ஆன்மிகம் என்பது தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனைக் கும்பிடுவதோ அல்லது நித்தமும் இறைவனை மனதில் வேண்டிக்கொள்வது மட்டுமல்ல..
உண்மையான தெய்வீக ஆன்மிகம் என்பது – நம் எண்ணங்களை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதாவது தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி, நல்ல எண்ணங்களை இறைவனின் திருவருளைக் கொண்டு மேன்மைப்படுத்துவதாகும்.
கடவுளின் நாமத்தால் மட்டுமே நாம் ஆன்மீகக் கடலைக் கடக்க முடியாது. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் உங்களின் அன்பைக் கொண்டு அணுகுங்கள். ஆம் ஓர் உயிருக்கு நீங்கள் நன்மை செய்யாவிடினும் தீமையை ஒருபோதும் மனதளவிலும் நினைக்காதீர்கள். இதுவே உங்கள் வாழ்க்கையை ஆன்மீக வழியில் வழிநடத்தும்.
ஆன்மிகத்தினைப் பின்பற்றுதல் என்பது மனிதர்களாகிய நம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயலாகும். ஆன்மிக விதிப்படி நடப்பதினால் ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கை, தனி மனித ஒழுக்கம் மற்றும் தன்நிலை அறிதல் ஆகியன புலப்படுகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு – பல்லாயிரம் ஆண்டுகளாக இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து அனுபவம் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தீர ஆராய்ந்து, இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப் பெற்று ஆன்மிக வாழ்வில் கலந்த மனிதர்களின் வழிகாட்டுதலின்படி இந்த இணையத்தில் சில ஆன்மீக சிந்தனைகள், தகவல்கள் மற்றும் இறைவனை வழிபடும் முறைகள் பற்றிய அனைத்தும் விளக்கமாக இங்கு பார்க்கலாம்.