×
Wednesday 11th of December 2024

சலீம் மாமா


உள்ளடக்கம்

Saleem Mama Short Story in Tamil

பஞ்சு மிட்டாய் வாங்கலியோ, இப்போ வாங்குங்கோ, ரொம்ப ருசியாக இருக்கு. மிகவும் ருசியாக இருக்கும் பஞ்சு மிட்டாய்களை இப்போதே வாங்குங்கள்!

1970 களின் பிற்பகுதியில் நான் வசித்த அயனாவரம் உஜ்ஜினி தெருவில், பஞ்சு மிட்டாய் விற்பவர் எழுப்பிய முழக்கம் இது. அப்போது நான் சிறுவனாக இருந்தேன்! சலீம், சிறுவர்களால் சூழப்படுவார், அவர்கள் தங்களுக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்குவதற்காக தங்கள் நாணயங்களை ஆர்வத்துடன் அவரிடம் அளிப்பார்கள்.  அங்கிள், எனக்கு ஒண்ணு கொடுங்க என்று பையன்கள் முழக்கமிடுவார்கள். தங்களுக்குப் பிடித்த இனிப்புப் பொருளைப் பெறுவதற்காக சிறு புன்னகையை உதிர்ப்பார்கள். பஞ்சு மிட்டாய் சுவை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் சலீமை மகிழ்விக்க அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள்!

சில பையன்கள் அவரை பஞ்சு மிட்டாய் அண்ணா, என்றும், சிலர் பஞ்சுமிட்டாய்காரர், பஞ்சு மிட்டாய் விற்பவர் என்றும் சொல்வார்கள்! சலீம் தன்னுடைய மணியிலிருந்து எழுப்பும் ஒரு பெரிய ஒலி, நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகளை ஈர்க்கும், அவர்களால் சூழப்பட்டபோது, பிருந்தாவனத்தின் ஆண் மற்றும் பெண் மாடு மேய்ப்பவர்களான கோபாலர்கள் மற்றும் கோபிகைகள்  சூழ அவரை நான் பகவான் கிருஷ்ணராக நினைத்தேன்!

ஆனால் சலீமிடமிருந்து பஞ்சு மிட்டாய்களை வாங்க என் தந்தை அனுமதிக்க மாட்டார், இனிப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அந்த பஞ்சுமிட்டாய் மைதாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் எச்சரித்தார்! ஆனால், அப்பா இல்லாத சமயத்தில், இனிப்பு மிட்டாய் வகைகளை சுவைக்க என் நாக்கு தூண்டியதால், எனக்காக ஒரு பஞ்சு மிட்டாய் நான் வாங்கிக் கொள்வேன்!

ஆனால் திடீரென்று எங்களுக்கு பிடித்த சலீம் மாமா எங்கள் இடத்திற்கு வருவதை நிறுத்தினார், அதைப் பற்றி நான் விசாரித்தபோது, அவர் சில ஒப்பந்த பணிக்காக (Contract Labour Work), வெளிநாடு சென்றதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்பு, சுவையான பஞ்சு மிட்டாய் விற்பதற்காக எங்கள் இடத்திற்கு வேறு சில வியாபாரிகள் வந்தார்கள். ஆனால் நாங்கள் எல்லோரும் அவர்களிடமிருந்து அதை வாங்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் எங்கள் சலீம் மாமாவை நாங்கள் மிகவும் நேசித்தோம். அவருடைய புன்னகை தவழும் கனிவான முகத்தை என்றென்றும் எங்களால் மறக்க முடியாது.

சிறுவயது அனுபவத்தைப் பகிர்ந்தவர்: ரா.ஹரிசங்கர், ஆன்மீக எழுத்தாளர்

அலைபேசி எண்: 9940172897


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • பிப்ரவரி 9, 2024
சுசீலா ஆன்ட்டி
  • ஜனவரி 28, 2024
ஆவிகள் நமது நண்பர்கள்
  • ஜனவரி 27, 2024
பக்கோடா கடைக்காரர்