×
Friday 28th of February 2025

சாம்பிராணி தூபம் போடுவதால் கிடைக்கும் பலன்


Health Benefits of Sambrani Dhoopam in Tamil

ஒவ்வொருநாளும் சாம்பிராணி தூபம் போடுவதால் என்ன பலன் கிடைக்கும்?

வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்:

  • ஞாயிறு கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால்: ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிடைக்கும்.
  • திங்கள் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால்: தேக, மன ஆரோக்கியம், மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.
  • செவ்வாய் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால்: எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய-எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் நிவர்த்தியாகும்.
  • புதன் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால்: நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிடைக்கும்.
  • வியாழன் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால்: சகல சுப பலன்கள், பெரியோர்கள், குருமார்கள் ஆசி கிடைக்கும், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
  • வெள்ளி கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால்: லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
  • சனி கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால்:  சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிடைக்கும்.

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 10, 2024
புனித யாத்திரை பாடல்கள்
  • அக்டோபர் 20, 2024
அதர்வ வேதத்தில் நோய் மற்றும் சிகிச்சை பரிந்துரைகள்
  • செப்டம்பர் 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்