×
Monday 30th of December 2024

விநாயகர் கவசம் [பிள்ளையார் கவசம்]


Pillaiyaar Kavasam

Benefits of Vinayagar Kavasam: விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்.

காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம்

Vinayagar Kavasam Lyrics in Tamil

பிள்ளையார் கவசம்

தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க
தடவிழிகள் பால சந்திரனார் காக்க !!

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க

கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க
அவிர்நகை துன்முகர் காக்க
வளர் எழில் செஞ் செவி பாச பாணி காக்க
தவிர்தலுறாது இளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க !!

முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்க

காமுரு பூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க
களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த
பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசர் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகத்தினைத் துலங்கு ஏரம்பர் காக்க !!

பக்கங்கள், தொண்டை காக்க

பக்கம் இரண்டையுந் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க
விளங்கிலிங்கம் வியாள பூடணர் தாம் காக்க
தக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபர் காக்க
ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்க

தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்குவார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அந்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!

திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க

அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென் திசைகாக்க
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கினவர்த்தனர் மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கச கர்ணர் காக்க
திகழ்உதீசி தக்கநிதி பர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க !!

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்துகாக்க !!

மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க

மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!

படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்

வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரியாதி எல்லாம் விகடர் காக்க
என்று இவ்வாறிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்று உறா முனிவர் அவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும் !!

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்