×
Monday 9th of December 2024

நாம் காணும் கனவுகளுக்கு ஆன்மீக விளக்கம்


The Spiritual Interpretation of the Dreams We See

அறிவியல் பூர்வமாக மனிதனின் ஆழ்மனது சில ஞாபக பதிவுகள் அல்லது முன்னறிவிப்பு வெளிப்பாடுகளுடன் அவனை தொடர்பு செய்ய முயற்சி செய்வதே கனவு என்று (நம்பப்படுகிறது) கூறப்படுகிறது.

ஆன்மிக ரீதியாக நாம் கனவைப் பற்றி பின்வருமாறு கூறலாம்:

  • ✔️ ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின் வட்டாரத்தில் அன்பும் ஆதரவும் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.
  • ✔️ ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால், எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணருங்கள். இறைவனை மனபூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து செயல் படுவது நல்லது.
  • ✔️ இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால், லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்கியங்களை பெற்று சுகமாக வாழ்வீர்கள்.
  • ✔️ திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால், வீடு-வாகனம், பொருட்கள் வாங்கும் யோகம் வரும். அதனால் கடனும்வாங்குவீர்கள். இருந்தாலும் குடும்பத்திலும், உங்கள் மனதிலும் சந்தோஷம் இருக்கும். புதிய சுமை இருந்தாலும் அதை சுகமான சுமையாகவே கருதுவீர்கள்.
  • ✔️ திருவிழாவில் யாரையாவது தேடுவது போல கனவு கண்டால், தொழிலில் சில சங்கடங்கள், உறவில் விரிசல் போன்ற சிறு சிறு சங்கடங்கள் வரும். காலம் கடந்து கொண்டு இருந்த விஷயங்களுக்கு புதிய வழி கிடைக்கும். அதனால் லாபமும் உண்டாகும்.
  • ✔️ தோட்டத்தில் இருப்பது போல கனவு கண்டால், இனிமையான தகவல் கிடைக்கும். அதனால் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நட்பால் நன்மை ஏற்படும்.
  • ✔️ பட்டு போன மரத்தை கனவில் கண்டால், சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் கொடுத்தவர்கள் அதிகமாகவே உங்களுக்கு தொல்லையும் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளால் மனசங்கடங்கள் உருவாகும்.
  • ✔️ முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. புதிய பிரச்சனை உருவாகும். அதிலிருந்து தப்பிக்கும் வழியை தெரிந்து கொள்வீர்கள்.
  • ✔️ செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலை இருக்கும். வியாதியால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவத்தால் உடல் பிரச்சனை விலகும்.
  • ✔️ கயிற்றை இரு கரங்களால் பிடித்து தொங்குவது போல கனவு கண்டால், விபத்துக்கள் உண்டாகும். ஆகவே பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. ஆபத்தில் இருந்து உங்களை விடுபட வைக்க சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் வருவார்கள். அவர்களின் வருகை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மேன்மையே ஏற்படுத்தும்.
  • ✔️ நீங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் போது உங்களுக்கு கயிற்றை கொடுத்து யாரோ உதவுவது போல கனவு கண்டால், பெரிய லாபகரமான விஷயங்கள் நீங்களே எதிர் பார்க்காமல் நடக்கும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகளின் தடை விலகும்.
  • ✔️ நகை வாங்குவது போல கனவு கண்டால், புதிய தொழில் தொடங்குவீர்கள். அல்லது தொழில் விருத்தி உண்டாகும். நற்பலன்கள் தேடி வரும். மனசங்கடங்கள் நீங்கி மன நிம்மதியும், சந்தோஷமும் பெறுவீர்கள். கடனுக்காக காத்து இருப்பவர்களாக இருந்தால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
  • ✔️ நகையை அடமானம் வைப்பது போல கனவு கண்டால், எந்த பொருட்களையாவது விற்பீர்கள். அது அசையும் பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அசையாத பொருட்களாகவும் இருக்கலாம். இருந்தாலும் குடும்பத்தின் செல்வாக்கு குறையாது.
  • ✔️ நகை திருட்டு போவது போல கனவு கண்டால், திடீர் தனவரவு உண்டாகும். பாவ செயலில் ஈடுபடுவீர்கள். தீய சகவாசம் தெருவில் நிறுத்தும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. இறைவனை வணங்கினால் பாதகத்திலிருந்து தப்பிக்கலாம்.
  • ✔️ பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்வீர்கள்.
  • ✔️ மலை ஏறுவது போல கனவு கண்டால், சாதிக்கும் காலம் இது என உணர்ந்து, முயற்சிகளை செய்து வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல் நலம் சுகம் ஏற்படும்.
  • ✔️ மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஏதோ பெரிய ஆபத்து உங்களை நெருங்கி வருவதாக அர்த்தம். எச்சரிக்கையாகவும், புத்திசாலிதனத்துடனும் நடந்து கொண்டால் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம்.
  • ✔️ வீட்டில் சாம்பிரானி புகை போடுவது போல கனவு கண்டால், இல்லத்தில் கஷ்டங்கள் விலகும். தொழில் துறையில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும்.
  • ✔️ நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது.
  • ✔️ நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே எதற்கும் கோபப்படாமல நிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள்.
  • ✔️ இயற்கையாக உயிரிழந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக பேரப் பிள்ளைகள் எடுத்து நன்றாக வாழ்ந்து வயது முதிர்ந்தபின் இயற்கை எய்திய பெரியவர்கள் கனவில் வந்தால் அதனை நமக்கான நல்ல ஆசி எனக் கருத வேண்டும்.

Spiritual Meaning of Dreams

  • ✔️ ஆனால் துர்மரணம் அல்லது அகால மரமடைந்தவர்கள் கனவில் வந்தால், சில இன்னல்கள் / இடர்பாடுகள் நமக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதாவது உடல் நலக் குறைபாடு. திடீர் விபத்து, குடும்பத்தில் பிரச்சனைகள் மற்றும் பிரிவு உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.
  • ✔️ இப்படி அகாலமாக உயிரிழந்தவர்கள் கனவில் வந்துவிட்டால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று இறை வழிபாட்டை மேற்கொள்ளும் பட்சத்தில் கெட்ட கனவுகளிலிருந்து ஏற்படும் இன்னல்களை தவிர்க்கலாம்.
  • ✔️ வயதான முன்னோர்கள் (தாத்தா, பாட்டன், முப்பாட்டன்), வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால், எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை.
  • ✔️ மேலும் கனவுகளில் நாம் கோவிலில் கடவுளை வணங்குவது போல் வந்தால், வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல பலன்கள் வந்துசேரும்.

Read, also


2 thoughts on "நாம் காணும் கனவுகளுக்கு ஆன்மீக விளக்கம்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 7, 2024
திருமாங்கல்யம்
  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil