- டிசம்பர் 10, 2024
உள்ளடக்கம்
🛕 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தலவிருட்சமாக மாமரம் ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.
🛕 காஞ்சி திரு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் 3500 ஆண்டுகாலமாக இருந்த தலவிருட்சத்தின் திசுவிலிருந்து வேளாண் அறிஞர்கள் உருவாக்கிய புதிய மாஞ்செடியே காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ளது.
🛕 அதன் இலைகள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இந்த ஒரே மரத்தில் பல விதமான சுவைகளைக் கொண்ட கனிகள் காய்க்கும். பெரியவர்கள் சிலர் ருசித்தும், சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறோம்.
🛕 தற்போதும் அந்த மரம் இருக்கிறது. முன்பு கொஞ்சம் பின்னமாகி இருந்தது. தற்போது அதை உயிர்ப்பித்து புதுப்பித்திருக்கிறார்கள்.
🛕 அந்த தலவிருட்சத்திற்கு நிறைய சக்திகள் மற்றும் மருத்துவ குணங்கள் இருக்கிறது.
🛕 காஞ்சி காமாட்சி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சற்று இந்த மாமர நிழலில் அமர்ந்து செல்வது வழக்கம்.
🛕 நாமும் நேரம் கிடைக்கும் பொழுது காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சென்று, தலவிருட்சத்தின் நிழலில் அமர்ந்து ஆன்மீக தியானத்தின் மூலம் மனஅமைதி பெறுவோமாக!