- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
நன்னிலம் புதைத்தச் சிறுவிதைப் போல
என்றோ மனதில் பரமேட்டி புதைந்திருந்தான்!
முன்னோர் மரபினால் அழகனை கண்டபின்
இன்றோ என்னுளிருந்து எனை வளர்த்து ஆள்கிறான்! (34)
பழகிய பரவசம் மனதுள்ளே மாயமாய் கூடல்
அழகிய மாயனின் சன்னதி அடைந்தபின்!
பழம் பிறப்பு எச்சமோ பான்மையின் மிச்சமோ
பழம்படி என்னையுமுன் நினைப்பிலே நிறுத்துவாய்! (35)
நீடு நெடு வையையின் இருந்தையூர் இறைவனே
நீடு நெடு வாழ்விலே இருந்தெம்மைக் காத்திடாய்!
ஈடுயிணை அற்றவன் வீற்றிருக்கும் விக்ரமன்!
நாடு கூடல் அழகனை நாடு கூடி வாழவே! (36)
திருக்கூடல் புகழாளன் அருட்கருணைப் போற்றியே!
திருக்கூடல் அருளாளன் திருவழகு போற்றியே!
மதுரைக்கு மூத்தவள் மதுரவல்லி போற்றியே!
புதுவைப் பட்டனும் பல்லாண்டும் போற்றியே! (37)
வேண்டிவந்தால் வளம் தரும் திருமால் கொண்ட
பாண்டிவள நாட்டிலே தமிழ் சங்கம் பிறந்ததே!
பல்வகை இலக்கியம் இருப்பினும் பாட்டுடைத்
தலைவனாய் கூடல் அழகன் எங்கேனும் படித்ததுண்டோ ? (38)
புலவர்கள் உன்னை எழுதிட மறந்தனரோ ! இல்லை
மாலிக் காஃபுரின் வேட்டையில் இலக்கியம் எரிந்ததோ ?
காலத்தின் ஓட்டத்தில் பூமியில் புதைந்ததோ?
இலக்கியப் பசியினால் கரையான்கள் தின்றதோ? (39)
மொழிகளின் அரசி தமிழினைக் கொண்டு கூடல்
அழகனே உன் பிள்ளை உனைப் போற்றும் படைப்பு!
ஏற்றிடுவாய் கம்பத்தடியான் எழுதினையே உனக்காக
நற்றமிழில் ஓர் படைப்பு தோன்றும் வரை! (40)
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)
Email ID: kambathdiayaan@gmail.com or viruvasan@gmail.com
Very nice sudharson. Congrats. Kavirayar parambarai. Kavirayar veettu kannukuttiyum kavi padum. Valga valamudan
Santham azhakiya Tamil .
முதலில் கம்பத்தடியானுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் எழுதிய நாற்பதும் நற்சுவை கொஞ்சும் தமிழும் அழகு அடியேனுக்கு ஒரு ஆசை நமது மகரகுழையோனுக்கும் ஒரு புதிய பாமாலை பாடி அதை திருப்பேரை நகருக்கு தருமாறு வேண்டுகிறேன்
தாஸன்
ரா.சுந்தர்
நன்றி சகோதரி !
Super n do more bro.