×
Tuesday 1st of April 2025

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல், பரமபத வாசல் திறப்பு


Vaikunta Ekadasi in Tamil

எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா விரதம் இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

Sorgavasal Thirappu

சொர்க்க வாசல்: திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் இரவு உறங்காமல், திருமாலின் புகழ் பாடி, அதிகாலை பெருமாள் கோயிலின் வடக்குதிசை கதவு எப்போது மூடி இருக்கும் சொர்க்க வாசல் கதவு வழியாக சென்று இறைவனை வழிபடுவர்.

அப்படி செய்தால், தாங்கள் செய்த பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பல வைணவர்கள் ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து கிடைக்கும் எம்பெருமாளின் அருளை, இன்று விரதமிருந்து, இரவில் உறங்காமல், சொர்க்க வாசல் வழியே திருமால் வெளியே உலா வரும் போது தரிசிப்பவர்களுக்கு கிடைக்கும் கூறப்படுகிறது.

Vaikuntha Ekadashi Story in Tamil

புராண நூலின் படி திருமால் தன் எதிரிகளாக இருந்த அரக்கர்களுக்காக வைகுண்ட கதவை திறந்ததாகவும், இந்த வாயில் வழியாக பெருமாளின் திருவுரும் வெளியே வரும் போது தரிசிப்பவர்களுக்கும், தாம் பெற்ற நிலை கிடைக்க வேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாக கூறப்படுகிறது.

அதே போல் மகாபாரத குருச்சேத்திர போரின் போது, “கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு இந்த நாளில் தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது”.

vaikunta ekadasi paramapadham

Paramapada Vasal

பரமபத வாசல்: திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்.

ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும் என்றனர். அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும். அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். என்னோடிருப்பீர்களாக என்று பக்தர்களுக்கு அருளை அளிக்கிறார்.

ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது.

ஏகம்+தசி=ஏகாதசி

ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம். “ஏகாதசி என்றால் பதினொன்று நாள்” என்று பொருள்.

ஞானேந்திரியம் – 5, கர்மேந்திரியம் – 5, மனம் – 1 ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்று படுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி.

இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடை பெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும். மார்கழியில் வரும் வளர் பிறை ஏகாதசி தான் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

Paramapadham

பரமபதம்: வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும். ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.


One thought on "வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல், பரமபத வாசல் திறப்பு"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மார்ச் 25, 2025
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயில்
  • மார்ச் 18, 2025
அருள்மிகு பதஞ்சலிநாதர் திருக்கோவில், கானாட்டம்புலியூர்
  • பிப்ரவரி 22, 2025
அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில், திருக்கூடலையாற்றூர்