×
Wednesday 4th of December 2024

பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வதின் பலன்கள்


Benefits of Handmade Pillaiyar at Home in Tamil

மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஒரு கைப்பிடி மஞ்சளை ஒரு குழந்தையின் கையால் பிடித்து வைத்தாலும் அது பிள்ளையார் தான்!

எந்த காரியத்தையும் விநாயகரை வணங்கி தொடங்குவது மரபு. எந்தெந்த பிள்ளையார் பிடித்து வைத்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

மஞ்சள் பிள்ளையார்

நல்ல காரியங்களை தொடங்கும்போது, மங்களகரமாக நடைபெற, ஒரு கைப்பிடி மஞ்சளை, பிள்ளையாராக பிடித்து வைப்பது வழக்கம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.

குங்குமப் பிள்ளையார்

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

புற்று மண் பிள்ளையார்

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும். வியாபாரத்தை பெருக வைப்பார்.

வெல்லப் பிள்ளையார்

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும். வளம் தருவார்.

உப்பு பிள்ளையார்

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.

வெள்ளெருக்கு பிள்ளையார்

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்.

விபூதி பிள்ளையார்

விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

சந்தனப் பிள்ளையார்

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

பசுஞ்சாணப் பிள்ளையார்

பசுஞ்சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும். நோய்களை நீக்குவார்.

வாழைப்பழ பிள்ளையார்

வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணெய் பிள்ளையார்

வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

சர்க்கரை பிள்ளையார்

சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

கல் பிள்ளையார்

கல்லால் பிள்ளையாரை செய்து வழிபட்டால் வாழ்வில் எடுத்த காரியத்தில் வெற்றி தருவார்.

மண் பிள்ளையார்

மண்ணில் விநாயகரைப் பிடித்து வழிபட்டு வந்தால் உயர் பதவிகள் கொடுப்பார்.

பிள்ளையார் எளியோனுக்கு எளியார் என்பதால் எப்படி பிடித்தாலும், பிள்ளையார் விக்னங்களை தீர்த்து வைப்பார். எந்த இடத்தில் இருந்து விநாயகனே என்றால் ஓடோடி வநது வினை தீர்ப்பவர் விநாயகர். அப்படிப்பட்ட பிள்ளையாரை அனுதினமும் தொழுது வாழ்வில் இன்புற்று இருப்போம்!



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 14, 2024
ஸ்ரீ கணேச புராணத்தின் சாராம்சம்
  • டிசம்பர் 8, 2023
கிருஷ்ணரை மகிழ்விப்பது எப்படி?
  • நவம்பர் 21, 2023
அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் கூழ் வைத்து வழிபாடு