- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
Pancha Sabhai Temple in Tamil
பொற்சபை
ரஜித சபை அல்லது வெள்ளிசபை
ரத்தின சபை
தாமிர சபை
சித்திர சபை
🛕 நடராஜரின் நடன சபைகள் பொற்சபை, ரஜித சபை அல்லது வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.
🛕 சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இவை பஞ்ச சபைகள் அல்லது ஐம்பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.
🛕 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது தில்லை நடராஜர் திருக்கோவில். இங்கு அருள் பாலிக்கும் நடன நாயகன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொற்சபை. பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
🛕 இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் ஆகியோருக்கு அருளிய தலம் இதுவாகும்.
🛕 இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இங்கு இறைவனின் நடனம் ஆனந்த தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.
🛕 திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் இருக்கிறது சித்திர சபை. இங்கு எமனை சம்ஹரித்த இறைவன், பார்வதியுடன் மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார்.
🛕 இங்கு நடனம் புரிந்த இறைவனின், தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது.
🛕 இந்த இடம் சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆடிய திருநடனம் திரிபுர தாண்டவம் எனப்படுகிறது.
🛕 திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, ரத்தின சபை. இங்கு காளியை தனது நடனத்தின் மூலம் சிவபெருமான் வெற்றி கண்டார் என்கிறது தல புராணம்.
🛕 இந்த இடம் ரத்தின அம்பலம், ரத்தின சபை, மணி மன்றம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறது.
🛕 இங்கு இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.
🛕 காளியுடன் நடந்த போட்டியில், காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார் என்கிறது தல வரலாறு.
🛕 காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் என்று போற்றப்படுகிறது.
🛕 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளும் ஆலயமே வெள்ளி சபை என்று போற்றப்படுகிறது. இதனை வெள்ளியம்பலம், வெள்ளி மன்றம் என்றும் போற்றுகிறார்கள்.
🛕 இங்கு அருள்பாலிக்கும் நடராஜர், தனது பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி திருநடனம் புரிகிறார்.
🛕 இங்கும் முதலில் இறைவன் பஞ்சலி, வியாக்கிர பாத முனிவருக்கு தில்லையில் காட்டிய காட்சியையே காட்டி அருளினார்.
🛕 அதன்பிறகு, பாண்டிய மன்னனின் வேண்டுகோள்படி, காலை மாற்றி ஆடி, அந்த நிலையிலேயே அருள்கிறார். இங்கு இறைவனின் நடனம் சந்தியா தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.
🛕 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் நடராஜர் சன்னிதியே தாமிர சபை என்று போற்றப்படுகிறது.
🛕 இங்கு தாமிரத்தால் ஆன அம்பலத்தில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார்.
🛕 இறைவன் நடனம் புரியும் சபையானது, தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்று வழங்கப்படுகிறது.
🛕 இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன் ஆடும் நடனமானது திருத்தாண்டவம் என்று சொல்லப்படுகிறது.
Also, read