 714. ஆத்மானந்த அனுபவத்தில் மகிழ்ந்திருப்பவரே!
715. ஓம் து³ர்த⁴ராய நம꞉ | 715. மனதில் சிரமப்பட்டு நிறுத்தக்கூடியவரே!
716. ஓம் அபராஜிதாய நம꞉ | 716. எங்கும் வெற்றி கொள்பவரே!
717. ஓம் விஶ்வமூர்தயே நம꞉ | 717. உலகனைத்தையும் உடலாகக் கொண்டவரே!
718. ஓம் மஹாமூர்தயே நம꞉ | 718. ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் பெரிய உருவம் கொண்டவரே!
719. ஓம் தீ³ப்தமூர்தயே நம꞉ | 719. ஞான மயமாகப் பிரகாசிக்கும் ரூபமுள்ளவரே!
720. ஓம் அமூர்திமதே நம꞉ | 720. வினையால் உண்டான உடம்பில்லாதவரே!
721. ஓம் அனேகமூர்தயே நம꞉ | 721. அவதாரங்களில் பல உடல்களை எடுத்திருப்பவரே!
722. ஓம் அவ்யக்தாய நம꞉ | 722. இவர் இப்படிப்பட்டவர் என்று யாராலும் அறிய முடியாதவரே!
723. ஓம் ஶதமூர்தயே நம꞉ | 723. ஞான ரூபியாய் இருந்தும் மாயையினால் பல உருவங்களாகத் தோன்றுகிறவரே!
724. ஓம் ஶதானநாய நம꞉ | 724. பல முகங்களை உடையவரே!
725. ஓம் ஏகைஸ்மை நம꞉ | 725. ஒன்றேயாகியவரே!
726. ஓம் நைகஸ்மை நம꞉ | 726. மாயையினால் பல உருவமாய் இருப்பவரே!
727. ஓம் ஸவாய நம꞉ | 727. சோம யாக வடிவினரே!
728. ஓம் காய நம꞉ | 728. சுகம் என்று பொருள்படும் “க” என்னும் சொல்லால் துதிக்கப்படுகிறவரே!
729. ஓம் கஸ்மை நம꞉ | 729. விசாரித்து அறிதற்குரியவரே!
730. ஓம் யஸ்மை நம꞉ | 730. தானே புரியும் வழியான, பொருளை காட்டும், “யத்” என்ற சொல்லால் போற்றப்படுபவரே!
731. ஓம் தஸ்மை நம꞉ | 731. “தத்” என்ற மொழியால் அடையாளம் காட்டப்படுபவரே!
732. ஓம் பத³மனுத்தமாய நம꞉ | 732. முமூக்ஷூக்களால் அடையத்தக்க ஒப்புயர்வற்ற பதவியாய் இருப்பவரே!
733. ஓம் லோகப³ந்த⁴வே நம꞉ | 733. உலகிற்கு உறவாகியவரே!
734. ஓம் லோகனாதா²ய நம꞉ | 734. உலகங்களை ஆள்பவரே!
735. ஓம் மாத⁴வாய நம꞉ | 735. யதுகுலத்தில்   அவதரித்தவரே!
736. ஓம் ப⁴க்தவத்ஸலாய நம꞉ | 736. பக்தர்களிடத்தில் அன்பு மிக்கவரே!
737. ஓம் ஸுவர்ணவர்ணாய நம꞉ | 737. பொன்னிறமானவரே!
738. ஓம் ஹேமாங்கா³ய நம꞉ | 738. பொன் போன்ற சரீரம் படைத்தவரே!
739. ஓம் வராங்கா³ய நம꞉ | 739. சிறந்த அவயங்களை உடையவரே!
740. ஓம் சந்த³னாங்க³தி³னே நம꞉ | 740. ஆனந்தத்தைக் கொடுக்கும் தோள்வளைகளை அணிந்தவரே!
741. ஓம் வீரக்⁴னே நம꞉ | 741. சத்ரு வீரர்களையும் காமக் குரோதங்களையும் ஒழிப்பவரே!
742. ஓம் விஷமாய நம꞉ | 742. தமக்கு ஒப்பில்லாதவரே!
743. ஓம் ஶூன்யாய நம꞉ | 743. நிர்குண ரூபமானதலால் இல்லாது போல் இருப்பவரே!
744. ஓம் க்⁴ருதாஶிஷே நம꞉ | 744. வேண்டுதல் இல்லாதவரே!
745. ஓம் அசலாய நம꞉ | 745. அசைவற்றவரே!
746. ஓம் சலாய நம꞉ | 746. (காற்று முதலிய உருவங்களில்) அசைபவரே!
747. ஓம் அமானினே நம꞉ | 747. அனாத்ம விஷயங்களில் ஆத்மா என்ற அபிமானம் இல்லாதவரே!
748. ஓம் மானதா³ய நம꞉ | 748. பக்தர்களின் அனாத்ம அபிமானத்தை நீக்குபவரே!
749. ஓம் மான்யாய நம꞉ | 749. எல்லோராலும் பூஜிக்கத்தக்கவரே!
750. ஓம் லோகஸ்வாமினே நம꞉ | 750. உலகுக்கெல்லாம் அதிபதியானவரே!
751. ஓம் த்ரிலோகத்⁴ருஷே நம꞉ | 751. மூவுலகையும்   தாங்குபவரே!
752. ம் ஸுமேத⁴ஸே நம꞉ | 752. மங்களகரமான ஞானமுடையவரே!
753. ஓம் மேத⁴ஜாய நம꞉ | 753. யாகத்தில் உண்டாகிறவரே!
754. ஓம் த⁴ன்யாய நம꞉ | 754. எல்லாப் பிரயோஜனங்களையும் பெற்றிருப்பவரே!
755. ஓம் ஸத்யமேத⁴ஸே நம꞉ | 755. பொய்யாத அறிவுள்ளவரே!
756. ஓம் த⁴ராத⁴ராய நம꞉ | 756. பூமியைத் தாங்குகிறவரே!
757. ஓம் தேஜோவ்ருஷாய நம꞉ | 757. ஓளியை பொழிபவரே!
758. ஓம் த்³யுதித⁴ராய நம꞉ | 758. ஒளி வீசும் அங்கங்களை உடையவரே!
759. ஓம் ஸர்வஶஸ்த்ரப்⁴ருதாம்வராய நம꞉ | 759. ஆயுதம் தரித்தவர்கள் எல்லோரிலும் சிறந்தவரே!
760. ஓம் ப்ரக்³ரஹாய நம꞉ | 760. பக்தர்கள் அர்ப்பணம் செய்யும் பொருட்களை அங்கீகரிப்பவரே!
761. ஓம் நிக்³ரஹாய நம꞉ | 761. (எல்லாவற்றையும் தம் வசமாக) அடக்கி வைத்திருப்பவரே!
762. ஓம் வ்யக்³ராய நம꞉ | 762. முடிவில்லாதவரே!
763. ஓம் நைகஶ்ருங்கா³ய நம꞉ | 763. அநேகம் கொம்புகளை உடையவரே! (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பன நான்கு கொம்புகள்) (நான்கு வேதங்கள் என்பன நான்கு கொம்புகள்)
764. ஓம் க³தா³க்³ரஜாய நம꞉ | 764. மந்திரத்தினால் முன் தோன்றுகிறவரே!
765. ஓம் சதுர்மூர்தயே நம꞉ | 765. நான்கு வடிவுடையவரே! (வெண்மை, செம்மை, பசுமை, கருமை என நான்கு நிறமுடைய மூர்த்திகள்)
766. ஓம் சதுர்பா³ஹவே நம꞉ | 766. நான்கு கைகளை உடையவரே!
767. ஓம் சதுர்வ்யூஹாய நம꞉ | 767. நான்கு வியூகங்களை உடையவரே!
768. ஓம் சதுர்க³தயே நம꞉ | 768. நான்கு வர்ண தர்மங்களையும், ஆசிரம தர்மங்களையும் பின்பற்றி நடப்பவர்க்கு புகலிடமாகியவரே!
769. ஓம் சதுராத்மனே நம꞉ | 770 || 769. (மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற) நான்கு உருவங்களாய் இருப்பவரே!
770. ஓம் சதுர்பா⁴வாய நம꞉ | 770. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களுக்கு காரணமாய் இருப்பவரே!
771. ஓம் சதுர்வேத³விதே³ நம꞉ | 771. நான்கு வேதங்களின் பொருள்களையும் உள்ளபடி அறிபவரே!
772. ஓம் ஏகபதே³ நம꞉ | 772. உலகனைத்தையும் ஒரு பாதத்தில் அடக்கியவரே!
773. ஓம் ஸமாவர்தாய நம꞉ | 773. சம்சார சக்கரத்தை சுழற்றுகிறவரே!
774. ஓம் அனிவ்ருத்தாத்மனே நம꞉ | 774. (எங்கும் இருப்பதால்) ஓரிடத்திலும் இல்லாமற் போகாதவரே!
775. ஓம் து³ர்ஜயாய நம꞉ | 775. வெல்லப்பட முடியாதவரே!
776. ஓம் து³ரதிக்ரமாய நம꞉ | 776. எவரும் தன கட்டளையை தாண்ட முடியாதபடி இருப்பவரே!
777. ஓம் து³ர்லபா⁴ய நம꞉ | 777. பக்தியாலன்றி அடைதற்கு அரியவரே!
778. ஓம் து³ர்க³மாய நம꞉ | 778. பெரும் முயற்சியில் உணரத்தக்கவரே!
779. ஓம் து³ர்கா³ய நம꞉ | 779. இடையூறுகளினால் அடைவதற்கு கடினமாய் இருப்பவரே!
780. ஓம் து³ராவாஸாய நம꞉ | 780. (யோகிகளால் யோகத்தில்) மிகுந்த சிரமத்தோடு மனதில் தரிக்கப்படுகிறவரே!
781. ஓம் து³ராரிக்⁴னே நம꞉ | 781. துர்மார்க்கத்தில் செல்கிற அசுரர் முதலியவர்களை அழிப்பவரே!
782. ஓம் ஶுபா⁴ங்கா³ய நம꞉ | 782. அழகான அங்கங்களை உடையவராகத் தியானத்திற்கு உரியவரே!
783. ஓம் லோகஸாரங்கா³ய நம꞉ | 783. உலகிலுள்ள சாராம்சங்களை கிரகிப்பவரே!
784. ஓம் ஸுதந்தவே நம꞉ | 784. விஸ்தாரமான பிரபஞ்சத்தை வைத்திருப்பவரே!
785. ஓம் தந்துவர்த⁴னாய நம꞉ | 785. பிரபஞ்சத்தை விருத்தி செய்பவரே!
786. ஓம் இந்த்³ரகர்மணே நம꞉ | 786. இந்திரனைப் போன்ற புகழ் பெற்ற செய்கைகள் உள்ளவரே!
787. ஓம் மஹாகர்மணே நம꞉ | 787. மஹா பூதங்களைப் படைத்தவரே!
788. ஓம் க்ருதகர்மணே நம꞉ | 788. அளப்பரிய காரியங்களை செய்து முடித்தவரே!
789. ஓம் க்ருதாக³மாய நம꞉ | 789. வேதத்தை உண்டு பண்ணினவரே!
790. ஓம் உத்³ப⁴வாய நம꞉ | 790. உயர்ந்த பிறவி எய்துபவரே!
791. ஓம் ஸுந்த³ராய நம꞉ | 791. பேரழகுள்ளவரே!
792. ஓம் ஸுந்தா³ய நம꞉ | 792. மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவரே!
793. ஓம் ரத்னநாபா⁴ய நம꞉ | 793. அழகிய நாபியுள்ளவரே!
794. ஓம் ஸுலோசனாய நம꞉ | 794. அழகிய கண்களை உடையவரே!
795. ஓம் அர்காய நம꞉ | 795. பிரம்மாதி தேவர்களாலும் அர்ச்சிக்கத் தக்கவரே!
796. ஓம் வாஜஸனாய நம꞉ | 796. அன்னத்தை கொடுப்பவரே!
797. ஓம் ஶ்ருங்கி³னே நம꞉ | 797. கொம்புள்ள மீனாக அவதரித்தவரே!
798. ஓம் ஜயந்தாய நம꞉ | 798. எதிரிகளை வெற்றி கொள்பவரே!
799. ஓம் ஸர்வவிஜ்ஜயினே நம꞉ | 799. எல்லாம் தெரிந்தவரும், எல்லாப் பகையையும் வென்றவரும் ஆகியவரே!
800. ஓம் ஸுவர்ண பி³ந்த³வே நம 800. பொன் போன்ற அழகிய அவயங்களை உடையவரே!
801. ஓம் அக்ஷோப்⁴யாய நம꞉ | 801. அசையவோ கலக்கவோ முடியாதவரே!
802. ஓம் ஸர்வவாகீ³ஶ்வரேஶ்வராய நம꞉ | 802. பிரம்மா முதலான பேசும் திறமை மிக்கோர்க்கு எல்லாம் மேலான ஈஸ்வரரே!
803. ஓம் மஹாஹ்ரதா³ய நம꞉ | 803. ஆனந்த வெள்ளம் நிரம்பிய பெரிய மடுவாய் இருப்பவரே!
804. ஓம் மஹாக³ர்தாய நம꞉ | 804. மாயைக்கு அதிபரே!
805. ஓம் மஹாபூ⁴தாய நம꞉ | 805. காலவரையின்றி எக்காலமும் வ்யாபித்திருப்பவரே!
806. ஓம் மஹானித⁴யே நம꞉ | 806. எல்லா வளங்களும் சேமித்து வைக்கும் இடமாக இருப்பவரே!
807. ஓம் குமுதா³ய நம꞉ | 807. பூமியை மகிழ்விப்பவரே!
808. ஓம் குந்த³ராய நம꞉ | 808. தர்ம பலன்களை அங்கீகரிப்பவரே!
809. ஓம் குந்தா³ய நம꞉ | 810 || 809. “குந்த மலர்” போன்று அழகிய அங்கம் உடையவரே!
810. ஓம் பர்ஜன்யாய நம꞉ | 810. மழை பொழியச் செய்யும் மேகமாய் இருப்பவரே!
811. ஓம் பாவனாய நம꞉ |. 811. தம்மை நினைத்த மாத்திரத்தில் பரிசுத்தமாக்குபவரே!
812. ஓம் அனிலாய நம꞉ | 812. தம்மை ஏவுவதற்கு எவரும் இல்லாதவரே!
813. ஓம் அம்ருதாம்ஶாய நம꞉ | 813. ஆத்மானந்தம் என்னும் அமுதை உண்பவரே!
814. ஓம் அம்ருதவபுஷே நம꞉ | 814. அழியாத தேகம் உள்ளவரே!
815. ஓம் ஸர்வஜ்ஞாய நம꞉ | 815. எல்லாம் தெரிந்தவரே!
816. ஓம் ஸர்வதோமுகா²ய நம꞉ | 816. எங்கும் முகங்களை உடையவரே!
817. ஓம் ஸுலபா⁴ய நம꞉ | 817. பக்தியால் எளிதில் அடையக்கூடியவரே!
818. ஓம் ஸுவ்ரதாய நம꞉ | 818. சிறந்த விரதம் உடையவரே!
819. ஓம் ஸித்³தா⁴ய நம꞉ | 819. வேறு காரணமின்றி தான் தானேயாகி எப்போதும் இருப்பவரே!
820. ஓம் ஶத்ருஜிதே நம꞉ | 820. சத்துருக்களை ஜெயிப்பவரே!
821. ஓம் ஶத்ருதாபனாய நம꞉ | 821. சத்துருக்களை தவிக்க செய்பவரே!
822. ஓம் ந்யக்³ரோதா⁴ய நம꞉ | 822. பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகளுக்குக்கெல்லாம் மேலாயிருப்பவரே!
823. ஓம் உது³ம்ப³ராய நம꞉ | 823. ஆகாயத்திற்கு மேற்பட்டவரே!
824. ஓம் அஶ்வத்தா²ய நம꞉ | 824. அரசமரம் போல் இருப்பவரே!
825. ஓம் சாணூராந்த்⁴ரனிஷூத³னாய நம꞉ | 825. “சாணூரன்” என்னும் அந்தரதேசத்து மன்னனைக் கொன்றவரே!
826. ஓம் ஸஹஸ்ரார்சிஷே நம꞉ | 826. ஆயிரம் சூர்ய பிரகாசங்களை ஒருங்கே பெற்றவரே!
827. ஓம் ஸப்தஜிஹ்வாய நம꞉ | 827. ஏழு நாவுடைய அக்கினி வடிவாயிருப்பவரே!
828. ஓம் ஸப்தைத⁴ஸே நம꞉ | 828. ஏழு ஜ்வாலைகளை உடையவராய் இருப்பவரே!
829. ஓம் ஸப்தவாஹனாய நம꞉ | 829. ஏழு குதிரைகளை வாகனமாய் கொண்ட சூரியனாய் இருப்பவரே!
830. ஓம் அமூர்தயே நம꞉ | 830. வடிவொன்றில்லாதவரே!
831. ஓம் அனகா⁴ய நம꞉ | 831. பாவத்தால் பற்றப்படாதவரே!
832. ஓம் அசிந்த்யாய நம꞉ | 832. நினைக்க ஒண்ணாதவரே!
833. ஓம் ப⁴யக்ருதே நம꞉ | 833. துஷ்டர்களுக்கு பயத்தை உண்டு பண்ணுகிறவரே!
834. ஓம் ப⁴யனாஶனாய நம꞉ | 834. நல்லவர்களுக்கு பயத்தை போக்குபவரே!
835. ஓம் அணவே நம꞉ | 835. மிகவும் சூக்ஷுமமாய் இருப்பவரே!
836. ஓம் ப்³ருஹதே நம꞉ | 836. மிகவும் பெரிதாய் இருப்பவரே!
837. ஓம் க்ருஶாய நம꞉ | 837. மிகவும் மெல்லியதாய் (காற்று போல்) இருப்பவரே!
838. ஓம் ஸ்தூ²லாய நம꞉ | 838. (எல்லாம் தாமாக இருப்பதால்) ஸ்தூலமாக(stout) இருப்பவரே!
839. ஓம் கு³ணப்⁴ருதே நம꞉ | 839. (சிருஷ்டி, ஸ்திதி, சம்காரங்களுக்கு காரணங்களாகிய) முக்குணங்களை மேற்கொள்பவரே!
840. ஓம் நிர்கு³ணாய நம꞉ 840. குணங்கள் இல்லாதவரே!
841. ஓம் மஹதே நம꞉ | 841. எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவரே!
842. ஓம் அத்⁴ருதாய நம꞉ | 842. பிரிதொன்றாலும் தாங்கப்படாதவரே!
843. ஓம் ஸ்வத்⁴ருதாய நம꞉ | 843. தம்மை தாமே தாங்குபவரே!
844. ஓம் ஸ்வாஸ்த்²யாய நம꞉ | 844. அழகிய முகம் உள்ளவரே!
845. ஓம் ப்ராக்³வம்ஶாய நம꞉ | 845. முதன்மையான வம்சம் உடையவரே!
846. ஓம் வம்ஶவர்த⁴னாய நம꞉ | 846. பிரபஞ்சமாகிய வம்சத்தை பெருகச் செய்பவரே!
847. ஓம் பா⁴ரப்⁴ருதே நம꞉ | 847. உலகின் பாரத்தை தாங்குபவரே!
848. ஓம் கதி²தாய நம꞉ | 848. பரம்பொருள் என மறைகளால் போற்றப்பட்டவரே!
849. ஓம் யோகி³னே நம꞉ | 849. யோகத்தால்   அடையப்படுபவரே!
850. ஓம் யோகீ³ஶாய நம꞉ | 850. யோகங்களுக்கு எல்லாம் சிறந்தவரே!
851. ஓம் ஸர்வகாமதா³ய நம꞉ | 851. எல்லா விருப்பங்களையும் அளிப்பவரே!
852. ஓம் ஆஶ்ரமாய நம꞉ | 852. இளைப்பாறும்   இடமாகியவரே!
853. ஓம் ஶ்ரமணாய நம꞉ | 853. அவிவேவிகளை (பாவிகளை) வருத்துகிறவரே!
854. ஓம் க்ஷாமாய நம꞉ | 854. பிரஜைகளை சம்கார காலத்தில் அழிப்பவரே!
855. ஓம் ஸுபர்ணாய நம꞉ | 855. வேதங்கள் என்னும் இலைகளோடு கூடிய சம்கார வ்ருக்ஷ வடிவினரே!
856. ஓம் வாயுவாஹனாய நம꞉ | 856. வாயுவை இயக்குபவரே!
857. ஓம் த⁴னுர்த⁴ராய நம꞉ | 857. வில்லாளியாய் விளங்குபவரே!
858. ஓம் த⁴னுர்வேதா³ய நம꞉ | 858. வில்வித்தையை அறிந்தவரே!
859. ஓம் த³ண்டா³ய நம꞉ | 859. தண்டிப்போரின் ஆயுதமாகவும், தண்டனையாகவும் இருப்பவரே! (துஷ்டர்களை தண்டிப்பவரே!)
860. ஓம் த³மயித்ரே நம꞉ | 860. பிரஜைகளை அடக்கி ஆள்பவரே!
861. ஓம் த³மாய நம꞉ | 861. ஆட்சி செய்யும் போதும் அடக்கமாய் இருப்பவரே!
862. ஓம் அபராஜிதாய நம꞉ | 862. பகைவர்களால் வெல்லப்படாதவரே!
863. ஓம் ஸர்வஸஹாய நம꞉ 863. எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்பவரே!
864. ஓம் நியந்த்ரே நம꞉ | 864. அனைவரையும் அவரவர் கடமைகளில் நிற்கும்படி செய்பவரே!
865. ஓம் நியமாய நம꞉ | 865. தம்மை அடக்குபவர் யாரும் இல்லாதவரே!
866. ஓம் யமாய நம꞉ | 866. எமபயம் இல்லாதவரே!
867. ஓம் ஸத்த்வவதே நம꞉ | 867. சூரத்தன்மையும், வீரத்தன்மையும் படைத்தவரே!
868. ஓம் ஸாத்த்விகாய நம꞉ | 868. சத்துவ குணத்தை பிரதானமாக உடையவரே!
869. ஓம் ஸத்யாய நம꞉ | 869. சத்தியத்துக்கு ஆதாரமாய் இருப்பவரே!
870. ஓம் ஸத்யத⁴ர்மபராயணாய நம꞉ | 870. சத்தியத்தையும், தர்மத்தையும் முக்கியமாக கொண்டவரே!
871. ஓம் அபி⁴ப்ராயாய நம꞉ | 871. மோக்ஷத்தை விரும்புவோரால் அணுகி வேண்டப்படுகிறவரே!
872. ஓம் ப்ரியார்ஹாய நம꞉ | 872. பிரியமான வஸ்துக்களை அர்ப்பணம் செய்தற்குரியவரே!
873. ஓம் அர்ஹாய நம꞉ | 873. பூஜித்தற்குரியவரே!
874. ஓம் ப்ரியக்ருதே நம꞉ | 874. பக்தர்களின் விருப்பத்தை செய்கிறவரே!
875. ஓம் ப்ரீதிவர்த⁴னாய நம꞉ | 875. பக்தர்களுக்கு அன்பை விருத்தி செய்கிறவரே!
876. ஓம் விஹாயஸக³தயே நம꞉ | 876. ஆகாயத்தில் உறைபவரே!
877. ஓம் ஜ்யோதிஷே நம꞉ | 877. ஸ்வயமாகவே பிரகாசிப்பவரே!
878. ஓம் ஸுருசயே நம꞉ | 878. அழகாய்ப் பிரகாசிப்பவரே!
879. ஓம் ஹுதபு⁴ஜே நம꞉ | 880 || 879. ஆஹுதியில் அளிக்கப்பட்டதை புசிப்பவரே!
880. ஓம் விப⁴வே நம꞉ | 880. எங்கும் இருப்பவரே!
881. ஓம் ரவயே நம꞉ | 881. சூரியனாக இருப்பவரே!
882. ஓம் விரோசனாய நம꞉ | 882. பலவிதமாகப் பிரகாசிப்பவரே!
883. ஓம் ஸூர்யாய நம꞉ | 883. எல்லாவற்றையும் உண்டாக்குபவரே!
884. ஓம் ஸவித்ரே நம꞉ | 884. உலகங்களை பிறக்கச் செய்பவரே!
885. ஓம் ரவிலோசனாய நம꞉ | 885. சூரியனைக் கண்ணாக உடையவரே!
886. ஓம் அனந்தாய நம꞉ | 886. அளவிட முடியாதவரே!
887. ஓம் ஹுதபு⁴ஜே நம꞉ | 887. ஹோமம் செய்ததை புசிப்பவரே!
888. ஓம் போ⁴க்த்ரே நம꞉ | 888. பிரகிருதியை அனுபவிப்பவரே!
889. ஓம் ஸுக²தா³ய நம꞉ | 890 || 889. பக்தர்களுக்கு மோக்ஷ சுகத்தைக் கொடுப்பவரே!
890. ஓம் நைகஜாய நம꞉ | 890. (தர்மங்களை ரக்ஷிப்பதற்காக) அநேக அவதாரங்கள் எடுப்பவரே!
891. ஓம் அக்³ரஜாய நம꞉ | 891. ஆதியில் எல்லோருக்கும் முன்னே தோன்றியவரே!
892. ஓம் அனிர்விண்ணாய நம꞉ | 892. கவலையே இல்லாதவரே!
893. ஓம் ஸதா³மர்ஷிணே நம꞉ | 893. சாதுக்கள் செய்யும் பிழைகளை பொறுத்துக் கொள்பவரே!
894. ஓம் லோகாதி⁴ஷ்டா²னாய நம꞉ | 894. உலகத்திற்கு ஆதாரமானவரே!
895. ஓம் அத்³பு⁴தாய நம꞉ | 895. அற்புதமாய் இருப்பவரே!
896. ஓம் ஸனாதனாய நம꞉ | 896. அநாதியான காலரூபியாய் இருப்பவரே!
897. ஓம் ஸனாதனதமாய நம꞉ | 897. பழமையாய் இருக்கும் பிரம்மாதி தேவருக்கும் மிகப் பழமையாய் இருப்பவரே!
898. ஓம் கபிலாய நம꞉ | 898. கபில நிறமுள்ள வடவாக்கினியாகக் கடலில் இருப்பவரே!
899. ஓம் கபயே நம꞉ | 899. சூரியனாய் இருப்பவரே!
900. ஓம் அவ்யயாய நம꞉ | 900. பிரளய காலத்தில் உலகம் அடங்கும் இடமாய் இருப்பவரே!
901. ஓம் ஸ்வஸ்திதா³ய நம꞉ | 901. பக்தர்களுக்கு மங்களத்தை கொடுப்பவரே!
902. ஓம் ஸ்வஸ்திக்ருதே நம꞉ | 902.  மங்களத்தை செய்பவரே!
903. ஓம் ஸ்வஸ்தயே நம꞉ | 903. மங்களமே தாமாக இருப்பவரே!
904. ஓம் ஸ்வஸ்திபு⁴ஜே நம꞉ | 904. மங்களத்தை அனுபவிப்பவரே!
905. ஓம் ஸ்வஸ்தித³க்ஷிணாய நம꞉ | 905. மங்களத்தை விரைவாக கொடுக்கும் தன்மை உள்ளவரே!
906. ஓம் அரௌத்³ராய நம꞉ | 906. கொடுஞ்செயல்கள் (ஆசை, கோபம்…) எதுவும் இல்லாதிருப்பவரே!
907. ஓம் குண்ட³லினே நம꞉ | 907. பிரகாசிக்கும் குண்டலங்களை அணிந்தவரே!
908. ஓம் சக்ரிணே நம꞉ | 908. சுதர்சனம் என்னும் சக்கரத்தை தரிப்பவரே!
909. ஓம் விக்ரமிணே நம꞉ | 910 |. 909. சிறந்த பராக்கிரமம் உள்ளவரே!
910. ஓம் உர்ஜிதஶாஸனாய நம꞉ | 910. உறுதியான கட்டளைகளை பிறப்பிப்பவரே!
911. ஓம் ஶப்³தா³திகா³ய நம꞉ | 911. சொல்லுக்கு எட்டாதவரே!
912. ஓம் ஶப்³த³ஸஹாய நம꞉ | 912. (எல்லா வேதங்களாலும் கோஷிக்கப்படுவதால்) எல்லாச் சப்தங்களையும் தாங்குகிறவரே!
913. ஓம் ஶிஶிராய நம꞉ | 913. குளிர் காலம் போல் எப்போதும் குளிர்ச்சியாய் இருப்பவரே!
914. ஓம் ஶர்வரீகராய நம꞉ | 914. இரவு போன்ற இருளை செய்பவரே!
915. ஓம் அக்ரூராய நம꞉ | 915. கொடுமை சிறிதும் இல்லாதவரே!
916. ஓம் பேஶலாய நம꞉ | 916. அதிக மென்மையானவரே!
917. ஓம் த³க்ஷாய நம꞉ | 917. அதிக சாமர்த்தியம் மிக்கவரே!
918. ஓம் த³க்ஷிணாய நம꞉ | 918. அதிக சுதந்திரம் கொடுப்பவரே!
919. ஓம் க்ஷமிணாம் வராய நம꞉ | 920 | 919. பொறுமையில் சிகரமாய் இருப்பவரே!
920. ஓம் வித்³வத்தமாய நம꞉ | 920. அறிவோரில் சிறந்தவரே!
921. ஓம் வீதப⁴யாய நம꞉ | 921. பயமொன்று அறியாதவரே!
922. ஓம் புண்யஶ்ரவணகீர்தனாய நம꞉ | 922. தம்மை பற்றி கேட்பவர்க்கும், கீர்த்தனம் செய்பவருக்கும் புண்ணியத்தை கூட்டி வைப்பவரே!
923. ஓம் உத்தாரணாய நம꞉ | 923. (சம்சாரக் கடலிலிருந்து) கரையேற்றுபவரே!
924. ஓம் து³ஷ்க்ருதிக்⁴னே நம꞉ | 924. பாவங்களை போக்குகிறவரே!
925. ஓம் புண்யாய நம꞉ | 925. புண்ணியத்தை அளிப்பவரே!
926. ஓம் து³ஸ்வப்னநாஶாய நம꞉ | 926. கெட்ட கனவுகளை போக்குபவரே!
927. ஓம் வீரக்⁴னே நம꞉ | 927. முக்தி அளித்து சம்சாரத்தில் உழல்வோருடைய போக்குகளை அழிப்பவரே!
928. ம் ரக்ஷணாய நம꞉ | 928. பிரபஞ்சத்தை ரக்ஷிப்பவரே!
929. ஓம் ஸத்³ப்⁴யோ நம꞉ | 929. பரிசுத்தமானவர்களின் வடிவாய் இருப்பவரே!
930. ஓம் ஜீவனாய நம꞉ | 930. எல்லா உயிர்களுக்கும் பிராணனாகி ஜீவித்து இருப்பவரே!
931. ஓம் பர்யவஸ்தி²தாய நம꞉ | 931. எங்கும் வியாபித்து இருப்பவரே!
932. ஓம் அனந்தரூபாய நம꞉ | 932. எண்ணிலடங்கா (பிரபஞ்ச) ரூபமாய் இருப்பவரே!
933. ஓம் அனந்தஶ்ரியே நம꞉ | 933. அளவற்ற சக்தி உடையவரே!
934. ஓம் ஜிதமன்யவே நம꞉ | 934. கோபத்தை வென்றவரே!
935. ஓம் ப⁴யாபஹாய நம꞉ | 935. பயத்தை போக்குபவரே!
936. ஓம் சதுரஶ்ராய நம꞉ | 936. (அவரவருடைய கர்ம பலன்களுக்கு தக்கபடி) நியாயத்துடன் நடந்து கொள்பவரே!
937. ஓம் க³பீ⁴ராத்மனே நம꞉ | 937. ஆழங்கான முடியாதபடி ஸ்வரூபமுடையவரே!
938. ஓம் விதி³ஶாய நம꞉ | 938. விசேஷமாகப் பலன்களை அளிப்பவரே!
939. ஓம் வ்யாதி⁴ஶாய நம꞉ | 939. இந்திராணி தேவர்களுக்கு வெவேறான கட்டளைகளை வகுப்பவரே!
940. ஓம் தி³ஶாய நம꞉ | 940. வேத ரூபியாக எல்லா கர்மங்களுக்கும் பலனைச் சுட்டிக் காட்டுபவரே!
941. ஓம் அனாத³யே நம꞉ | 941. (தாம் அனைத்திற்கும் காரணமாய் இருப்பதால்) தமக்கு காரணமில்லாதவரே!
942. ஓம் பூ⁴ர்பு⁴வாய நம꞉ | 942. தமக்கு ஒரு ஆதரவின்றி தாமே ஒரு வடிவாயிருப்பவரே!
943. ஓம் லக்ஷ்மை நம꞉ | 943. தம்மை சார்ந்தவர்க்கு தாமே எல்லா விதமான செல்வமுமாய் இருப்பவரே!
944. ஓம் ஸுவீராய நம꞉ 944. பக்தர்களுக்கு நல்ல கதிதனை கொடுப்பவரே!
945. ஓம் ருசிராங்க³தா³ய நம꞉ | 945. அழகான தோள்வளைகளை உடையவரே!
946. ஓம் ஜனநாய நம꞉ | 946. உயிர்களை படைப்பவரே!
947. ஓம் ஜனஜன்மாத³யே நம꞉ | 947. உலகில் ஒவ்வொரு உயிரின் படைப்புக்கும் காரணமாகியவரே!
948. ஓம் பீ⁴மாய நம꞉ | 948. உலகெல்லாம் தம்மிடம் பயந்து நடுங்கும்படி இருப்பவரே!
949. ஓம் பீ⁴மபராக்ரமாய நம꞉ | 949. எதிரிகளுக்கு பயத்தைக் கொடுக்கும் பராக்கிரமம் உள்ளவரே!
950. ஓம் ஆதா⁴ரனிலயாய நம꞉ | 950. பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாய் இருப்பவரே!
951. ஓம் அதா⁴த்ரே நம꞉ | 951. தம்மைத் தவிர வேறு ஆதாரம் இல்லாதவரே!
952. ஓம் புஷ்பஹாஸாய நம꞉ | 952. புஷ்பம் மலர்வது போல் (சிருஷ்டி காலத்தில்) மலர்கிறவரே!
953. ஓம் ப்ரஜாக³ராய நம꞉ | 953. எப்போதும் விழித்துக் கொண்டிருப்பவரே!
954. ஓம் உர்த்⁴வகா³ய நம꞉ | 954. எல்லாவற்றிற்கும் மேலிருப்பவரே!
955. ஓம் ஸத்பதா²சாராய நம꞉ | 955. சத்திய தர்மங்களை தாமும் அனுஷ்டிப்பவரே!
956. ஓம் ப்ராணதா³ய நம꞉ | 956. இறந்தவர்க்கும் உயிரளிப்பவரே!
957. ஓம் ப்ரணவாய நம꞉ | 957. ஓங்கார பொருளாய் இருப்பவரே!
958. ஓம் பணாய நம꞉ | 958. நாம ரூபங்களை விவரிப்பவரே!
959. ஓம் ப்ரமாணாய நம꞉ | 959. தானே ஒளிர்வதான ஞான வடிவினரே!
960. ஓம் ப்ராணனிலயாய நம꞉ | 960. எல்லா ஜீவாத்மாக்களுக்கும் இருப்பிடமானவரே!
961. ஓம் ப்ராணப்⁴ருதே நம꞉ | 961. ஜீவராசிகளின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்தி நடைபெறச் செய்பவரே!
962. ஓம் ப்ராணஜீவனாய நம꞉ | 962. பிராணிகளை ஜீவிக்கச்செய்பவரே!
963. ஓம் தத்த்வாய நம꞉ | 963. பரம்பொருளாகியவரே!
964. ஓம் தத்த்வவிதே³ நம꞉ | 964. தமது விஸ்வ ரூபத்தை அறிபவரே!
965. ஓம் ஏகாத்மனே நம꞉ | 965. ஒன்றேயாகிய ஆத்மாவாய் இருப்பவரே!
966. ஓம் ஜன்மம்ருத்யுஜராதிகா³ய நம꞉ | 966. பிறப்பு, மூப்பு, இறப்புகளை கடந்தவரே!
967. ஓம் பு⁴ர்பு⁴வ꞉ ஸ்வஸ்தரவே நம꞉ 967. மூன்று உலகத்தையும் ( பூ. புவ, ஸ்வ,) மந்திரங்களால் வழி நடத்துபவரே!
968. ஓம் தாராய நம꞉ | 968. பிறவிக் கடலை தாண்டுவிப்பவரே!
969. ஓம் ஸவித்ரே நம꞉ | 969. எல்லாவற்றையும் உண்டாக்குகிறவரே!
970. ஓம் ப்ரபிதாமஹாய நம꞉ | 970. படைப்பு கடவுளாம் பிரம்மனுக்கும் பிதாவாகியவரே!
971. ஓம் யஜ்ஞாய நம꞉ | 971. யாகத்தை செய்பவர்களுக்கு அதன் பலனை காட்டுவிப்பவரே!
972. ஓம் யஜ்ஞபதயே நம꞉ | 972. யாகங்களை ரக்ஷிப்பவரே!
973. ஓம் யஜ்வனே நம꞉ | 973. யாகம் செய்பவராய் இருப்பவரே!
974. ஓம் யஜ்ஞாங்கா³ய நம꞉ | 974. யாகங்களை தமது உறுப்புகளாகக் கொண்ட யக்ஞ வராஹ வடிவினரே!
975. ஓம் யஜ்ஞவாஹனாய நம꞉ | 975. யாகங்களை நடத்துகிறவரே!
976. ஓம் யஜ்ஞப்⁴ருதே நம꞉ | 976. யாகங்களை ஏற்றுக்கொள்பவரே!
977. ஓம் யஜ்ஞக்ருதே நம꞉ | 977. ஆதி காலத்தில் யக்ஞத்தை சிருஷ்டித்தவரே!
978. ஓம் யஜ்ஞினே நம꞉ | 978. யாகங்களுக்குத் தலைவரே!
979. ஓம் யஜ்ஞபு⁴ஜே நம꞉ | 979. யாகங்களை அனுபவிப்பவரே!
980. ஓம் யஜ்ஞஸாத⁴னாய நம꞉ | 980. யாகங்களை தம்மை அடையும் சாதனமாகக் காட்டுவிப்பவரே!
981. ஓம் யஜ்ஞாந்தக்ருதே நம꞉ | 981. யாகத்தின் பயனைக் கூட்டுவிப்பவரே!
982. ஓம் யஜ்ஞகு³ஹ்யாய நம꞉ | 982. யாகங்களுக்குள் ரகசியமாகிய ஞான யக்ஞமாக இருப்பவரே!
983. ஓம் அன்னாய நம꞉ | 983. எல்லோராலும் அன்னம் போல் அனுபவிக்கப்படுகிறவரே!
984. ஓம் அன்னதா³ய நம꞉ | 984. உலகனைத்தையும் சம்கார காலத்தில் அன்னம் போல் உண்பவரே!
985. ஓம் ஆத்மயோனயே நம꞉ | 985. தாமே உலகிற்கு உபாதான காரணமாய் இருப்பவரே!
986. ஓம் ஸ்வயஞ்ஜாதாய நம꞉ | 986. தாமே தமது பிறப்பிற்கும் காரணமாகியவரே!
987. ஓம் வைகா²னாய நம꞉ | 987. வராஹ மூர்த்தியாக பூமியைத் தோண்டியவரே!
988. ஓம் ஸாமகா³யனாய நம꞉ | 988. சாமகானம் பண்ணுகிறவரே!
989. ஓம் தே³வகீனந்த³னாய நம꞉ | 989. தேவகியின் புதல்வரே!
990. ஓம் ஸ்ரஷ்ட்ரே நம꞉ | 990. உலகங்களை படைப்பவரே!
991. ஓம் க்ஷிதீஶாய நம꞉ | 991. பூமிக்கு ஈஸ்வரரே!
992. ஓம் பாபனாஶனாய நம꞉ | 992. பாவங்களை ஒழிப்பவரே!
993. ஓம் ஶங்க²ப்⁴ருதே நம꞉ | 993. “பாஞ்சஜன்யம்” என்னும் சங்கத்தை தரிப்பவரே!
994. ஓம் நந்த³கினே நம꞉ | 994. “நந்தகம்” என்னும் வாளை ஏந்தியவரே!
995. ஓம் சக்ரிணே நம꞉ | 995. “சுதர்சனம்” என்னும் சக்கரத்தை உடையவரே!
996. ஓம் ஶர்ங்க³த⁴ன்வனே நம꞉ | 996. “சார்ங்கம்” என்னும் வில்லை உடையவரே!
997. ஓம் க³தா³த⁴ராய நம꞉ | 997. “கௌமோதகீ” என்னும் கதையை தரிப்பவரே!
998. ஓம் ரதா²ங்க³பாணயே நம꞉ | 998. சக்கரத்தை கையில் கொண்டவரே!
999. ஓம் அக்ஷோப்⁴யாய நம꞉ | 999. சரணடைந்தோர்க்கு அபயம் அளிப்பவரே,
1000. ஓம் ஸர்வ ப்ரஹரணாயுதாய நம! 1000. ஓம் எய்துவனயாவும் ஆயுதமாய் கொண்டவரே போற்றி! போற்றி! ஓம் நமஹ!

வனமாலையை அணிந்தவரும், கதை, ஷார்ங்கம், சங்கு, சக்ரம், வாளினை உடையவரும், விஷ்ணு எனவும் வாசுதேவன் என்ற திருநாமம் கொண்டவரும், மகாலட்சுமியுடன் இணைந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரிவாராக!

மேன்மையானவரும், புகழுக்கு உகந்தவரான கேசவனுடைய புனித நாமங்கள் ஆயிரமும் கூறப்பட்டனவே! இதனை தினந்தோரும் கேட்பவரும், பாராயணம் செய்பவரும் இம்மை மறுமையிலும் எவ்வித துன்பமுமே அடையமாட்டார்.

அந்தணர் வேத அறிவு அடைவர், சத்திரியர் வெற்றியை காண்பர், வைசியர் செல்வம் செழித்திடுவர், நான்காம் வருணத்தினர் சுகமே பெறுவர். தர்மத்தை வேண்டுவோர் தர்மமே அடைவர். பொருளை வேண்டுவோர் பொருளை பெறுவர். போகங்களை நாடுவோர் போகங்களை காண்பர். சந்ததியை விரும்புவோர் சந்ததி நிரம்ப பெறுவரே.

எவன் தினமுமே துயில் எழுந்ததும் தூய்மை இறை மனமுடன் வாசுதேவரின் நாமங்களை கீர்த்தனம் செய்கின்றானோ பெரும் கீர்த்தி, உயர்வான பதவி, அளவற்ற செல்வம், மோட்சமதை பெறுவானே!

வாசுதேவரின் அடியவர்களுக்கு அச்சம் எந்நாளுமே இல்லை! இந்த துதிமொழியை பக்தியுடன் படிப்பவனும் ஆன்ம, அமிர்தம், பொறுமை, துணிவு, ஞாபக சக்தியுடன் விளங்கிடுவானே! எவன் சகல சௌபாக்கியத்தையும் சுகம் யாவும் வேண்டுகின்றானோ, அவன் வியாசரால் கீர்த்தனம் செய்யப்பட்ட விஷ்ணுவின் இந்த துதிதனை பாராயணம் செய்ய வேண்டுமே!

எல்லா உலகுக்கும் ஈசனும், பிறப்பே இல்லாதவனும், ஒளி பொருந்தியவனும், உலகின் தலைவனும், சலனமற்ற தாமரைக் கண்ணனையே, எவர்கள் வணங்குகின்றனரோ, அவர்களுக்கு தோல்வியே கிடையாது! தோல்வியே கிடையாது! ஓம் நமஹ என சகல நன்மைகளும் ஏற்பட பரம புருஷனை வணங்குகின்றேன்!

தாமரை இதழ் போன்ற நயனங்களை உடையவரே, நாபியில் தாமரை மலர்ந்தவரே, வானவரில் மேன்மையான ஜனார்த்தனா, அன்பு கொண்டவரிடம் அடைக்கலம் ஆவி, என, அர்ச்சுனன் கேட்டதுமே ஸ்ரீபகவான் கூறலானாரே!

விஷ்ணுவின் சகஸ்ரநாமம் எக்காலமும் ஞானிகளால் எப்படியாக எளிதில் பிரார்த்திக்கப்படுகின்றதோ அதனை கேட்க ஆவல் கொண்டுள்ளேன் எனவும் பார்வதிதேவி பரமேஸ்வரனிடம் வினவியதும், ஈசன் சொன்னாரே,

ஸ்ரீராம ராம ராமயென உள்ளத்துக்கினிய ராமனிடம் ஈடுபடுகிறேன். அந்த ராம நாமமே சகஸ்ரநாமத்திற்கு ஒவ்வானது. ஸ்ரீராம நாமமே சகஸ்ரநாமத்திற்கு ஒப்பானது.

எந்த இடத்தில் யோகத்தின் ஈஸ்வர் ஆன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கின்றாறோ, எங்கு வில்லேந்திய அர்ச்சுனன் உள்ளானோ, அங்கு சர்வ மங்களமும் ஜெயமும் பெருமையும், துணிவான நிதியும், தவழும் என்பதே என் கோட்பாடு என சஞ்சயர் சொன்னாரே!
ஸ்ரீபகவானின் அருட்குரல் ஒலித்ததுவே, என்னை விட எதிலுமே விருப்பமின்றி, என்னையே எப்போதும் நினைத்துமே, எந்த மக்கள் தூய்மையுடன் என்னை துதிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தகுதி படைத்தோரின் யோகச் ஷேமங்களை நான் தாங்கிக் கொள்கிறேன். சாதுக்களை காத்திடவும், துஷ்டர்களை அழித்திடவும், தர்மத்தை உறுதிபடுத்திடவும் யுகம் தோறும் தோன்றிடுவேன்.

துயரத்தால் ஏங்கி உள்ளம் உடைந்தோரும், பீதியடைந்தவர்களும், தீராத பிணியினால் பீடிக்கப்பட்டவர்களும், நாராயணா என்ற மொழியை கூறி சகல துக்கங்களிலிருந்து விடுபட்டு இன்பமுடன் வாழ்வாங்கு வாழ்ந்திடுக!

உடலாலோ, வாக்கினாலோ, நினைவாலோ, கரம் இந்திரியங்களாலோ, இயற்கையின் செயலாலோ எது எதனை நான் கூறுகின்றேனோ அவை அனைத்தையும் பரம புருஷனான ஸ்ரீமன் நாராயணனுக்கே காணிக்கை ஆக்குகின்றேன்!

ஓம் தத்ஸத்!!!

தொகுப்பு:

த. சிதம்பரம்
துறைத்தலைவர் (பொறுப்பு)
பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி
ராஜபாளையம் – 626108
மொபைல் நம்பர்: 98428 98370


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை