×
Wednesday 11th of December 2024

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை


How to Take Pradosh Vrat in Tamil?

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்

நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் – என்றால் துக்கம். ரன் – என்றால் ஓட்டுபவன். ருத்ரன் – என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.

எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

Soma Suktam Pradakshina in Tamil

சோம சூக்தப் பிரதட்சணம்

மற்ற நாட்களில் ஆலயத்தில் மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கதிலும் எதிர்த்துச் சென்று பயமுருத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.

Pradosham Pradakshina

பிரதட்சண முறை

முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல், அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்த வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

பிரதோஷ வழிபாடு செய்ய மாலயனாதி வானவர்களும் சிவாலயம் செல்வார்கள். ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோவில்களால் வழிபாடு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரமாகும். இது தினப் பிரதோஷம் எனப்படும்.

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

Pradosham Benefits in Tamil

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:

1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் – பல வளமும் உண்டாகும்.

3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்.

4. பழங்கள் – விளைச்சல் பெருகும்.

5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்.

6. நெய் – முக்தி பேறு கிட்டும்.

7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்.

8. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.

9. எண்ணெய் – சுகவாழ்வு.

10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்.

11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 8, 2024
மார்கழி பாவை நோன்பு – திருவெம்பாவை
  • டிசம்பர் 8, 2023
கிருஷ்ணரை மகிழ்விப்பது எப்படி?
  • நவம்பர் 21, 2023
அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் கூழ் வைத்து வழிபாடு