×
Wednesday 1st of January 2025

அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்


Damal Sri Varaheeswarar Temple History in Tamil

சிவஸ்தலம் கௌரி அம்பாள் சமேத ஸ்ரீ வராக ஈஸ்வரர் ஆலயம்
மூலவர் வராகீஸ்வரர்
உற்சவர் சந்திரமௌலீஸ்வரர்
அம்மன் கெளரிஅம்மன்
தல விருட்சம் நாகலிங்கம், வில்வம்
ஊர் தாமல்
மாவட்டம் காஞ்சிபுரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தாமல் வராகீசுவரர் திருக்கோவில்

“நகரேஷூ காஞ்சி” எனப்படும் புண்ய பூமியாகிய காஞ்சிபரம் மாவட்டத்தில் தாமல் என்ற இடத்தில் கி. மு 500 ஆண்டுகளுக்கு முந்தியது இந்த ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம். “தாமல்” என்றால் “தடாகம்”, “குளம்” என்று பொருள். இங்கு மிகப் பெரிய ஏரி இருந்ததாகக் கூறப்படுகிறது. காளஹஸ்திக்கு நிகரான ராகு கேது பரிகாரத்தலமாக கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணு சிவனை வழிப்பட்ட தலமாகும். சரபேஸ்வரர் லிங்க திருமேனியை அருளும் அபூர்வ திருத்தலம்.

damal varaheeswarar temple history in tamil

வராகீஸ்வரர் ஸ்தல புராணம்

ஒருமுறை இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்கு அடியில்மறைத்து வைத்துவிட்டான். அதனால் உலக இயக்கம் நின்றது. எல்லா உயிரினங்களும் துன்பப்பட்டனர். தேவர்களும், ரிஷிகளும் மஹா விஷ்ணுவை அடைய, மஹா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று இரண்யாட்சனை அழித்து பூமாதேவியை மீட்டு வந்தார். இரண்யாட்சனுடன் போரிடும் போது அவனது இரத்தத் துளிகள் மஹாவிஷ்ணுவின் பல்லில் பட தன்னை மறந்த நிலையில் மகா விஷ்ணு ஆக்ரோஷமாக வைகுண்டம் செல்லாமல் சுற்றுகிறார்.

எல்லோரும் பயத்துடன் சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் வேடன் ரூபத்தில் வந்து வராகமூர்த்தியிடம் போரிட்டு அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்; இதனால் மகிழ்ந்த மகாவிஷ்ணு ஒரு திருக்குளத்தை உருவாக்கி அதில் நீராடி ஈசனை வழிப்பட்டதாக ஐதீகம். வராக அவதாரத்தின் போது மகாவிஷ்ணு சிவபெருமானை வணங்கி வழிப்பட்ட காரணத்தினால் ஈசன் வராகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

damal varaheeswarar

வராகீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பு

30 மீட்டருக்குமேலாக நீளமும் அகலமும் உள்ள பெரிய ஆலயம். ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளது. அழகிய குளம் அமைந்துள்ளது. பல நயம்மிக்க சிற்ப வேலை பாடுகள் கொண்ட வெளிப்புற மண்டபத்தில் இராமாயண காவியக் காட்சிகளும், உள்புற மண்டபத்தில் ஐம்பது தூண்களில் சிவபுராண சிற்பங்களும் காணப்படுகின்றன. கருவறையில் வட்ட ஆவுடையில் சிவபிரான் காட்சி அளிக்கிறார். இது மேற்கு நோக்கி காணப்படுகிறது. அஷ்ட பைரவர், லிங்கோத்பவர் காணப்படுகின்றனர்.

63 நாயன்மார்கள் வரிசையாக வீற்றுள்ளனர். தெற்கு நோக்கி கெளரி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சதுர்புஜ நாயகியாக விளங்குகிறார். அம்மன் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனத்தில் உள்ளார். இந்த அம்பிகை சகல சம்பத்துக்களை பக்தர்களுக்கு வழங்குவதால் “சம்பத்கௌரி” என்று அழைக்கப்படுகிறார்.

damal varaheeswarar temple amman

விஜய தசமி தினத்தில் சூரிய அஸ்தமன வேளையில் மாலை 5.45 மணிக்கு சூரியனின்ஒளிக் கதிர்கள் வராகீஸ்வர் திருமேனியில் படும் காட்சி அற்புதம் எனக் கூறப்படுகிறது. ராகு கேது பூஜை வெகு விமரிசையாக நடக்கிறது. திருக்குளத்தில் நீராடி பூஜை செய்தால் தொழுநோயில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. இங்கு பிரதோஷ பூஜை, நவராத்திரி பூஜை, அஷ்டமி பூஜை என எல்லா விசேஷ நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

damal varaheeswarar temple painting

பிரார்த்தனை: தொடர்ச்சியாக ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகு-கேது யாக பூஜைகளில் கலந்து கொண்டால், ராகு-கேது தோஷத்தில் இருந்து பூரணமாய் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Damal Varaheeswarar Temple Timings

ஸ்ரீ வராகீசுவரர் கோவில் திறக்கும் நேரம்: ஸ்ரீ வராகீசுவரர் திருக்கோவில் காலை 07:30 முதல் 11:00 வரை மற்றும் மாலை 05:00 முதல் 07:30 வரை தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Damal Sri Varaheeswarar Temple Contact Number: 04427233384, 9994706276, 9444103171, 9994367390

ஸ்ரீ வராகீசுவரர் கோவிலுக்கு எப்படி போவது?

காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் தாமல் என்னும் கிராம குளத்தின் தென்கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், சுமார் 14 கிமீ தொலைவிலுள்ள திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோவிலை 1 கிமீ கடந்தால் இக்கோவிலை அடையலாம்.

கோவிலை சுற்றி பல மரங்களும், செடிகளும் மிக ரம்மியமாக காட்சியளிக்கின்றன. கண்ணிற்கும் மனதிற்கும் இதம் அளிக்கும் இனிமையான ஆலயம்..!

damal varaheeswarar temple inside

Sri Varaheeswarar Temple Address

அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில்,
கோபுர வீதி, தாமல்,
காஞ்சிபுரம் – 631551.

எழுதியவர்: உமா



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • செப்டம்பர் 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு