- நவம்பர் 7, 2024
உள்ளடக்கம்
1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதர்-ன் தலைவனுக்கு வணக்கம்
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்
31. ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
32. ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
33. ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
37. ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
38. ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
39. ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
43. ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.
ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.
🌸 ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று 🌸
🙏 நீங்கள் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.
🙏 இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதாகும். இது கந்தபுராணத்தின் சுருக்கம் ஆகும். மொத்தம் 44 வரிகளை உடையது. இதனை படிக்கும் போது “நம :” என்ற சொல்லை “நமஹ்” என்று உச்சரிக்கவும்.
🙏 அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.
🙏 பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
🙏 நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
🙏 ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும். இதைப் பற்றிய பாடல் ஒன்று இதோ.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகா வேன்றோது வார்முன்.
🙏 சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும். மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும். மனதில் முருகா என்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும் என்பதே இதன் பொருளாகும்.
🙏 தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
Also read,
Very religious.
Meaning understandable.
Namasthe????