நம் ஆன்மிகம் தளத்தின் நோக்கம் என்ன?
ஆன்மிகம் என்பது நம் எண்ணங்களை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதாவது தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி, நல்ல எண்ணங்களை இறைவனின் திருவருளைக் கொண்டு மேன்மைப்படுத்துவதாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து அனுபவம் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தீர ஆராய்ந்து, இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப் பெற்று ஆன்மிக வாழ்வில் கலந்த மனிதர்களின் வழிகாட்டுதலின்படி இந்த இணையத்தில் சில ஆன்மீக சிந்தனைகள், தகவல்கள் மற்றும் இறைவனை வழிபடும் முறைகள் பற்றிய அனைத்தும் விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
மேலும்சிவபுராணம் பாராயணம்
சிவபுராணம் என்பது சைவத் துறவியும் கவிஞருமான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் என்னும் நூலின் முதல் பகுதியாகும். "திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று போற்றப்படும் இந்நூல், சைவர்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. சிவபுராணம் பாடல்கள் பலருக்கும் ஆன்மிக உத்வேகத்தைத் தருவதாக உள்ளன. சிவபுராணத்தைப் படித்து, சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்!
சிவபுராணம் பாடல் வரிகள்நன்கொடை அளிக்கலாம்!
உலகளாவிய ஆன்மிக இணையதளங்களில் நம் தளமும் முக்கிய பங்களிக்கிறது. மாதம் தோறும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, பல இணைய பக்கங்களை பார்வையிட இலவசமாக சேவை அளித்து வருகிறது. நீங்கள் விரும்பினால் இப்போதே நன்கொடை அளிக்கவும்!
மேலும்