- ஜனவரி 26, 2023
உள்ளடக்கம்
🍏 சுண்டைக்காய் செடி தமிழகத்தில் பரவலாக காணப்பெறும் ஒரு தாவரமாகும். இதை ஆங்கிலத்தில் Turkey Berry என்றும் அழைப்பார்கள்.
🍏 காடுகளில் தானாகவே வளர்வது மலை சுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பது பால் சுண்டை என்றும் அழைக்கப்படுகிறது.
🍏 சுண்டைக்காய் நம் வீட்டின் அருகாமையில் வளர்ந்தாலும் இதனுடைய கசப்பு சுவையால் மக்களால் விரும்பப் படாத ஒரு உணவு பொருளாக உள்ளது.
🍏 சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.
🍏 சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி என முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கும். கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
🍏 இந்த சுண்டைக்காயை உணவோடு சேர்த்து உண்டு வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
🍏 வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
🍏 சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம்.
🍏 மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்.
🍏 சுண்டைக்காயில் கால்சியம் சத்து மிகுந்து காணப்படுவதால் இவை எலும்புகளுக்கு வலுவூட்டும்.
🍏 சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
🍏 புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.
🍏 ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்பு சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட நோய் கட்டுப்படும்.
🍏 முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் பயன்படுத்தலாம். சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.
Also, read