×
Wednesday 2nd of April 2025

மாதா ராதா (ராதை)


Goddess Radha History in Tamil

ராதிகா, ராதாராணி மற்றும் ராதை என்று அழைக்கப்படும் ராதா, உலகம் முழுவதும் கிருஷ்ணருடன் வணங்கப்படும் ஒரு பிரபலமான தெய்வமாகும். இவர் பகவான் கிருஷ்ணரின் துணைவியாகக் கருதப்படுகிறார். ராதாராணி லட்சுமி தேவியின் அவதாரம். அவள் கோபிகைகளின் தலைவி. மேலும் அவரது பிறந்த நாள் ராதாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.

அன்னை ராதா தன்னலமற்ற அன்பைக் கடைப்பிடித்து கிருஷ்ணரின் திருவடிகளில் சரணடைந்தாள். பல வைணவ மகான்கள் இவளின் மகிமையைப் புகழ்ந்து, அவளை ஒப்பற்ற கடவுளாகக் கருதினர். ஹிந்துக்கள், பொதுவாக ஆண் குழந்தைக்கு ராதாகிருஷ்ணன் என்றும், பெண் குழந்தைக்கு ராதா என்றும் பெயர் வைப்பார்கள். ராதாவை வட இந்தியர்கள் அதிகம் வழிபடுகின்றனர்.

ஆத்மாவை கிருஷ்ண பகவானிடம் ஒப்படைக்கும் ராதாராணியை உதாரணமாக எடுத்துக் கொள்வதன் மூலம், நாம் இறந்த பிறகு முக்தியை அடைவதற்காக, அத்தகைய பக்தியை வளர்த்துக் கொள்ள நாமும் பயிற்சி செய்யலாம். ராதை, கிருஷ்ணர் நிகழ்த்திய லீலைகள், ராசலீலா என்று அழைக்கப்பட்டன.

பகவான் கிருஷ்ணர் கோபிகர்களுடன் நிகழ்த்திய லீலைகள் அவர்களிடையே எந்தவிதமான உடல் பிணைப்பையும் குறிக்கவில்லை, மாறாக தெய்வீக அவதாரம், தெய்வீக ஆன்மாக்களுக்கு வழங்கிய இன்பத்தையும், அவர்களின் முக்கிய பிணைப்பும் அவர்களின் இதயத்துடன் மட்டுமே தொடர்புடையது, அது தாய் தனது குழந்தையை அக்கறையுடனும் பாசத்துடனும் தொடுவதைப் போன்றது.

கோபிகைகளின் கருத்துகளின்படி, பகவான் கிருஷ்ணரின் தெய்வீக தொடுதலின் மூலம், அவர்கள் ஆன்மிக திருப்தி உணர்வை உணர்ந்தனர், மகிழ்ச்சி அவர்களின் உடல் முழுவதும் பரவியது, மேலும் அவர்கள் கடவுளுடன் ஒன்றிணைந்ததை உணர்ந்தனர். ஜெயதேவ கோஸ்வாமி எழுதிய “கீதா கோவிந்தா” கட்டுரையின்படி ராதாவும் கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரங்கள். சுவாமி ஹரிதாஸ், ராதாவை கிருஷ்ணரின் தீவிர பக்தையாகக்  கருதினார். இவர் கிருஷ்ணரின் ஆன்மிக சக்தியாகவும், பகவான் கிருஷ்ணரின் செயல் சக்தியாகவும் கருதப்படுகிறார்.  அவளுடைய எண்ணங்கள் அனைத்தும் பகவான் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே இருந்தன, மற்ற உலக விஷயங்களில் அவள் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

ராதை கோவில்கள்

மதுரா மாவட்டத்தில் உள்ள பர்சானாவில் உள்ள ராதா கோவில், ராதாவல்லபர் கோவில், பிருந்தாவனம்,  தில்லியில் உள்ள ஸ்ரீ ராதா மந்திர், ஸ்ரீ ராதா ராணி கோவில், ஆஸ்டின், டெக்சாஸ், அமெரிக்கா.

ராதையை வணங்குவதன் மூலம் கிருஷ்ணரின் தெய்வீக அருளைப் பெறலாம். அவள் நம் மீது தன் தாய் பாசத்தைக் காட்டி, நம் வாழ்நாள் முழுவதும் நம்மைப் பாதுகாப்பாள். அவள் நம்மை சொர்க்கத்தின் பாதைக்கு இட்டுச் செல்வாள். நம் மனதில் உள்ள துக்கங்கள் அனைத்தையும் நீக்கி, நம்மை மகிழ்ச்சியான, பதற்றமற்ற வாழ்க்கையை வாழச் செய்கிறாள். மேலும் நம் உடலில் உள்ள நோய்களை நீக்கி, ஆன்மிக சக்தியை தந்து, நம் வாழ்வில் நிம்மதியாக வாழ வைப்பார். மாதா ராதாவையும், கிருஷ்ணரையும் வணங்கி ஆசி பெறுவோம்.

“ஓம் ஸ்ரீ ராதாராணியே நமஹ”
“ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ”
“ஓம் நமோ நாராயணா நமோ நமஹ”

எழுதியவர்: ரா.ஹரிசங்கர்

Also, read


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஏப்ரல் 1, 2025
பக்த மீராபாய்
  • ஏப்ரல் 1, 2025
அன்னை அன்னபூர்ணா மரகத மணிமாலை
  • மார்ச் 31, 2025
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்