×
Sunday 29th of December 2024

செவ்வாழையின் மருத்துவ குணங்கள்


Sevvazhai Pazham Benefits in Tamil

செவ்வாழையின் மருத்துவ குணங்கள்

🍌 உலக மக்களால் அதிகம் சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம். அதன் ஒரு வகையான செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. பல்வேறு நோய்களிலிருந்து செவ்வாழை நம்மைக் காக்கிறது.

🍌 உடல் எடை குறைப்பது என்பது பெரும் பிரச்சனையாவே மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலையில் தினம் ஒரு செவ்வாழையை காலையில் சாப்பிட்டால் அதிக நேரத்துக்கு பசி எடுக்காமல் இருக்கும். அதனால் கண்ட உணவுகளை சாப்பிடாததால் உடல் எடை அதிகரிக்காது.

🍌 செவ்வாழையில் 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் அந்நோயிலிருந்து விடுபடலாம்.

🍌 செவ்வாழையில் அதிகமாக உள்ள பீட்டா-கரோட்டீன், தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, இதய நோய், புற்று நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

🍌 செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் சென்று வைட்டமின் ஏ வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், சரும ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

🍌 செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

🍌 மேலும் செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது.

🍌 இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்க செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன.

🍌 ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும்.

🍌 செவ்வாழையில் உள்ள ஆன்டாசிட் தன்மையினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.

🍌 நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினசரி இரவு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த குறைபாடுகள் நீங்கும்.

🍌 சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

🍌 பல்வலி, பல்லசைவு போன்ற பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

🍌 தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

🍌 நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்க தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.

Also, read



3 thoughts on "செவ்வாழையின் மருத்துவ குணங்கள்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜனவரி 26, 2023
மாரடைப்பு அறிகுறிகள் தமிழில்
  • ஜனவரி 7, 2023
தைராய்டு அறிகுறிகள் தமிழில்
  • நவம்பர் 7, 2022
மெட்ஃபோர்மின் மாத்திரையின் பயன்கள்