×
Saturday 28th of December 2024

சிவ மானஸ பூஜா


Shiva Manasa Puja

சிவ மானஸ பூஜா

ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிச் செய்தது

🛕 இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி க்ஷேமம் ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும். ஶ்ரீசிவாபசாரமும நீங்கி சகல க்ஷேமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தைப் படித்தாலே சிவபூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆராதயாமி மணிஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரீ ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
ஸ்ரத்தாநதீ – விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதி குஸுமை: அபுநர்பவாய

🛕 மணிக்கு (வைரம் முதலிய) ஒப்பான ஆத்மலிங்கத்தை மாயாபுரியில், ஹ்ருதயத் தாமரையில் அமர்த்தி, சிரத்தையாகிற நதியிலிருந்து, மாசில்லாத சித்தமாகிய ஜலத்தைக் கொண்டு அபிஷேகம், ஸமாதியாகிய புஷ்பங்களால் நிதமும் பூஜை செய்கிறேன். எதற்கு என்றால் மறுபிறவி இல்லாதிருக்கவே.

ரத்னை: கல்பிதம் – ஆஸனம் ஹிமஜலை: ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ந: விபூஷிதம் ம்ருகமதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்-கல்பிதம் க்ருஹ்யதாம்

🛕 ஐயனை ஸ்படிகம் போல் வெண்மையான ஆத்மலிங்கமாக வரவேற்று, இதயக்கமலத்தில் எழுந்தருளச் செய்து, நிர்மலமான சித்தம் என்ற ஜலத்தினால் அபிஷேகம் செய்து, த்யானமாகிற மலர்களால், மீண்டும் பிறவா வரம் வேண்டி அர்ச்சிக்கின்றது.

ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பா பலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கற்பூர கண்ட உஜ்ஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

🛕 ரத்தினப்பலகை, பன்னீரால் திருமஞ்சனம், பட்டாடை, ஆபரணங்கள், சந்தனம்,, மலர்கள், வில்வம், தூப-தீபங்கள் ஆகியனவும், ரத்தினங்கள் இழைத்த பொன் வட்டில்களில் நெய், பாயசம், ஐவகை பக்ஷணங்கள், பால், தயிர், வாழைப்பழம், பானகம், காய்கனி வகைகள், நல்ல குடிநீர், பச்சைக் கற்பூரம் கலந்த தாம்பூலம் ஆகியவை இந்த ச்லோகத்தினால் மனத்தளவில் நேர்ந்துகொண்டு அளிக்கப்படுகின்றன.

சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஸகம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க கோஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதி: பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ

🛕 இந்த ஸ்லோகம் மானஸீகமாக, குடை, சாமரம், விசிறி, கண்ணாடி இசைக்கருவிகளின் இன்னொலி, ஆடல்-பாடல் ஆகிய உபசாரங்களளித்து நமஸ்கரிக்கின்றது.

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதனம்

🛕 “எனக்குள் உறையும் ஆத்மா நீதான். என்னுடைய புத்தி தான் அம்பாள். என் உடலில் இருக்கக் கூடிய பிராணன்கள் எல்லாம் உன்னுடன் இருக்கும் கணபதி, முருகன் ஆகிய தெய்வங்கள். என்னுடைய சரீரமே நீ வசிக்கும் க்ருஹம். என்னுடைய பஞ்ச புலன்களைக் கொண்டு எந்த எந்த போகங்கள் எல்லாம் அனுபவிக்கிறேனோ, அதுவே உனக்கு பூஜை. என்னால் ஸமாதி நிலையில் எல்லாம் உன்னை த்யானம் செய்யத் தெரியவில்லை. நான் தூங்குவதே அந்த ஸமாதி என்று வைத்துகொள். என் கால்களை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றுகிறேன். அந்த சஞ்சாரமே உனக்கு செய்யும் பிரதிக்ஷிணமாக வைத்துக் கொள். நான் பேசும் பேச்செல்லாமே உனக்கு ஸ்தோத்ரம். நான் என்னென்ன காரியங்கள் செய்கிறேனோ, ஹே பரமேஸ்வரா! அதெல்லமே உனக்கு செய்யும் ஆராதனமாக ஏற்றுக்கொள்.”

🛕 இந்த ஸ்லோகம் மூலமாக, பகவானை அடைய ஒரு எளிமையான பாவனையை நம் மனசுக்கு சொல்லிக்கொடுக்கிறார். ஆசார்யாள், அத்வைத சித்தி அடைந்தவர்… ப்ரஸ்தானத்ரய பாஷ்யம் எல்லாம் எழுதி பாடம் சொல்லிக் கொடுத்தவர்.. எளிமையா பக்தியினாலேயும் அந்த பகவானை அடையலாம் என்பதற்காக இந்த ஸ்லோகத்தை சொல்லியிருக்கார்.

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண – நயனஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதம் – அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ

🛕 இந்த இறுதி ச்லோகம் மிகவும் பிரசித்தமான க்ஷமா பிரார்த்தனை. மங்கள வடிவான கருணைக் கடலாம் ஐயனை விளிக்கும் அந்த ச்லோகம், கை-கால்கள், சொல், செயல், செவி-வழி உணர்வு, பார்வை, மனத்தளவிலான சிந்தனைகள் ஆகிய அனைத்தினாலும் முறையாகவோ, முறையின்றியோ இழைத்திட்ட அனைத்துக் குற்றங்களையும் பொறுத்தருளுமாறு மன்றாடுகின்றது.

ஸ்ரீ ஸிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.


Also, read


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்