×
Wednesday 2nd of April 2025

பொல்லாத விஷமக்காரக் கண்ணன் பாடல்


Vishamakara Kannan Lyrics in Tamil

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஏகம்
இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

விஷமக்காரக் கண்ணன் பாடல் வரிகள்

விஷமக்காரக் கண்ணன்..
விஷமக்காரக் கண்ணன்.
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்.
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்..

வேடிக்கையாய் பாட்டுப் பாடி..
வித விதமாய் ஆட்டம் ஆடி..
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்..
விஷமக்காரக் கண்ணன்!

வேடிக்கையாய் பாட்டுப் பாடி..
வித விதமாய் ஆட்டம் ஆடி..
நாழிக்கொரு லீலை செய்யும்,
நந்த கோபால கிருஷ்ணன்..
விஷமக்காரக் கண்ணன்..
விஷமக்காரக் கண்ணன்!

நீலமேகம் போலே இருப்பான்..
நீலமேகம் போலே இருப்பான்..
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்..
நீலமேகம் போலே இருப்பான்..
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்..

கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி..
கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி..
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி..
விஷமக்காரக் கண்ணன்..
விஷமக்காரக் கண்ணன்!

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான்
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்

எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு,
எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு,
அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு..
அவள் விக்கி விக்கி அழும்போது,
இதுதான்டி முகாரி ராகம் என்பான்!
விஷமக்காரக் கண்ணன்..
எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு..
விக்கி விக்கி அழும்போது,
இதுதான்டி முகாரி என்பான்!
விஷமக்காரக் கண்ணன்..
விஷமக்காரக் கண்ணன்!

வெண்ணை பானை மூடக்கூடாது,
வெண்ணை பானை மூடக்கூடாது..
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது..
இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது..
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க‌ ஒண்ணாது..!

சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லிவிட்டால்,
இவனை திருடன் என்று சொல்லிவிட்டால்..
உன் அம்மா, பாட்டி, அத்தை, தாத்தா
அத்தனையும் திருடனென்பான்..!
விஷமக்காரக் கண்ணன்..

சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லிவிட்டால்,
உன் அம்மா, பாட்டி, அத்தை, தாத்தா
அத்தனையும் திருடனென்பான்..!
விஷமக்காரக் கண்ணன்..
விஷமக்காரக் கண்ணன்!

வேடிக்கையாய் பாட்டுப் பாடி..
வித விதமாய் ஆட்டம் ஆடி..
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்..
விஷமக்காரக் கண்ணன்..
விஷமக்காரக் கண்ணன்!

Also, read


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஏப்ரல் 1, 2025
ஶ்ரீ ஆஞ்சநேய ஸஹஸ்ரநாமம்
  • ஏப்ரல் 1, 2025
கலச பூஜை மந்திரம்
  • ஏப்ரல் 1, 2025
மகா மிருத்யுஞ்சய மந்திரம்