- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
கலச பூஜை முக்கியமானது. இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும். கலசம் வைக்கும் சுத்தமான செம்புப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நான்கு பக்கங்களிலும் சந்தனக் கீற்று போட்டு குங்குமப் பொட்டு அழுத்தி வையுங்கள். மலர்ச்சரத்தை எடுத்து அதன் கழுத்தில் சுற்றுங்கள்.
முன்னதாக உயரமாகப் பீடம் அமைக்க வேண்டும். முதலில் உதிரிப் புஷ்பங்களில் அர்ச்சனை செய்து கொண்டே பூஜையை ஆரம்பியுங்கள்.
ஓங்கும் குருப்பியோம் நம- கங்கணபதியே நம-தூம்
துர்க்காயை நம-க்ஷம ஷேந்திர பாலாய நம-ஆதார
சக்தியே நம- மூலப் பிரகிருதியே நம ஆதிகூர்மாயை நம-
ஆனந்தாய நம- பிருத்வியை நம- ஸ்வேத க்ஷச்ராயை நம-
ஐஸ்வர்யாயை நம-வைராக்கியாய நம- ஓம் நமோ பகவதே
சகல சக்தி யுக்தாய அனந்தாய மகாயோக பீடாத்மனே நம.
இந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே கலசத்தின் மீது அட்சதை போடவேண்டும். கையால் கலசத்தின் வாயை மூடவேண்டும். இப்பொழுது கலசத்தை பீடத்தின் நடுநாடகமாக வைக்க வேண்டும்.
இனி கலசபூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அப்பொழுது உங்கள் எண்ணங்கள் யாவும் கலசத்தின் மீதே இருக்க வேண்டும்.
கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:
அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ:
மந்திரங்களைச் சொல்லி முடித்துவிட்டு கலசத்தினுள் இருக்கும் நீரில் சிறிதளவு எடுத்து பூஜைப் பொருட்களின் மீது தெளியுங்கள். பிறகு மாவிலைக் கொத்தை எடுத்து செப்புக்
கலசத்தின் மீது வையுங்கள் . அதன்மீது குடுமி எடுக்காத தேங்காயை வையுங்கள்.