- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
மாதா அமிர்தானந்தமயி தேவி 1953 ஆம் ஆண்டில் பிறந்தார், அவர் தனது பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார், இவர் ஒரு ஆன்மீகத் தலைவர், குரு மற்றும் கருணை உள்ளம் கொண்ட மனிதாபிமானி ஆவார். பிரபல பல்கலைக்கழகமான அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் வேந்தரான இவரது இயற்பெயர் சுதாமணி.
பெண்கள் எல்லாம்வல்ல இறைவனின் அற்புதமான படைப்புகள், மேலும், உலகில் உள்ள அனைத்து பெண்களும், மா சக்தி தேவியின் புனித அவதாரங்களாக கருதப்படுகிறார்கள். பிரபல தமிழ்க் கவிஞர் ஸ்ரீகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கூற்றுப்படி, “பெண்ணாகப் பிறப்பதற்கு நிறைய நல்ல கர்மாக்கள் செய்த்திட வேண்டும்”. பண்டைய தமிழ்ப் பாடலின்படி, பெண்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படும் இடங்களில் சரியான மழை பெய்யும், உணவுப் பயிர்கள் அனைத்தும் சீராக வளரும், நமது புனித அன்னை மாதா அமிர்தானந்த மயி இன்றைய உலகில் தலைசிறந்த பெண்மணி, அன்பான தாய், அன்பான குரு, அற்புதமான மகான். பெருமழையைப் போல நம் மீது நிபந்தனையற்ற கருணையைப் பொழியும் அன்னை அமிர்தானந்தமயி தன் குழந்தைகள் மீது கொண்டுள்ள கருணையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
2018-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தின் தூய்மை இந்தியா பிரச்சாரமான ஸ்வச் பாரத் மிஷனில் சிறந்த பங்களிப்பிற்காக அவர் கௌரவிக்கப்பட்டார், மேலும் அவரது உன்னதமான பணிகளுக்காக விருதுகளையும் பெற்றார்.
மாதா அமிர்தானந்தமயி தேவி கேரளாவின் கொல்லம் மாவட்டம் அமிர்தபுரியைச் சேர்ந்த ஒரு இந்திய குரு ஆவார். மாதா அமிர்தானந்தமயி மக்களுக்கு ஒருவித ஆறுதலைத் தருவதற்காக அவர்களிடையே மென்மையான வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்வார். தன்னை ஒரு கடமையுள்ள மருத்துவராகக் கருதி, தன் முகத்தில் நிரந்தரமாகக் காணப்படும் கனிவான புன்னகையுடன் தனது பக்தர்களுக்கு சிகிச்சையளித்தார்!
ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக பஜனைகளையும் நடத்தி வந்தார். மாதா அமிர்தானந்தமயி மடம் தொடர்ந்து ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டது, மேலும் அவர் உலகம் முழுவதும் ஆன்மீக நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.
மனதைத் தூய்மைப்படுத்துவதற்கான வழியாக அனைத்து மதங்களின் பல்வேறு ஆன்மீக நடைமுறைகள் மற்றும் பிரார்த்தனைகளை அம்மா ஏற்றுக்கொள்கிறார், மேலும் தியானம், யோகா, பொறுமையைக் கடைப்பிடித்தல், மன்னிப்பு மற்றும் சுய கட்டுப்பாடு போன்றவற்றைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார்.
இந்தியாவில், மாதா அமிர்தானந்தமயி மடம் அதன் பல்வேறு மையங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச உணவை வழங்குகிறது.
மாதா அமிர்தானந்தமயி மடம் கேரளாவில் குழந்தைகளுக்கான அனாதை இல்லத்தையும், நைரோபியில் குழந்தைகள் இல்லத்தையும் நடத்தி வருகிறது. மாதா அமிர்தானந்தமயி மடம் கொச்சியில் உள்ள அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் என்ற மருத்துவமனையை நிர்வகிக்கிறது, இது 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இவர் நடத்தும் சில மையங்கள் பின்வருமாறு: அமிர்தா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், அம்ரிதா ஸ்கூல் ஆப் பிசினஸ், அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்.
“ஓம் ஸ்ரீ அமிர்த அன்னையே நமஹ”
எழுதியவர்: ரா. ஹரிசங்கர்