×
Wednesday 4th of December 2024

வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?


Thulasi Maadam in Home in Tamil

துளசி மாடம்

தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.

அதிகாலை மூன்று ம‌ணிமுத‌ல் ஐந்து ம‌ணிவ‌ரை பிர‌ம்ம‌ முஹூர்த்த‌ம் என்று சொல்லுவார்க‌ள். அதாவ‌து இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையின் அத்த‌னை அம்ச‌ங்க‌ளும் மிக‌வும் புதிதாதக‌ச் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ இருக்கும். அதாவ‌து இந்த‌ நேர‌த்தை தான் ஓசோன் அதிக‌மிருக்கும் நேர‌ம் என்று இன்றைய அறிவிய‌லாள‌ர்க‌ள் கூறிகிறார்க‌ள். அதாவ‌து இய‌ற்கைய‌க‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் நேர‌மான‌ அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால் அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம் என்ப‌து இத‌ன் சாராம்ச‌ம். அதாவ‌து எல்லா ஜீவ‌ராசிக‌ளும் சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசித்து ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ தாத்ப‌ரிய‌த்திலேயே இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

தற்போது தாஜ்மஹாலைக் காப்பாற்ற அதைச்சுற்றி லட்சக்கணக்கில் துளசிச் செடியை நட்டு வைக்கப் போகிறார்கள். ஏனெனில் தாஜ்மஹாலைச் சுற்றி காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதால் அந்த பழம்பெருமை வாய்ந்த கட்டடம் வேகமாக அழிவதிலிருந்து காப்பாற்றப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு கல்லால் கட்டிய கட்டிடத்தையே துளசிச் செடி காக்குமென்றால் இரத்தமும் சதையும் கொண்ட மனிதனையும் காக்கும் என்பது உண்மைதானே. இந்துக்கள் வழிபடும் துளசியை தாஜ்மஹால் முன்பு நடக்கூடாது என்று எந்த முஸ்லீமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனேனில் இது அறிவியல் ரீதியான விளக்கத்துடன் நட்டு வைக்கப்படப்போகிறது. இந்து தர்மத்தில் இது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நட்டுவைக்கிறோம் என்று சொல்லியிருந்தால் பெரிய பிரளயமே வந்திருக்கும் என்பது வேற விஷயம். அது மட்டும் அல்ல, ம‌ருத்துவ‌த்திலும் துள‌சிக்கு மிக‌ முக்கிய‌மான‌ இட‌ம் உண்டு.

துள‌சி இல்லாத‌ ஆயுர்வேத‌ ம‌ற்றும் சித்த‌ ம‌ருத்துவ‌மே கிடையாது. இப்ப‌டியான‌ அற்புத‌ச் செடியை க‌ண்ட‌றிந்து அத‌ன் ப‌ல‌னையும் அனைத்து ம‌க்க‌ளும் ஆழ‌மாக‌ அனுப‌விக்க‌ வேண்டும் என்ப‌ற்க்காக‌ அதை ஒரு வ‌ழிபாட்டுச் ச‌ம்பிர‌தாய‌மாக‌வே ந‌ம் இந்து த‌ர்ம‌த்தில் வைத்துள்ளார்க‌ள். வேறு எந்த‌ ம‌த‌த்திலும் இவ்வாறு செடி கொடிக‌ளை கூட‌ பூஜிக்கும் உண்ண‌த‌ப்ப‌ழ‌க்க‌ம் கிடையாது என்ப‌தை எல்லோரும் யோசிக்க‌ வேண்டும்.

எந்தப் பெருமாள் கோவிலுக்கு போனாலும் ம‌ன நலனுக்கு பெருமாளைக் கும்பிட்டால் உட‌ல் ந‌ல‌த்திற்கு துள‌சி தீர்த்த‌த்தையும் பிர‌சாத‌மாக‌ வாயில் போட்டு சுவைக்க‌ துள‌சியும் கையில் கொடுப்ப‌துண்டு. ஆக‌ ம‌னோவிய‌லும் அறிவிய‌லும் ஒருங்கே சேர்ந்து தான் இந்து த‌ர்ம‌ம் ந‌ம் எல்லோரையும் வ‌ழி நட‌த்திவ‌ருகிற‌து என்ப‌தை ந‌ன்றாக‌ப் புரிந்து கொள்ள‌ வேண்டும். பெருமாள் கோவிலுக்கு வார‌ம் ஒரு முறை போங்கள். துளசிப்பிரசாதம் சாப்பிடாமல் வராதீர்கள் சரியா!.

த‌ற்கால‌த்தில் வீட்டில் ம‌ணிபிளான்ட் வைத்தால் ப‌ண‌ம் வ‌ரும் என்று ந‌ம்புகிறார்க‌ள், காசு குடுத்து ம‌ணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து ப‌ண‌ம் கூரையைப்பிய்த்துக் கொண்டு கொட்டாதா என்று வான‌த்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்க‌ள். ஆனால் துளசி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம், மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள். இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால் ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து.

 

Also, read



One thought on "வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil
  • நவம்பர் 23, 2024
Happy Birthday Messages in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள்