×
Saturday 28th of December 2024

ஆஞ்சநேயர் 108 போற்றி


Anjaneyar 108 Potri

ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி

  1. ஓம் அனுமனே போற்றி
  2. ஓம் அதுலனே போற்றி
  3. ஓம் அநிலன் குமார போற்றி
  4. ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி
  5. ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி
  6. ஓம் அஞ்சிலே ஒன்றை தாவினாய் போற்றி
  7. ஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றி
  8. ஓம் அரியணை தாங்கிய அனுமனோ போற்றி
  9. ஓம் அஞ்சனா கிரியில் உதித்தாய் போற்றி
  10. ஓம் அரக்கர் படையினை வென்றாய் போற்றி
  11. ஓம் அயித மாயா வருவனே போற்றி
  12. ஓம் அக்க குமாரனை வென்றாய் போற்றி
  13. ஓம் அலங்கல் தாழ் மார்புடையவனே போற்றி
  14. ஓம் அசோகவனம் அடைந்தாய் போற்றி
  15. ஓம் அன்மையின் ஆசி பெற்றாய் போற்றி
  16. ஓம் அமரர் கோனே போற்றி
  17. ஓம் அத்திரத்தில் கட்டுண்டாய் போற்றி
  18. ஓம் அஞ்சா நெஞ்சன் படைத்தோனே போற்றி
  19. ஓம் அன்னை உயிர் காத்தவனே போற்றி
  20. ஓம் அகத்தி தனக்கும் கதி கொடுத்தாய் போற்றி
  21. ஓம் அணுவாய் நுழைந்தாய் போற்றி
  22. ஓம் ஆண் தகை அனுமனே போற்றி
  23. ஓம் ஆறுதல் கூறிய யவனே போற்றி
  24. ஓம் ஆதவ சீடனே போற்றி
  25. ஓம் ஆஞ்சநேயனே போற்றி
  26. ஓம் ஆத்ம பலம் அருள்வாய் போற்றி
  27. ஓம் இராவணைனோடு அமர் புரிந்தாய் போற்றி
  28. ஓம் இலங்கினியை வென்றாய் போற்றி
  29. ஓம் இதனிமாலை அணிந்தாய் போற்றி
  30. ஓம் அசையுடை அண்ணலே போற்றி
  31. ஓம் இந்திரனின் ஆசி பெற்றால் போற்றி
  32. ஓம் இராம தூதனே போற்றி
  33. ஓம் இராம தாசனே போற்றி
  34. ஓம் இளையவன் உயிர் காத்தாய் போற்றி
  35. ஓம் இராம பாதமே போற்றி
  36. ஓம் இராம சேவையே போற்றி
  37. ஓம் இராம நாமத்தை உச்சரிப்பவனே போற்றி
  38. ஓம் இராகுவை ஆட்கொண்டவே போற்றி
  39. ஓம் ஈங்கு எமக்கு அருள்வாய் போற்றி
  40. ஓம் ஈடில்லா தெய்வமானாய் போற்றி
  41. ஓம் உலகைக் காக்கும் உத்தமா போற்றி
  42. ஓம் உண்மையான தொண்டனே போற்றி
  43. ஓம் உதிக்கின்ற செங்கதிரே போற்றி
  44. ஓம் உச்சித் திலகமே போற்றி
  45. ஓம் கங்கையில் நடந்தாய் போற்றி
  46. ஓம் கடல் கடந்து மாதியே போற்றி
  47. ஓம் கருணைக் கடலே போற்றி
  48. ஓம் கலியுக தெய்வமே போற்றி
  49. ஓம் கம்பனைக் காத்த கவீந்திரன் போற்றி
  50. ஓம் கவிக்கரவே போற்றி
  51. ஓம் கண்ணுதலைப் போல் நகுகின்றாய் போற்றி
  52. ஓம் கண்டவன் என உரைத்தாய் போற்றி
  53. ஓம் கண்டதி நதியில் நீராடினாய் போற்றி
  54. ஓம் சாளக்கிராமம் கொணர்ந்தாய் போற்றி
  55. ஓம் திரு ஆரைக்கால் வந்தாய் போற்றி
  56. ஓம் திருமகளை கண்டாய் போற்றி
  57. ஓம் கமலாயத்தில் கியாம் செய்தாய் போற்றி
  58. ஓம் சாளக்கிராமத்தை பெயர்க்க முயன்றாய் போற்றி
  59. ஓம் நரசிம்மனின் அசரீரி கேட்டாய் போற்றி
  60. ஓம் நரசிம்மமூர்த்தியை தரித்தாய் போற்றி
  61. ஓம் சாளக்கிராம மலையை வலம் வந்தாய் போற்றி
  62. ஓம் அரங்கநாத சுவாமியை வணங்கினாய் போற்றி
  63. ஓம் கணையாழி ஒப்புவித்தாய் போற்றி
  64. ஓம் சூடாமணயை பெற்று வந்தாய் போற்றி
  65. ஓம் பாழி நெடுந்தோள் வீரா போற்றி
  66. ஓம் கடிகையில் அமர்ந்தாய் போற்றி
  67. ஓம் அமிழ்தின் சுவையே போற்றி
  68. ஓம் சுவையின் பயனே போற்றி
  69. ஓம் ஐந்து முக அனுமனே போற்றி
  70. ஓம் சிவந்த கண்களை உடையவனே போற்றி
  71. ஓம் விரிந்த தாமரை முகத்தோனே போற்றி
  72. ஓம் தூதனாய் இருந்து தொண்டனானாய் போற்றி
  73. ஓம் மார்கழித் திங்களின் அவதரித்தாய் போற்றி
  74. ஓம் மருத்துவ மலை எடுத்த வந்த மாருதியே போற்றி
  75. ஓம் சொல்லின் செல்வா போற்றி
  76. ஓம் சனியை ஆட்கொண்ட ராமதாசே போற்றி
  77. ஓம் சமயத்தில் வந்து காப்பாய் போற்றி
  78. ஓம் சஞ்சிதம் களையும் ரஞ்த முகனே போற்றி
  79. ஓம் சங்கடம் தீர்த்திட வருவாய் போற்றி
  80. ஓம் பகலவனைப் பழமெனப் பற்றினாய் போற்றி
  81. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
  82. ஓம் வேண்டிய வரம் தருவாய் போற்றி
  83. ஓம் தென்னிலங்கை சுட்ட இராமதூதா போற்றி
  84. ஓம் நாமக்குன்றமெடுத்துவந்த அனுமனே போற்றி
  85. ஓம் நாமகிரி அன்னையின் நற்சீடனே போற்றி
  86. ஓம் நரசிம்ம சுவாமியை வணங்குபவனே போற்றி
  87. ஓம் நான்மறைப் பொருளே போற்றி
  88. ஓம் நான்கு தேவங்களையும் கற்றுணர்ந்தாய் போற்றி
  89. ஓம் கிட்கிந்தையில் வாழ்ந்தவனே போற்றி
  90. ஓம் சுக்கிரிவன் நல் அமைச்சனே போற்றி
  91. ஓம் ஐம் புலன்களையும் அடக்கியவனே போற்றி
  92. ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
  93. ஓம் சீராளனே போற்றி
  94. ஓம் மிக்க தாராளனே போற்றி
  95. ஓம் தத்துவத்தை உணர்ந்தவனே போற்றி
  96. ஓம் தத்துவத்திற்கும் தத்துவ மானவனே போற்றி
  97. ஓம் நாமக்கல் நாதனே போற்றி
  98. ஓம் சிரஞ்சீவி நீயே போற்றி
  99. ஓம் சீதாராம பக்தனே போற்றி
  100. ஓம் எங்கும் நிறைந்திருப்பவனே போற்றி
  101. ஓம் கடமை வீரனே போற்றி
  102. ஓம் அகிலமும் நீயே போற்றி
  103. ஓம் என்றும் நிலைத்திருப்பவனே போற்றி
  104. ஓம் சிறிய திருவடியே போற்றி
  105. ஓம் உந்தன திருவடிளே போற்றி போற்றி
  106. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
  107. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
  108. ஓம் ஸ்ரீ சீதாராம திருவடிகளின் சேவையே போற்றி போற்றி!

ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்