×
Thursday 2nd of January 2025

மதுராஷ்டகம்


Read Madhurashtakam Lyrics in English Script

Madhurashtakam in Tamil with Meaning

மதுராஷ்டகம்

அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம் |
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 1 ||

🛕 மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம் |
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 2 ||

🛕 உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

வேணுர்மது⁴ரோ ரேணுர்மது⁴ர꞉
பாணிர்மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ |
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 3 ||

🛕 உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம் |
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 4 ||

🛕 உனது கீதம் அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப்பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு.

கரணம் மது⁴ரம் தரணம் மது⁴ரம்
ஹரணம் மது⁴ரம் ஸ்மரணம் மது⁴ரம் |
வமிதம் மது⁴ரம் ஶமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 5 ||

🛕 உனது செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.

கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா |
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 6 ||

🛕 கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. நீர் அழகு. கமல மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம் |
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 7 ||

🛕 கோபிகைகள் அழகு, லீலை அழகு, இனைதல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர்மது⁴ரா ஸ்ருஷ்டிர்மது⁴ரா |
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 8 ||

🛕 கோபர்கள் அழகு. பசுக்கள் அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

॥ இதி ஶ்ரீமத்3வல்லபா4சார்யவிரசிதம் மது4ராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்