×
Saturday 28th of December 2024

ஆலங்குடி குருபகவான் கோவில்


Alangudi Guru Temple in Tamil

ஆலங்குடி குருபகவான் கோவில் வரலாறு

மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
தாயார் ஏலவார் குழலி
உற்சவ மூர்த்தி தட்சிணாமூர்த்தி
தல விருச்சம் பூளை எனும் செடி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி
புராண பெயர் திருவிரும்பூளை, இரும்பூளை
இடம் ஆலங்குடி, திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

Apatsahayesvarar Temple in Tamil

தல சிறப்புகள்

இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டார். விஸ்வாமித்திரர், முகுந்தர், வீரபத்திரர் வழிபட்ட புண்ணிய தலமாகும்.

இந்த திருக்கோவில் குறித்து சிவனின் தேவாரப்பாடல் பாடப்பெற்றுள்ளது. இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம். இந்த திருத்தலம் சோழர்களால் கட்டப்பட்டது.

சிறப்பு வழிபாடு

நாக தோஷம் நீங்க, மனக் குழப்பம், பயம் நீங்குவதற்கு இங்குள்ள விநாயகரையும், திருமணம் தடை, கல்வியில் சிறக்க இந்த ஆலயத்தில் பிரார்த்தித்து வழிபடலாம்.

நேர்த்திக் கடன்

வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு வந்து அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுவது வழக்கம்.

கோவில் பெருமைகள்

இந்த திருக்கோவில் குரு பகவானின் சிறப்பு தலமாகப் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த கோவிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் மட்டும் தான் அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

குரு பெயர்ச்சி தினத்தை விட இந்த மாசி மாத வியாழக்கிழை வழிபாடு மிகவும் விஷேசமாக இந்த திருத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது.

தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இதற்கு ஆலங்குடி என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.

இங்குள்ள தலவிருட்சம் கருமை நிற பூக்கள் கொண்ட பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளது இந்த ஆலயம். விஷத்தின் தன்மையால் இந்த கருமை இருக்கலாம் என கூறப்படுகிறது.

தட்சன் சிலை

பார்வதி தேவியின் தந்தையான தட்சன், சாபம் நீங்கி ஆட்டுத் தலையுடன் காட்சி அளிக்கின்றார். இவர் உற்சவர் சிலைகள் இருக்கும் இடத்தில் காட்சி அளிக்கின்றார்.

அம்மையுடன் சுந்தர் சிலை

இங்குள்ள சுந்தரர் சிலை திருவாரூரிலிருந்து அர்ச்சகர்களால் ஒளித்து எடுத்துவரப்பட்டதாகவும், அப்போது காவலர்களிடமிருந்து தப்பிக்க, தங்களின் பிள்ளைக்கு அம்மை நோய் உள்ளதால் மறைத்து கொண்டு செல்கிறோம் என கூறினர்.

தொடர்ந்து ஆலங்குடி வந்து பார்த்த போது சுந்தரருக்கு அம்மை போடப்பட்டிருந்தது. இப்போதும் கூட சுந்தரர் சிலைக்கு அம்மை தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

மாதா, பிதா, குரு

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், அந்த வகையில் இந்த கோவிலில் நுழைந்ததும் அம்மன் சன்னதி, பின்னர் சுவாமி சன்னதி, பின்னர் குருவின் சன்னதி அமையப்பெற்றுள்ளது.

Thirugnana Sambandar Alangudi Pathigam

1. சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

2. தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.

3. அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

4. நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.

5. சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.

6. தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே.

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

8. ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.

9. துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.

10. துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.

11. எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.

Alangudi Guru Temple Festivals

திருவிழாக்கள்: சுயம்பு லிங்கமாக தோன்றிய இவர் குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறது. குரு பெயர்ச்சி, தை பூசம், பங்குனி உத்திரத்தின் போது தட்சிணாமூர்த்திக்கு தேர் திருவிழா, சித்திரை பௌர்ணமி விழா ஆகியவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

Also read: Guru Sthalam Alangudi History in English

Alangudi Guru Temple Timings

  • காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை
  • மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

Alangudi Guru Temple Address

Sivan S St, Alangudi, Tamil Nadu 612801

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,
ஆலங்குடி, கும்பகோணம் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

Alangudi Guru Temple Contact Number: 04374 269 407

Alangudi Guru Temple on Google Map



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்