- டிசம்பர் 8, 2024
உள்ளடக்கம்
காவிரிப் பூம்பட்டினத்தின் பழங்காலத்திலிருந்து நம் தமிழர்கள் விளக்குத் தண்டு முறையை ஒரு புனிதச் சடங்காகக் கடைபிடித்து வந்திருக்கிறார்கள். இது வெறும் விளக்கேற்றுதல் மட்டுமல்லாமல், இயற்கை, மருத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றின் இணைப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பழக்கமாகும்.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வசிக்கும் வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் பொங்கல் விழா, விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் நடத்தும் சுமங்கலி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பூம்பட்டின பகுதியில் வாழ்ந்த வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் முன்னோர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருள் ஈட்டி வந்தனர். வெளிநாடு சென்றவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவுக்கு ஊர் திரும்புவது வழக்கம். ஒரு ஆண்டில் வெளிநாடு சென்றிருந்தவர்கள் கப்பலில் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஆழி பேரலையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் கப்பலில் வந்த வணிகர்கள் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கரை திரும்பினர். அதில் ஒருவர் மட்டும் வரவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என கருதி மற்ற வணிகர்கள் அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் அவரது மனைவி மட்டும் கணவன் வருவான் என்ற நம்பிக்கையில் கடற்கரை மணலில் தீபம் ஏற்றிவைத்து விடியும் வரை காத்திருந்தாள்.
அந்த பெண்ணின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவள் எதிர்பார்த்தபடியே கணவன் கரை திரும்பினான். அந்த பெண்ணின் மனஉறுதியை போற்றும் வகையிலும் குடும்பத்தில் உள்ள ஆண்களின் ஆரோக்கியம் நிலைக்க வேண்டியும் இந்த வழிபாடு பாரம்பரியமாக நடக்கிறது என்று கூறினர்.
இன்றைய காலகட்டத்தில்: இன்றும் பல வீடுகளில் பொங்கல் பண்டிகையின் போது விளக்குத் தண்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. இது நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாகும்.
வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் வீடுகளில் பொங்கல் விழாவிற்காக செங்கல் மற்றும் களிமண்ணை கொண்டு விளக்கு தண்டு தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் திருமணமான ஆண்கள் எத்தனை பேர் உள்ளனரோ அந்த ஏண்ணிக்கைக்கு ஏற்ப இந்த விளக்கு தண்டுகள் உருவாக்கப்படுகின்றன. பொங்கல் நாளின் மாலையில் பூஜை அறையில் பொங்கல் படையல் செய்து இந்த விளக்கு தண்டுகளில் நெய்தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த தீபம் மறு நாள் அதிகாலை வரை அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. இதற்காக பெண்கள் இரவு முழுவதும் விழித்திருந்து விளக்கு பூஜை நடத்துவர். விளக்கு அணைந்து விட்டால் குடும்பத்திற்கு ஆகாது என்பதால் யாரும் தூங்குவது இல்லை. இந்த வழிபாடு சுமங்கலி பூஜை போன்றதுதான்.
முடிவு: விளக்குத் தண்டு என்பது வெறும் ஒரு சடங்கு மட்டுமல்ல, அது நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களுடன் இணைந்த ஒரு பழக்கமாகும். இதை நாம் அனைவரும் நம் வீடுகளில் கடைபிடித்து நம் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.